நம் உடல் செல்களால் ஆனது. இரண்டு செல்கள் இணைந்து இணையாக இருக்கும். ஒரு இணையில் எட்டு எலெக்ட்ரான்கள் இருக்கும். செல்களுக்குள் நடக்கும் செயல்பாட்டில், ஒரு எலெக்ட்ரானை இழந்துவிடுகிறது. இதனால், அந்தச் செல் தனித்துவிடப்படும். இதை ஆக்ஸிடன்ட் என்கிறோம். ஒரு எலெக்ட்ரானை இழந்த நிலையில், அருகில் இருக்கும் ஜோடியிடம் இருந்து எலெக்ட்ரானைக் கவர முயற்சிக்கும். வைட்டமின் சி போன்ற நுண்ணூட்டச் சத்துகள் தன்னிடம் இருந்து ஒரு எலெக்ட்ரானை அந்தச் செல்லுக்குக் கொடுத்து, ஈடுகட்டும். இவ்வாறு பாதிப்பைச் ஈடு செய்யும் நுண்ணூட்டச் சத்துகளைத்தான் ஆன்டி ஆக்ஸிடன்ட் என்கிறோம்.
ஆக்ஸிடன்ட்கள் உருவாவதைத் தடுக்க முடியாது. ஏனெனில், நாம் சுவாசிப்பதாலும், உடலில் நிகழும் வளர்சிதை மாற்றத்தினாலும், நமது நோய் எதிர்ப்புச் சக்தியின் செயல்பாட்டினாலும் இயல்பாகவே ஆக்ஸிடன்ட்கள் உருவாவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், அதை ஈடுசெய்ய முடியும். அவ்வாறு ஈடு செய்யாவிட்டால், இளமையில் முதுமை முதல் புற்றுநோய் வரை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளவை: பீட்டாகரோட்டின், லைக்கோபீன், வைட்டமின் ‘ஏ, சி, இ’ இவற்றுடன் துத்தநாகம், செலினியம் போன்ற தாது உப்புகளில் ஆன்டிஆக்ஸிடன்கள் அதிகமாக உள்ளன.
பீட்டாகரோட்டின் உள்ள பொருள்கள்:
புரோக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், கேரட், மக்காச்சோளம், மக்காச்சோளம், மாம்பழம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கீரை, பீச், தக்காளி போன்றவற்றில் இது நிறைந்துள்ளது.
வைட்டமின் ‘இ’ உள்ள பொருள்கள்:
பப்பாளி, பூசணிக்காய், சூரியகாந்தி விதை, பசலைக்கீரை, அவகேடோ போன்றவற்றில் வைட்டமின் இ உள்ளது.
வைட்டமின் ‘சி’ உள்ள பொருள்கள்:
ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, கமலா, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள், புரோக்கோலி, நெல்லிக்காய் போன்றவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
துத்தநாகம், செலினியம் உள்ள பொருள்கள்:
பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட், வாதுமை போன்ற நட்ஸ்களில் துத்தநாகம், செலினியம் நிறைந்துள்ளன.
பூண்டு, வெங்காயம், இஞ்சி, சுக்கு, மிளகு, சீரகம், லவங்கம், பட்டை, சோம்பு, கிராம்பு, ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய், கிரீன் டீ, சிறுதானியங்கள், திராட்சை, மாதுளை, அன்னாசி போன்றவற்றிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
-உண்மை இதழ்,16-31.3.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக