குடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 செப்டம்பர், 2019

நமது குடலுக்குள் எண்ணற்ற கிருமிகள்

நமது குடலுக்குள் எண்ணற்ற நுண்கிருமிகள் வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றன. அவற்றால் எண்ணற்ற வினைகளும் வேலை களும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக் கின்றன. பிறக்கும் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் இது போன்ற கிருமிகள் குடலுக்குள் இருப்பதில்லை. ஆனால், தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்தவுடன், கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கிருமிகள் அவர்களது குடலைச் சென்ற டைகின்றன. பாக்டீரியா வகைகள், ஈஸ்ட், பூஞ்சை வகைகள், வைரஸ் கிருமிகள், ஒட்டுண் ணிகள் என அனைத்தும் அடங்கியவைதாம் குடலுக்குள் வாழும் நுண்கிருமிகள்.

தெளிவைத் தேடி!

குடலில் வாழும் பல்வேறு நுண்கிருமிகளைக் குறித்து அறிய ரத்தப்பரிசோதனைகள் கூட வர இருக்கின்றன. அதில், இந்தக் கிருமிகளின் மூலக் கூறுகள் கண்டறியப்படும். இந்த நுண்கிருமிகள் உடலில் ஆற்றும் பணிகள், வினைகள் இதனால் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் சிக்கலானவை. இதனால்தான் இவற் றின் பங்கு குறித்துத் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது. அது இன்னும் முடிந்த பாடில்லை. வருங்காலம் இவை குறித்து நமக்குத் தெளிவைத் தரும் என்று நம்புவோம்

முக்கிய கிருமிகள்

லாக்டோபேசிலஸ், பைஃபைடோ பாக்டீ ரியம் ஆகிய நுண்கிருமிகள்தான் இதுவரை அதிகம் ஆராயப்பட்டுள்ளன.

லாக்டோபேசிலஸ் கிருமி தரும் நன்மைகள்:

* லாக்டோபேசிலஸ், இரைப்பை, முன் சிறுகுடலில் புண்களை ஏற்படுத்தும் கிருமி களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது.

* ஆன்டிபயாட்டிக்' எனப்படும் நுண் ணுயிர்க்கொல்லி மருந்துகளால் ஏற்படும் வயிற்றுப் போக்கைத் தடுக்கிறது.

* கல்லீரலில் சேரும் கொழுப்பு, நீரிழிவு நோய், எய்ட்ஸ், சிறுநீர் செல்லும் பாதைகளில் ஏற்படும் அழற்சி ஆகிய பாதிப்புகளையும் குறைக்க உதவுகிறது.

பைஃபைடோ பாக்டீரியம் கிருமி தரும் நன்மைகள்:

* பெருங்குடல் புற்றுநோய், குடல் அழற்சி நோய், உடல் பருமன், குடல் எரிச்சல் நோய் ஆகிய பாதிப்புகளைத் தவிர்க்க உதவுபவையாக இந்தக் கிருமிகள் இருக்கின்றன.

* மேலும் இந்த இரண்டு கிருமிகளும் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ரோட்டா வைரசுக்கு எதிராகச் செயல்படுகின்றன.

செழிக்கும் நுண்கிருமிகள்

நுண்கிருமிகள், நமது குடலில் சுமார் 1.5 கிலோ அளவுக்கு இருக்கும்.

மனித உடலிலுள்ள மொத்த செல்களின் எண்ணிக்கையைவிட இந்தக் கிருமிகளின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகம்.

மனித உடலிலுள்ள மரபணுக்களின் எண்ணிக்கையைவிட இந்த நுண்கிருமிகளின் மரபணுக்களுடைய எண்ணிக்கை நூறு மடங்கு அதிகம்.

பாக்டீரியா என எடுத்துக்கொண்டால், சுமார் 300 முதல் 10,000 வகையான கிருமிகள் தாங்கள் வாழும் குடியிருப்புகளாக நமது குடலை ஆக்கிவிட்டன.

30-40 வகையான இனங்களைச் சேர்ந்த நுண்கிருமிகளே குடலின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.

குடலுக்குள் இப்படி வாழ்ந்து வரும் நுண் கிருமிகளின் வகைகள், அவற்றின் எண்ணிக்கை என்பதெல்லாம் உலகத்திலுள்ள அனை வருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இது, அவர்களின் வயது, பாலினம், மனித இனம், வாழும் சூழ்நிலை, உணவுப் பழக்கவழக்கங்கள், மரபியல் தன்மை ஆகிய பல காரணங்களால் மாறுபடும்; வேறுபடும்.

நன்மைகள்:

எப்படிச் சில தாவரங்களின் வேர்களில் வாழும் நுண்கிருமிகள் அந்தத் தாவரத்தை வைத்து வாழ்ந்துகொண்டு அதேநேரம், தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்து தரு கின்றன. அதேபோல உடலுக்குத் தேவையான சில வகைச் சத்துக்கள் கிடைப்பதற்கும், உணவு ஜீரணமாவதற்கும் இந்த நுண்கிருமிகள் உதவுகின்றன. நமது உடல் எதிர்ப்பாற்றல் செயல்பாட்டுக்கும் இவை பங்களிக்கின்றன. ஜலதோஷம், கல்லீரல் நோய்கள், குடல் அழற்சி நோய்கள், பற்சிதைவு, ஒவ்வாமை நோய்கள், தோல் நோய்கள் போன்றவற்றுக்கு இவை பயன் தரும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

 

 

* கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால் நாவல் பழம் எலும்புகளின் வலிமையை அதி கரிக்கும்.

* தினமும் பப்பாளி விதைகளை சாப் பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் மற்றும் புழுக்கள் அழியும்.

- விடுதலை நாளேடு, 9. 9.19

வியாழன், 8 நவம்பர், 2018

மனிதக் குடலில் நுண்ணுயிரிகள்



மனிதன் உண்ட உணவை செரிப்பது முதல், கழிவை வெளியேற்றுவது வரை முக்கியமான வேலைகளை செய்வது கோடிக் கணக்காண நுண்ணுயிரிகள் தான்.

இந்த நல்ல நுண்ணுயிரிகள், நாம் பலவித சிகிச்சைகளுக்காக எடுத்துக் கொள்ளும், ஆன்டிபயாடிக் மருந்துகளால் கூண்டோடு அழித்து வெளியேற்றப்படுகின்றன. இத னால், சிறிது காலத்திற்கு குடல் பகுதியே நிலைகுலைந்து போகிறது. சரி, குடலில் நல்ல நுண்ணுயிரிகள் மீண்டும் தழைக்க எத்தனை காலம் ஆகும்?

கோபன்ஹேகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஆறு மாதங்களாக மேற் கொண்ட ஆய்வின் முடிவில், பெரும்பாலான நுண்ணுயிரிகள் மீண்டும் குடலில் பல்கிப் பெருகுவதற்கு, ஆறு வாரங்கள் வரை ஆகும் என்று தெரிய வந்தது. ஆனால், ஆறு மாதங்களாகியும் சில நல்ல வகை பாக்டீ ரியாக்கள் திரும்பவும் தழைக்கவே இல்லை என்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

புரோபயாடிக் என்று பாட்டிலில் அடைத்து விற்கப்படும் நல்ல பாக்டீரி யாக்களை சாப்பிடலாமா? அதனால், நல்ல நுண்ணுயிரிகள் குடலில் தழைக்கும் என்றாலும், அதிலும் சில மோசமான பக்கவிளைவுகள் இருப்பதாக அண்மைக்கால ஆய்வுகள் எச்சரித்துள்ளன.

என்ன தான் செய்வது? நல்ல பாக்டீரி யாக்களின் எண்ணிக்கையை வெளியேற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகளை அடிக்கடி உட்கொள்ளாமல் பார்த்துக்கொள்வதே சிறந்த வழி என்கின்றனர் ஆய்வாளர்கள். அளவுக்கு மிஞ்சினால் ஆன்டிபயாடிக்கும் நஞ்சு.

- விடுதலை நாளேடு, 8.11.18