திங்கள், 13 மார்ச், 2017

இன்சுலின் ஊசி மருந்தை வெளியில் வைக்கலாமா?




நான் ஒரு சர்க்கரை நோயாளி. தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்கிறேன். என் வீட்டில் குளிர்பதனப் பெட்டி இல்லை. இன்சுலின் ஊசிமருந்தை வெளியில்தான் வைத்துக் கொள் கிறேன். இப்படிச் செய்தால் இன்சுலினுக்கு ஆற்றல் குறைந்துவிடும்; ரத்தச் சர்க்கரை கட்டுப்பட நாளா கும் என்று சொல்கிறார்கள். இது உண்மையா?

உண்மைதான்.

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் ஒரு வரப்பிரசாதம். இதை முறையாகப் பயன்படுத்தினால் மட்டுமே முழுமையான பலனைத் தரும். இன்சுலின் அதன் வேதிப்பண்பின்படி ஒரு புரதப்பொருள். இதைக் குளிர்பதனப் பெட்டியிலிருந்து 8 டிகிரி சென்டிகிரேடுவரை உள்ள வெப்பத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். அதிக வெப்பம் அல்லது வெயில் இதன் மீது பட்டால், இன்சுலினுக்குரிய வேதிப்பண்பு சிதைந்துவிடும். இதனால், அதன் ஆற்றல் குறைந்துவிடும்.

இன்சுலின் ஊசி மருந்தை எவ்வாறு பாதுகாப்பது?

இன்சுலினுக்கு அதிக வெப்பமும் ஆகாது; அதிகக் குளிர்ச்சியும் கூடாது.

இன்சுலினை வெயில் படாத, குளிர்ச்சியான அறையில் வைத்திருக்கலாம்.

சில நாட்களுக்கு மட்டும் என்றால், சாதாரணமாக நாம் வசிக்கும் அறையிலும் வைத்துக் கொள்ள லாம். அறை வெப்பம் 15-லிருந்து 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைவரை இருக்க வேண்டும்.

நீண்ட நாட்களுக்கு என்றால், குளிர்பதனப் பெட்டியில் கதவின் உட்பக்கத்தில் வைத்துக் கொள்ளலாம்.

இன்சுலின் மருந்து, இன்சுலின் பேனா, கார்ட் ரிஜ்களை ஃபிரீசரில் வைத்துவிடக் கூடாது.

இன்சுலின் உறைந்துவிட்டால், குழம்பியிருந்தால் அல்லது நிறம் மாறி இருந்தால் பயன்படுத்தக் கூடாது.

குளிர்பதனப் பெட்டி இல்லாதவர்கள், ஒரு சிறிய பிளாஸ்டிக் வாளியில் முக்கால் பங்குக்குத் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். அதன் நடுவில் அடிப்பாகம் தட்டையாக உள்ள சிறிய மண் கலசத்தை வையுங்கள். அந்த மண்கலசத்துக்குள் இன்சுலின் ஊசி மருந்தை வைத்துவிடுங்கள். இதை ஒரு மூடியால் மூடி, வீட்டில் வெப்பம் படாத இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது குட்டி ஃபிரிட்ஜ் தயார். இன்சுலின் மருந்துக்குக் குளிர்பதனப் பெட்டி தருகிற அத் தனை பலன்களையும் இதனால் பெற முடியும்.

குளிர்பதனப் பெட்டியிலிருந்து மருந்தை வெளியில் எடுத்ததும் போட்டுவிடக்கூடாது. அது அறை வெப்பத்துக்கு வரும்வரை சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். அல்லது இன் சுலின் பாட்டிலை உள்ளங்கைகளுக்கு நடுவில் வைத்துக்கொண்டு உருட்ட வேண்டும். இப்படிச் செய்தால் விரைவில் அறை வெப்பத்துக்கு மருந்து வந்துவிடும். அதற்குப் பிறகு அதைப் பயன்படுத்தலாம்.

அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்கள், பிளாஸ்டிக் பையில் அய்ஸ் கட்டிகளை வைத்துக் கட்டிக்கொள்ளுங்கள். இப்படி இரண்டு அய்ஸ் கட்டிப் பைகளுக்கு நடுவில் இன்சுலின் மருந்து பாட்டில் அல்லது இன்சுலின் பேனாவை வைத்துக்கொள்ளலாம்.

இப்போது இதற்கெனத் தனி அய்ஸ் பை கிடைக் கிறது. அதையும் பயன்படுத்தலாம்.

இன்சுலின் மருந்தையும் இன்சுலின் பேனாவை யும் வீட்டில் அல்லது அலுவலகத்தில் அதிக வெப்பமுள்ள இடங்களில் வைக்கக் கூடாது; வெயில் படும் இடங்களிலும் வைக்கக் கூடாது; சமையலறையில் வைக்கக் கூடாது; தொலைக் காட்சிப் பெட்டியின் மேல் வைக்கக் கூடாது. வெப்பமூட்டி பயன்படுத்தும் அறையில் வைக்கக் கூடாது.   குளிர்சாதனப் பெட்டிக்கு அருகிலும் வைக்கக் கூடாது. வெயில் நேரடியாக வரும் வாய்ப் புள்ள ஜன்னலுக்கு அருகில் வைக்கக் கூடாது.

காரில் பயணம் செய்பவர்கள், நிறுத்தப்பட்ட காரில் இதை வைத்துவிட்டுச் செல்லக் கூடாது. ரேடியேட்டர் உள்ள இடங்களிலும் வைக்கக் கூடாது.

தற்போது வரும் நவீன கார்களில் ஏ.சி. உள்ள டேஷ் போர்டு இருக்கிறது. இதில் இன்சுலின் பாட்டிலை வைத்துக்கொள்ளலாம்.

விமானத்தில் பயணம் செய்பவர்கள் இன்சுலின் மருந்தை கார்கோவில் வைக்கக் கூடாது.

பயன்படுத்தத் தொடங்கிய இன்சுலின் ஊசி மருந்தை, அது குளிர்பதனப் பெட்டியில் வைத் துப் பாதுகாக்கப்படுகிறது என்றாலும், அதிக பட்சம் ஒரு மாதம் மட்டுமே பயன்படுத்த வேண் டும். அதற்கு மேல் பாட்டிலில் மருந்து மிச்சம் இருந்தாலும், அதன் செயல்திறன் குறைந்து விடும். ஆகவே, அதைப் பயன்படுத்த வேண்டாம்.

பயன்படுத்தாத, சீல் உடைக்கப்படாத இன்சுலின் மருந்தைக் குளிர்பதனப் பெட்டியில் வைத்து, அதன் காலாவதி தேதிவரை பாதுகாக்க முடியும்.

-விடுதலை,13.3.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக