திங்கள், 30 செப்டம்பர், 2019

இதய நோய்களைத் தடுக்கலாம்

அன்றாட வாழ்க்கை முறையில் மாற் றங்கள் செய்தால், இதய நோய்களைத் தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். இதய நோய்களுக்கு வயது, பாலினம், குடும்பப் பின்னணி எனப் பல்வேறு காரணிகள் இருந் தாலும் சில அடிப்படையான வாழ்க்கைமுறை மாற்றங்களை மேற்கொண்டால் அவற்றி லிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள முடியும். இதய நோய்களைத் தடுப்பதற்கான சில ஆலோசனைகள்

புகைபிடிப்பது, புகையிலை பயன் படுத்துவது ஆகிய இரண்டு பழக்கங்களும் இதய நோய்களை உருவாக்குவதற்கான முக் கியக் காரணங்களாகக் கண்டறியப் பட்டுள் ளன. புகையிலையில் இருக்கும் வேதிப் பொருட்கள் இதயம், ரத்த நாளங்களைப் பாதிப்படையச் செய்யும். இந்தப் பாதிப்பு, நாளடைவில் மாரடைப்பு ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது. சிகரெட்களில் இருக்கும் கார்பன் மோனாக்சைடு ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவில் மாற்றத்தை உருவாக்கும்.

இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. போதுமான ஆக்சிஜன் கொண்ட ரத்தத்தை உடலில் செலுத்த இதயம் கடினமாகச் செயல்பட வேண்டியிருப்பதால் இதயத் துடிப்பும் அதிகரிக்கிறது. இதய நோய்களைத் தடுக்க வேண்டுமென்றால், புகைப்பழக்கத்தை முற்றிலும் கைவிடுவதுதான் சரியான வழி. எப்போதாவது நண்பர்களுடன் வெளியே செல்லும்போதுதான் புகைபிடிக்கிறேன் என்று சொன்னால் அதுவும் ஆபத்துதான். ஆனால், புகைபிடிப்பதை நிறுத்தியவுடன் இதய நோய்களுக்கான அறிகுறிகள் இயல் பாகவே குறையத் தொடங்கும்.

30 நிமிட உடற்பயிற்சி

அன்றாடம் உடற்பயிற்சி செய்வது இதய நோயைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழி. உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான எடை, உணவு போன்ற அம்சங்களை இணைத்துக் கொள்ளும்போது அதனால் கிடைக்கூடிய பலன்கள் அதிகம். உடற்பயிற்சி செய்வது உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுவதுடன் ரத்த அழுத்தம், அதிக கொழுப்புச்சத்து, நீரிழிவு நோய் ஆகியவற்றையும் கட்டுப்படுத்த உதவும். ஒரு வாரத்துக்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது உடல் சீராக இயங்குவதற்கு வழிவகுக்கும்.

உடற்பயிற்சியுடன், தோட்டக்கலை, வீட்டு பராமரிப்புப் பணிகள், உங்கள் செல்லப் பிராணியுடன் நடைப் பயிற்சிக்குச் செல்வது என அனைத்துமே உடற்பயிற்சி செய்வது போலத்தான். அதனால் எடுத்தவுடனே கடுமையான உடற்பயிற்சி முறைகளைத் தேர்ந்தெடுக்காமல் எளிமையான நடைப்பயிற்சி, தோட்டப் பராமரிப்புப் பணிகள் போன்றவற்றிலிருந்து உங்கள் அன்றாட உடற்பயிற்சியைத் தொடங்கலாம்.

ஆரோக்கியமான உடல் எடை

உடல் எடை அதிகமாக இருப்பது இதய நோய்கள் ஏற்படுவதற்கான காரணிகளில் ஒன்றாக இருக்கிறது. உங்கள் உடல் நிறைக் குறியீட்டைத்   தெரிந்துகொண்டு, அதன்படி உங்கள் உடல் எடையைப் பராமரிப்பது நல்லது. ஆண்களின் இடுப்பளவு 40 அங்கு லத்துக்கு (101.6 செ.மீ) அதிகமாக இருந்தால், அவர் உடல்பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று அர்த்தம்.

அதேபோல், பெண்களின் இடுப்பளவு 35 அங்குலத்துக்கு (88.9 செ.மீ) அதிகமாக இருந் தால் அவர்கள் உடல்பருமனால் பாதிக்கப் பட்டிருப்பதாகப் பொருள். அதிக உடல் எடையுடன் இருப்பவர்கள் 3-இலிருந்து 5 சதவீதம் எடையைக் குறைத்தாலும் அது ரத்தச் சர்க்கரை அளவு, நீரிழிவு நோய் அறிகுறிகளைக் குறைக்கும்.

பற்களில் உள்ள கரையை போக்க....

* கொய்யாப் பழம் மற்றும் கொய்யா இலைகள் பற்களில் உள்ள கறையைப் போக்க மிகச்சிறந்தது. கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரைக் கொண்டு வாயை கொப்பளித்து வந்தாலும் அல்லது தினந்தோறும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடுவதன் மூலமும் பற்களில் உள்ள கறையைப் போக்க முடியும்.

* தினமும் பல் தேய்க்கும் முன்பு சிறிது உப்பு தூளை வைத்து பல்லை தேய்த்துவிட்டு பின்னர், பேஸ்ட் கொண்டு பல் தேய்த்தால் பற்களில் படிந்த கறைகள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கும்.

- விடுதலை நாளேடு, 30. 9. 19

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

இன்சுலின் ஊசி நல்லதா??? கெட்டதா

சுகர் நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி💉 போடும் நிலை ஏன் வருகிறது???

இன்சுலின் ஊசி நல்லதா👍???
கெட்டதா👎???

இன்சுலின் ஊசி போடுவதில் இருந்து விடுதலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா??? 😃😃😃

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

ஒரு நீரிழிவு நோயாளிக்கு நீரிழிவு ஏன் ஏற்படுகிறது என்பதை முதலில் அறிந்தால் இன்சுலின் ஊசி ஏன் பரிந்துரைக்கப்படுகிறது என்பதை விளங்க முடியும்.

நீரிழிவு என்பது நோய் என்ற நிலையில் இருந்து அது ஒரு பன்முக காரணிகள் கொண்ட குறைபாடு என்ற நிலையில் வைத்துப்பார்க்கப்படுகிறது.

it's a deficiency .

அதாவது நம் உடல் ஊட்டச்சத்துகளை கிரகித்துக்கொள்ளும் தன்மையில் ஏற்படும் குளறுபடி அல்லது குறைபாட்டை நாம் பொதுப்பெயராக "நீரிழிவு" என்று அழைக்கிறோம்

Diabetes is a complex disorder with which our body becomes deficient in handling nutrients from food in a right way.

ஒரு நார்மல் மனிதன்
அவன் உண்ணும் உணவில் மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட் இருந்தால் அது ரத்தத்தில் க்ளூகோசை கலக்கும்

ரத்தத்தில் இருக்கும் க்ளூகோசை கணையத்தில் இருக்கும் பீட்டா செல்கள் உணரும்.

உணர்ந்த அடுத்த சில நாழிகைகளில்
"இன்சுலினை" ரத்தத்தில் கலக்கும்.

இன்சுலினின் வேலை க்ளூகோசை உடலில் இருக்கும் செல்கள் அனைத்திற்கும் சென்று பசித்திருக்கும் சேய்களுக்கு அன்னை உணவு புகட்டுவது போல பசித்திருக்கும் செல்களுக்கு உணவு ஊட்டும்.

மிஞ்சிய உணவை ( க்ளூகோசை) கல்லீரலில் க்ளைகோஜெனாகவும்  தோலுக்கு அடியே ட்ரைகிளிசரைட் எனும் கொழுப்பாகவும் சேமிக்க உதவும்.
இது பஞ்ச காலத்தில் ஏற்படும் பட்டினிகளின் போது உதவும் என்பதற்காக நமது உடலின் ஏற்பாடு.

நாம் உண்ணும் உணவில் இருக்கும் கொழுப்பு( Fat ) மற்றும் புரதம் (protein) போன்றவை ரத்தத்தில் கலக்கும் போது முறையே ஃபேட்டி அமிலங்களாகவும் அமினோ அமிலங்களாகவும் மாறும்.

அப்போதும் இன்சுலின் சுரக்கும்.
ஃபேட்டி அமிலங்களையும் அமினோ அமிலங்களையும் நமது உடலின் கட்டுமானப்பணிகளுக்கு உபயோகிக்கும் முக்கிய வேலை இன்சுலினுடையது. அதனால் அதை "கட்டுமான மீளுருவாக்க ஹார்மோன்" என்று அழைக்கிறோம். Anabolic harmone.

மேலும் நமது உடலில் புரதத்தை சேமித்து வைத்திருக்கும் தசைகளும், கொழுப்பும் கரையாமல் இருக்க இன்சுலின் அவசியமாகிறது.

இன்சுலின் கொழுப்பு கரைவதை தடுக்கிறது.

இதில் இருந்து நமக்கு புரிந்திருக்கும்
"இன்சுலின்" என்பது நமக்கு மிகவும் தேவையான அத்தியாவசியமான ஹார்மோன் என்று.

இந்த ஹார்மோன் பிறப்பில் இருந்தே சிலருக்கு முற்றிலுமாக அல்லது  போதுமான அளவு சுரக்காது .
இவர்கள் டைப் ஒன்று நீரிழிவு (TYPE I)  உள்ளவர்கள் என்று அறியப்படுகிறார்கள்

இவர்களுக்கு இன்சுலின் சுரப்பு சுத்தமாக இல்லாததால் நாம் கட்டாயம் வெளியில் இருந்து இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

எக்காரணம் கொண்டும் யார் கூறினாலும் இன்சுலின் ஊசியை டைப் ஒன்று நீரிழிவு நோயாளிகள் நிறுத்திவிடக்கூடாது.

அவ்வாறு நிறுத்தினால் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அபாயகரமான நிலைக்கு ஏறிவிடும்.
மேலும் இன்சுலின் இல்லாததால் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து ரத்தத்தில் கீடோன்கள்  ஏறிவிடும்.
நமது செல்களுக்கு க்ளூகோசை ஊட்டவும் இன்சுலின் இல்லை.
புதிதாக உருவாகும் கீடோன்களை சாப்பிட்டும் பழக்கமில்லை. ஆதலால் ஒரே சமயத்தில் க்ளூகோசும் கீடோன்களும் அபாய அளவை தாண்டி கோமா நிலைக்கு அழைத்துச்செல்லும். இதை Diabetic Ketoacidotic coma என்கிறோம்.

பல நேரங்களில் மரணம் சம்பவிக்கும் .எனவே டைப் ஒன்று நீரிழிவு நோயாளிக்கு கட்டாயம் இன்சுலினை மறுக்கக் கூடாது.

இப்போது பெரும்பான்மையான டைப் 2 நீரிழிவு நோயாளிகள் கதைக்கு வருவோம்.

டைப் டூ நீரிழிவு எப்படி வருகிறது ?

பொதுவாக முப்பது வயது முதல் ஐம்பது வயதிற்குட்பட்ட காலத்தில் தான் அதிகபட்சமான டைப் டூ நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்படுகின்றன.

எனவே என்னைப் பொறுத்த வரை நான் டைப் டூ நீரிழிவை "இயந்திர தேய்மான நோயாகவே பார்க்கிறேன்"
நமது உடல் ஒரு இயந்திரம் என்றால்

அது இயங்க தேவையான எரிபொருளை விடுத்து வேறொரு எரிபொருளில் இயக்குவதால் ஏற்படும் தேய்மானம் தான் நீரிழிவு நோய் என்பது எனது கருத்து.

மருத்துவ விஞ்ஞானம் டைப் டூ டயாபடிஸ்க்கு முதல் காரணமாக
"ஜீன்கள்" எனும் பிறவிக்குறைபாட்டை குறிக்கிறது.

அடுத்த காரணங்களாக
அதிக கலோரி உணவு
அதிக உடல்  எடை
குறைந்த உடல் பயிற்சி
அதீத மன அழுத்தம்/உளைச்சல்

போன்றவற்றை கூறுகிறது.

நிச்சயம் ஜீன்களின் தாக்கத்தை மறுப்பதற்கில்லை. நம்மால் பெரிதாக மாற்ற இயலாத ஒரு காரணியாக ஜீன்கள் இருக்கின்றன. இதை Non modifiable risk factor  

ஆனால் நம்மால் மாற்ற முடிந்த Modifiable risk factorகளில்
முதன்மையாக நான் கருதுவது

"உணவு"

டைப் டூ நீரிழிவு நோயாளிக்கு ஏன் ரத்த சர்க்கரை அளவுகள் அதிகமாகின்றன?

1. அவரது கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சரிவர ரத்த க்ளூகோஸ் அளவுகளை கிரகிக்க முடியாமல் போவது.

இதனால் உணவு சாப்பிட்டபின் ஏறும் சர்க்கரைக்கு ஏற்றாற் போல் இன்சுலின் சுரப்பு இருக்காது.

2. நமது உடலில் உள்ள அத்தனை செல்களிலும் இன்சுலினை இணங்கண்டு கொள்ள ஏதுவாக Insulin receptor கள் இருக்கும். இவற்றின் அளவுகள் செயல்களில் குறைவதால் கணையத்தால் சுரக்கப்பட்ட இன்சுலின் செல்களில் சரியாக வேலை செய்யாது  இதை Insulin resistance என்போம்.

எனவே ஒரு சமயத்தில் இன்சுலினும் குறைவாக சுரந்து , சுரக்கப்பட்ட கொஞ்சூண்டு இன்சுலினும் சரியாக வேலை செய்யாமல் போவதால் ஏற்படுவதே டைப் டூ டயாபடிஸ்

இப்போது இன்சுலின் ஊசி 💉ஏன் பரிந்துரை செய்யப்படுகிறது? என்ற கேள்விக்கு மீண்டும் வருவோம்

ஒரு சராசரி தமிழருக்கு
40 வயதில் நீரிழிவு கண்டறியப்படுகிறது

அவருக்கு பீட்டா செல்கள் நன்றாக வேலை செய்கின்றன. இன்சுலின் சுரப்பு அளவும் நன்றாக இருக்கிறது. ஆனால் சுரக்கப்பட்ட இன்சுலின் மட்டும் சரியாக வேலை செய்ய மாட்டேன் என்கிறது.

ஆகவே முதலில் இன்சுலினை முறையாக வேலை செய்ய வைக்கும் மாத்திரை மட்டும் தரப்படும்.

ஆனால் நம்மவர் அதிக மாவுச்சத்து உள்ள உணவுகளை தினமும் சாப்பிடுகிறார்.
டீயில் சீனியை நிறுத்தவில்லை.
ஆகவே சுகர் கண்ட்ரோல் ஆகவில்லை.

காரணம் இப்போது பீட்டா செல்கள் வேலை செய்வதில் சுணக்கம் காட்டுவதால் உணவு சாப்பிட்டவுடனேயே சுரக்க வேண்டிய இன்சுலின் அளவுகள் குறைகின்றன.

இதை சரி செய்ய பீட்டா செல்களை தூண்டி இன்சுலினை சுரக்கச்செய்யும் மாத்திரைகள் சேர்க்கப்படுகின்றன.

கொஞ்ச காலம் சுகர் கண்ட்ரோல் ஆகிறது.

ஆனால் சில வருடங்கள் கழித்து மீண்டும் ரத்த சர்க்கரை அளவுகள் சரியாக இல்லை.

காரணம் இப்போது பீட்டா செல்கள் கிட்டத்தட்ட தங்களது இன்சுலின் சுரப்பை நிறுத்தி விட்டன.
பீட்டா செல்கள் முழுவதும் அழிந்தும் போய் விடும் நிலையும் உண்டு.

இதை Type 2 ->TYPE 1 என்று அழைக்கிறோம்.

அதாவது டைப் டூ நீரிழிவில் இருந்து டைப் ஒன்று நோயாளியாக மாறிவிட்டார் என்று அர்த்தம் .

இப்போது இவருக்கு கணையத்தில் இருந்து இன்சுலினே சுரக்காது.
ஆகவே இன்சுலினை வேலை செய்ய வைக்கும் மாத்திரைகளும் வேலைக்கு ஆகாது. இன்சுலினை சுரக்க வைக்கும் மாத்திரைகளும் வேலைக்கு ஆகாது.

இந்த நிலையில் தான் நம் அருமருந்தான இன்சுலின் ஊசிகள் போடப்படுகின்றன.

இன்சுலின் ஏன் மாத்திரையாக இல்லாமல் ஊசியாக இருக்கிறது?

இன்சுலின் என்பது புரதமாக இருப்பதால் மாத்திரையாக போட்டால் நமது ஜீரண மண்டலம் அதை செரிமானம் செய்து  விடும். பலன் இருக்காது. ஆகவே தான் தோலுக்கு அடியில் போடும்  ஊசியாக இன்சுலின் கிடைக்கிறது.

ஆகவே, இன்சுலின் ஒருவருக்கு பரிந்துரை செய்யப்படுகிறது என்றால்

இனிமேல் அவருக்கு உடலில் சுரக்க இன்சுலின் இல்லை  என்று அர்த்தம்.

நமது வீட்டு சூழலையே எடுத்துக்கொள்வோம் 

முப்பது வருடங்களுக்கு முன்பு வரை கூட பல வீடுகளில் கிணறுகள் இருந்தன 

அதில் சில அடிகளில் தண்ணீர் கிடைத்தது.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வீடுகள் அதிகமாகவே தண்ணீர் தேவையும் அதிகமாக அதிகமாக ஆள்துளை கிணறுகள் போட்டு உறிஞ்சி எடுத்தோம் 

இப்போது ஆள்துளை கிணறுகளிலேயே காற்று தான் வருகிறது.

உடனே நாம் தண்ணீரை கேன்களிலும் வண்டிகளிலும் வாங்குகிறோம் .

இதே நிலை தான் இன்சுலினுக்கும்..

மாவுச்சத்து அதிகமாக உண்டதால் நீரிழிவு வந்தது.

உடனே மாவுச்சத்தை குறைக்கவில்லை.
மாறாக அதிக மாவுச்சத்து உண்ணும் பழக்கத்திலேயே இருந்தோம்.

நாளாக நாளாக மாத்திரைகள் வேலை செய்யாமல் இன்சுலின் தேவைப்படும் சூழலுக்கு ஆளாகிறோம்

இதுவன்றியும் சில அசாதாரண சூழ்நிலைகளில் நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி தேவைப்படும்.அவை

1. கடும் நோய் தொற்று
2. விபத்தில் மோசமான காயம்
3. அறுவை சிகிச்சை
4. ஸ்டிராய்டு மருந்து உபயோகிக்கும் போது
5. கர்ப்பிணிகள்

மேற்சொன்ன இடங்களில் நீரிழிவு மாத்திரைகளுடனோ அல்லது தனியாகவோ இன்சுலின் ஊசி உபயோகிக்கப்படும். மேற்சொன்ன இடங்கள் அனைத்திலும் நம் உடலால் முறையாக இன்சுலின் சுரந்து சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க இயலாது  அல்லது உடல் கட்டுமானப் பணிகளை சரி வர செய்ய இயலாது. எனவே இன்சுலின் கட்டாயம் தேவைப்படுகிறது

இப்போது இந்த கட்டுரையின் கடைசி மற்றும் முக்கிய பகுதிக்கு வருவோம்.

ஒருமுறை போட ஆரம்பித்த இன்சுலின் ஊசியை  டைப் டூ டயாபடிஸ் நோயாளி வாழ்நாள் முழுவதும் நிறுத்த முடியாதா???

இன்சுலின் உங்களுக்கு எதனால் பரிந்துரை செய்யப்பட்டது என்பதை அறிந்துமா இந்த கேள்விக்கு பதில் தெரியவில்லை.

நீங்கள் உங்கள் உணவில் மாவுச்சத்தின் அளவை தினமும் 40 கிராமிற்கு உள்ளாக குறைத்தால் உங்கள் கணையம் சுரக்கும் குறைந்த இன்சுலினே போதுமானதாக இருக்கும் நிலை ஏற்படலாம்.

சில நேரங்களில் முற்றிலும் பீட்டா செல்கள் இறந்து விட்டிருந்தால், ஏற்கனவே போடப்பட்டு வந்த இன்சுலின் அளவுகளை விடவும் குறைந்த அளவே போதும் என்ற நிலை வரலாம்.

எனது அனுபவத்தில் பல டைப் டூ நீரிழிவு  நோயாளிகள், குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறைக்கு மாறி இன்சுலினை நிறுத்தி மாத்திரைகளுக்கு மாறிய கதைகளை கண்டுள்ளேன்.

பலருக்கு பேலியோ உணவு முறைக்கு மாறியும் கூட இன்சுலின் தொடர்ந்து தேவைப்படுகிறது அதையும் காண்கிறோம்.

தேவைக்கு ஏற்ப இன்சுலின் வழங்கப்படும். குறைக்கப்படும். நிறுத்தப்படும்

அந்த முடிவை மருத்துவரிடம் விட்டு விடுங்கள்

இன்சுலின் ஊசி நல்லதா ? கெட்டதா ? என்ற கேள்விக்கான பதில்

நிச்சயம் அது நன்மை செய்வது தான்.
அதிக மாவுச்சத்து அதனால் டைப் டூ நீரிழிவை பெற்று   இன்சுலின் சுரக்காத நிலைக்கு சென்ற மக்களுக்கும் , பிறவி குறைபாடாக டைப் ஒன்று நீரிழிவை பெற்ற மக்களுக்கும் நிச்சயம் இன்சுலின் நிச்சயம் அமிர்தம் தான்.

இன்சுலினால் தினமும் பல கோடி உயிர்கள் காக்கப்படுகின்றன.

இருப்பினும் இன்சுலின் ஊசியின் தேவையின்றி நம்மால்
வாழ முடியும்.

நம் நாவை அடக்கினால் மட்டும் போதும்.

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
#இன்சுலின்எனும்அமிர்தம்
#அளவுக்குமிஞ்சினால்அமிழ்தும்நஞ்சே.

புதன், 25 செப்டம்பர், 2019

சர்க்கரை நோய் ஏற்படுவது எப்படி?

*சர்க்கரை நோய் ஏற்படுவது எப்படி?  நீங்கள் சாப்பிடும் மருந்து எப்படி வேலை செய்கிறது? என்ன மருந்து சாப்பிடலாம்?*


சர்க்கரை நோய் ஏற்படுவது எப்படி?

நீங்கள் சாப்பிடும் மருந்து எப்படி வேலை செய்கிறது?

என்ன மருந்து சாப்பிடலாம்?

நாம் உணவு சாப்பிட்டவுடன்  நம் உணவில் உள்ள  குளுக்கோஸ் குடலால் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலக்கிறது.

ஆனால் அந்த குளுக்கோஸை நம் உடலில் உள்ள செல்களால் நேரடியாக ஏற்க முடியாது.

செல்கள் குளுக்கோசை ஏற்றுக் கொள்ள இன்சுலின் தேவை. இன்சுலினை கணையம்தான் உற்பத்தி செய்யனும்.

இன்சுலின் இரண்டு வேலை செய்கிறது

1) உடலில் உள்ள செல்கள் இரத்தத்தில் உள்ள குளுக்கோசை ஏற்று அதை சக்தியாக மாற்ற உதவுகிறது

2) இரத்தத்தில் அதிகப்படியாக உள்ள குளுக்கோஸை கல்லீரல் சேமிக்க உதவுகிறது.

கல்லீரல்தான் குளுக்கோஸை
glycogen என்ற பொருளாக மாற்றி கல்லீரலிலேயே சேமிக்கிறது.

கணையம் போதுமான இன்சுலீனை சுரக்காவிடில் இரத்தில் உள்ள குளுக்கோஸ் சிறுநீராக வெளியேறி விடும்.
இதுதான் Type 2 சர்க்கரை நோய்.

கணையம் இன்சுலீனை கொஞ்சமும் சுரக்காவிடில் அது Type 1 சர்க்கரை நோய். அதற்கு Insulin Injection மட்டுமே தீர்வு

(Insulin helps control blood glucose levels by signaling the liver and muscle and fat cells to take in glucose from the blood. Insulin therefore helps cells to take in glucose to be used for energy.
If the body has sufficient energy, insulin signals the liver to take up glucose and store it as glycogen.
The liver can store up to around 5% of its mass as glycogen.)

இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு மிகவும் அதிகமானால் அதை
hyperglycemia என்பர்.
மிகவும் குறைந்தால் என்பர் hypoglycemia.

கணையம் இன்சுலினை சுரக்க வைக்க என்ன மருந்து.?

glibenclamide (Daonil)  என்ற மருந்துதான் அதிகமாக பயன்படுகிறது. இது கணையத்தை தூண்டி இன்சுலினை சுரக்க வைக்கிறது.

(Daonil lowers high blood glucose by increasing the amount of insulin released by your pancreas)

சர்க்கரை நோய் உண்டாக இரண்டாவது முக்கிய காரணம் என்ன?

ஒரு ஆரோக்கியமான மனிதன் உணவு உண்ணாத போது அவனுடைய கல்லீரல் தான் சேமித்து வைத்துள்ள கிளைக்கோஜனை குளுக்கோஸ் ஆக மாற்றி  இரத்தத்தில் கலந்துக் கொண்டே இருக்கும். ஏனென்றால் நம் உடல் செல்களுக்கு தேவையான Energy ஐ குளுகோஸ்தான் தருகிறது.

அதே மனிதன் உணவு சாப்பிட்டவுடன் அந்த மனிதன் சாப்பிடும் உணவில் இருந்து குளுக்கோஸ் இரத்தத்தில் கலக்கிறது. உடனே அவனுடைய கணையம்(known as beta cells)
இன்சுலினை சுரக்க ஆரம்பிக்கிறது

கணையத்தில் உள்ள  CBP என்ற புரோட்டின் கல்லீரலிடம் குளுக்கோசை இரத்தத்தில் கலக்கும் வேலையை நிறுத்தச் சொல்கிறது.

உடன் கல்லீரல் குளுக்கோசை இரத்தத்தில் கலப்பதை நிறுத்துகிறது.

ஆனால் சிலருக்கு இந்த CBP புரோட்டின் குறைவால் கணையத்தில் இருந்து கல்லீரலுக்கு செய்தி போவதில்லை.
அதனால் கல்லீரல் தொடர்ந்து குளுக்கோஸை இரத்தத்தில் கலந்துக் கொண்டே இருக்கும்.
the liver fails to sense insulin and continues to make glucose.

இதனால் இரத்தத்தில் அதிகமான குளுக்கோஸ் சேர்ந்து Type 2 சர்க்கரை நோய் உண்டாகிறது.

இதைத்தான் insulin resistance என்கிறோம்.

(In healthy people, the liver produces glucose during fasting to maintain normal levels of cell energy production. After people eat, the pancreas releases insulin, the hormone responsible for glucose absorption. Once insulin is released, the liver should turn down or turn off its glucose production, but in people with Type 2 diabetes, the liver fails to sense insulin and continues to make glucose. The condition, known as insulin resistance, is caused by a glitch in the communication between liver and pancreas)

இந்த" insulin resistance" என்ன மருந்து சாப்பிலாம்?

Metformin (metformin hydrochloride)
என்ற மருந்தே 1950 முதல்
சர்க்கரை வியாதியினர் உபயோப்படுத்தி வருகிறார்கள்.

இந்த மருந்துதான் கணையம் சொல்லும் செய்தியை கல்லீரலுக்கு சொல்லி கல்லீரல் இரத்தத்தில்  வெளியிடும் குளுக்கோசை நிறுத்த வைக்கிறது

அதாவது கணையத்தில் உள்ள CBP
புரோட்டின் செய்ய வேண்டிய வேலையை இந்த மருந்து செய்கிறது

தற்போது அதிநவீன மருந்துகள் வந்து விட்டது. எனினும் மிகவும் எச்சரிக்கையாக அதை வாங்கி சாப்பிடுங்கள். பல மருந்துகள் மிகவும் ஆபத்தானவையே.

*-By Antony Parimalam*

திங்கள், 9 செப்டம்பர், 2019

நமது குடலுக்குள் எண்ணற்ற கிருமிகள்

நமது குடலுக்குள் எண்ணற்ற நுண்கிருமிகள் வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றன. அவற்றால் எண்ணற்ற வினைகளும் வேலை களும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக் கின்றன. பிறக்கும் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் இது போன்ற கிருமிகள் குடலுக்குள் இருப்பதில்லை. ஆனால், தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்தவுடன், கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கிருமிகள் அவர்களது குடலைச் சென்ற டைகின்றன. பாக்டீரியா வகைகள், ஈஸ்ட், பூஞ்சை வகைகள், வைரஸ் கிருமிகள், ஒட்டுண் ணிகள் என அனைத்தும் அடங்கியவைதாம் குடலுக்குள் வாழும் நுண்கிருமிகள்.

தெளிவைத் தேடி!

குடலில் வாழும் பல்வேறு நுண்கிருமிகளைக் குறித்து அறிய ரத்தப்பரிசோதனைகள் கூட வர இருக்கின்றன. அதில், இந்தக் கிருமிகளின் மூலக் கூறுகள் கண்டறியப்படும். இந்த நுண்கிருமிகள் உடலில் ஆற்றும் பணிகள், வினைகள் இதனால் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் சிக்கலானவை. இதனால்தான் இவற் றின் பங்கு குறித்துத் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது. அது இன்னும் முடிந்த பாடில்லை. வருங்காலம் இவை குறித்து நமக்குத் தெளிவைத் தரும் என்று நம்புவோம்

முக்கிய கிருமிகள்

லாக்டோபேசிலஸ், பைஃபைடோ பாக்டீ ரியம் ஆகிய நுண்கிருமிகள்தான் இதுவரை அதிகம் ஆராயப்பட்டுள்ளன.

லாக்டோபேசிலஸ் கிருமி தரும் நன்மைகள்:

* லாக்டோபேசிலஸ், இரைப்பை, முன் சிறுகுடலில் புண்களை ஏற்படுத்தும் கிருமி களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது.

* ஆன்டிபயாட்டிக்' எனப்படும் நுண் ணுயிர்க்கொல்லி மருந்துகளால் ஏற்படும் வயிற்றுப் போக்கைத் தடுக்கிறது.

* கல்லீரலில் சேரும் கொழுப்பு, நீரிழிவு நோய், எய்ட்ஸ், சிறுநீர் செல்லும் பாதைகளில் ஏற்படும் அழற்சி ஆகிய பாதிப்புகளையும் குறைக்க உதவுகிறது.

பைஃபைடோ பாக்டீரியம் கிருமி தரும் நன்மைகள்:

* பெருங்குடல் புற்றுநோய், குடல் அழற்சி நோய், உடல் பருமன், குடல் எரிச்சல் நோய் ஆகிய பாதிப்புகளைத் தவிர்க்க உதவுபவையாக இந்தக் கிருமிகள் இருக்கின்றன.

* மேலும் இந்த இரண்டு கிருமிகளும் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ரோட்டா வைரசுக்கு எதிராகச் செயல்படுகின்றன.

செழிக்கும் நுண்கிருமிகள்

நுண்கிருமிகள், நமது குடலில் சுமார் 1.5 கிலோ அளவுக்கு இருக்கும்.

மனித உடலிலுள்ள மொத்த செல்களின் எண்ணிக்கையைவிட இந்தக் கிருமிகளின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகம்.

மனித உடலிலுள்ள மரபணுக்களின் எண்ணிக்கையைவிட இந்த நுண்கிருமிகளின் மரபணுக்களுடைய எண்ணிக்கை நூறு மடங்கு அதிகம்.

பாக்டீரியா என எடுத்துக்கொண்டால், சுமார் 300 முதல் 10,000 வகையான கிருமிகள் தாங்கள் வாழும் குடியிருப்புகளாக நமது குடலை ஆக்கிவிட்டன.

30-40 வகையான இனங்களைச் சேர்ந்த நுண்கிருமிகளே குடலின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.

குடலுக்குள் இப்படி வாழ்ந்து வரும் நுண் கிருமிகளின் வகைகள், அவற்றின் எண்ணிக்கை என்பதெல்லாம் உலகத்திலுள்ள அனை வருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இது, அவர்களின் வயது, பாலினம், மனித இனம், வாழும் சூழ்நிலை, உணவுப் பழக்கவழக்கங்கள், மரபியல் தன்மை ஆகிய பல காரணங்களால் மாறுபடும்; வேறுபடும்.

நன்மைகள்:

எப்படிச் சில தாவரங்களின் வேர்களில் வாழும் நுண்கிருமிகள் அந்தத் தாவரத்தை வைத்து வாழ்ந்துகொண்டு அதேநேரம், தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்து தரு கின்றன. அதேபோல உடலுக்குத் தேவையான சில வகைச் சத்துக்கள் கிடைப்பதற்கும், உணவு ஜீரணமாவதற்கும் இந்த நுண்கிருமிகள் உதவுகின்றன. நமது உடல் எதிர்ப்பாற்றல் செயல்பாட்டுக்கும் இவை பங்களிக்கின்றன. ஜலதோஷம், கல்லீரல் நோய்கள், குடல் அழற்சி நோய்கள், பற்சிதைவு, ஒவ்வாமை நோய்கள், தோல் நோய்கள் போன்றவற்றுக்கு இவை பயன் தரும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

 

 

* கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால் நாவல் பழம் எலும்புகளின் வலிமையை அதி கரிக்கும்.

* தினமும் பப்பாளி விதைகளை சாப் பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் மற்றும் புழுக்கள் அழியும்.

- விடுதலை நாளேடு, 9. 9.19