திங்கள், 16 நவம்பர், 2015

மார்பகப் புற்று நோயும் மகளிர் சுய சோதனையும்


- நேயன்
மார்பகப் புற்றுநோய் அக்காலத்தில் மிக அரிதாய் சிலருக்கு வந்தது. ஆனால், தற்காலத்தில் அதிக அளவில் வருகிறது. காரணம், இரசாயனம் கலந்த உணவுகள், பூச்சுகள், மாசுகள்.
இது பரம்பரையாக வரும். தாய்க்கு இல்லாத நிலையிலும் வருமா? என்றால் வரும். ஆய்வு அப்படித்தான் சொல்கிறது. Epidemiology என்னும் நோய்ப் பரவு இயலின் ஆய்வுகள் அப்படித்தான் சொல்கின்றன.
இன்றைக்கு மார்பகப் புற்றுநோயால் அதிகம் அவதிப்படுவோர், அமெரிக்க, அய்ரோப்பிய கண்டங்களைச் சேர்ந்த நாடுகளில் வாழும் பெண்கள்தான்.
புற்றுநோயில் மார்பகப் புற்று 24% என்ற கணக்கு, இதன் பரவலை உணர்த்துகிறது.
மாதவிடாய் நிற்கப் போகும் வயதில் அதிக எடையுடன் இருப்பது; குழந்தைப் பருவத்தில் அதிகப்படியான ஊட்ட உணவை உண்பதும் அதனால் சிறு வயதிலே பருவம் அடைவதும் (பூப்படைவதும்), தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதும்;  குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடுவதும்; கருத்தடை மாத்திரைப் பயன்படுத்துவதும்; இரசாயனம் கலந்த உணவு, கீரை, பழம், பாக்கட் உணவு உண்பதும் மார்பகப் புற்று நோய்க்கான முதன்மைக் காரணங்கள்.
அக்காலத்தில் வறுமையின் காரணமாக அளவான, எளிய உணவு; இரசாயணம் கலப்பில்லா வாழ்வு 14 வயதில் பருவம் அடைதல் 20 வயதில் திருமணம், திருமணமானவுடன் பிள்ளை பெறல் என்ற சுழற்சி இயற்கையோடு இயைந்து இருந்ததால், பெண்களின் மார்பகப் புற்று அதிகம் இல்லை.
ஆனால், இன்றைக்கு நாகரிகத்தின் பேரால், பாக்கட் உணவு, குழந்தைப் பருவம் முதலே அதிக ஊட்டமான உணவும், உடற் பருமனும்; இதனால் 10 வயதிலே பருவம் அடையும் அவலம்.
உறங்கிக் கிடக்கும் புற்று மரபணுவை உசுப்பி எழுப்பிவிடும் ஊட்ட உணவுகள் இன்று அதிகம். புற்று நோயைத் தடுக்கும் என்று எண்ணப்பட்ட சோயா, புற்று மரபணுவைத் தட்டி எழுப்புகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. காரணம், பழைய சோயாவிற்குப் பதில் தற்போது மரபணு மாற்ற சோயா பவுடர் மற்றும் பால் விற்கப்படுவதால் அவை சாப்பிடும்போது மரபணுக்களைத் தூண்டுகின்றன.
அக்காலத்தில் 60 வயதுக்குமேல் வந்து கொண்டிருந்த மார்பகப் புற்றுநோய் தற்காலத்தில் 30, 40 வயதிலே வருகிறது.
தவிர்ப்பு நடவடிக்கைகள்: புற்றுநோயைத் தவிர்க்கும் ஆற்றல் மஞ்சள் தூளுக்கு உள்ளது. எனவே, குழந்தைப் பருவம் முதற்கொண்டே பாலுடன் மஞ்சள் தூள் கலந்து தினம் அருந்தும் பழக்கத்தை அனைவரும் (ஆண் பெண் இருபாலரும்) பின்பற்றுதல் வேண்டும். இது புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உடையது. 250க்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகள் இதை உறுதி செய்கின்றன. ஒரு டம்ளர் பால், சிறிதளவு மஞ்சள் தூள், மிளகுத் தூள், பனங்கற்கண்டு சேர்த்து தினம் பருகுதல் கூடுதல் பயன்தரும்.
பெண்கள் தங்கள் உணவில், கீரை, முட்டை, மீன், தக்காளி, பச்சைப் பட்டாணி ஆகியவற்றை தவறாது உண்பது நல்லது.
மன அழுத்தம், மன உளைச்சல், சோர்வு, சர்க்கரை போன்றவை புற்று நோய்க்கு வித்திடும் என்பதால் இவற்றைத் தவிர்க்க வேண்டும். பச்சைத் தேநீர் இதற்கு ஏற்றது.
சுயசோதனை: மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று அவர்கள் கூறுகிறபடி பெண்கள் வீட்டிலே மார்பகச் சோதனை செய்துகொள்ளலாம்.
நார்த்திரள் கட்டி (Fibroadenoma),, மார்புத் தசையில் வரும் நீர்க்கட்டிகள்(Cyst), மார்பகத் தசையில் வரும் வலியும் தடிப்பும் (மாதவிடாய்க்கு முதல் வாரம்) இருந்தால் இவை குறித்து அஞ்சத் தேவையில்லை.
பாதிப்புகள் எவை?
மார்பகத் தசைப்பகுதி தடித்து இருத்தல்.
மார்பகக் காம்பு உள்வாங்கியோ மாறுபட்டோ திரவக் கசிவுடனே இருத்தல். அடிக்கடி மார்பகத்தில் தசைநார்க் கட்டிகள் வருதல் போன்றவை பாதிப்பிற்கான அறிகுறிகள்.
மேமோகிராம் சோதனை:
பாதிப்பு இருக்கும் அறிகுறி தெரிந்தாலோ, 40 வயதைத் தாண்டிய பின்னர், மார்பகப் புற்று நோய் தாய்க்கு இருப்பின், 35 வயதுத் தாண்டும்போது இச்சோதனை அவசியம்.
----------------
ரூ.5-க்கு மார்பகப் புற்றுநோய் பரிசோதனை

இன்றைய தினத்தில் மார்பகப் புற்று நோயைக் கண்டறியும் மேமோகிராம் பரிசோதனை செய்வதற்கு ரூ.4 ஆயிரம் வரை செலவாகிறது. இதைக் குறைத்து வெறும் ரூ.5 செலவில் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் புதிய கருவி தயாரிக்கும் பணியில் அய்.அய்.டி. நிறுவனம், பேட்டர்சன் புற்றுநோய் மய்யம் ஆகியவை இணைந்து பணியாற்றி வருகின்றன.
வெப்ப ஆற்றலின் மூலம் மார்பகப் புற்று நோயைக் கண்டறியும் கருவி தயாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கிராமங்களுக்கு எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் சிறிய அளவிலான கருவியை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். இந்தப் பரிசோதனை முடிவுகளைக் கணினி மூலம் மருத்துவர்களுக்கு அனுப்பும் வகையிலும் மென்பொருள் மேம்படுத்தப்பட்டுவருகின்றன.
-உண்மை இதழ்,1.15.8.15

சனி, 14 நவம்பர், 2015

கொட்டுமழையிலும் கடலூரில் மருத்துவ முகாம்

கொட்டுமழையிலும் கடலூரில் பெரியார் மருத்துவ குழுமம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
கடலூர், நவ. 14_ கட லூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி களில் பெரியார் மருத்து வக் குழுமம் சார்பில் நடைபெற்ற சிறப்பு மருத் துவ முகாமை திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர், முனைவர் துரை.சந்திரசேகரன் தொடங்கி வைத்தார்.
வடகிழக்கு பருவ மழை தமிழ்நாட்டில் குறிப்பாக கடலூர் மாவட் டத்தில் வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. தமிழ் நாடு அரசு தாமதமாக நிவாரணப் பணிகளை தொடங்கியுள்ள நிலை யில், தன்னார்வத் தொண்டு அமைப்புகள் முகாமிட்டு தொண்டு செய்து வருகின் றனர்.
அந்தவகையில்  பெரியார் மருத்துவக் குழுமம், நிவாரணப் பணி கள் அதிகம் சென்ற டையாத கிராமங்களுக்குச் சென்று முகாம் அமைத்து, மக்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை அளிக்கும் பணிகளை மேற்கொண்டது.
தஞ்சை, திருச்சி, சோழங்க நல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள பெரி யார் மருத்துவமனை க ளில் பணிபுரியும் மருத்து வர்கள் பணியாளர்கள்,  அடங்கிய 21 பேரைக் கொண்ட ஒரு குழுவும், அந்தக் குழுவின் ஒருங்கி ணைப்பாளராக மருத்து வர் சுல்தானா,
தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு பெரியார் மருத்துவக் குழுமம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது (கடலூர், 13.11.2015)
ஓய்வு பெற்ற மருத்துவர் வி.பஞ் சாட்சரம் ஆகியோரின் வழிகாட்டுதலில் மருத்துவ முகாம் இன்று காலை 10 மணியளவில் குறிஞ்சிபாடி எல்லப்பன் பேட்டையில் தொடங் கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் அதிக பாதிப்புக்குள்ளான இடங் களில் இதுவும் ஒன்று.
மருத்துவ முகாம் பற் றிய அறிவிப்பை இயக்கத் தோழர்கள் முன்பே அந்தப் பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மூலம் அம்மக்களிடம் விளம்பரம் செய்திருந்த னர். முகாம் அமைத்து நடத்துவதற்கு அப்பகு தியைச் சேர்ந்த தோழர் மணி என்பவர் தனது வீட்டையே மனமுவந்து கொடுத்து உதவினார்.
தன்னைப் பற்றிய  கூடுதல் விவரங்கள் வேண் டாம் என்றும் பண்போடு மறுத்துவிட்டார். இப்படி மக்களின் ஆதரவோடும் முகாம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி தொடங்கி சிறிது நேரத் திற்குள் 300_க்கும் மேற் பட்ட மக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற் றுக் கொண்டனர்.
கலந்து கொண்டவர்களில் பெண் களும், குழந்தைகளும் தான் அதிகம். வயது முதிர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். கொட்டும் மழையில் இந்த முகாம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்க நிகழ்ச்சியில் குறிஞ்சிபாடி நகர செய லாளர் வேல்முருகன், நகர துணைத்தலைவர் இந்திர ஜித், வழக்குரைஞர் திரா விட அரசு, வடலூர் ஜோசப், வசந்த், கடலூர் மண்டல இளைஞரணிச் செயலாளர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் உள்ளூர் பத்மா பதி திருமண மண்டபம் மேலாளர் இளவரசு, பொட்டவெளி தி.க. கிளைத் தலைவர் சீதாரா மன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாநில இளைஞரணிச் செயலாளர் இளந்திரை யன் மேற்கண்ட பணி களை ஒருங்கிணைத்துக் கொடுத்து சிறப்பித்தார்.
இந்த மருத்துவ முகாம் சென்னை பெரியார் திடல், புதுவை அருணா கிளினிக்கல் லேப் மற்றும் புதுவை மாநில சந்தானம் தலைமை ரசிகர் மன்றம், பெரியார் மருத்துவக் குழுமம் ஆகியவற்றின் சார்பில் பல்லாயிரக்கணக்கான மதிப்புள்ள மருத்துகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ முகாமில் பயன்படுத்தப் பட்டன. இதற்காக சென்னை பெரியார் திடல் குணசேக ரன்,
புதுவை மாநில திரா விடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, மற்றும் அருணா கிளினிக்கல் லேப்பின் தலைமை ஒருங் கிணைப்பாளர் ப.அழகர சன் மற்றும் சந்தானம் தலைமை ரசிகர் மன்றத் தின் தலைவர் அருண், செயலாளர் அசோக் பாராட்டுக்குரியவர்கள்.  சென்னையிலிருந்து பெரியார் சமூகக் காப்பு அணி சார்பில் உடுமலை வடிவேல், அருள், ரேவந்த் குமார், விமல் மற்றும் மீனம்பாக்கம் செல்வம் உள்ளிட்ட தோழர்கள் ஈடுபட்டனர்.
மருத்துவ சிகிச்சை தேவைப்படுகின்ற இடங் களில் பெரியார் மருத்துவ குழுமத்தின் சார்பில் இன் றும் நாளையும் தொடர்ந்து நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலை,14.11.15

ஊட்டச்சத்து: தெரிந்ததும் தெரியாததும்எது ஊட்டச்சத்து, ஒரு வேளைக்கு-ஒரு நாளைக்கான உணவை எப்படித் திட்டமிட வேண்டும், குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் எப்படிப்பட்ட உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது போன்ற கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்துகொண்டால், ஊட்டச்சத்தைப் பற்றி புரிந்துகொள்ளலாம். ஊட்டச்சத்து தொடர்பான சில பொதுவான சந்தேகங்களுக்கு, விடைகள் இதோ:
சத்தான உணவு என்பது எது?
புரதம், மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்), கொழுப்பு, வைட்டமின்கள், தாதுகள் ஆகிய சத்துகள் உடலுக்கு இன்றியமையாதவை. ஒன்றிணைந்த இந்தச் சத்துகளின் மூலமாக உடல் வளர்ச்சி, செயல்திறன் போன்றவை கிடைக்கின்றன.
சமச்சீரான உணவு எது?
நாம் தினமும் சாப்பிடும் உணவில் புரதம், மாவுச்சத்து, கொழுப்பு, வைட்டமின்கள், தாதுகள் ஆகியவை தேவையான அளவில் இருப்பதைச் சமச்சீரான உணவு என்கிறோம். தானியங்கள், பயறு வகைகள், இறைச்சி சார்ந்த பொருட்கள், காய்கறிகள், பழங்கள், ஆகியவற்றைக் கலந்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக்கொண்டால், நமக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் கிடைத்துவிடும்.
ஏதாவது ஒன்றை மட்டும் அதிகம் உட்கொள்வதால் உடலுக்குத் தேவையான சத்துகள் அனைத்தும் கிடைக்காது, இதனால் ஊட்டச்சத்துக்குறைவு போன்ற உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்படலாம். அல்லது ஏதேனும் சில சத்துகள் தேவைக்கு அதிகமாகச் சேர்ந்து உடல் பருமன் போன்ற பிரச்சினைகளை உண்டுபண்ணும்.
சமச்சீரான உணவில் இருக்க வேண்டிய கலோரியின் அளவு என்ன?
மாவுச்சத்திலிருந்து 50 முதல் 60 சதவீதம் கலோரியும், புரதத்திலிருந்து 10 முதல் 15 சதவீதக் கலோரியும், கொழுப்பு வகைகளிலிருந்து 20 முதல் 30 சதவீதம் கலோரியும் நமக்குக் கிடைக்க வேண்டும்.
செயற்கையான சுவையூட்டிகளில் சேர்க்கப்படும் சர்க்கரை, காஃபீன் ஆபத்தானதா?
செயற்கையான சர்க்கரை, காஃபீன் போன்றவற்றைச் சத்துணவுகளில் சேர்ப்பது பெரும் ஆபத்தாக முடியும். இவை உடல் செயல்பாடுகளை, பல்வேறு வகைகளில் பாதிக்கின்றன.
குறிப்பாகச் செயற்கை சர்க்கரையைத் தொடர்ந்து பல வருடங்களுக்குப் பயன்படுத்தும்போது புற்றுநோய் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதீதச் சர்க்கரை உடல்பருமன், நீரிழிவு நோய் போன்றவற்றையும், காஃபீன் பக்கவாதம், வலிப்பு சார்ந்த பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம்.
சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெயால் உடலுக்கு நலம் கிடைக்குமா?
ஒரேயொரு எண்ணெயைப் பயன்படுத்திச் சமைப்பதை விட, இரண்டு வகையான எண்ணெயைப் பயன்படுத்திச் சமைப்பதால் ஆரோக்கியம் கிடைக்கும். உதாரணத்துக்குக் கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ரைஸ்-பிரான் (அரிசி தவிட்டு) எண்ணெய் ஆகியவற்றை ஒவ்வொரு வாரத்துக்குச் சுழற்சிமுறையில் பயன்படுத்துவதன் மூலம் கொழுப்பு அதிகரிப்பதில்லை. உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் கிடைக்கும். எனவே, உடல் ஆரோக்கியம் மேம்படும்.
தக்காளி, கீரை சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகுமா?
தக்காளி, கீரை வகைகளைச் சாப்பிடுவதன்மூலம் ஒருவருக்குச் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாது. இது தேவையற்ற பயம். ஆனால், ஏற்கெனவே சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் இவற்றைத் தவிர்ப்பது நலம். காரணம், இந்த இரண்டிலும் சிறுநீரகக் கல்லை உருவாக்கக்கூடிய ஆக்சலேட்டுகள் அதிகம்.
தேவைக்கு அதிகமான உப்பைச் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் உயருமா?
உப்பு சுவை சார்ந்த ஒவ்வாமை உள்ளவர்களுக்கு அதிக உப்பால் ரத்த அழுத்தம் நிச்சயம் அதிகரிக்கும். ஒவ்வாமை இல்லாதவர்கள் உப்பு அதிகம் சாப்பிட்டாலும் ரத்த அழுத்தம் உயரும்.
சத்துணவில் பழங்கள் மற்றும் பழச்சாற்றின் பங்கு என்ன?
எளிமையாக ஜீரணமாகும் பானங்களில் பழச்சாறு முதன்மையானது. ஒரு டம்ளர் பழச்சாறு அருந்தும்போது, ஒரு பழத்தைச் சாப்பிடும்போது கிடைக்கும் சத்து கிடைக்கும். ஒரு நாளைக்கான வைட்டமின் 'சி' தேவையை இது நிறைவேற்றும். பழச்சாற்றைக் குடிக்கும்போது நார்ச்சத்தும் கிடைக்கிறது.
பழச்சாற்றில் இருக்கும் சர்க்கரை, வைட்டமின்கள், புரதம், தாதுகள் ஆகியவை உடனடியாக ரத்தத்தின் செல்களில் கலக்கும். மலச்சிக்கலைப் போக்குவதற்கும் இது பயன்படுகிறது.
சுண்ணாம்புச் சத்தின் தேவை என்ன?
எலும்பின் உறுதித்தன்மைக்குச் சுண்ணாம்புச் சத்து அவசியம். பால், பால் பொருட்கள், பசுமையான கீரைகள், முட்டை ஆகியவற்றிலிருந்து சுண்ணாம்புச் சத்து கிடைக்கிறது.
குழந்தைகளுக்குத் தாய்ப்பாலின் முக்கியத்துவம் என்ன?
புரதம், கொழுப்பு, லாக்டோஸ், வைட்டமின்கள், பலவகையான தாதுகள், தண்ணீர், என்சைம்கள் ஆகியவற்றின் கூட்டு வடிவமே தாய்ப்பால். குழந்தைக்குத் தாய்ப்பாலே முதன்மையான முழு சத்துகள் அடங்கிய உணவு. நோய் எதிர்ப்பு சக்தியையும் பல தொற்றுகளிலிருந்து தடுக்கும் ஆற்றலையும் குழந்தைக்கு அளிக்கும் தாய்ப்பால், எளிதில் ஜீரணமும் ஆகிறது.
எளிய முறையில் சமைக்கப்பட்ட புதிய உணவையே உட்கொள்ளுங்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பச்சை காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடுவதற்குத் தயங்காதீர்கள். ஆவியில் வேக வைத்த உணவை உண்பதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். கூடியமட்டும் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிருங்கள்.
பழங்களையும், காய்கறிகளையும் தோலோடு சாப்பிடுங்கள். கேரட் போன்றவற்றை மேல் தோல் சீவி, நன்றாக நீரில் கழுவிய பின் சாப்பிடலாம்.
சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்துக்கு முன்பாகவே காய்கறி, பழங்களைக் கழுவி, துண்டு துண்டாக நறுக்கி வைக்காதீர்கள். இப்படிச் செய்வதால் சத்து இழப்பு ஏற்படும். பாரம்பரியமாக வீட்டில் சமைக்கப்படும் உணவை உண்ணுங்கள். துரித உணவை நாடாதீர்கள். சாப்பாட்டுக்குப் பதிலாக நொறுக்கு தீனிகளைச் சாப்பிடாதீர்கள்.
உணவில் சர்க்கரையின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவைச் சாப்பிடுவதைத் தவிருங்கள்.
-விடுதலை,21.9.15

வெள்ளி, 13 நவம்பர், 2015

மனதைக் கட்டுப்படுத்த தூக்கம் அவசியம்!

மனிதன் மற்றும் பல விலங்குகளுக்கு தூக்கம் என்பது கண்டிப்பாக  வாழ்நாள் முழுவதும் தேவையான ஒரு செயல் ஆகும். பெரும்பாலும் இரவு நேரம் என்பதே தூக் கத்துக்காக ஒதுக்கப்பட்டதுதான். ஆனால் இப்பொழு தெல்லாம் இரவு நேரப் பணிகளைப் பார்த்து விட்டு பகலில் தூங்குகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
இவ்வளவு நேரம் தான் தூங்க வேண்டும் என்று ஒரு அளவுகோல் இருந்தாலும், தூக்கம் அவரவரின் பழக்கத்தைப் பொறுத்தே அமைகிறது.
இரவில் மிக சீக்கிரமாக உறங்கி காலையில் தாமதமாக எழுந்திருப்பவர்கள் உண்டு. இரவு எவ்வளவு தாமதமாக படுத்தாலும் காலையில் வெகு சீக்கிரமாக அதிகாலை யிலேயே எழுந்து விடுபவர்களும் உண்டு. சரியாக தூங்காத வர்களை கண்களை பார்த்தே கண்டுபிடித்து விடலாம். மனிதனின் மனதைக் கட்டுப்படுத்த, கெட்ட எண்ணங் களை சீர்படுத்த, கோபம், ஆத்திரத்தைக் குறைக்க இயற்கையான ஒரு செயல் தூக்கம்.
தூக்கத்துக்கு அந்த அளவுக்கு மிகப்பெரிய சக்தி உண்டு. நமது உடலில் இரண்டு வகையான தசைகள் இருக்கின்றன. நமது கட்டுப்பாட்டில் உள்ள தசைகள், கை கால்கள், தோள்பட்டை, மார்பு, முதுகு முதலியவற்றிலுள்ள கடினமான தசைகள், நமது கட்டுப்பாட்டிலுள்ள தசை களாகும். இந்த தசைகளெல்லாம் நாம் நடப்பதற்கும், நகர் வதற்கும்,
உருண்டு புரள்வதற்கும் உபயோகப்படும் தசை களாகும். ஆண்களின் உடலில் சுமார் 42 சதவீதமும், பெண்களின் உடலில் சுமார் 36 சதவீதமும் கட்டுப்பாட்டில் உள்ள தசைகள் இருக்கின்றன. தூக்கத்தின்போது கட்டுப் பாட்டிலுள்ள தசைகள் பெரும்பாலும் தற்காலிகமாக செயலிழந்து விடுகின்றன.
நமது கட்டுப்பாட்டில் இல்லாத தசைகள் (inVoluntary Muscles) இரைப்பை, இருதயம், உணவுக்குழாய், காற்றுக்குழாய், வயிற்றின் உள்ளே உள்ள உறுப்புகள், சிறுநீர்ப்பை, ரத்தக்குழாய்கள் மற்றும் உடலின் உறுப்புகளுக்கு உள்ளே உள்ள மெல்லிய தசைகள், இவை எல்லாமே நமது கட்டுப்பாட்டில் இல்லாத தசைகளாகும்.
தூங்கும் போது கட்டுப்பாட்டிலுள்ள தசைகள் மட்டுமே செயலிழக்கப்படுகிறது. கட்டுப்பாட்டில் இல்லாத தசைகள் நாம் தூங்கினாலும் தூங்காவிட்டாலும் நம்மை கண்டு கொள்ளாது.
பாலூட்டி, விலங்குகள், பறவைகள், தவளை, மீன் போன்ற அனைத்து உயிரினங்களுக்கும் தூக்கம் உண்டு. தூக்கத்தை பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
-விடுதலை,19.10.15

செவ்வாய், 10 நவம்பர், 2015

நலம்தானா? உடலும் உள்ளமும் நலம்தானா?
1. உயிர் என்பது என்ன?
உயிர் என்பது பொருளின் ஓர் இன் றியமையாத குணம். குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையால் இது வெளிவருகிறது. இந்த சூழ்நிலை மாறினால் இந்த குணம் மங்கிவிடும்.
ஒரு மனிதன் இறந்தான் என்றால் உயிர் என்று குணம் தணிந்து விடுகிறது. உயிர் என்பது ப்ரோட்டீன்களின் ஜீவ உருவம்.             -_- எங்கெல்ஸ்
உடலில் ஒரு சிறப்பு நிலையே உயிர் எனலாம். ஒரு செல் உயிரினங்களுக்கும் உயிர் உண்டு. இதிலிருந்து உயிர் என்பது அணுக்களால் ஆன உயிரியம் மூலக்கூறுகளின் தனித்தன்மை என்பதை அறிந்து கொள்ளலாம்.
2. செல்பற்றி கூறுக?
செல்கள் திறமையுள்ள சிறிய உலைக்கலன் ஆகும். செல் குளு கோஸை எரித்து சக்தியை உண்டாக் குகின்றன. அதற்கு தேவையான எரிபொருளை இன்சுலின் தருகின்றது.
அயோடின் சத்து  மனித உடலில் செல்கள் வளரவும், செல்கள் எண் ணிக்கையால் பெருகிடவும் மிகவும் அவசியம். உயிருக்கு அஸ்திவாரம் (அல்லது) உயிருள்ள அமைப்பை செல் என்கிறோம்.
செல்கள் தானாகவே சந்ததிகளை உற்பத்தி செய்து கொள்ளவும் முடியும். இவ்வாறு ஏற்படுபவை குரோமோ சோம்ஸ் எனப்படும்.
3. உடம்பு என்பது பற்றி கூறுக?
உடல் அய்ந்து அடுக்குகளால் ஆனது.
1. சிற்றறைகள், 2. இரத்த ஓட்டம், 3. நரம்பு மண்டலம், 4. காற்று, 5. உயிர்
நமது உடல் எப்பொருள்களால் ஆக் கப்பட்டு உள்ளதோ அப்பொருள்கள் யாவும் நாம் உட்கொள்ளும் உணவிலும் இருக்க வேண்டும்.
உழைப்பு அதிகம் இல்லாதபோது சத்துள்ள உணவும், இனிப்பும் அதிக மாக உட்கொள்வது ஊளைச்சதையை உண்டாக்குகிறது. அதிக சதை இதயத் தில் சரியான வேலையைத் தடுக்கிறது.
4. என்சைம்ஸ் என்றால் என்ன?
அமைப்பற்ற உயிர் துளிகள் கண் ணுக்கு புலப்படாதவை. என்சைம்ஸ் இருப்பதால்தான் மனிதன் உயிருடன் வாழ்கிறான்.
5.. புதிய சிவப்பு  செல்கள் எங்கு தயாரிக்கப்படுகிறது?
எலும்பின் உட்புறம்  உள்ள மஜ்ஜையில் தயாரிக்கப்படுகிறது.
6. எலும்பு எதனால் ஆனது?
எலும்பு உயிருள்ள செல்களாலும், மெல்லிய இரத்த நாளங்களாலும், நரம்புகளாலும் ஆனது.
7. குரோமோசோம் -பற்றி கூறுக?
குரோமோசோம் என்பது வேதி மூலக்கூறு ஆகும்.
8. ஜீன்கள் பற்றி கூறுக?
ஜீன்கள் தனிவகை மூலக்கூறுகள்.
9. நீர் பற்றி கூறுக?
நீருக்கு சுவை இல்லை. நீரின் பிர தான குணம் பொருட்களை கரைப்பது.
10. காற்று நமது உடலில் கொண் டுள்ள தொடர்பு பற்றி கூறுக?
மனித உடலில் ஒவ்வொரு பகுதியி லும் காற்று உள்ளது. மூளை செயல் படுவதற்கு முக்கியமாக காற்றில் உள்ள ஆக்ஸிஜன் நமக்கு தேவைப்படுகிறது.
11. குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதித்தல் எப்போது ஏற்படும்?
குழந்தை பிறந்தது முதல் இரண்டு வயதுவரை மூளை வளர்ச்சி வேகமாக நிகழ்கிறது. இந்த சமயத்தில் சத்துணவு குறைபாடு ஏற்பட்டாலும், கடும் நோய் தாக்கினாலும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம்.
12. மூளை உற்சாகம் அடைய என்ன செய்யலாம்?
1. மூளை உற்சாகம் அடைய:- பழைய வேலையை புதிய முறையில் செய்.
13. இதயம் பற்றி கூறுக?
இதயத்தில் மேற்புறத்தில் ஆரிக் கிள்கள் உள்ளன. கீழ்புறம் வெண்டிரிக் கள் உள்ளன. இதயத்தை நோக்கி இரத்தத்தை கொண்டு செல்வது சிரை.
இதய பலத்துக்கு சுற்றுப்புற சுகா தாரம் அவசியம். உடலை வலுப்படுத் துதல், உடற்பயிற்சி, ஒழுங்கான வாழ்க்கை முறை தேவை. நாம் அசைவின்றி இருக் கும்போது இதயம் சற்று அதிகமாக உழைக்க வேண்டியிருக்கிறது.  14. இதய நோய் வராமல் இருக்க நாம் மேற்கொள்ள வேண்டியவை தவிர்க்கவும்.
நொறுக்கு தீனிகள், பொறித்த உணவுகள், துரித உணவுகள், போன்ற வற்றைத் தவிர்க்கவும்.
கொழுப்பை முடிந்த அளவு உணவிலிருந்து நீக்கிவிடுவது நல்லது.
_- ஹேமா மாலினி, சத்துணவு நிபுணர், விடுதலை 22.9.2012
15. உயிர்த் தாது என்பது என்ன?
உயிர்த்தாது என்பது புரோட் டோபிளாசம் ஆகும். இது உயிர் உள்ள பொருள் ஆகும். உயிரணுக்கள் எல்லாம் இப்பொருளால் தான் உயிரோடு இருக்கின்றன.
16. சுத்தமான இரத்தத்தை உருவாக்க வழிமுறை யாது?
உணவு, குடிநீர், மூச்சுக்காற்று, தூக்கம், உழைப்பு ஆகிய அய்ந்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும்.
17. ஹீமோகுளோபின் அவசியம் என்ன?
சுத்த இரத்தம் உடலின் பகுதிகளுக்கு செல்லும்போது அங்கு ஆக்ஸிஜன் அளவு குறைவாய் உள்ளமையால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் தான் கொண்டு வந்த ஆக்ஸிசனை அங்கு கொடுத்துவிடுகிறது. ஆகவே ஹீமோகுளோபினை நாம் இழக்கக் கூடாது.
ஹீமோகுளோபின் என்னும் புரதத் தில் முக்கிய செயல்படு பொருள் இரும்பு சத்துதான். ஆக்ஸிஜனை எடுத்துச்  செல்ல கார்பன்-டை-ஆக்ஸைடு வெளி யேற்றல் வேலையை ஹீமோகுளோபின் செய்கிறது.
18. நகம் பற்றி கூறுக?
உடலின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள நமது நகம் பயன்படுகிறது.          _- ஆர்சார்டு
நகத்தில் சிறு ரத்த சிறாய்வுகள் இருப்பின் இதயம் அல்லது ரத்தத்தில் தொற்றுநோய் என உணரலாம்.
நகத்தின் மீது சிறு குழிவுகள் இருப் பின் அது சோரியாசிஸ் அறிகுறியாகும். எங்கெங்கே அழுத்தம் இருக்கிறதோ அங்கெல்லாம் உண்டாகும் அழுத் தத்தை தாங்குவதற்கு வசதியாக சர்மம் நகமாக வளர்கிறது. நகச்சுற்று (கீலீவீ லிஷீஷ்): நல்லவேளை என்ற மூலிகை இலைகளை கசக்கிவைத்து கட்டினால் குணமாகும்.
19. தோலின் சுருக்கம் ஏற்படுவது ஏன்?
வயது முதிர்வு அடையும்போது தோல் எலாஸ்டிக் தன்மையை இழக்கிறது. செல்களும் செயல்படாமல் போகின்றன. ஆகவே விரிவடைந்த தசை திரும்ப  பழைய  நிலைக்கு வர மறுக் கவே தோலில் சுருக்கம் ஏற்படுகின்றன.
மனிதனின் அன்பின் வளர்ச்சியையும், அறிவின் வளர்ச்சியையும் எடுத்துக்காட் டும் அளவுகோல்தான் நகைச்சுவை.
_- கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
20. சிரிப்பின் தன்மை யாது?
வலிகளை குறைப்பது என்டார்பின் என்ற வேதிப்பொருளாகும். சிரிப்பதால் உடலில் இது அதிகம் சுரக்கும். நமது  உடலில் உருவாகும் கான்சர் செல்களை அழிக்கும் செல் பெயர் என்.கே.செல் ஆகும். இது அதிகரிக்க தாராளமாக சிரிக்க வேண்டும்.
21. இதயம் கடைசிவரை நன்கு வேலை செய்ய எதை பின்பற்றலாம்?
கரிசாலாங்கண்ணி கீரையுடன் பூண்டு சேர்த்து உண்பதால் ரத்த அழுத்தம் தேவையான அளவு பாது காக்கப்படும். இதயம் கடைசிவரையில் நன்கு வேலை செய்யும்.
22. அயோடின் அவசியம் யாது?
அயோடின் பச்சை இஞ்சியில் உள்ளது. அயோடின் குறைந்தால் புத்திமந்தம் ஏற்படும்.
23. வலி என்றால் என்ன?
சோர்வுற்ற உறுப்பின் (அல்லது) உடலின் அழுகுரல்.
24. நோய் என்றால் என்ன?
நோய் என்பது அன்னிய பொருளை நீக்குவதற்காக வாழ்க்கை நடத்தும் போராட்டம். இப்படி நீக்குவதற்கு சக்தி தேவை. இந்த சக்தி ஜீவாதார சக்தி. நோயுள்ளவன் ஜீவாதாரசக்திக்கு உதவ வேண்டும்.
25. தொந்தி வரக்காரணம் என்ன?
உடலில் உள்ள கொழுப்புச்சத்து எரிக்கப்படாமல் லேயர் லேயராக சருமத்தின் இடைவெளிகளில் சேமிக் கப்படுகிறது. அந்த சேமிப்பு தான் தொந்தி.
26. அலர்ஜி என்றால் என்ன?
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியில் உண்டாகும் குறைபாடுதான் அலர்ஜி எனப்படும். உடலின் ஒவ்வொரு பாகத் திலும் ஒவ்வொருவிதமாக ஒவ்வாமை தடம் பதிக்கும்.
27. நாள் ஒன்றுக்கு ஒருவர் அய்ந்து கிலோ மீட்டர் நடந்தால் எவ்வளவு கலோரிகள் எரிக்கலாம்?
250 கலோரிகள் எரிக்கப்படும்.
28. இன்சுலின் அவசியம் என்ன?
நாம் சாப்பிடும் உணவில் கார் போஹைட்ரேட் இருக்கிறது அது இரத்தத்தின் வழியே பயணிக்கும் போது குளுக்கோசாக மாறுகிறது. இந்த குளுகோஸ் நம் உடலுக்கு பயன்படக் கூடிய சக்தியாக மாறவேண்டுமானால் அதற்கு இன்சுலின் தேவை.
இரத்தத்தில் வருகிற குளுக்கோஸ் அளவும் அதை சக்தியாக மாற்றி பயன்படுத்த தேவையான இன்சுலின் அளவும் சரியான விகிதத்தில் இருக்கும் வரை பிரச்சினை இல்லை.
29. மனிதன் - வரையறு?
பொதுப்பெயர் - மனிதன், புலம் - விலங்குகள், பகுப்பு (பைலம்) -_ முது கெலும்பிகள்
உட்பகுப்பு தண்டுவடம் உடையன
வரிசை - _ முதனிலை பாலூட்டிகள்
துணைவரிசை _- மண்சாயல்
உள்வரிசை -_ காட்டரினி
பெருங்குடும்பம் -_ மன்பதை
குடும்பம் (மனுபு) _ --பிளிவிழிளிமிஞிகி
பேரினம் - மனு - (பிளிவிளி)
இனம் -_ மனிதன்
உள் இனம் - வளர்மதி மனிதன் (இன்றைய மனிதன்)
பொதுப்பெயர் _- மனிதன்
30. நமது செயல்முறை எப்படி உள்ளது?
நமது 70 ஆண்டு வாழ்க்கையில்
இளமை -_ 5 ஆண்டுகள்
உறக்கம் -_ 22 ஆண்டுகள்
உழைப்பு, முதுமை _- 22 ஆண்டுகள்
கேளிக்கை -_ மீதிகாலம்

கண்ணாடி பார்ப்பது _- 2.5 ஆண்டுகள்
சுமார் 6 மாதங்கள் மட்டுமே சிந்திக் கிறோம்!
இதையும் தெரிஞ்சுக்குங்க
உடலுக்கு தேவையான ஆக்சிஜனை அளிப்பதில் வைட்டமின் பி.2 (க்ஷிஙி2) முக்கிய பங்கு வகிக்கின்றது. இது வாழைப்பழம், தக்காளி, கறிவேப்பிலை, புதினா போன்றவற்றில் உள்ளது.
மருத்துவக் குறிப்புகள் மேலும் சில:-
1. முதியோர்கள் அவசரஅவசரமாக வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.
மெதுவாக எச்சரிக்கையோடு பணியாற்ற வேண்டும்.
2. குறைகாணும் போக்கை நிலையாக வடிவமைத்துக் கொள்பவர்களுக்கு வலியோடு கூடிய மூட்டு வீக்கம் (கிக்ஷீலீக்ஷீவீவீ) வரும்.
3. மனிதனுக்கு தேவையான 10 உடை மைகள்:-
1. அன்புடைமை, 2. அருளுடைமை, 3. அறிவுடைமை, 4. அடக்கமுடைமை, 5. ஆள்வினையுடமை, 6. ஒழுக்க முடைமை, 7. ஊக்கமுடைமை, 8. நாண் உடைமை, 9. பொறையுடைமை, 10. பண்புடைமை.
4. மூட்டுவலி, முழங்கால் வலி, பாதவலி, உள்ளவர்கள் அந்தந்தப் பகுதியில் புற்றுமண் பூசி நலம் பெறலாம். வலி, உபாதை உடனடியாக குறையும்.
5.  சோர்வை நீக்குவது எது?
பொட்டாசியம் அளவை சமப்படுத் துவது எது?
பதற்றத்தை குறைப்பது எது?
உடலில் இரும்பு சத்து எதன் மூலம் அதிகரிக்கின்றது?
நெஞ்செரிச்சலை எது போக்கும்?
முடக்கு வாதத்தை எது போக்கும்-
விடை: வாழைப்பழம்
6. கழிவுகளின் தேக்கமே புற்று நோயாக மாறுகிறது. ஆனி ஆடியில் வேப்பம்பழம் நாள்தோறும் சாப் பிடுவது நலம்.
(விருத்தாசலம் மாவட்ட திராவிடர் கழக துணைத்தலைவர் தங்க.இராசமாணிக்கம் விஜயா மணிவிழாவையொட்டி வெளி யிடப்பட்ட அரிய சிறிய வெளியீடு)
-விடுதலை .ஞா.ம.,10.8.13

நச்சுணவு ஏற்பட என்ன காரணம்?


சமீபத்தில் கோழி பிரியாணியுடன் வேர்க்கடலையும் சேர்த்துச் சாப்பிட்ட சிறுவன் இறந்து போன செய்தியைப் படித்தேன். உணவு நச்சுணவாக மாற என்ன காரணம்? எந்த காம்பினேஷன் உணவுகளைச் சாப்பிட்டால் நஞ்சுத் தன்மை ஏற்படும்?
பதில் சொல்கிறார் டயட்டீஷியன் புவனேஸ்வரி:
இந்த உணவுகளைச் சாப்பிட்டதால் தான் நச்சுணவு (ஃபுட் பாய்சன்) ஏற்பட்டது என்பது தவறான தகவல். சாப்பிட்ட உணவில் என்ன பிரச்சினை என்றுதான் பார்க்க வேண்டும். வேர்க்கடலையோ, பிரியாணியில் இருந்த கோழி இறைச்சித் துண்டோ கெட்டுப் போயிருக்கலாம்.
இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்ட தால்தான் இறந்து போனான் என்ற தகவலில் உண்மையில்லை. இன்றைக்கு நச்சுணவு அதிகம் ஏற்படுகிறது.
புரதம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப் போகும் தன்மை கொண்டவை. வேர்க்கடலை, பால், அசைவ உணவ வகைகள், எண்ணெய் எல்லாம் சீக்கிரமே கெட்டுப் போகும்.
எண்ணெயில் பொரித்த உணவுகளை சேர்த்து வைத்து சாப்பிட்டால் ஆபத்தும் சேர்ந்து வரும். மழை, பனிக் காலத்தில் உணவுகள் கெட்டுப் போகக் காரணமாக இருப்பவை பூஞ்சைகள், அரிசி, பருப்பு போன்ற சமையலறைக்குள் இருக்கும் பொருட்களுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும் இந்தப் பூஞ்சைகள். பொருளையும் கெடுத்து, நோய்களையும் கொடுத்துவிட்டுப் போகும்.
மளிகைப் பொருட்களில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. குளிர்பதனப் பெட்டிக்குள் தானே இருக்கிறது என்கிற நினைப்பு வேண்டாம். குளிர்பதனப் பெட்டியில் ஒரு பொருளில் இருக்கும் பூஞ்சை மற்ற உணவுப் பொருட்களுக்கும் பரவி விடும்.
சமையலறைப் பொருள்களில் பூச்சிகள், பூஞ்சைகள் இருப்பது தெரிந்ததால் அவற்றை வெயிலில் உலர்த்தி மறுபடியும் பயன்படுத்துவார்கள். வெயிலில் காய வைப்பதால் பூஞ்சைகள் மறைந்துவிடா.
அவற்றை உடனடியாக கொட்டி விடுவது நல்லது. காலாவதியான பொருள்களைப் பயன்படுத்தினாலும் நச்சுணவாக மாறும் வாய்ப்பு ஏற்படும். சிப்ஸ் வகைகளை வாங்கும்போது கவனமாக இருங்கள்; எண்ணெயில் இருந்து கெட்டுப் போன வாசனை வந்தால் அதைச் சாப்பிடுவது ஆபத்து. கெட்டுப் போன பழங்களுக்கும் இதே கதிதான். காய்கறிகள், பழங்களை புதிதாக வாங்கி பயன்படுத்த வேண்டும்.
குளிர்பதனப் பெட்டியில் உணவுகளை அடைத்து வைக்காமல், கொஞ்சமாக சமைத்துச் சாப்பிடப் பழகுங்கள். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு முடிந்த வரை நொறுக்குத் தீனிகளை நீங்களே தயாரித்து அனுப்புங்கள். கடையில் வாங்கிச் சாப்பிடுவதற்கு முன் பலமுறை யோசியுங்கள்.
மீன் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடக் கூடாது. கோழி இறைச்சியைச் சாப்பிடக் கூடாது போன்ற கட்டுக் கதைகளைத் தூக்கி ஓரமாக வைத்து விடுங்கள்.
-விடுதலை ஞா.ம.,8.6.13

திங்கள், 9 நவம்பர், 2015

இரண்டு மருத்துவர்கள்; இரண்டு குறிக்கோள்கள்!

WTG Morton.jpg

ஜூலை ஒன்று இந்தியாவில் மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. வேறுபட்ட இருதுறைகளில் சிறந்த சேவை செய்த இரு மருத்துவர்களைப் பற்றி இங்கே...
டாக்டர் க்ரா ஃபர்டு எம்லாங் 1815இல் அமெரிக்காவில் பிறந்தார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மருத்துவப்பட்டம் பெற்றார். அறுவை சிசிக்சை மருத்துவராகப்பணி புரிந்து வந்தார். அறுவை சிகிச்சையின் போது நோயாளிகள் வலியினால் துடிப்பதைக் கண்டு ஏதாவது செய்ய வேண்டுமென எண்ணினார். வலியில்லாத அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று நினைத்தார்.
பல ஆண்டுகளாகப் பழக்கத்தில் இருந்த எத்தனாலும், சல்ஃயூரிக் அமிலமும் இணைந்த கலவை, கோழிக்குஞ்சுகளுக்கு தூக்கம் வருவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. அதற்கு விட்ராயில் இனிப்பு எண்ணை (Sweet oil vitroie) என்று பெயர். ஆனால் அதை மருத்துவத்திற்கு பயன்படுத்துவது பற்றி யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
அந்த எண்ணெயை மருத்துவர் லாங் டெய்தில் எய்தர் (Diethil either) ஆக மாற்றி, 1842-ஆம் ஆண்டு மார்ச் 30-இல் ஒரு நோயாளிக்குச் செலுத்தி கழுத்திலிருந்து ஒரு கட்டியை நீக்கினார். அது தான் முதல் வலியில்லாத அறுவைச் சிகிச்சை அப்போது அவருக்கு வயது 27 தான். அந்த சிகிச்சை மூலம், அவர் நோயாளியின் வலியையும் மருத்துவரின் கவலையையும், ஒரு மந்திரம் போல போக்கினார். ஆனால் அவர் பாராட்டுக்களுக்காக காத்திருக்கவில்லை.
நான்காண்டுகளுக்குப் பிறகு டி.ஜி.மார்ட்டன் (T.G.Morton) என்ற மருத்துவர் எத்தர் வலி நீக்கியின் பலனை பொதுமக்களுக்கு செய்து காட்டினார். அவருக்கு ஏகப்பட்ட பாராட்டுக்களும் நவீனயுகத்தின வலி நீக்கியை பரவச்செய்தவர் என்றும் பெயர் பெற்றார். டாக்டர்களால், ஒரு பிரசவ சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போதே 1878-இல் மரணமடைந்தார்.
1991-இல், 122 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க ஜார்ஜ் புஷ்சும், அமெரிக்க செனட் சபையும் கூடி, டாக்டர்லாங்கின் சேவைகளைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றினர். அமெரிக்காவில் மார்ச் 30-ஆம் தேதி மருத்துவர் தினமாகக் கொண்டாடப்படுவதற்கும் திறமையான மருத்துவரை நினைவு கூரவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நமது நாட்டில் பி.சி.ராய் பாட்னா பங்கிப்பூரில் ஜூலை ஒன்றாம் தேதி பிறந்தார். 14 வயதில் தாயை இழந்தார். அய்ந்து குழந்தைகளின் இளையவரான அவர் மருத்துவராக விரும்பினார். கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் படித்தார். எம்.பி.பி.எஸ் படிப்பிற்குப் பிறகு இங்கிலாந்தில் தொடர்ந்து படிக்க விரும்பினார். 30-ஆவது முயற்சிக்கு பிறகே வெற்றி பெற்றார். அவர் வெற்றிகரமாக MRCP, FRCS பட்டங்களையும் இரண்டாண்டுகளுக்குள் பெற்று, கல்வி பற்றிய பேராசிரியர்களின் அய்யங்கள் தவறு என நிரூபித்தார். பொது மருத்துவத்திலும், அறுவைத்துறையிலும் சிறந்து நின்றார்.
தொடர்ந்து வியாதிகளுக்கு அவரது எளிய மருந்துகளும், வியாதிகளைப் பற்றிய அவரது சரியான ஆற்றல் விரைவில் கண்டு பிடிக்கக் கூடிய திறனும் அவருக்குப் பெரும் புகழைக் கொண்டு வந்தன. ஆனால் அவர் சுதந்திரப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார். ஒரு தனி மனிதனை நலம் பெறச் செய்வதைக் காட்டிலும் பரந்த தேசத்தை நலம் பெறச் செய்தல் நன்று என்று அவர் எண்ணினார். அரசியலில் சேரும்படி அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். காங்கிரஸ் இயக்கத்தில் பல பதவிகளை வகித்தார். 1948-இல் மேற்கு வங்காளத்தின் முதல் மந்திரியாகவும் வாய்ப்புப் பெற்றார். நல்ல நிருவாகியாக, தனது பதவிக் குரிய கடமைகளைச் செய்து சிறந்து விளங்கினார்.
அவர் பிறந்த நாளிலேயே இறந்தது ஒரு விந்தை. இந்தியாவில் அவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு ஜூலை ஒன்றாம் தேதி மருத்துவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. டாக்டர் லாங் மனிதன் வலியிலிருந்து விடுதலை பெற மரத்துப் போகச் செய்தார். டாக்டர் பி.சிராயோ, மரத்துப் போய் உறங்கிக் கொண்டிருந்தவர்களை விழிப்புறச் செய்தார்!
-விடுதலை ஞா.ம.,6.7.13

ஞாயிறு, 8 நவம்பர், 2015

யோகா - மூச்சுப் பயிற்சி- கி. வீரமணியோகா என்பது ஒரு வகை உடற் பயிற்சியே. தியானம் - பிராணயாமம் என்பதும் ஆயுளை  நீடிக்கச் செய்ய தேவையான மூச்சுப் பயிற்சி.
அதிவேகமான அன்றாட வாழ்க்கை இன்று மனித குலத்திற்கு அவனி முழு வதும் ஏற்பட்டு விட்டதால், மன அழுத்தம், மன உளைச்சல், இவை களினின்று விடுபட அமைதியாகச் சில மணித்துளிகள் அமர்ந்து, மூச்சுப் பயிற்சி செய்தால் மன அழுத்தமும், மன உளைச்சலும், களைப்பும், சோர்வும், ஆத்திரம், அவசரக் கோலத்தின் அவதி -_ இவைகளினால் ஏற்படும் எரிச்சல் எல்லாம் நீங்கி, ஒரு புத்துணர்வைப் பெற வாய்ப்பினை மனிதன் தனக்குத் தானே வழங்கிக் கொள்ள முடியும்.
கடுமையான பகல் நேர உழைப் புக்குப் பின் இரவில் தூக்கம் மனிதர் களை சோர்வு கழிந்து, மலர்ச்சியை விழிப்புக் கொடையாகத் தருகிறது. அது போலத்தான், உடற்பயிற்சிகளும், நடைப் பயிற்சியும், போன்றதுதான் யோகா என்பதும்.
இது ஏதோ ஆதியில் வேதத்திலி ருந்து வந்தது என்றும், ஓம் என்று உச்சரித்துக் கொண்டே பல ஆசனங்கள் போடலாம் என்றும் சமஸ்கிருதமயமாக (Sanskritisation) இந்தக் கலை, ஆரியர் களால் ஆக்கப்பட்டு உலகம் முழுவ திலும் இதை நம்பும்படி தங்களது பிரச் சார வன்மையால் ஆக்கி விட்டனர்!
திராவிடர் நாகரிகத்தையே இன்று மறைத்து, வரலாற்றைத் தலைகீழாக்கி, காவிமயக் கொள்கையாக்கி, ஆரியர்கள் இந்நாட்டின் பூர்வீகக்குடிகள், திரா விடர்கள் வந்தேறியவர்கள் என்று தலைகீழாக ஆக்கும் துணிவு உள்ள நிலையில், 2000, 2500 ஆண்டுகளுக்கு முன்பு எப்படியெல்லாம் செய்திருப் பார்கள் என்பதை அறிஞர்கள், நடு நிலையாளர்கள் சிந்தத்தால் நன்கு புரியும்.
ஆரியப் பார்ப்பனர்கள், மாட்டுக்கறி, உணவை தவிர்த்ததே, புத்தரின் கொள்கை மார்க்கம் பரவி செல்வாக்கு பெற்ற நிலையில், அதனிடமிருந்து  காப்பியடித்து பல தத்துவங்கள், கொள்கைகள், நடைமுறைகள் - இவைகளை ஏதோ முதன் முதலில் தாங்கள் தான் கண்டுபிடித்ததாகவோ, அல்லது நேரே கடவுள் இவர்களுக்கு வந்து கொடுத்து விட்டுச் சென்றது போலவோ எழுதி வைத்து அதையே பிரச்சாரத்தின் மூலம் நிலை நிறுத்தி வருகின்றனர்!
அதுபோலவே புத்தர் தன் சீடர்களுக்கு கருத்துரை வழங்க, மடம் என்ற அமைப்பினை உருவாக்கியதை, பிற்காலத்தில் அதிலிருந்து காப்பிய டித்தே! ஆதி சங்கராச்சாரி நான்கு திசைகளிலும் நான்கு மடங்களை நிறுவி, சனாதனமதமாகி, வேதமதமாகிய பிராமண - பார்ப்பன மதத்தினை உரு வாக்கினார்! பவுத்தம், பார்ப்பனீய ஜாதிமுறை, பெண்ணடிமைத்தனம், சமஸ்கிருத மொழி ஆதிக்கம், அறிவைப் புறந்தள்ளி நம்பிக்கையை ஆணியடித்த ஆரியத்தைக் கண்டித்து ஒரு அறிவுப் பிரச்சாரம், கடவுள், ஆத்மா மறுப்பு இவைகளையெல்லாம் செய்து, மக்கள் மத்தியில் புத்தம் தனி செல்வாக்குப் பெற்றது!
வேதம் அறிவு என்பதை உயர் ஜாதிப் பார்ப்பனர் மட்டும் அறிந்து கொள்ள உரிமை பெற்றிருந்த நிலையில்,
அறிவு எல்லோருக்கும் பொது என்று தந்தை பெரியார் இயக்கம் 20ஆம் நூற்றாண்டில் செய்ததுபோல, அந்தக் காலத்தில் (கி.மு.) 2600 ஆண்டு களுக்கு முன்னர் புத்தர் அறிவியக்கப் பிரச்சாரம் மூலம் மக்களின் உள் ளத்தைக் கவர்ந்ததால், அதிலிருந்து பலவற்றை ஆரியப் பார்ப்பன வேத மதம் காப்பியடித்து தன்னுள்  வைத்து, தானே உண்டாக்கியது போல காட்டிக் கொண்டது.
மாட்டிறைச்சியைத்தான் யாகம் மற்றும் விருந்துகளுக்குப் பயன்படுத்திய ஆரியர்கள் அதை விட்டு விட்டு காய் கறி சாப்பிடுபவர்களாக (சைவமாக?) மாறியது பிற்காலத்தில் தான் என்பதைThe Dynamic Brahmin என்ற நூலில் (பம்பாய்) திருநாயர் குறிப்பிட்டுள்ளார்!
பள்ளிகள், மடங்கள் என்பது புத்தரி டமிருந்து கையகப்படுத்திய தத்துவ நடைமுறை நிறுவனங்கள் என்பதை,
பவுத்தமும் தமிழும் என்ற நூலில் ஆராய்ச்சியாளரான மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் குறிப்பிடுவது ஈண்டு நினைவு கூரத்தக்கது.
இதுபோல, அடுக்கடுக்காக பல கூறலாம். ஆய்வாளர்கள் இதில் நுழைந்து புதிய கோணங்களில் பல புது கருத்துக்களை தர வேண்டுமென விரும்புகிறோம். அரைத்த மாவையே அரைப்பதால் யாருக்கு என்ன லாபம்?
மேலை நாட்டவர்களையும், மற்றும் பலரையும் வெகுவாகக் கவர்ந்துள்ள இந்த யோகா என்ற யோகக் கலை, வேத கால, ஆரிய நாகரிகத்திற்கு முந் தைய மொகஞ்சதாரோ ஹரப்பா, நாகரிகத்திலேயே அந்த மக்களால் (திரா விடர்களால்) கடைப்பிடிக்கப்பட்ட ஒன்றாகும்! பிற்காலத்தில் இதற்கு ஒரு வகை உருவம் தந்து, பதிவு செய்ய (Documentation)  பதஞ்சலி போன்றவர்கள் வந்திருக்கலாம். இது பற்றி சீரிய தமிழ் அறிஞர்கள் நல்ல வண்ணம் ஆய்வு செய்ய முன் வர வேண்டும்.
யோகா என்ற தலைப்பில், இங்கிலாந்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் சொல்லிக் கொடுக்கும் பேரா சிரியை மேரி ஸ்டூவர்ட் (Mary Stuwart) என்பவர் எழுதிய ஆங்கில நூல் ஒன்றினை அண்மையில் படித்த போது, அதில் அந்த அம்மையார் யோகாவைப் பற்றி ஒரு புதுக் கருத்தினைக் கூறி யுள்ளார்!
“Yoge is as old as Civilisation, its first traces were fond in the pre-historic ruins of Indus valley is what is now Pakistan. Here carved seals were discovered some of which showed a figure seated in Yoge position which is still practised today. The script used by these indus valley people has not yet been decipheed. But from their well - planned cities and buildings we know that theirs was an advanced culture and predating the migration of Aryans into India from the north.”
The earliest written references to Yoge are in the vedas (2500-600 BC)
தமிழாக்கம்: யோகா எனும் முறை, நாகரிகம் எவ்வளவு பழைமையானதோ அவ்வளவு பழைமையானது. இப்பொழுது பாகிஸ்தான் எனப்படும் நாட்டில் உள்ள சிந்துச் சமவெளியில், வரலாற்றுக்கு முந்திய இடிபாடுகள் (புதை பொருள்கள்) இருக்கின்றன. அவற்றிடையே யோகாவைப் பற்றிய முதல் அடையாளங்கள் காணப்பட்டன. உருவங்கள் பதியப் பெற்ற முத்திரைகள் இங்கே கண்டெடுக்கப்பட்டன. இன் னும் வழக்காற்றில் உள்ள, யோகா நிலையில் அமர்ந்திருப்பது போன்ற ஓர் உருவத்தை அந்த முத்திரைகள் சில காட்டுகின்றன. சிந்துச் சமவெளி மக்கள் பயன்படுத்திய எழுத்துக்களை இன்னும் படிக்க இயலவில்லை. ஆனால், அங் குள்ள, நன்கு திட்டமிட்டுக் கட்டப் பட்டுள்ள நகரங்களும், கட்டடங்களும், சிந்துச் சமவெளி நாகரிகத்தவர்கள் முன்னேறிய பண்பாட்டிற்கு உரிய வர்கள் எனக் காட்டுகின்றன. வடக்கில் இருந்து இந்தியாவில் ஆரியர்கள் குடி யேறுவதற்கு முன்பே அந்த நாகரிகம் இருந்தது. வேதங்களில் (கி.மு. 2500-_600) யோகாவைப் பற்றிய மிக முந்தியதாக எழுதப் பெற்ற தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன.
சாங்கியம் என்பது மதமல்ல. கடவுளை மறுப்பது; அதுபற்றி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மிகவும் ஆய்வுக் கண்ணோட்டத்தில் கூறியுள்ளார்! பவுத்தத்திற்கு முன்னோடியானது கபிலான் சாங்கிய தத்துவம் ஆகும்.
எண்ணூல் என்ற சாங்கியத்தை முதன் முதலில் அறிந்தவர்கள் தமி ழர்கள் என்கிறார் புரட்சிக் கவிஞர் (குயில் 16.6.1959) இந்திய மெய்ப்பொருள் வரலாற்றில் சாங்கியம் தொன்மையானது.
சாங்கியக் கருத்துக்கள் இயற்கை யோடு இயைந்தவை; பகுத்தறிவுக்கு ஒத்தவை
(புரட்சிக் கவிஞர் - குயில் 1.12.1959)
உலகம் எவ்வாறு உருவாகிறது? உயிர்களின் இயல்பு என்ன? இன்ப, துன்பங்களினின்றும் விடுதலை பெறுவது எப்படி? என்பன போன்ற மறைபொருள் விளக்கங்களுக்குப் பகுத்தறிவினைப் பயன்படுத்தி முதன் முதலாக உலக வரலாற்றிலேயே விரி வான விளக்கத் தத்துவம் சாங்கியம் ஆகும். சாங்கிய தத்துவம் இறை மறுப்பு (கடவுள் மறுப்பு) கொள்கையைக் கொண்டது. உலகம் கடவுளால் படைக் கப்பட்டது என்பதை சாங்கியத் தத் துவம் மறுப்பது இங்கு சுட்டிக் காட்டத் தக்கது.
இது ஒரு கடவுள், மதச் சார்பற்ற, பகுத்தறிவு நெறியை ஒட்டி மிக நீண்ட காலம் முன்பே உருவாக்கப்பட்டு வளர்ந்தோங்கிய தத்துவம். இதனை ஒருவர்இருவர் உருவாக்கியிருக்க முடியாது. இதனை முதலில் கபிலர் (Kapila) உருவாக்கி, பிறகு பலரும் இதனை பிரச்சாரம் செய்தனர்.
இந்தப் பெயர் பெருமைக்கும் பின்பற்றுதலுக்கும் உரியதாகையால், ஒரு கபிலர் அல்ல; பல கபிலர்கள், ஒரு இடத்தில் பிறந்தவர்கள் அல்ல; பற்பல பகுதிகளில் பற்பல கால கட்டங்களில் பிறந்தவர்களாக அவர்கள் இருந்திருக்க வேண்டும்.
கபிலர் அகவல் பாட்டு எழுதிய கபிலரும் திருவாரூர்க் கபிலர் தமிழில் எழுதிய எண்ணூலைத்தான் பிறகு வடமொழியாளர் சாங்கியம் என்றும் மொழி பெயர்த்துக் கொண்டனர் என்றும் புரட்சிக் கவிஞர் கருதுகிறார்!
சாங்கியம் என்னும் சமசுகிருதச் சொல்லுக்குத் தேர்ந்து தெரிதல்; எண் கணிதம், பகுத்தாய்வு, ஆய்ந்து கண்ட முடிவு என்று அறிஞர்கள் பல் பொருள் உரைப்பர் (பாரதிதாசன் - _ திருக்குறளின் உரை டாக்டர் ச.சு. இளங்கோ).
சாங்கியத் தத்துவத்தின் அடிப்படைக் கூறுகள் இரண்டு.
1. புருடன் --(Purusa) உயிர்.
2. பிரகிருதி - மூலப் பகுதி.
முற்றிலும் மாறான பொருள்களின் சேர்க்கை.
இந்த சாங்கியத் தத்துவத்தின் கீழும் யோகா என்ற உடற்பயிற்சி முன்பு அக்காலத்திலேயே (இது புத்தர் காலத்திற்கும் முந்தையது, முன்னோடித் தத்துவம் என்பது நினைவில் நிறுத்தப் படல் வேண்டும்) கபிலரின் சாங்கியத் தத்துவம் முழுவதும் பகுத்தறிவு நெறியை அடிப்படையாகக் கொண்டது. ஆனபடியால், இதில் கடவுளுக்கோ, மதத்திற்கோ வேலையில்லை. ஆனால் பிறகு ஆரியக் கலாச்சார அடிப்படையை வேதம், உபநிஷத் போன்றவைகளின் அடிப்படையில் இதை சமயக் கணக்கர் மதிவழியே ஆக்கினர்.
பதஞ்சலி என்பவரின் ஆரிய வேத மதக் கருத்துக்கள் இந்த உடற்பயிற்சி போன்றவைகளில் உள்ளே புகுந்தன. அன்றாட வாழ்க்கைகள், மதச் சிந்தனை களை, கடவுள் கருத்துக்களை, புகுத்திட ஒரு கருவியாக அவர்களுக்குப் பயன் பட்டிருக்க வேண்டும்!
டில்லியில் 1872-ல் பிறந்து, இங்கிலாந் தில் பி.ஏ., எல்.எல்.எம். (L.L.M.) L.L.D. என்ற பட்டங்களை கேம்பிரிட்ஜ் பல் கலைக் கழகத்தில் பெற்றும் பிறகு டில்லி பல்கலைக் கழகத்தால் D.L.I.T.T.பட்டம் அளிக்கப்பட்டவரும் மிகச் சிறந்த சிந் தனையாளரும், (1918_22இல்) நாகபுரியின் மேயராகவும், டில்லி, நாகபுரி பல்கலைக் கழகங்களில் துணைவேந்தராகவும் இருந்த டாக்டர் சர். ஹரிசிங் கவுர் அவர்கள் 1929-இல் எழுதிய The Spirit of Buddhism    என்ற நூலில் யோகாவை புத்தர் அணுகிய விதமும் பதஞ்சலி பயன்படுத்தியது பற்றியும் கீழ்க்காணும் முறையில் குறிப்பிடுகிறது.
..For both the Sankhya and the Vedanta appear to have agreed  on the practice of Yoge, as enlarging the vision beyond the material horizon. The practice of Yoge or intense meditation was itself the survival of the Vedic tapas, which was a form of asceticism combined with penance. It is not clear whether kapila himself recognized Yoge as the gate -way to higher knowledge, but it was the theme of the grammarian Patanjali, who expounded it in his Yoge Shastra, written about 200 B.C....
..Patanjali had to introduce in his system the doctrine of a personal God, Though he clearly saw its irreconcilable nature, and therefore, relegated his sutras dealing with God to a place unconnected with his treatise.
..That Buddha was a firm believer in the efficacy of Yoge is clear from the tenor of his earlier life.
...But Buddha believed in Yoge as a mental telescope; he did not believe in its efficacy beyond chastening the mind by freeing it from material distractions. It was the pre-Buddhistic view. But in later time Patanjali gave Yoge a special significance and it was maintained to be the chief means of salvation”
In his treatise Patanjali still adhered to the orthodox Sankhya doctrine - that the final aim of man was the  absolute isolation of the soul from matter, and not as in the Vedantic doctrine - the union with, absorption with, God Nor are the individual souls  here derived from the “Special Soul or God, but are like the latter - without a beginning”
“Sanskrit Literature” - Page 392, by Macdonnell.
தமிழாக்கம்: யோக முறையைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவரின் நோக்கு அல்லது பார்வை பொருள் எல்லையைக் கடந்து விரிவடைகிறது எனச் சாங்கியம், வேதாந்தம் ஆகிய இரண்டும் கருதின. வேதியத்தவம் (தபஸ்), சுகத்தை மறுத்துத் தன்னை வருத்திக் கொள்வது ஆகும்; அதாவது ஊனை உருக்கி, உள் ஒளி பெருக்குதல்; அதன் மீட்சியே யோகம் எனும் தீவிர ஆழ்நிலைச் சிந்தனை.
உயர்ந்த ஞானத்தைப் பெறுவதற்கான ஒரு வழி என்ற வகையில் யோக முறையைக் கபிலர் கருதினாரா என்ப தைத் தெளிவாகச் சொல்ல முடிய வில்லை. ஆனால், இலக்கண ஆசிரியர் பதஞ்சலி யோக முறையால் உயர்ந்த ஞானத்தைப் பெறலாம் என, கி.மு. 200-இல் தாம் யாத்த யோக சாஸ்திரத்தில் எழுதினார்.
தனியாள் சார்ந்த கடவுள் (Personal God) எனும் கொள்கையைப் பதஞ்சலி, தமது முறையில் சேர்க்க வேண்டியவர் ஆனார். அவ்வாறு கடவுள் கொள் கையைப் புகுத்துவதால் முரண்பாடு ஏற்படுவதைக் கண்டார்; அதனால், கடவுளைப் பற்றிய தமது சூத்திரங்களை, கோட்பாட்டைப் பற்றிய பகுதியுடன் சேர்க்காமல், அதனுடன் தொடர்பற்ற ஒரு தனித்த இடத்திற்கு ஒதுக்கி விட்டார்.

யோக முறைக்கு ஆற்றல் உண்டு, அதைக் கொண்டு, விரும்பும் விளைவை ஏற்படுத்தலாம் எனப் புத்தர் உறுதியாக நம்பினார் என்பதை அவருடைய தொடக்க கால வாழ்வுப் போக்குத் தெளிவாக காட்டுகிறது.
மனதைத் தொலைநோக்கு உடைய தாக ஆக்கவல்லது  யோகம் எனப் புத்தர் நம்பினார். பொருள் வயப்பட்ட புற ஈர்ப்புகளுக்கு உட்படாமல், மனதை விடுவித்து அதைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு யோகம் பயன்படுகிறது; அதற்கு மேல் அதற்குத் தனி ஓர் ஆற்றல் இல்லை. இந்தக் கருத்து, புத்தர் காலத்திற்கு முன்பு இருந்த ஒன்று. ஆனால், பதஞ்சலி, யோக முறைக்கு ஒரு தனித்த முக்கியத்துவம் அளித்தார்; வீடு பேறு அல்லது மோட் சம் என்பதை அடைவதற்கு அஃது ஒரு முக்கிய வழிமுறை எனக் கண்டார். பக்கம் 78 “The Spirit of Buddhism”
தமது கோட்பாடுகள்பற்றிய நூலில், பதஞ்சலி பழைமையான சாங்கியக் கொள்கைகளையே பற்றியிருந்தார். பொருளிலிருந்து ஆன்மா முற்றிலும் தனித்துப் பிரிய வேண்டும் என்பதே அக்கொள்கை. வேதாந்தக் கொள்கை வேறானது -_ அதன்படி, கடவுளுடன் ஆன்மா ஒன்றுதல் இறுதி இலக்கு ஆகும். பேரான்மா அல்லது கடவுளிட மிருந்து தனி ஆன்மாக்கள் பெறப்படு கின்றன என்பது வேதாந்தம். ஆனால், பேரான்மாவை அல்லது கடவுளைப் போன்று தனி ஆன்மாக்களும் தோற்றம் (தொடக்கம்) அற்றவை என்பது சாங்கியக் கொள்கை.
பக்கம் 392 “Sanskrit Literature’
- by Macdonnell
உண்மை மே 1-15 2002
-விடுதலைஞா.ம.,27.6.15

சனி, 7 நவம்பர், 2015

செய்யக் கூடாதவை!


காலையில் பட்டினியாக இருக்கக் கூடாது
இரவு முழுவதும் சாப்பிடாமல் இருக்கும் நம் வயிறு காலையில் காலியாக இருக்கும். அப்படியிருக்க உடனடியாகக் காலி வயிற்றுக்கு உணவு கொடுக்க வேண்டியது கட்டாயம். இல்லையென்றால் வழக்கமாகச் சுரக்கும் செரிமானச் சுரப்பு நீர்கள் இரைப்பையை அரித்துப் புண்ணாக்கிவிடும். இது குடல்புண் வர வழிவகுக்கும். மேலும், உடலும், உடல் உறுப்புகளும் சோர்வு அடையும். எனவே, காலை உணவைக் கட்டாயம் உண்ண வேண்டும்.
காலைச் சிற்றுண்டி என்பர். அது சரியல்ல. காலையில்தான் அதிகப்படியான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். வயிறு காலியாகவுள்ளதால் மட்டுமல்ல, உழைக்கத் தொடங்கும் நேரம். எனவே, வேண்டிய அளவு சக்தியளிக்கும் உணவு தேவை. மதிய உணவு அதைவிடக் குறைத்து உண்ண வேண்டும். பலர், இரவில்தான் அதிக உணவு எடுப்பர். குறிப்பாக, இறைச்சி, மீன் உணவுகள் அதிகம் உண்பர். இது அறியாமை. இரவு ஓய்வெடுக்கப் போகும்போது அதிகம் உண்பது உடலில் கொழுப்பாகவும், சர்க்கரையாகவும் சேர்ந்து, பல நோய்களை உருவாக்கும்.
இரு முக்கோணங்கள்
உணவு சார்ந்தும் உடல் சார்ந்தும் இரண்டு முக்கோணங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உணவு முக்கோணம்

காலையில் அதிக உணவு, மதியம் அதைவிடக் குறைவு, இரவு மிகக் குறைவு.
உடல் முக்கோணம்


உடலின் தோள்பாகம் விரிந்து இருக்க வேண்டும். இடைப்பகுதி குறுகியிருக்க வேண்டும். கால் பகுதி மேலும் மெலிந்து இருக்க வேண்டும். மாறாக, வயிறு பெருத்துத் தோள் ஒடுங்கியிருப்பது நலக்குறைவின் அடையாளம்.
எனவே, இந்த இரண்டு முக்கோணங்களையும், உணவு, உடல்நலம் இவற்றின் அளவுகோலாகக் கொண்டு, அதற்கேற்ப உடலையும், உணவையும் வைத்துக் கொள்ள வேண்டும்.
வயிறு முழுக்க உணவு உண்ணக்கூடாது:
எப்போதும் வயிறு நிறைய உண்ணக்கூடாது. அவ்வாறு உண்பதுஇரைப்பைச் சுருங்கி விரிவதைப் பாதிக்கும். உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
அரைவயிறு உணவு, கால்வயிறு நீர், கால்வயிறு காலியாக இருக்குமாறு உண்ண வேண்டும்.
கடினமான உழைப்புச் செய்யக் கூடியவர்கள் இறைச்சி, கொழுப்பு, அரிசி உணவுகள் அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுழைப்பு இல்லாத பணி செய்வோர், காய்கறி, கீரை உணவுகளை எடுத்துக் கொண்டு, கொழுப்பு உணவுகளை, அரிசி உணவுகளைக் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
நேரம் கடந்து உண்ணக்கூடாது
பசிக்கும் முன்னும் உண்ணக்கூடாது
நேரங் கடந்து உண்பதால், குடற்புண்ணும், உடற்சோர்வும், மயக்கமும் ஏற்படும். பசிக்கும் முன்பே உண்பதால் முன்பு உண்ட உணவு செரிக்காத நிலையில், புதிய உணவு கலந்து செரிமானப் பாதிப்பையும் நோய்களையும் உருவாக்கும். எனவேதான், பசித்துப் புசி என்றனர். அதில் ஒரு சின்ன திருத்தம். பசித்துப் புசி என்பதை, பசித்ததும் புசி என்றால் மிகச் சரியாக இருக்கும். காரணம், பசித்த பின்னும் நீண்ட நேரம் உண்ணாமல் இருப்பது தவறு என்பதால் பசித்ததும் புசி என்பது சரியானது. இவ்வாறு சொல்லும்போது பசித்த பின் உண்ண வேண்டும் என்பதும் பசித்ததும் உண்டுவிட வேண்டும் என்பதும் அடங்கிவிடுகிறது.
பதற்றத்தோடும் விரைவாகவும் உண்ணக் கூடாது
மனஇறுக்கத்தோடும், பதற்றத்தோடும் உண்பது மிகவும் கேடு பயக்கும். உண்ணும்போது சுவைத்து மெல்ல, நிதானமாக, நன்றாக மென்று விழுங்க வேண்டும். அப்போதுதான் உணவு நன்றாக அரைக்கப்படுவதுடன், அது செரிப்பதற்குத் தேவையான உமிழ்நீரும் உணவுடன் கலக்கும்.
இதைத்தான், நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றனர். பதற்றத்தோடு, மன இறுக்கத்தோடு, உண்ணும் உணவைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் அள்ளி வாயில் போட்டு அவசர அவசரமாய் விழுங்கினால், அவ்வுணவு உள்ளுக்குச் சென்று கேடே விளைக்கும்.
காரணம், உணவு சரியாக மெல்லப்பட்டிருக்காது; உணவுடன் உமிழ்நீர் போதிய அளவு கலந்திருக்காது. உள்ளே சென்ற உணவு செரிக்க நேரம் ஆகும். இதனால் செரிப்பு உறுப்புகளுக்குக் கூடுதல் வேலை; மனஇறுக்கத்தாலும், பதற்றத்தாலும், இரத்த அழுத்தத்தாலும் உள்ளுக்குள் தேவையற்ற சுரப்புகள் சுரந்து உணவு நஞ்சு போல மாறும். எனவே, உண்ணும்போது நிமானமாக, மகிழ்வாக, நன்றாக மென்று உண்ண வேண்டும்.
உண்ணும்போது பேசக்கூடாது
உண்ணும்போது கவனம் முழுவதும் அதிலே இருக்க வேண்டும். சுவைத்து மென்று மகிழ்வோடு உண்டால் பேசத் தோன்றாது. மாறாகப் பேச்சு இடையூறாக இருக்கும்.
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு சாப்பிடுவதும் சரியல்ல. படித்துக் கொண்டு உண்பதும் உகந்ததல்ல. நடந்து கொண்டு, படுத்துக் கொண்டு, சாய்ந்து கொண்டு உண்பதும் ஏற்றதல்ல. நமது தமிழர் மரபுப்படி தரையில் கால்மடக்கி அமர்ந்து உண்பதே நன்று.
சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது
இரவு உணவிற்குப் பின் குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்தே தூங்க வேண்டும். சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது. பகல் உணவிற்குப் பின் அரைமணி நேரம் கழித்து ஒரு 10 நிமிடங்கள் படுத்து இளைப்பாறினால் புத்துணர்ச்சியுடன் மீண்டும் உழைக்க முடியும். பகலில் நீண்ட நேரம் உறங்கக் கூடாது.
இரவு 12 மணி வரை கண்விழிக்க வேண்டியவர்கள். பிற்பகல் இரண்டு மணி நேரம் தூங்கியெழுவது நல்லது. இரவில் பணியைச் சுறுசுறுப்புடன் பணியாற்ற அது பயன்படும். மாறாக, இரவில் 7 மணி நேரம் தூங்கியவர்கள் பகலிலும் 2 மணி நேரம் உறங்குவது கூடாது. அவ்வாறு உறங்கினால் உடல் பருக்கும்; நோய்க்கும் இடம் கொடுக்கும். இரவு 11 மணிக்கு மேல் விழிக்காமல் இருப்பதும் காலை 5 மணி வரை உறங்குவதும் கட்டாயம்.
-உண்மை இதழ்,1-15.7.15