வெள்ளி, 22 அக்டோபர், 2021

பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை!

உலகத்திலேயே முதல்முறையாக

பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு வெற்றிகரமாக பொருத்தி

அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த என்.ஒய்.யு லங்கோன் மருத்துவமனையில்

மூளைச் சாவடைந்த ஒரு நபரின் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் இருந்தது.

அவருடைய குடும்பத்தினரின் அனுமதியைப் பெற்ற மருத்துவ விஞ்ஞானிகள்

பன்றியினுடைய சிறுநீரகத்தை பொருத்தி சோதனை மேற்கொண்டனர்.

பன்றியின் சிறுநீரகம் அவரின் ரத்தக் குழாய்களில் இணைக்கப்பட்டு,

உடலுக்கு வெளியே வைத்து மூன்று நாட்கள் வரை பராமரிக்கப்பட்டுள்ளது.

சிறுநீரகம் மூளைச் சாவடைந்த நபரின் நோயெதிர்ப்பு மண்டலத்தால்

உடனடியாக நிராகரிக்கப்படாமல் இயங்கியுள்ளது.

சிறுநீரக செயல்பாட்டின் சோதனை முடிவுகள் “மிகவும் சாதாரணமாகத் தோன்றியது” என்று

ஆய்வுக்கு தலைமை தாங்கிய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ராபர்ட் கூறியுள்ளார்.

மேலும் முன்னர் இருந்த சிறுநீரகத்தின் செயல்பாடு மிக மோசமானதாகவும்,

கெரோட்டினின் அளவு அசாதாரணமாகவும் இருந்ததாக குறிப்பிடும் அவர்,

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு கெரோட்டின் அளவு வழக்கமான நிலைக்கு வந்துவிட்டதாகவும் தெரிவிக்கிறார்.

இது உறுப்பு மாற்று சிகிச்சையில் ஒரு மைல்கல்லாகவும்,

லட்சக்கணக்கானோர் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கும் நிலையில்,

உறுப்புகளின் பற்றாக்குறையை நீக்கும் வகையிலும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது,

வியாழன், 7 அக்டோபர், 2021

பெண்களின் மாதாந்திர பிரச்சினைக்குத் தீர்வு!

 

பெண்களின் மாதாந்திர பிரச்சினை மாதவிலக்குசிலருக்கு தேதிகள் நெருங்கினாலே அடிவயிற்றில் அச்சம் கவ்வும்மாதவிலக்கை சுலபமாக எதிர்கொள்ள சில டிப்ஸ்...

முருங்கை ஈர்க்கு இரண்டு கைப்பிடி அளவு எடுத்துத் தண்ணீர்விட்டு காய்ச்சி வடிகட்டிஅதனுடன் வெங்காயம்சீரகம்மிளகுநெய் கூட்டித் தேவையான உப்பும் சேர்த்துசூப் செய்து பருகிவரலாம் இதனால் வயிற்றுவலி குறையும்.

 முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் மிக்சியில் போட்டு லேசாகத் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிடவயிற்றுவலி குறையும்.

முருங்கைக் கீரையுடன் சிறிது கறுப்பு எள் சேர்த்துக் கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால்வலி குறையும்உலர்ந்த புதினா இலையுடன் ஒரு ஸ்பூன் கறுப்பு எள் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால்வலி குணமாகும்.

 கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கிதினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் வலி குறையும்.

மாதவிலக்கு வந்த மூன்றாம் நாள் காலை மலைவேம்பு சாறு 1/2 கப் குடிக்கவும்.  சாதிக்காய்திப்பிலிசீரகம் ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும். 

ஓமம்கிராம்பு இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும்எள் விதையை அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு எடுத்து நீரில் கலந்து சாப்பிடவும்ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாறுடன்சிறிது பெருங்காயம் சேர்த்து மோரில் கலந்து சாப்பிடவலி குறையும்.

வாழைப்பழம்அன்னாசிப் பழம்பப்பாளிப் பழம்பசலைக் கீரைஓட்ஸ்கோதுமைநட்ஸ் ஆகியவற்றை மாத விலக்கு நாட்களில் அதிகமாக உண்ணுங்கள்மாமிசம்பால்பாலாடைக்கட்டிபதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்எண்ணெய் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.

அது என்ன ஆன்டி ஆக்சிடன்ட்?

 

உடல் நல ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று ஆன்டி ஆக்சிடென்ட்இது உடலில் உள்ள செல்களை பாதுகாக்கும் மற்றும் செல்களில் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும்சேதமடைந்த செல்களுடன் போராட உடலுக்கு உதவுகிறதுஉடலில் உள்ள நோய்களை கட்டுப்படுத்தவும் எதிர்த்துப் போராடவும் செய்கிறது.

ஆன்டி ஆக்சிடென்ட் செல்களை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதால் கேன்சர் தொடர்பான அனைத்து சிகிச்சைகளுக்கும் உதவுகிறதுசெல்கள் தொடர்பான அனைத்து நோய்களை குணப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகின்றதுவைட்டமின் சி நிறைந்துள்ள உணவுகளில்காய்கறிகள்பழங்களை உட்கொள்ளும்போது நமக்கு அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சி டென்ட்கள் உடலுக்கு கிடைக்கின்றன.

கேரட்கீரைப்ரக்கோலிமுட்டைபட்டாணிஆரஞ்சுசாத்துக்குடிபப்பாளி போன்றவற்றை நாம் தொடர்ந்து உட்கொள்ளும் போது நமக்கு அது அதிகப்படியான ஆன்டி ஆக்சிடென்ட்டை தருகிறது.