செவ்வாய், 12 ஜூன், 2018

உடல் எடை; ஆய்வில் புதியத் தகவல்கள் வெளியீடு



சமீபத்தில் பார்சிலோனாவில் செயல்பட்டு வரும் அய்ரோப்பியன் சொஸைட்டி ஆஃப் என்டோகிரைனாலஜி மேற்கொண்ட ஒரு ஆய்வின் மூலம் அனைத்துப் பொருட்களிலும் தேங்கி இருக்கக் கூடிய உடல் எடையைக் கூட்டத்தக்க ஒபிஸொ ஜென்கள் மனித உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் செயல்பாடுகளில் தலையிட்டு உடலில் கொழுப்பு தேங்கும் படியான நிலையை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.. இந்த மகத்தான உண்மையை போர்ச்சுகலில் இருக்கும் அவியோரா மற்றும் பெய்ரா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் தங்களது தொடர் ஆராய்ச்சி மற்றும் ஆய்வின் முடிவாகக் கண்டறிந்து வெளியிட்டுள்ளனர்.

நமது உணவுப்பழக்கம், வீட்டில் தேங்கும் தூசு தும்புகள், வீட்டைச் சுத்தப்படுத்த நாம் நாள்தோறும் பயன்படுத்தும் ரசாயனப் பொருட்கள், சமயலறையில் பயன்படுத்தும் உபகரணங்கள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட அத்தனையிலுமே இந்த ஒபிஸோஜென்களின் தாக்கம் இருக்கிறதாம். இவற்றால் தான் மனிதர்கள் விரைவில் ஒபி ஸிட்டிக்கு அடிமையாகிறார்கள் எனக் கண்டறியப் பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவக் குழுவினர்,  மனித உடலில் ஒபிசோஜென்களின் வளர்ச்சியைத் தவிர்க்க 7 விதமான வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறார்கள்.

அவற்றில் முதலாவது, இப்படி விரைவில் அசுத்த மடையக் கூடியனவும், உடல் எடையைக் கூட்டத்தக்க ஒபிஸோஜென்களை மனித உடலில் ஊடுருவ அனு மதிப்பதுமான பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை புறக்கணித்து விட்டு  இனிமேல் சுத்தமான, ஃப்ரெஷ் ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து உண்ணும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது கூட ஒபிஸோஜென்களைத் தவிர்ப்பதற்கான ஒருவழிமுறை தான் என்கிறார்கள்.

இரண்டாவதாக வெளியில் இருந்து வீட்டுக்குள் நுழையும் போது நமது கால்களில் அணிந்திருக்கும் ஷூக்கள் மற்றும் செருப்புகளை சினிமாக்களிலும், மெகா சீரியல்களிலும் காட்டுவதைப் போல வீட்டின் உட்புறம் வரை அணிந்து கொண்டு இருக்காமல் முறையாக வீட்டு முகப்பில் அதற்குரிய இடங்களில் கழற்றி வைத்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தாலும் போதும் அனாவசியமாக ஷூக்கள் மற்றும் செருப்புகளின் வாயிலாக வீட்டுக்குள் நுழையவிருக்கும் அசுத்தங்களை நம்மால் தவிர்த்து விடமுடியும் என்கிறார்கள்.

அதுமட்டுமல்ல மூன்றாவதாக அவர்கள் அளிக்கும் டிப்ஸ்... அது வீடாக இருக்கட்டும் அல்லது அலுவலகமாக இருக்கட்டும் எங்கே என்றாலும் சரி மனிதர்கள் புழங்கக் கூடிய இடங்கள் அனைத்தும் அடிக்கடி சுத்தப்படுத்தப் பட வேண்டும். அது வாக்குவம் கிளீனராலோ அல்லது மனிதக் கரங்களாலோ இருக்கலாம். ஆனால் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்கிறார்கள். மரத்தரை என்றால் அவற்றின் மீது போடப்பட்டுள்ள கார்பெட்டுகளை குறிப்பிட்ட இடைவெளியில் வாரம் ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும் என்கிறது இந்த ஆய்வு முடிவு.

அதோடு, வீட்டில் பருப்பு வகைகள், மளிகைச் சாமான்களை நிரப்பி வைக்க பிளாஸ்டிக் கண்டெயினர்களைத் தவிர்த்து விட்டு அலுமினியம் அல்லது கண்ணாடி ஜார்களைப் பயன்படுத்தத் தொடங்கலாம். இதன்மூலம் மளிகைப் பொருட்களை நிரப்பி வைக்க சிந்தெட்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய ரசாயனத் தொற்றையும் நம்மால் தவிர்த்து விட முடியும் என்கின்றனர் இந்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுவினர்.

ஆராய்ச்சிக் குழுவின் தலைமை மருத்துவர் ஆனா காத்தரீனா சவுசா இது குறித்து விளக்கமளிக்கையில்,  ஒபிஸோஜென் ஃப்ரீ லைஃப்ஸ்டைலைக் கட்டமைப்பதில் இது ஒரு துவக்க முயற்சி தான். ஆனாலும் இதையொரு நல்ல தொடக்கமென்றே சொல்ல வேண்டும் என்கிறார்.

அதற்கான முதல்படியாக தினந்தோறும் நமது உணவுப் பழக்கம் மற்றும் வீட்டுச் சுத்தம் இரண்டிலும் முக்கியமாகக் கவனம் செலுத்துவோம் என ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும். வயது வந்தோர் நாளொன்றுக்கு 50 மில்லிகிராம் தூசுகளை உட்கொள்கிறார்கள்... சிறுவர்கள் மற்றும் குழந்தைகளைப் பற்றிச் சொல்வதென்றால் அவர்களை பெரியவர்களோடு ஒப்பிடும் போது மேலும் இரு மடங்கு தூசுகளை உட்கொள்கிறார்கள். எனவே வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வதென்பதை நமது முதல் கடமையாகக் கருத வேண்டும். அதோடு வீட்டின் ஃபர்னிச்சர்களைத் துடைக்க எப்போதும் ரசாயன திரவங் களைப் பயன்படுத்து வதைக் காட்டிலும் பெரும்பாலும் ஈரத்துணிகளை மாத்திரமே பயன்படுத்தப் பழகுங்கள். ஏனெனில் ரசாய னங்கள் கலந்த சுத்தப்படுத்தும் திரவங்கள் ஒபிசோ ஜென்களை தூண்டிப் பெருகச் செய்யும் காரணிகளில் ஒன்று என்பதை எப்போதும் மறந்து விட வேண்டாம்.

பிரிட்டனின் ஒபிசிட்டி விகிதாச்சாரம் கடந்த இருப தாண்டுகளில் இரு மடங்காகப் பெருகியிருக்கிறது.. அங்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வொன்றில் வயது வந் தோரில் 63% பேர் அதிக எடை கொண்டவர்களாகவே கணிக்கப்பட்டுள்ளனர். இந்த விகிதாச்சாரம் 2025இல் மும்மடங்காகவும் வாய்ப்பிருப்பதாகத் தகவல்.

முந்தைய ஆய்வுகளில் கண்டறிந்து தெரிவிக்கப் பட்டுள்ளபடி ஹார்மோன் செயல்பாடுகளைத் தூண்டக் கூடிய இந்த ஒபிசோஜென்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட சிந்தெடிக் பொருட்கள்,  தீயணைப் பான்கள், கொசு மற்றும் பூச்சித் தடுப்பான்கள், சமைய லறைப் பாத்திரங்கள் மற்றும் துணிகள், செயற்கை இனிப்பூட்டிகள் என எல்லாவிதமான வீட்டு உபயோகப் பொருட்களிலும் இருக்கின்றன. நாம் தான் அத்தகைய பொருட்களை அடையாளம் கண்டு தவிர்க்க வேண்டும்.

இந்த ஒபிசோஜென்களின் பாதிப்பு அதிகரிக்கும் முன் அவற்றைத் தவிர்க்கும் படியான ஆரோக்கியமான லைஃப்ஸ்டைல் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளவேண்டியது மனிதர்களான நமது கடமை என்கிறார்கள் பிரிட்டிஷ் ஆய்வாளர்கள்.

50 வயதை கடந்தவர்களின் கவனத்துக்கு!

சிலருக்கு  ஞாபக மறதி என்பது 58 வயதிற்குப் பிறகு சகஜமான ஒன்றுதான். இது பரம்பரையாக வரக் கூடும்.  அதாவது சிறிய அளவில் ஏற்படும் ஞாபக மறதி என்று மருத்துவம் கூறுகிறது.

ஆனால் இது பின்னாளில் இது மன உளைச்சல், அல்லது, நரம்பியல் பிரச்சினைகள் அல்லது அல் ஜெமர் எனப்படும் ஞாபக மறதி பிரச்சினையில் கொண்டு விடலாம். வேலை ஸ்டெரெஸ், குழந்தை களின் படிப்பு, எதிர்காலம் பற்றிய கவலை, இதனால் ஏற்படுகின்ற மன உளைச்சல், ஆகியவற்றால் இத்த கைய ஞாபக மறதி ஏற்படலாம்.

ஞாபக மறதி அதிகரிக்க பயம் ஏற்பட்டு, அதனால் பதற்றம் அடைவார்கள். பதற்ற நிலையில் இருந்தால் நிச்சயம் நினைவுத் திறன் குறையும். இது ஒரு விஷ வட்டம் போலத் தான். எனவே மறதியைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம், தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் எளிதாக இதை எதிர்க்கொள்ள முடியும்.

- விடுதலை நாளேடு,11.6.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக