வெள்ளி, 28 செப்டம்பர், 2018

உணவு உண்ணாமல் இருந்தால் இளமை திரும்புமா?
உணவுக் கட்டுப்பாட்டுக்காக சாப்பிடாமல் இருப்பதால் என்னபயன்? உடலின் எடையைக் குறைப்பதைத் தவிர, அது வயதையும் குறைக்க உதவும் என, ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அண்மையில் கண்டறிந்து உள்ளனர்.

அவ்வப்போது உணவு உண்ணாமல்  இருக்கும் போது, உடலுக்குள், ‘கீடோசிஸ்’ என்ற ஒரு வேதியல் நிகழ்வு நடக்கிறது.

உடல், தெம்புக்காக குளூகோசை நாடாமல், உடலில் சேமிக்கப்பட்டுள்ள உபரி கொழுப்பை செரிக்கிறது. உடலில் தெம்பு தரும் சில வேதிப் பொருள்களும் இருக்கின்றன.

அவற்றை, ‘கீடோன்’ என விஞ்ஞானிகள் பெய ரிட்டுள்ளனர். இந்த கீடோன்களில் பீட்டா ஹைட்ராக் சிபியூடைரேட் என்ற மூலக்கூறும் உள்ளது.

இந்த மூலக்கூறுகள் ரத்த நாளங்களின் செல் களை வேகமாகப் பெருக்கி, உடல் முதுமையடையும் வேகத்தை மட்டுப்படுத்துவதாக ஒரு ஆய்வில் ஹார்வர்டு விஞ்ஞானிகள் கண்டு பிடித்து

உள்ளனர்.

இந்த ஆய்வு எலிகளின்மேல் நடத்தப்பட்டது என்றாலும், மனிதர்களை அடுத்த, 24 மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாதீர்கள் என்று சொல்வது கடுமையான சிகிச்சையாக இருக்கும் என, ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால், உண்ணா நிலையில்  இருக்கும்போது உடலில் உருவாகும் இளமை தரும் வேதிப் பொருள்களை துல்லியமாக கண்டுபிடித்தால், அந்த வேதிப் பொருளை இதய நோய்கள், அல்சைமர்ஸ் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவும் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

- விடுதலை நாளேடு, 27.9.18

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

உணவு பொருள்களில் கலக்கப்படுபவை என்ன?

பன்றிக் கொழுப்புக் கலவை கட்டாயம் பார்க்கவும்

NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.

FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
____________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது. ___________________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ? மாப்பிள்ளைக்கு கூட ஆசையாக கொடுக்கிறோம்?
_____________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

COKE மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.
________________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

ஹிந்தி ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.
________________________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

PIZZA பற்றி பார்ப்போம்.
PIZZA விற்கும் கம்பனிகள்
"Pizza Hut, Dominos,
KFC, McDonalds,
Pizza Corner,
Papa John’s Pizza,
California Pizza Kitchen,
Sal’s Pizza"
இவை அமெரிக்கன் கம்பனிகள்.
PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.

● கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ?
E 322 – எருது
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
● Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)

● நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!

● மாகி யில், flavor (E-635 ) என்ற code இருக்கும்.

● கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-

E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.

தயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். !!

இதணை மற்ற குழுமங்களிலும் பகிறவும் உங்களால் ஒருவரேனும் பயண் பெறட்டும்.
- கட்செவி பதிவு, சில கருத்துகள் ஏற்கதக்கதல்ல!

திங்கள், 3 செப்டம்பர், 2018

நன்றாக சாப்பிடுவோம்! நல்லவற்றையே சாப்பிடுவோம்!!

இன்று பெரும்பாலான வீடுகளில் இருக்கும் மிகப் பெரிய சவால் குழந்தைகளைச் சாப்பிட வைப்பதுதான். அவர்களை ஒரு இட்லி சாப்பிடச் செய்வதற்கு நாம் நிறைய சாப்பிட வேண்டியிருக்கும். அவ் வளவு ஆற்றலும் பொறுமையும் தேவைப்படுகிறது.

இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் இந்தியக் குழந்தைகளில் சரிபாதி அளவினர் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் வாடுகின்றனர். இன்னொரு புறம் மூன்றில் ஒரு பங்குக் குழந்தைகள் அதிக ஊட்டச்சத்தால் உடல் பருத்து அவதிப்படுகின்றனர்.

ஊட்டச்சத்து குறைபாடு, அதிக ஊட்டச்சத்து ஆகிய இரண்டுமே குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும் எதிர்காலத்துக்கும் நல்லதல்ல. அதைக் கருத்தில்கொண்டு இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் முதல் வாரம் தேசிய ஊட்டச்சத்து வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

குழந்தைகளின் ஊட்டச்சத்துப் போதாமை, தேசிய வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருக்கும் என்பதால் மக்களிடம் நல்வாழ்வு குறித்த பிரச்சாரத்தை மத்திய அரசு 1982இல் முன்னெடுத்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்துடன் சில தொண்டு நிறுவனங்கள் இணைந்து மக்கள் மத்தியில் ஊட்டச்சத்தின் தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

2011 முதல் தேசிய ஊட்டச்சத்து வாரம் ஏதாவதொரு கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு, உணவால் இன்னும் மேம்படுவோம் என்பதை மய்யப் பொருளாகக் கொண்டு தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

குழந்தைகளுக்குப் போதிய ஊட்டச்சத்து கிடைக்காததற்கு வறுமை மட்டுமே காரணமல்ல. நம் வாழ்க்கை முறை மாற்றத்துக்கும் இதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பாரம்பரிய உணவுப் பழக்கம் குறைந்துவரும் சூழலில் பெரும்பாலான வீடுகளில் துரித உணவு, சக்கை உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.

குழந்தை பிறந்தது முதலே டப்பாக்களில் அடைக் கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களைக் கொடுத்துப் பலரும் வளர்க்கிறார்கள். இதனால் ஒரு குழந்தையின் சீரான வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை ஊட்டசத்துக்கள் போதுமான அளவில் கிடைப்பதில்லை.

வறுமையால் ஊட்டச்சத்து கிடைக்காமல் வாடும் குழந்தைகளுக்கு அதைக் கிடைக்கச்செய்வது அரசாங்கத்தின் கடமை. அதேபோல் முறையற்ற உணவுப் பழக்கத்தால் குழந்தைகள் ஊட்டச்சத்து கிடைக்காமலோ அதிக ஊட்டச்சத்துடன் வளர்ந்தாலோ அதற்குப் பெற்றோரே பொறுப்பு.

குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் ஊட்டச்சத்து அவசியம். ஆண்களைவிடப் பெண்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்படுகிறார்கள். பாலினப் பாகுபாடு இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் சீரான ஊட்டச்சத்தைப் பெற்று வளரும்போதுதான் நாட்டின் மனித வளம் மேம்படும். உணவுப் பழக்கத்தை நெறிப்படுத்துவதன் மூலமே இதைச் சரிசெய்ய முடியும். பாரம்பரிய உணவுப் பழக்கத்துக்கு மாறுவது அதன் முதல்படியாக இருக்க வேண்டும்.

இனி கவலையில்லை!


கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவை சரிவிகிதத்தில் கலந்திருக்கும் உணவே சிறந்தது. கொழுப்பு உடலுக்குக் கெடுதல் எனப் பலர் தவறாகப் பிரச்சாரம் செய்வதை நம்பிப் பலரும் கொழுப்பு உணவை அறவே தவிர்த்துவிடுகின்றனர். இது தவறு. நல்ல கொழுப்பு உடலுக்கு நன்மை தரும்.


தவிர, எதையுமே சரியான அளவில் சாப்பிட்டால் சிக்கல் இல்லை. அளவுக்கு மிஞ்சினால் மட்டுமல்ல குறைந்தாலும் கெடுதல்தான். பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், பயறு வகைகள், சிறுதானியங்கள், இறைச்சி, பால், முட்டை, மீன் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். ரசாயன நிறமூட்டிகள், மணமூட்டிகள், சுவையூட்டிகள் போன்றவை சேர்க்கப் பட்ட உணவுப் பொருட்கள் குழந்தைகளின் சாப்பிடும் உணர்வை மட்டுப்படுத்தும். அதனால்தான் பெரும் பாலான குழந்தைகள் சாப்பிட மறுத்து அடம்பிடிக் கிறார்கள்.


கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களைத் தவிர்த்து வீட்டில் சமைக்கப்படும் ஆரோக்கிய உணவைக் குழந்தைகளுக்குக் கொடுத்தாலே போதும். ஊட்டச்சத்து குறித்த கவலை இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.

- விடுதலை நாளேடு, 3.9.18

சிறுநீரக செயல் இழப்பைத் தடுக்க முடியும்!

சிறுநீரக பாதிப்பு என்பது வயது வித்தியாசம் இல்லாமல், ஆண்-பெண் வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் ஏற்படக் கூடியது. ஒருவருக்கு சிறுநீரகம் பாதிப்பு அடைவதற்குப் பலவிதமான காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். சிறுநீரக செயல் இழப்பு என்பதைத் தற்காலிகமாக சிறுநீரகம் செயல் இழத்தல், நிரந்தரமாக சிறுநீரகம் செயல் இழத்தல் என இரண்டு வகையாகப் பிரித்து கொள்ளலாம்.


இவற்றில் முதல் வகையான தற்காலிகமாக சிறுநீரகம் செயல்படாமல் போதல், சில மணி நேரங்கள் அல்லது ஒன்றிரண்டு நாட்கள், வாரங்கள் எனக் குறுகிய காலத்தில் ஏற்படக் கூடியதாகும். சிறுநீர்ப் பாதையில் தொற்று, சிறுநீர் கழிக்கும்போது அளவுக்கு அதிகமாக புரதம் வெளியேறும் நோய், சிறுநீரகங் களில் உண்டாகும் உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக அழற்சி, சிறுநீர் பாதையில் கற்கள் உருவாதல் போன்றவை தற்காலிகமாக சிறுநீரகம் செயல் இழத்தல் வகையில் இடம் பெறும்.

சிறுநீரகங்கள் தற்காலிகமாக செயல் இழக்கும்போது, பலவிதமான ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, சீதபேதி, வாந்தி, கருவுற்ற பெண்களுக்கு அதி களவில் ரத்தம் வெளியேறுதல், எலிக் காய்ச்சல், மலேரியா போன்ற நோய்கள் உட்பட ஏராளமான பிரச்சினைகள் தோன்றும். மருத்துவர் ஆலோசனைப்படி முறையாக டயாலிசிஸ் செய்து, மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்தால் தற்காலிகமாக செயல் இழப்பதை முழுவதுமாக குணப்படுத்திவிடலாம்.

சிறுநீரகம் இரண்டும் நிரந்தரமாக செயல்படாமல் போதல் என்பது உடனடியாக நடந்துவிடாது. மாதக்கணக்காக, பல ஆண்டுகளாக கொஞ்சகொஞ்சமாகத்தான் நடைபெறும். சர்க்கரை நோய், பல நாட்களாக சிறுநீரில் புரதச்சத்து வெளியேறுதல் போன்றவைதான் சிறுநீரகங்கள் நிரந்தரமாக செயல்படாமல் போவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

குடும்பத்தில் ஏற்படுகிற பரம்பரை நோய்கள், பிறவிக் குறைப்பாடு காரணமாக, சிறுநீரக வளர்ச்சியில் உண்டாகிற குறைப்பாடுகள், சிறுநீர்ப் பாதையில் தொற்று மற்றும் அடைப்பு, சிறுநீரில் கட்டுக்கு அடங்காமல் புரதம் வெளியேறுதல் முதலானவை மழலைப் பருவத்தில் ஏற்படுகின்ற முக்கியமான சிறுநீர் பிரச்சினைகள் என்று சொல்லலாம். ஒருவருடைய சிறுநீரகம் செயல் இழந்து வருகிறது என்பதை ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் எடுத்தல் போன்ற பரிசோத னைகளைச் செய்வதன் மூலமாக தெரிந்து கொள்ள முடியும்.

சிறுநீர் பாதையில் எரிச்சல், நீர் கடுப்பு, யூரின் போகும்போது கடுமையான வலி, தொடர்ச்சியாக வெளியேறாமல் சொட்டுசொட்டாக வெளியேறல், சிறுநீர் கழிக்க முடியாத உணர்வு, கை, கால்கள் வீக்கம் அடைதல், தாங்க முடியாத முதுகு வலி, பசியின்மை, சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறல், தோலின் நிறம் வெளுத்துப் போதல், யூரின் நிறம் மாறுதல், சாப்பிடும்போது குமட்டல் உணர்வு, அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போதல், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படுகிற பிரச்சினைகள் போன்றவை மெல்லமெல்ல தோன்ற ஆரம்பிக்கும். திடகாத்திரமான உடல்நலம் கொண்டு இருந்தாலும் வருடம் ஒரு முறை சிறுநீரக மருத்துவரின் ஆலோசனைப்படி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

சிறுநீரகம் செயல் இழப்பைக் குணப்படுத்தவும், அதனால் ஏற்படுகிற மற்ற பாதிப்புக்களை சரி செய்யவும் தற்போது நவீன சிகிச்சைகள் நிறைய உள்ளன. நோயாளியின் உடல்நலத்தைப் பொறுத்தும், நோயின் தீவிரத்தைப் பொறுத்தும் சிகிச்சைகள் அமையும்.

- விடுதலை நாளேடு, 3.9.18