திங்கள், 13 மார்ச், 2017

அரிப்பு ஏற்படுவது ஏன்?




அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்து விட்டால் நம்மை எச்சரிக்கை மணி அடிக்கும் அறிகுறிதான் அரிப்பு. நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் எதிராளி தொல்லை கொடுத்தால், உடனே தோலைச் சொறிய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகிற ஓர் எதிர்வினை இது.

உடலியல்ரீதியில் சொன்னால் அரிப்பு என்பது ஒவ் வாமையின் வெளிப்பாடு. இதைச் செயல்படுத்துவது நம் தோலில் உள்ள மாஸ்ட் செல்கள்.
எதிர்ப்புப் புரதம்

அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம்தான். இதை இம்யூனோகுளோபுலின்  ஈ  என்பார்கள். இந்தப் புர தத்தை ரத்த செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதல்முறையாக உடம்புக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் உருவாகி ரத்தத்தில் காத்திருக்கும்.

மீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல் களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ஹிஸ்டமின், லுயூக்கோட்ரின் எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும். இவை ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து அங்குள்ள நரம்பு முனைகளைத் தாக்கும். அதன் விளைவால்தான் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படுகின்றன.

என்ன காரணம்?

அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக்கிறது, மருத்துவம். உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.

வெளியிலிருந்து வரும் எதிராளிகளில் முன்னிலை வகிப்பது செயற்கை அழகுச் சாதனப் பொருள்கள். சோப்பு, சென்ட், குங்குமம், தலைச்சாயம், உதட்டுச்சாயம், நகப்பூச்சு, முகப்பவுடர், கிரீம் போன்றவை உடலுக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் அரிப்பை ஏற்படுத்தும். சிலருக்குக் கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத் தோல் போன்ற ஆடைகளை அணிந்தால் உடல் அரிக்க ஆரம்பித்துவிடும்.

குழந்தைகளுக்கு டயாபர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பிட்டத்தில் அரிக்கும். ரப்பர் செருப்பு, கைக்கடிகார நாடா, பெயிண்ட், பூச்சிக்கொல்லிகள், ரசாயனப் பொருள்கள் போன்றவையும் அரிப்பை ஏற்படுத்தலாம். இன்னும் சிலருக்கு பிளாஸ்டிக் வளையல், தங்க நகை, கவரிங் நகைகளால் அரிப்பு உண்டாகும். குறிப்பாக, நிக்கல் வகை நகைகளால் ஏற்படும் அரிப்பு, நம் நாட்டுப் பெண்களுக்கு அதிகம். துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட் தூள் அல்லது சோப்பு சில பெண்களுக்கு அலர்ஜியாகி, அரிப்பை ஏற்படுத்துகிறது.

அப்படி ஆகும்போது தோல் தடிமனாவதுடன், சொரசொரப்பாகிக் கறுத்துப்போகிறது. இந்த இடங்களைச் சொறியச் சொறிய நீர்க் கொப்புளங்கள் ஏற்பட்டு வீங்கி, தடித்து, நீர் வடிகிறது. இதற்குக் கரப்பான் நோய் () என்று பெயர். இது வந்துவிட்டால் நாள் முழு வதும் அரிப்பை ஏற்படுத்தும்.
குளிரும் ஆகாது!

சிலருக்கு வெயிலும் குளிரும்கூட அரிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் அலர்ஜியாகி அரிப்பு வரும்; கடுமையான வியர்க்குரு வந்தாலும் அரிப்பு வரும். குளிர்காலத்தில் பனிக்காற்றுப் பட்டுத் தோல் வறண்டு அரிப்பு உண்டாகும். அடுத்து, செல்லப் பிராணிகளால் வரும் அரிப்பு. இதில் பிரதானமானது பூனை. பூனையின் முடி பட்டால் சிலருக்கு உடம்பெல்லாம் அரிப்பு எடுத்து தடிப்புகள் உண்டாகும்.

தொடை இடுக்கு அரிப்பு

காளான் கிருமிகள் தொடை இடுக்குகளில் புகுந்து அரிப்பை ஏற்படுத்தும். இந்த அரிப்பு இரவு நேரத்தில்தான் மிகத் தீவிரமாகும். அரிப்பு அதிகரிக்க அதிகரிக்க அந்த இடத்தில் அகலமாகப் படை போலத் தோன்றும். கால் விரல் இடுக்குகளில் வருகிற சேற்றுப் புண்ணும் அரிப்பை ஏற்படுத்துகிற ஒரு காரணிதான். தண்ணீரில் அதிகம் புழங்கும் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு இந்தத் தொல்லை இருக்கும்.

அடுத்து, உடல் பருமன் உள்ளவர்களுக்கு அக்குள், இடுப்பின் சுற்றுப்புறம், தொடை இடுக்கு, மார்பகங்களின் அடிப்பகுதி... இப்படிப் பல இடங்களில் காளான் பாதிப்பு ஏற்பட்டு அரிப்பு தொல்லை கொடுக்கும். இந்த இடங்களில் பாக்டீரியாவும் சேர்ந்து கொண்டால், தோல் மடிப்பு நோய்  தோன்றும். இதுவும் அரிப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு நோய்தான். இவை தவிர பேன், பொடுகு, தேமல், சிரங்கு, சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களும் அரிப்பை ஏற்படுத்தும். எறும்பு, கொசு, தேனீ, குளவி, வண்டு, சிலந்தி போன்ற பூச்சிகள் கடித்தாலும், கொட்டினாலும் தோலில் தடிப்பு, அரிப்பு, தோல் சிவந்துபோவது போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.

வயதானால் வரும் அரிப்பு

முதுமையில் வருகிற அரிப்புக்கு வேறு காரணம் இருக்கிறது. வயதானவர்களுக்குத் தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளின் சுரக்கும் தன்மை குறைவதால், தோலில் வறட்சி ஏற்பட்டு அரிப்பை ஏற்படுத்துகிறது. சிலருக்கு அருவியில் குளித்து முடித்ததும் அரிப்பு ஏற்படும்.

எச்சரிக்கும் நோய்கள்

உடலில் இருக்கும் எந்தவொரு நோய்த்தொற்றும் அரிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு. உதாரணம்: சொத்தைப் பல், சுவாசப்பாதை அழற்சி, சிறுநீரகப் பாதை அழற்சி போன்றவை. ஆசன வாயில் அரிப்பு உண்டாவதற்கு நூல் புழு காரணமாக இருக்கலாம். குடலில் எந்தப் புழு இருந்தாலும் உடம்பில் அரிப்பு ஏற்படலாம். உடம்பெல்லாம் அரித்தால், உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு புற்றுநோயின் அறிகுறியாகவும் அது இருக்கலாம்.

தவிர, நீரிழிவு நோய், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்சினை, பித்தப்பைப் பிரச்சினை, மல்ட்டிபிள் ஸ்கிலிரோஸிஸ் எனும் மூளை நரம்புப் பிரச்சினை, பரம்பரை போன்றவையும் அரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.
-விடுதலை,13.3.17

இன்சுலின் ஊசி மருந்தை வெளியில் வைக்கலாமா?




நான் ஒரு சர்க்கரை நோயாளி. தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்கிறேன். என் வீட்டில் குளிர்பதனப் பெட்டி இல்லை. இன்சுலின் ஊசிமருந்தை வெளியில்தான் வைத்துக் கொள் கிறேன். இப்படிச் செய்தால் இன்சுலினுக்கு ஆற்றல் குறைந்துவிடும்; ரத்தச் சர்க்கரை கட்டுப்பட நாளா கும் என்று சொல்கிறார்கள். இது உண்மையா?

உண்மைதான்.

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் ஒரு வரப்பிரசாதம். இதை முறையாகப் பயன்படுத்தினால் மட்டுமே முழுமையான பலனைத் தரும். இன்சுலின் அதன் வேதிப்பண்பின்படி ஒரு புரதப்பொருள். இதைக் குளிர்பதனப் பெட்டியிலிருந்து 8 டிகிரி சென்டிகிரேடுவரை உள்ள வெப்பத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். அதிக வெப்பம் அல்லது வெயில் இதன் மீது பட்டால், இன்சுலினுக்குரிய வேதிப்பண்பு சிதைந்துவிடும். இதனால், அதன் ஆற்றல் குறைந்துவிடும்.

இன்சுலின் ஊசி மருந்தை எவ்வாறு பாதுகாப்பது?

இன்சுலினுக்கு அதிக வெப்பமும் ஆகாது; அதிகக் குளிர்ச்சியும் கூடாது.

இன்சுலினை வெயில் படாத, குளிர்ச்சியான அறையில் வைத்திருக்கலாம்.

சில நாட்களுக்கு மட்டும் என்றால், சாதாரணமாக நாம் வசிக்கும் அறையிலும் வைத்துக் கொள்ள லாம். அறை வெப்பம் 15-லிருந்து 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைவரை இருக்க வேண்டும்.

நீண்ட நாட்களுக்கு என்றால், குளிர்பதனப் பெட்டியில் கதவின் உட்பக்கத்தில் வைத்துக் கொள்ளலாம்.

இன்சுலின் மருந்து, இன்சுலின் பேனா, கார்ட் ரிஜ்களை ஃபிரீசரில் வைத்துவிடக் கூடாது.

இன்சுலின் உறைந்துவிட்டால், குழம்பியிருந்தால் அல்லது நிறம் மாறி இருந்தால் பயன்படுத்தக் கூடாது.

குளிர்பதனப் பெட்டி இல்லாதவர்கள், ஒரு சிறிய பிளாஸ்டிக் வாளியில் முக்கால் பங்குக்குத் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். அதன் நடுவில் அடிப்பாகம் தட்டையாக உள்ள சிறிய மண் கலசத்தை வையுங்கள். அந்த மண்கலசத்துக்குள் இன்சுலின் ஊசி மருந்தை வைத்துவிடுங்கள். இதை ஒரு மூடியால் மூடி, வீட்டில் வெப்பம் படாத இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது குட்டி ஃபிரிட்ஜ் தயார். இன்சுலின் மருந்துக்குக் குளிர்பதனப் பெட்டி தருகிற அத் தனை பலன்களையும் இதனால் பெற முடியும்.

குளிர்பதனப் பெட்டியிலிருந்து மருந்தை வெளியில் எடுத்ததும் போட்டுவிடக்கூடாது. அது அறை வெப்பத்துக்கு வரும்வரை சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். அல்லது இன் சுலின் பாட்டிலை உள்ளங்கைகளுக்கு நடுவில் வைத்துக்கொண்டு உருட்ட வேண்டும். இப்படிச் செய்தால் விரைவில் அறை வெப்பத்துக்கு மருந்து வந்துவிடும். அதற்குப் பிறகு அதைப் பயன்படுத்தலாம்.

அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்கள், பிளாஸ்டிக் பையில் அய்ஸ் கட்டிகளை வைத்துக் கட்டிக்கொள்ளுங்கள். இப்படி இரண்டு அய்ஸ் கட்டிப் பைகளுக்கு நடுவில் இன்சுலின் மருந்து பாட்டில் அல்லது இன்சுலின் பேனாவை வைத்துக்கொள்ளலாம்.

இப்போது இதற்கெனத் தனி அய்ஸ் பை கிடைக் கிறது. அதையும் பயன்படுத்தலாம்.

இன்சுலின் மருந்தையும் இன்சுலின் பேனாவை யும் வீட்டில் அல்லது அலுவலகத்தில் அதிக வெப்பமுள்ள இடங்களில் வைக்கக் கூடாது; வெயில் படும் இடங்களிலும் வைக்கக் கூடாது; சமையலறையில் வைக்கக் கூடாது; தொலைக் காட்சிப் பெட்டியின் மேல் வைக்கக் கூடாது. வெப்பமூட்டி பயன்படுத்தும் அறையில் வைக்கக் கூடாது.   குளிர்சாதனப் பெட்டிக்கு அருகிலும் வைக்கக் கூடாது. வெயில் நேரடியாக வரும் வாய்ப் புள்ள ஜன்னலுக்கு அருகில் வைக்கக் கூடாது.

காரில் பயணம் செய்பவர்கள், நிறுத்தப்பட்ட காரில் இதை வைத்துவிட்டுச் செல்லக் கூடாது. ரேடியேட்டர் உள்ள இடங்களிலும் வைக்கக் கூடாது.

தற்போது வரும் நவீன கார்களில் ஏ.சி. உள்ள டேஷ் போர்டு இருக்கிறது. இதில் இன்சுலின் பாட்டிலை வைத்துக்கொள்ளலாம்.

விமானத்தில் பயணம் செய்பவர்கள் இன்சுலின் மருந்தை கார்கோவில் வைக்கக் கூடாது.

பயன்படுத்தத் தொடங்கிய இன்சுலின் ஊசி மருந்தை, அது குளிர்பதனப் பெட்டியில் வைத் துப் பாதுகாக்கப்படுகிறது என்றாலும், அதிக பட்சம் ஒரு மாதம் மட்டுமே பயன்படுத்த வேண் டும். அதற்கு மேல் பாட்டிலில் மருந்து மிச்சம் இருந்தாலும், அதன் செயல்திறன் குறைந்து விடும். ஆகவே, அதைப் பயன்படுத்த வேண்டாம்.

பயன்படுத்தாத, சீல் உடைக்கப்படாத இன்சுலின் மருந்தைக் குளிர்பதனப் பெட்டியில் வைத்து, அதன் காலாவதி தேதிவரை பாதுகாக்க முடியும்.

-விடுதலை,13.3.17

புதன், 1 மார்ச், 2017

கணினியில் இருந்து கண்களைக் காக்க...

கணினியில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு கண்கள் உலர்ந்து பல்வேறு பிரச் சினைகள் ஏற்பட்டு விடுகிறது. அதா வது கணினியில் வேலை செய்யும் போது கண் இமை கள் இமைப்பதற்கு குறைந்து விடுகிறது. இதனால் கண் வறண்டு போகிறது. இதனை தவிர்க்க ஓரு மணிக்கொரு முறை கண்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்.
அந்த சமயத்தில் கண்களை உள்ளங்கையில் அடிப்பாகத்தால் லேசாக அழுத்திவிடவேண்டும். மற்றும் பச்சை அல்லது நீல நிறத்தில் உள்ள பொருள்களை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த நிறங்கள் கண்களுக்கு இதமானவை. 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கண்களை சுழலவிட வேண்டும். அவ்வப்போது கண் இமைக்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அதிக நேரம் கணினியில் வேலை செய்ய வேண்டி வந்தால் அவ்வப்போது எழுந்து பச்சையான மரங்களைப் பார்த்துவிட்டு வந்து அமர்ந்து பணியாற்றலாம். மேலும் நீண்ட நேரம் கணினிமுன் உட்காருவதை முடிந்த வரை தவிருங்கள்.

அசிடிட்டியை குணப்படுத்தும் எளிய வழிகள்!
அசிடிட்டி எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பி பிரச்சினையால், அவதியுறுவோர் ஏராளம்!
குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது அதிகம். இவற்றை தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கான எளிய வழிகள் இதோ! பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்கள் மற்றும் காஃபின் பொருள்களை அறவே தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக மூலிகை தேனீர் அருந்தலாம். மேலும் தினமும் வெதுவெதுப்பான வெந்நீர் ஒரு டம்ளர் அருந்தலாம்.
தினசரி உணவில் வாழப்பழம், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இளநீர் அருந்தினால் இன்னமும் நல்லது. அது அமிலசுரப்பி பிரச்சினையை தீர்க்கும். தினமும் ஒரு டம்ளர் பால் அருந்துவதும் நல்லதுதான். இரவு உணவை நீங்கள் தூங்கப்போவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே முடித்துவிடுங்கள்.
ஒவ்வொரு உணவு இடைவேளைக்கும் நீண்ட இடைவெளி விடுவதும் அமில பிரச்சினைக்கு மற்றொரு காரணமாக அமைந்துவிடுகிறது. எனவே கொஞ்சமே என்றாலும் அந்தந்த நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். ஊறுகாய், கார சட்னி வகைகள், வினிகர் போன்றவற்றை கண்ணால் பார்க்காமல் இருப்பதே உசிதம்.
-விடுதலை,6.4.15

கோடை நோய்களை தடுப்பது எப்படி?

