மருத்துவ உலகு

மருத்துவம் குறித்த பொதுவான கருத்துகள் மற்றும் குறிப்புகள் இடம் பெறும்

பக்கங்கள்

  • முகப்பு
  • அறிவியல் அறிவோம்
  • தமிழ் மருத்துவம்
  • மூலிகை உலகு
  • மூலிகை மன்னன்
  • வேளாண்மை(மருதம்) அறிவோம்
  • வெற்றிவலவன் பதிவுகள்

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

மனிதருக்கு பொருத்தப்பட்ட பன்றி இதயம்!

 

மருத்துவம் : மனிதருக்கு பொருத்தப்பட்ட பன்றி இதயம்!

பிப்ரவரி 1-15,2022
  January 28, 2022உண்மை

இன்றைய நவீன அறிவியல் உலகம் பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. மக்களின் மூடநம்பிக்கையை அகற்றி, மனிதர்களிடம் பகுத்தறிவுப் பாதையை வெளிச்சமிட்டுக் காட்டி வருகிறது. மனித மூளை புராணங்களில் கட்டுண்டிருந்த நிலையில், நவீன மருத்துவ அறிவியல் குருதிக் கொடை வழங்குவதற்கே தயங்கிய மனிதர்-களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தின. விழிக்கொடை, உறுப்புக் கொடை, உடல் கொடை எனப் படிப்படியாக வளர்ச்சியைக் கண்டது.

மருத்துவ அறிவியலில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் ஹிதேந்திரனின் இதயம் விமானத்தில் கொண்டு வரப்பட்டு சிறுமி அபிராமிக்குப் பொருத்தப்பட்டதைத் தமிழ்நாடு ஜாதி, மதம் கடந்து கொண்டாடியது. அந்த வகையில் அமெரிக்கா உறுப்பு மாற்று சிகிச்சையில் புதிய சாதனையைப் படைத்து உலகுக்கு வழிகாட்டியுள்ளது.

அமெரிக்காவின் மேரிலாந்தைச் சேர்ந்த

57 வயதான டேவிட் பென்னட் என்பவர் இதயம் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

வேறு இதயத்தைப் பொருத்தாவிட்டால் மரணம் நிச்சயம் என்கிற நிலையில் அவர் இருந்தார்.

இந்நிலையில் பன்றியின் இதயத்தை அவருக்குப் பொருத்த மேரிலாந்து மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக அமெரிக்க சுகாதாரத் துறையின் ஒப்புதலையும் அவர்கள் பெற்றனர். இதையடுத்து மனிதர்களின் உடலுக்குப் பொருந்தும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் டேவிட் பென்னட்டுக்குப் பொருத்தப்-பட்டது. இதய மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் பென்னட் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்களின் உடல் உறுப்புகளும் பன்றிகளின் உடல் உறுப்புகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக உள்ளன. இதனால் பன்றியின் இதயம் ஏற்கெனவே மனிதர்களுக்குப் பொருத்தப்பட்டுள்ளது.

ஆனால், அந்த இதயங்கள் மனித உடலுக்கு முழுமையும் பொருந்தாததால் அறுவை சிகிச்சைகளில் வெற்றி கிடைக்கவில்லை.

எனவே, மனிதர்களின் உடலுக்குப் பொருந்தும் வகையில் பன்றியின் இதயத்தில் மரபணு ரீதியிலான மாற்றங்கள் செய்யப்பட்டு உலகிலேயே முதன்முறையாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தற்போது செய்யப்-பட்டுள்ளது.

இதில் நம்பிக்கை தரும் முடிவு கிடைத்துள்ளதால் சிறுநீரகம் போன்ற பன்றியின் மற்ற உடலுறுப்புகளையும் மரபணு மாற்றம் செய்து மனிதர்களின் உடலில் பொருத்தும் சூழல் ஏற்படும். உலகெங்கும் உடல் உறுப்புகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான நோயாளிகளுக்கு இது மிகப் பெரும் தீர்வாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பன்றி என்னும் சொல்லை இழிவழக்காகப் பயன்படுத்துவது மனிதர்களின் வழக்கம். ஆனால், அந்தப் பன்றிகள்தாம் தங்கள் உயிரைத் தியாகம் செய்து மனிதர்களைக் காப்பாற்றப் போகின்றன. மருத்துவ உலகில் மற்றொரு புதிய தொடக்கமாக இச்சாதனை பார்க்கப்படுகிறது.

– ச.குமார்

இடுகையிட்டது parthasarathy r நேரம் 5:05 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: பன்றி

மிகு இரத்த அழுத்தம் (HYPER TENSION) - நவீன மருத்துவங்கள் (95)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (95)

பிப்ரவரி 16-28,2022
  February 21, 2022உண்மை

மிகு இரத்த அழுத்தம்

(HYPER TENSION)

மரு.இரா.கவுதமன்

 

நோய்க் காரணிகள்:

முதன்மை மிகு இரத்த அழுத்தம்:

மரபணு இந்நோய்க்கு ஒரு காரணியாக அறியப்பட்டுள்ளது. மரபணு ஆய்வில் 35 வகை மரபணுக்கள் மிகு இரத்த அழுத்தத்திற்குக் காரணியாக அறியப்பட்டுள்ளன.

வயது மூப்பின் காரணமாக மிகு இரத்த அழுத்தம் ஏற்படலாம். மேற்கத்திய உணவு வகைகள் (Western Diet), வாழ்க்கை முறைகள் நாளடைவில், மிகு இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

அதிக பருமன் உடையவர்களுக்கு மிகு இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

உடற் பயிற்சிகள் இல்லாத சோம்பல் வாழ்க்கை (Sedentary Life) மிகு இரத்த அழுத்தம் ஏற்பட ஒரு காரணியாக அமையும்.  “காஃபின்’’ (Caffeine) பயன்பாடு (Caffine consumption), வைட்டமின் டி குறைபாடு (Vitamin D Deficiency), இன்சுலின் எதிர்ப்பு நிலை (Insulin Resistance)    ஆகியவை உடல் பருமனை அதிகமாக்கும். அது மிகு இரத்த அழுத்தம் உண்டாக்கும்.

வளர்சிதை மாற்ற நோய் கூட்டறிகுறிகள் (Metabolic Syndrome) கூட முதன்மை மிகு இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.

இரண்டாம் நிலை மிகு இரத்த அழுத்தம்:

இரண்டாம் நிலை மிகு இரத்த அழுத்தம், உடலில் வேறு நோய்களின் விளைவாக ஏற்படும்.

சிறுநீரக நோய்கள் மிகு இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்கக் குறைபாடு இந்நோய்க்கு ஒரு முக்கிய காரணியாக அமையும்.

சிறுநீரகத் தமனிகள் குறுகல் மிகு இரத்த அழுத்தத்தை உண்டாக்கும். பருமன் உடல் உள்ளவர்களுக்கு இந்நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். உறக்கத்தில் மூச்சுத் திணறல் (Sleep Apnea).

மகளிர்க்கு மகப்பேறு காலத்தில் இந்நோய் உண்டாகலாம்.

மகா தமனியில் சுருக்கம் (Coarctation of Aorta) மிகு இரத்த அழுத்தம் உண்டாக்கும்.

மதுப் பழக்கம், புகைப் பிடித்தல் தொடர்ச்சியாகவும், நீண்ட நாள்கள் நீடித்தலும் இந்நோயை ஏற்படுத்தும்.

சில வகை மருந்துகள் (Certain Medicines),

நாட்டு மருந்துகள் (Herbal remedies),

‘கொக்கைன்’ (Cocaine) போன்ற போதை மருந்துகள்,

‘ஆர்சனிக்’ (Arsenic) புழக்கம் போன்றவை இரத்த அழுத்தத்தைக் கூட்டிவிடும்.

