மருத்துவ உலகு

மருத்துவம் குறித்த பொதுவான கருத்துகள் மற்றும் குறிப்புகள் இடம் பெறும்

பக்கங்கள்

  • முகப்பு
  • அறிவியல் அறிவோம்
  • தமிழ் மருத்துவம்
  • மூலிகை உலகு
  • மூலிகை மன்னன்
  • வேளாண்மை(மருதம்) அறிவோம்
  • வெற்றிவலவன் பதிவுகள்
கல்லீரல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்லீரல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 பிப்ரவரி, 2022

கல்லீரலை பாதிக்கும் ஹெபடைடிஸ்!



   November 01, 2021 • Viduthalai

ஹெபடைடிஸ் கல்லீரலை பாதிக்கும் நோய். சில வைரஸ்கள் கல்லீரலை மட்டுமே பாதிக்கும். அந்த தாக்கத்தினை வைரல் ஹெபடைடிஸ் என்று குறிப்பிடுவோம். வைரஸ் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்பினை கட்டுப்படுத்தவும் அதை குணமாக்கவும் கொடுக்கப்படும் சிகிச்சை முறை தான் ஆன்டி வைரல் தெரபி. என்னென்ன வைரஸ் கல்லீரலை தாக்கும் அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றி விளக்குகிறார் கல்லீரல் நிபுணர் டாக்டர் ஜாய் வர்கீஸ்.கரோனா என்பது ஒரு வைரஸ். இது நுரையீரலை தாக்குவதால், மூச்சுத்திணறல், சுவாசப்பிரச்சினை போன்றவை ஏற்படுகிறது. அதே போல் எச்.அய்.வி என்பதும் ஒரு வைரஸ் கிருமி. இது போன்ற வைரஸ் கிருமிகள் தாக்கும் போது அது நம்முடைய உடலில் பலவிதமான பாதிப்பினை ஏற்படுத்தும். வைரஸ் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாக்க கொடுக்கப்படுவதுதான் ஆன்டி வைரல் தெரபி.

கல்லீரலைப் பொறுத்தவரை எல்லா வைரஸ் கிருமிகளும் அதனை பாதிக்காது. சில வைரஸ் கிருமிகள் மட்டுமே அதனை முழுமையாக பாதிப்படைய செய்யும். அதே சமயம் அந்த பாதிப்பில் இருந்து பாதுகாக்க தற்போது பல மருந்துகள் உள்ளன. இந்த மருந்தினை டாக்டரின் சிகிச்சையின் பேரில் எடுத்துக் கொண்டால் முழுமையாக குணமாகலாம்.

கல்லீரலை ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி, இ மற்றும் ஹெபடைடிஸ் எஃப் போன்ற வைரஸ்கள் பாதிப்பினை ஏற்படுத்தும். இதில் ஹெபடைடிஸ் ஏ பாதிப்பிற்கு என தனிப்பட்ட மருந்து எல்லாம் கிடையாது.  ஹெபடைடிஸ் பி மற்றும் சி பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு ஆன்டி வைரல் மருந்துகள் உள்ளன. இவை அந்த வைரல் மேலும் கல்லீரலை பாதிக்காமல் கட்டுப்படுத்துவது மட்டுமில்லாமல் பூரணமாக குணமாக்கும். ஹெபடைடிஸ் டி, இ மற்றும் எஃப் வைரசும் கல்லீரலை பாதிக்கும். இதில் ஹெபடைடிஸ் பி, சி, வைரஸ்கள் கொஞ்சம் சீரியசானவை என்பதால், இதற்கு மட்டும் மருந்துகள் உள்ளன. மற்ற ஹெபடைடிஸ் வைரஸ்களுக்கு குறிப்பிட்ட மருந்துகள் கிடையாது. காரணம் இதனால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு மிகவும் குறைவு.

இவர்களுக்கு மஞ்சள் காமாலை ஏற்படும். அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டால் குணமாகிவிடுமே தவிர பெரிய அளவில் கல்லீரலை பாதிக்காது. சில சமயம் மஞ்சள் காமாலை பாதிப்பும் ஏற்படாது... அதுவே தானாக குணமாகிவிடும். அதே சமயத்தில் மருந்து உட்கொள்ளக்கூடிய வைரஸ்கள் எல்லாம் மருந்தை எடுத்துக் கொண்டால் மட்டுமே குணமாகுமே தவிர அது தானாகவே குணமாகாது.

சிலருக்கு மஞ்சள்காமாலை பாதிப்பு ஏற்படும், அதற்கான சிகிச்சை முறையினை பின்பற்றி குணமாகிவிட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது. இது சாதாரண வைரஸ் பாதிப்பு தான். ஆனால் அதுவே பி, சி வைரஸ் என்றால் அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், நாளடைவில் கல்லீரல் முழுமையாக பாதிப்படையும். காரணம் இந்த இரண்டு வைரஸ்களும் கல்லீரலில் சிரோசிஸ் மற்றும் புற்றுநோய் உண்டாக்கும். நிறைய நோயாளிகளுக்கு சிகரெட் மற்றும் மது பழக்கம் இருக்காது. ஆனால் அவர்களுக்கு கல்லீரலில் கட்டி, சிரோசிஸ் பாதிப்பு அல்லது இவர்களுக்கு ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸ் பாசிடிவ் என்று காண்பிக்கும்.

இந்த மூன்றில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அது புற்றுநோயின் பாதிப்பினை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஹெபடைடிசிற்கு மருந்து இருப்பதால், ஆரம்ப நிலையில் கண்டுபிடித்துவிட்டால் அதனை 100% குணப்படுத்தலாம். அதே சமயம் ஹெபடைடிஸ் பாதிப்பினை ஆய்வு செய்யாமல் அதன் பாதிப்பினை கண்டறிய முடியாது.

ஹெபடைடிஸ் வைரஸ் ரத்தத்தில் தான் கலந்திருக்கும். அதற்கான ரத்த பரிசோதனை செய்யும் போது தான் கண்டறிய முடியும். காரணம் ஹெபடைடிஸ் பி மற்றும் சி பாதிப்பு ஏற்பட்டால் அதன் அறிகுறி ஒருவருக்கு 15 அல்லது 20 வருடங்கள் கழித்து தான் தெரியவரும். அது வரை இந்த வைரஸ் கல்லீரலை கொஞ்சம் கொஞ்சமாக பாதித்து லிவர் சிரோசிஸ் பாதிப்பு கடைசி நிலையை வந்தவுடன் தான் அறிகுறிகளை வெளிப்படுத்தும். இந்த வைரஸ்களுக்கு ஊசி எல்லாம் கிடையாது. மருந்து மட்டும் தான். அதை டாக்டரின் அறிவுரையின் பேரில் எடுத்துக் கொண்டால் எளிதில் குணமாக்கலாம்.

எவ்வாறு கண்டறியலாம்

* ஒருவருக்கு கல்லீரல் பிரச்னை இருந்தாலோ அல்லது மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அவர்கள் கட்டாயம் பி அல்லது சி வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.

* வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்கள் விசா எடுக்கும் முன் ஆய்வு செய்ய சொல்கிறார்கள். அந்த சமயத்தில் ரத்த பரிசோதனை செய்யும் போது கண்டறியலாம்.

* ரத்த தானம் செய்யும் போது அவர்களின் ரத்தத்தினை முழுமையாக பரிசோதனை செய்வார்கள். அப்போது கண்டறிய முடியும்.

* பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது, எச்.அய்.வி மட்டுமில்லாமல் ஹெபடைடிஸ் பிரச்சினை குறித்தும் ஆய்வு செய்வார்கள். அதன் மூலம் அவர்களுக்கு வைரசின் பாதிப்பு உள்ளதா என்று தெரிய வரும். கர்ப்பிணி பெண்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு இந்த வைரசின் பாதிப்பு இருந்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், கண்டிப்பாக குழந்தையை பாதிக்கும் அபாயம் உள்ளது. பொதுவாக இந்த வைரஸ் ரத்தம் மூலமாகத்தான் ஒருவர் உடலில் இருந்து மற்றவருக்கு பரவும். சேமிக்கப்பட்ட ரத்தத்தில் வைரசின் பாதிப்பு இருந்து அதை சரியான முறையில் ஆய்வு செய்யாமல் இருந்திருந்தால், அந்த ரத்தம் மற்றவர்களுக்கு செலுத்தப்படும் போது, அவர்களையும் அந்த வைரஸ் பாதிக்கும். ஆனால் இப்போது ரத்த வங்கியில் அனைத்து விதமான ஆய்வுகள் செய்யப்படுவதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டு அவர்களை சிகிச்சையினை மேற்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 2:51 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கல்லீரல், மஞ்சள் காமாலை

புதன், 1 செப்டம்பர், 2021

கல்லீரலை பாதிக்கும் மஞ்சள் காமாலை... தவிர்க்க வேண்டிய உணவுகள்...


August 30, 2021 • Viduthalai

நோய் பாதிப்பின்போதும், நோயில் இருந்து மீண்டு வந்த பின்னரும் சில காலத்திற்கு குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடாமல் ஒதுக்குவது கல்லீரலை பாதுகாக்கும்.

கல்லீரலின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும்போது மஞ்சள் காமாலை நோய் உண்டாகும். சருமம் மற்றும் கண்கள் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறும். ரத்த சிவப்பு அணுக்கள் உடைந்துபோகும்போது மஞ்சள் நிறமியான பிலிரூபின் வெளியாகுவது மஞ்சள் நிற மாற்றத்திற்கு காரணமாகும். இது கல்லீரலின் ஆரோக்கியத்தின் மோசமான அறிகுறியாகவும் அமையும். ஆரம்பநிலையிலேயே கண்டறிந்துவிட்டால் மருந்து மற்றும் உணவு பழக்கங்கள் மூலம் மஞ்சள் காமாலையை குணப்படுத்திவிடலாம். வேறு சில நோய் பாதிப்புகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம். நோய் பாதிப்பின்போதும், நோயில் இருந்து மீண்டு வந்த பின்னரும் சில காலத்திற்கு குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடாமல் ஒதுக்குவது கல்லீரலை பாதுகாக்கும்.

கொழுப்பு: மஞ்சள் காமாலை நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணெய் சேர்க்கப்படாத உணவை உட்கொள்வது நல்லது. ஏனெனில் எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகள் கல்லீரலில் கொழுப்பு சேருவதற்கு வழிவகுக்கும். கல்லீரலின் ஆரோக்கியத்தையும் பாதிக்கச்செய்துவிடும். குறிப்பாக வெண்ணெய், பால் பொருட்கள், இறைச்சி போன்ற நிறைவுற்ற கொழுப்பு கலந்த உணவுகள் கல்லீரலுக்கு மிகவும் மோசமானவை. அதற்கு மாற்றாக ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம். ஆனால் மஞ்சள் காமாலை இருக்கும்போது குறைவாகவே பயன்படுத்தவேண்டும்.

சர்க்கரை: இனிப்பு பிரியர்களுக்கு மஞ்சள் காமாலை கடினமான காலகட்டமாகவே அமையும். ஏனெனில் அந்த சமயத்தில் சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட சர்க்கரை பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கச்செய்யும். கல்லீரல் பாதிக்கப்படுவதற்கான அபாயமும் அதிகரிக்கும். ஆதலால் எந்தவகையிலும் சர்க்கரை கலக்கப்பட்ட உணவை தவிர்ப்பது நல்லது.

உப்பு: உணவில் அதிகம் உப்பு சேர்த்தால் அது உடலில் உள்ள நீரில் படிந்துவிடும். கல்லீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதில் இருக்கும் சோடியம்தான் அதற்கு காரணம். ஆதலால் கல்லீரலை பாதுகாக்க உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். உப்புக்கு பதிலாக வெங்காய தூள், பூண்டு தூள் சேர்த்து சுவையை மேம்படுத்தலாம்.

இரும்பு: மஞ்சள் காமாலை இருக்கும்போது உடலில் இரும்புச்சத்து அதிகரிப்பது கல்லீரலுக்கு மோசமானது. இரும்புச்சத்து முக்கியமானது என்றாலும் இந்த காலகட்டத்தில் குறைத்துக்கொள்ள வேண்டும். புரதத்தில் இரும்புச்சத்து கலந்திருக்கும். ஆதலால் புரதச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்ளும்போது விழிப்புடன் இருக்க வேண்டும்.

காய்கறிகள்: கேரட், முட்டைக்கோஸ், பீட்ரூட், காலி பிளவர், பிராக்கோலி, எலுமிச்சை, கீரை, பீன்ஸ், பூண்டு, மஞ்சள், அவகொடோ, ஆப்பிள், வால்நெட் போன்றவை கல்லீரலின் ஆரோக்கியத்தில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 12:26 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கல்லீரல், மஞ்சள் காமாலை

சனி, 24 ஏப்ரல், 2021

கல்லீரல் அழற்சி


மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [26]


கல்லீரல் மார்புக் கூட்டின் கீழ், வலது புறத்தில் அமைந்துள்ள ஓர் உறுப்பாகும். மார்பு, வயிறு இடைச் சுவருக்குக் கீழே (உதரவிதானம் _  diaphragm) ஒரு பெரிய உறுப்பாக இது இருக்கிறது. நம் உடலில் உள்ள உறுப்புகளில், மிகப் பெரிய உறுப்பு இது. செம்பழுப்பு நிறத்தில் 1.4 முதல் 1.6 கிலோ எடையுள்ளது கல்லீரல். கல்லீரலின் கீழ்ப்பகுதியில் பித்தப்பையும் (Gall bladder), இடதுபுறத்தில் இரைப்பையும் இருக்கின்றன. நம் உடலில் உள்ள ஒரு பெரிய தொழிற்சாலை என்றே இந்த உறுப்பை நாம் சொல்லலாம். கல்லீரல் வலது, இடது மடல்களாகப்  (Lobes) பிரிக்கப்பட்டுள்ளது. இவை 8 பிரிவுகளாகப் பிரிந்து அமைந்துள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 1000 ‘சிறு மடல்கள்’ (Lobules) உள்ளன. ஒவ்வொரு சிறு மடலிலிருந்தும் ஒரு சிறு குழாய் (Duct) வெளியே வருகிறது. இச்சிறு குழாய்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து “கல்லீரல் பொதுக் குழாயாக’’  (Common Hepatic duct) மாறுகிறது. கல்லீரலில் உற்பத்தியாகும் ‘பித்தநீரை’ (Bile), பித்தப்பைக்கும் (Gall bladder),மேல் சிறு குடலுக்கும்  (Duodenum) செலுத்தும் வழியாக கல்லீரல் பொதுக் குழாய் விளங்குகிறது. மகாதமனி  (Aorta) யிலிருந்து பிரியும் ஒரு பெரும் தமனியான ‘கல்லீரல் தமனி’  (Hepatic Artery) கல்லீரலுக்கு நல்ல இரத்தத்தை எடுத்துச் செல்கிறது ‘கல்லீரல் சிரை’ (Hepatic Portal Vein) இரைப்பை, மண்ணீரல் மற்றும் கணையத்திலிருந்து செரிமான ஊட்டச்சத்து நிறைந்த இரத்தத்தை உடலுக்குக் கொண்டு செல்கிறது. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துகளின் அளவினை நிர்ணயித்து, அதற்கேற்ப உடலுக்குள் செலுத்தும் செயலையும் கல்லீரல் செய்கிறது. நம் உடலில் உள்ள இரத்தத்தின் அளவில் 13% கல்லீரலில் எப்பொழுதும் இருக்கும். இரத்தம் அதிகம் உள்ள உறுப்புகளில் கல்லீரல் ஒரு முக்கிய உறுப்பாகும். கல்லீரலின் அடிப்படை உறுப்புகள் “கல்லீரல் செல்களால்’’  (Hepatocytes) ஆனவை. இந்தச் செல்கள், கல்லீரலில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டால் உடனடியாக அதைச் சீராக்கும் தன்மையுடையது. இச்சீராக்கல் மிகவும் எளிதாகவும், வேகமாகவும் நிகழும். ஆனால், நீண்டகால கல்லீரல் பாதிப்புகள் சீராக்க முடியாத நிலைமை ஏற்படுத்தும்.

கல்லீரல் செயல்பாடுகள்: மனித உடல் நல்ல முறையில் செயல்படத் தேவையான 500க்கும் மேற்பட்ட செயல்பாடுகளில் கல்லீரல் பங்கு வகிக்கிறது. அதனாலேயே நம் உடலில் உள்ள பெரிய தொழிற்சாலையாகக் கல்லீரல் கருதப்படுகிறது. அதன் செயல்பாடுகள் அதிகளவு உடல் இயக்கத்திற்குக் காரணம்.

பித்தநீர் சுரப்பு: பித்த நீர் கல்லீரலில் சுரக்கிறது. பார்ப்பதற்கு கரும்பச்சை நிறத்தில், மஞ்சள் மற்றும் பழுப்பு நிற நீராக இருக்கும். இச்சுரப்பு, சிறுகுடலின் உணவு செரிமானத்திற்கு முக்கியக் காரணமாக இருக்கின்றது. கல்லீரலில் உற்பத்தியாகி, பித்தப்பையில் சேகரிக்கப்பட்டு, பித்த நாளத்தின் வழியே முன் சிறுகுடலை அடையும். பித்த நீரில் நீர், கோழைப் பொருள்கள், உப்புகள், கொலஸ்ட்ரால், பித்த நிறமிகள், பித்த நீர் உப்புகள் போன்றவை உள்ளன. பித்த நீர் உப்புகள் பெரிய கொழுப்புப் பொருள்களை சிறிய கொழுப்புத் திவலைகளாக மாற்றுகின்றன. மிகப் பெரிய நீர்மம் சுரக்கும் சுரப்பியாக கல்லீரல் திகழ்கிறது. உடலின் உள்சூழலைக் கட்டுப்படுத்தி சமநிலையில் வைக்கும் பெரும் பொறுப்பை கல்லீரல் செய்கிறது. வளர்சிதை மாற்றங்களின்(Metabolism) போது உண்டாகும் நச்சுத் தன்மையை அகற்றுதல், புரதத் தொகுப்பு மற்றும் செரிமானத்திற்குத் தேவையான உயிர் வேதியியல் பொருள்களை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பணிகள் கல்லீரலில் நடைபெறுகின்றன. வளர்சிதை மாற்ற நிகழ்வுகள், மாவுச் சத்தை கிளைகோஜனாக மாற்றிச் சேமிப்பை முறைப்படுத்துதல், உடலில் உற்பத்தியாகி, இரத்தத்தில் கலந்துள்ள சிவப்பணுக்களை (முதிர்ந்ததும்) சிதைக்கும் பணியையும் கல்லீரல் செய்கிறது. மற்றும் பல வகையான “ஊக்கி நீர்’’ (Hormones) களை சுரக்கிறது. கொழுப்புத் திசுக்களின் செரிமானத்திற்கும் கல்லீரல் உதவுகிறது. உடலுக்குச் செல்லும் மருந்துகளின் பயன்பாட்டுக்குப் போக மீதமுள்ள மருத்துவ மூலக்கூறுகளைச் சிதைத்து வெளியேற்றும் பணியை இந்த அவயவமே செய்கிறது. சிறு மற்றும் சிக்கலான மூலக்கூறுகளைத் தொகுத்தல் மற்றும் சிதைத்தல் உள்ளிட்ட பல முக்கிய உயிர் வேதியியல் (Bio-Chemistry) )செயல்பாடுகளையும் கல்லீரல் செய்கிறது. சிவப்பணுக்கள் சிதைக்கப்படும்போது, அதில் உள்ள இரும்புச் சத்தை சேமித்தல், சில தனிமங்கள், உயிர்ச் சத்துகள் சேமிப்பு, கொழுப்பு மற்றும் புரதச் சத்துகளைச் சேமித்தல், சில ஊக்கி நீர்கள் சேமிப்பு, யூரியா உற்பத்தி, இரத்தப் புரத நீர் (Plasma)உற்பத்தி, உட்கொள்ளும் உணவைச் செரித்து ஆற்றலை உருவாக்கவும், சுரப்பிகளைச் செயல்பட வைத்து நொதியங்களை  (Enzymes) உற்பத்தி செய்வதிலும், அதன்மூலம் உணவு செரித்தலை சீராக வைக்கும் செயலையும், இரத்த உறைவை (Clotting) உண்டாக்கும் புரதங்களை உற்பத்தி செய்யும் பணியையும், காயங்களை ஆற்றும் செயல்திறனையும் கல்லீரல் செய்கிறது. கல்லீரல் அடர்த்தியான இரத்தக் குழாய்களையும், மற்றும் பித்த நீர்க் குழாய்களையும் வலை போன்ற அமைப்புடன் பெற்றுள்ளது. முதிர்ச்சியடைந்த இரத்தச் சிவப்பணுக்களைச் சிதைக்கும்பொழுது, அதிலிருந்து “பிலிருபின்’’  (Bilirubin) எனும் கழிவுப் பொருளை நீக்கி பித்த நீரை உண்டாக்குகிறது. கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீர் பித்த நீர்க் குழாய்  (Bileduct) வழியே சிறுகுடலுக்குச் செலுத்தப்படுகிறது. கொழுப்பு உணவுகளின் தேவையற்ற மூலக் கூறுகளைக் கரைத்து வெளியேற்றும் பணியையும் கல்லீரல் செய்கிறது. உணவு செரிமானத்தில் உருவாகும் எளிய வடிவிலான ஊட்டச் சத்துகள் தேவையான அளவுக்கு மேல் இருக்கும்பொழுது, வேறு வடிவமாக மாற்றப்பட்டு, கல்லீரலில் சேமிக்கப்படுகிறது. பின்பு உடல் தேவைக்கு ஏற்ப சேமிக்கப்பட்டுள்ள ஊட்டச் சத்துகள் மீண்டும் எளிய வடிவில் மாற்றப்பட்டு, இரத்தத்தில் செலுத்தப்பட்டு, தேவைப்படும் உறுப்புகளுக்குச் செலுத்தப்படும். பொதுவாக எல்லா குடல் பாகங்களிலிருந்தும், உடலுக்குள் நுழையும் வெளிப்பொருள்கள் யாவற்றையும், “கல்லீரல் இரத்த ஓட்டம்’’  (Portal Circulation) மூலம் கல்லீரல் தன்னுள் இழுத்துக் கொள்ளும். இதுபோன்ற பல்வகைச் செயல்பாடுகளை  உடலின் பெரும் தொழிற்சாலையான கல்லீரல் செய்கிறது.

(தொடரும்)

- உண்மை இதழ், மார்ச் 16- 31. 21

இடுகையிட்டது parthasarathy r நேரம் 3:41 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கல்லீரல்
பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

மருத்துவ சின்னம்

மருத்துவ சின்னம்
கடுசியஸ் (Caduceus)

மருந்து

உணவே மருந்து!
Powered By Blogger

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

இந்த வலைப்பதிவில் தேடு

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

பின்பற்றுபவர்கள்

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (1)
    • ▼  ஜூலை (1)
      • சிறுநீரகச் செயலிழப்புக்கு டயாலிசிஸ் தீர்வா?
  • ►  2025 (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2024 (20)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (11)
    • ►  மே (6)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2023 (22)
    • ►  ஜூன் (5)
    • ►  ஏப்ரல் (16)
    • ►  மார்ச் (1)
  • ►  2022 (18)
    • ►  டிசம்பர் (1)
    • ►  அக்டோபர் (11)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (1)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (1)
  • ►  2021 (35)
    • ►  டிசம்பர் (2)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (13)
    • ►  ஜனவரி (6)
  • ►  2020 (15)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2019 (33)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (7)
  • ►  2018 (48)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (2)
  • ►  2017 (43)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (7)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (5)
  • ►  2016 (29)
    • ►  டிசம்பர் (7)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (12)
    • ►  செப்டம்பர் (3)
  • ►  2015 (27)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஆகஸ்ட் (5)
    • ►  ஜூலை (1)
  • ►  2014 (4)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (3)

லேபிள்கள்

  • (APPENTICITIS)
  • 2018
  • அடைப்பு
  • அழற்சி
  • அளவுகள்
  • ஆண் இனப்பெருக்கு
  • ஆண்கள்
  • ஆய்வு
  • ஆர்வி
  • ஆவி பிடித்தல்
  • ஆன்டிபயாடிக்
  • ஆஸ்துமா
  • ஆஸ்பிரின்
  • இதய
  • இதயம்
  • இதயம் ❤️
  • இரண்டாம் நிலை
  • இரத்த அழுத்தம்
  • இரத்தக்குழாய்
  • இரத்தம்
  • இரைப்பை
  • இரைப்பை அழற்சி
  • இளமை
  • இறைச்சி உணவு
  • இன உறுப்பு
  • இன உறுப்பு ஆய்வு
  • உடல் எடை
  • உடல்நிலை
  • உடற்கொடை
  • உடற்பயிற்சி
  • உணவு
  • உணவுக்குழாய்
  • உயிர்க்கொல்லி
  • எலும்பு
  • ஒமைக்ரான்
  • ஓஆர்எஸ்
  • ஓட்டம்
  • கடவுள் நம்பிக்கை
  • கண்
  • கரு வளர்ச்சி
  • கருத்தடை
  • கருவுறுதல்
  • கரோனா
  • கல்லீரல்
  • கல்லீரல் அழற்சி
  • கல்லீரல் அழற்சி (Hepatitis)
  • கலப்பு
  • கற்கள்
  • காது
  • காது-மூக்கு-தொண்டை
  • காய்ச்சல்
  • கால்வலி
  • கிருமி
  • குடல்
  • குடல்வால் அழற்சி
  • குடும்ப நலம்
  • குடும்ப நலன்
  • குரோமோசோம்
  • குழந்தை பிறப்பு
  • குழந்தையின்மை
  • கை இணைப்பு
  • கை மாற்று
  • கொலஸ்ட்ரால் - கவலை
  • கொழுப்பு
  • கோதுமை
  • சளி
  • சிறுநீரகக் கற்கள்
  • சிறுநீரககோளாறு
  • சிறுநீரகச் செயலிழப்பு
  • சிறுநீரகம்
  • சிறுநீரகம் (Kidney)
  • சினையுறுதல்
  • செயல் இழப்பு
  • சைனசு
  • டயாலிசிஸ்
  • தலை சுற்றல்
  • தாய்ப்பால்
  • தாவர உணவு
  • தூக்கம்
  • தைராய்டு
  • தொண்டை
  • நஞ்சு முறிவு
  • நினைவு
  • நீரிழிவு
  • நுண்ணுயிர் எதிர்ப்பிகள்
  • நுரையீரல்
  • நுரையீரல் பொறி (ECMO)
  • நுறையீரல்
  • நெஞ்சகம்
  • நெஞ்சு
  • நோய்
  • நோய் எதிர்ப்பு
  • நோய் கண்டறிதல்
  • நோய் தடுப்பு
  • பக்கவாதம்
  • பல்
  • பன்றி
  • பாக்டீரியா
  • பாத எரிச்சல்
  • பிசியோதெரபி
  • பித்தவெடிப்பு
  • பிறவி குறைபாடு
  • புரதம்
  • புற்றுநோய்
  • பேய்
  • பேறுகாலம்
  • மகப்பேறு
  • மஞ்சள் காமாலை
  • மயக்கவியல்
  • மரணத்திற்குப் பின்
  • மரணத்துக்கு பின்
  • மரணம்
  • மருத்துவ வளர்ச்சி
  • மருத்துவம்
  • மருந்து
  • மருந்துகள்
  • மன நலம்
  • மனநிலை
  • மாதவிடாய்
  • மார்பு வலி
  • மாரடைப்பு
  • முக சீரமைப்பு
  • மூச்சிரைப்பு
  • மூட்டுவலி
  • ரத்த அழுத்தம்
  • வயிற்றுப்போக்கு
  • வலி
  • வாடகைத்தாய்
  • விந்துப்பை வீக்கம்
  • விருது
  • வைட்டமின்
  • வைரசு
  • ஸ்டெம் செல்
  • DEATH
  • GASTRITIS
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.