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயில் நம்மை மிரட்ட தொடங்கிவிட்டது. அடுத்த மூன்று மாதங்களுக்கு அனல்,  அரிப்பு, வியர்வை, சோர்வு என்று பல தொல்லைகளும் சேர்ந்து கொள்ளும். இத்தகைய பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி? மனித உடலின்  இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
கோடையில் வளிமண்டல வெப்பநிலை சர்வ சாதாரணமாக 40-லிருந்து 45 டிகிரியை தொடுகிறது. அப்போது உடலை  குளிர்விக்க அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. உடலை சுத்தமாக பராமரிக்காவிட்டால் தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு அடைத்துக்கொள்ளும்.  இதனால் வியர்க்குரு வரும். இதை தவிர்க்க தினமும் இரு வேளை குளித்தால் நல்லது.
தோலின் மூலம் வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை  சரியாக வெளியேற முடியாமல் அழுக்கு போல் தங்கிவிடும். அப்போது அங்கு பாக்டீரியா தொற்றிக்கொள்ள அந்த இடம் வீங்கி புண்ணாகும். உடலில் ஈரமுள்ள பகுதிகளில் பூஞ்சை கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும். குறிப்பாக வியர்க் குருவில் இத்தொற்றும் சேர்ந்துகொண்டால் அரிப்புடன் கூடிய  படை, தேமல் தோன்றும்.
படையை குணப்படுத்தும் களிம்பு அல்லது பவுடரை தடவிவர இது குணமாகும். கோடையில் சிறுநீர் கடுப்பு அதிக தொல்லை தரும்.  அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது இதற்கு முக்கிய காரணம். உட்கொள்ளும் தண்ணீர் அளவு  குறையும்போது சிறுநீரின் அளவும் குறைந்துவிடும்.
இதனால் சிறுநீரின்மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகி சிறுநீர் பாதையில் படிகங்களாக  படிந்துவிடும். இதன் விளைவுதான் நீர்க்கடுப்பு. நிறைய தண்ணீர் குடித்தால் இந்த பிரச்சினை வராது. வெயில் காலத்தில் சமைத்த உணவு வகைகள் விரைவில் கெட்டு விடும். அவற்றில் நோய் கிருமிகள் அதிகமாக பெருகும்.
இந்த உணவுகளை சாப்பிட்டால்  பலருக்கு வாந்தி, வயிற்று போக்கு, சீதபேதி, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வரும். இதனால் வெயில் காலத்தில் சமைத்த உணவுகளை  உடனுக்குடன் பயன்படுத்திவிடுவது நல்லது. உணவுமீது ஈக்கள் மொய்க்காமல் மூடி பாதுகாக்க வேண்டியதும் அவசியம். தண்ணீரை கொதிக்க வைத்து ஆற  வைத்து குடிக்கவேண்டும்.
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது உடலின் வெப்பம் 106 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் தாண்டிவிடும். அப்போது உடல் தளர்ச்சி அடையும். களைப்பு  உண்டாகும். தண்ணீரின் தாகம் அதிகமாக இருக்கும். இதில் தலைவலி, வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.
அளவுக்கு மீறிய  வெப்பத்தின் காரணமாக உடலின் உப்புகள் வெளியேறிவிடுவதால் இந்தத் தளர்ச்சி ஏற்படுகிறது. வெயில் காலத்தில் காபி, தேநீர் குடிப்பதை குறைத்து கொள்ளுங்கள். பாட்டில் குளிர்பானங்களைக் குடிக்கவேண்டாம். காரணம்? குளிர்பானங்களை வரம்பின்றி  குடிக்கும்போது அவற்றில் உள்ள குளிர்ச்சியானது ரத்தக் குழாய்களை சுருக்கி உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது.
இதற்கு பதிலாக இளநீர், மோர், சர்பத், பானகம், பதநீர் முதலிய வற்றை குடிக்கலாம். இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம் முதலிய தாதுக்கள் உடலின்  வெப்பத்தை உள்வாங்கி சுற்றுச்சூழல் வெப்ப நிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தை குறைகின்றன.
இதனால் உடலில் நீரிழிப்பால் ஏற்படுகின்ற பாதிப்புகள்  உடனடியாக குறைகின்றன. எலுமிச்சை பழச்சாற்றில் உப்பு அல்லது சர்க்கரை கலந்து சாப்பிடுவது குறைந்த செலவில் நிறைந்த பலனை பெற உதவும்.
உணவு வகைகள்: இட்லி, இடியாப்பம், தயிர்சாதம், மோர்சாதம், கூழ், அகத்திகீரை, முருங்கைக்கீரை, பொன்னாங் கண்ணிக்கீரை, கேரட், பீட்ரூட், பீர்க்கங்காய்,  வெண் டைக்காய், முள்ளங்கி, பாகற்காய், புடலை, அவரை, முட்டைகோஸ், வாழைத் தண்டு, வெங்காயபச்சடி, தக்காளி கூட்டு போன்றவை கோடைக்கால உணவு  வகைகள்.
தர்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை போன்ற நீர்ச்சத்து உள்ள பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள். இவற்றில் பொட்டாசியம்  வியர்வையுடன் வெளியேறிவிடும். தவிர்க்க வேண்டியவை: கோடையில் எண்ணெயில் பொரிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை அதிகமுள்ள இனிப்பு  பலகாரங்கள், கிரீம் மிகுந்த பேக்கரி பண்டங்கள், பர்கர், பீட்சா, அய்ஸ்கிரீம் போன்றவை தண்ணீர் தாகத்தை அதிகப் டுத்தும் என்பதால் இவற்றையும் தவிர்ப்பது  நல்லது. அதேபோல் சூடான, காரமான மசாலா கலந்த உணவுகளை யும் குறைத்துக்கொள்ளவேண்டும்.
கோடையில் 2 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து  வெயிலில் இருப்பதை தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அவசியம் செல்ல வேண்டும் என்றால் குடையை எடுத்து செல்லுங்கள். முடிந்தவரை நிழலில் செல்வது நல்லது.
குழந்தைகள், முதியோர்கள் உடல்நலம் குறைந்தோர் வெயிலில் அலைவது ஆபத்தை வரவழைக்கும். வெயிலில் அதிக நேரம் பயணிக்க வேண்டியிருந்தால்  கண்களுக்கு சன்கிளாஸ் அணிந்து கொள்ளலாம். உடைகளை பொறுத்தவரை கோடைக்கு உகந்தது பருத்தி ஆடைகளே, அவற்றில்கூட இறுக்கமான ஆடைகளை  தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிய வேண்டியது முக்கியம்.
கருப்பு உள்ளிட்ட அடர் நிறங்கள் வெப்பத்தை கிரகிக்கும். ஆகவே இத்தன்மையுள்ள ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல் செயற்கை இழைகளால் ஆன  ஆடைகளையும் தவிர்க்க வேண்டும். வெண்மை நிற ஆடைகள் கோடைக்கு உகந்தவையாம்.
-விடுதலை,6.4.15

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள...



உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப்பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள்மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும். முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழி முட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாள்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
நாவல் பழம் தினமும் சாப்பிட்டால்கூட இரத்தம் விருத்தியாகிறது. இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால்கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.
இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டும் அல்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.
இன்றைய காலக்கட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாக தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.
இதற்கடுத்தது இரத்த அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப்பொடி 12 மணி நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும். மேலும் ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீராகும். இது தவிர அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.
இரத்தக்கட்டுகளுக்கு நிவர்த்தியாக மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும். விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.
-விடுதலை,6.4.15