தனிமையும்கூட சிலருக்கு இந்நோயை ஏற்படுத்தக் கூடும். மன அழுத்தம் (Stress) பலருக்கு மிகு இரத்த அழுத்தத்தை எற்படுத்தும்.

நோய்க் கூறியல் (Pathology):

மிகு இரத்த அழுத்தம் இதயத்தில் இருந்து வெளியேறும் இரத்தத்தின் அளவு இயல்பான நிலையில் இருக்கும். இரத்தக் குழாயில் இரத்தத்தின் அளவு அதே அளவு இருக்கும். ஆனால், இரத்தக் குழாய் சுருக்கத்தால் இரத்த அழுத்தம் அதிகமாகும் (Total Peripheral Resistance). சில நோயாளிகளின், இதய இரத்த வெளியேற்றம் அதிகமாகவும், இரத்தக் குழாய் அழுத்தம் இயல்பாகவும் இருக்கும். பெரும்-பாலும் இந்நிலை மிகு இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு முன்னிலை (Pre hypertension) யாக இருக்கும். இவர்கள் வயது மூப்பாகும்பொழுது மிகு இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவர். அந்த நிலையில் இதய இரத்த வெளியேற்றம் (Cardiac Output) இயல்பானதாகவும், இரத்தக் குழாய் அழுத்தம் மிகுந்தும் மாறிவிடும். இதுவே இவர்களுக்கு மிகு இரத்த அழுத்தம் ஏற்படக் காரணமாகும். இரத்தக் குழாய் அழுத்தம், தந்துகிகளின் (Capillaries) சுவர்கள் குறுகலால்தான் அடிப்படையில் ஏற்படுகிறது. நாளடைவில் சிறு தமனிகள் குறுகலாகிவிடும்.

தந்துகிகள் அடர்த்தி குறைபாட்டால் கூட மிகு இரத்த அழுத்தம் ஏற்படும். பொதுவாக தந்துகிகள், தமனிகள் இவற்றின் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் (Narrowing) மிகு இரத்த அழுத்தம் ஏற்படுத்தும். மிகு இரத்த அழுத்தம் சிரைகளின் தந்துகிகளில் தேக்கம் (Peripheral Venous Compliance), இதயத்தில் இரத்தம் தேங்கத் துவங்கும். இது இதய விரிவாக்க செயல்-பாட்டைப் (Diastalic Dysfunction) பாதிக்கும். முதியவர்களுக்கு நாடி அழுத்தம் (Pulse Pressure) மிகு இரத்த அழுத்தம் உள்ள நிலையில் உண்டாகும். இவர்களுக்கு இதய சுருக்கழுத்தம் (Systolic) மிகவும் அதிகமாகவும், இதய விரிவழுத்தம் (Diastolic) இயல்பு நிலையிலோ அல்லது குறைவாகவோ இருக்கும். இது “மிகு சுருக்கத்தழுத்தம்’’ (Systolic Hypertension) என்று அழைக்கப்படுகிறது. முதியவர்களுக்கு இரத்தக் குழாய்கள் கெட்டிப்பட்டு (Vascular Stiffness), சுருங்கி, விரியும் தன்மை குறைந்துவிடும். இதன் விளைவாகவே நாடி அழுத்தமும், மிகு சுருக்கழுத்தமும் ஏற்படும். சிறுநீரக நோய் மிகு இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். சிறுநீரகங்கள் உப்பையும், நீர் அளவுகளையும் சீராக வைத்துக் கொள்ளும். சிறுநீரக நோய்கள் இந்த நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். ரெனின் ஊக்கி நீர், சுரப்பு அதிகரிக்கும் நிலை, சிறுநீரகங்களில் நோய் ஏற்படுத்தும். இதனால் இரத்தக் குழாய்களில் அழுத்தம் அதிகமாகும் (Renin-Angiotension System). இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். தானியங்கி உணர்ச்சி நரம்பு மண்டலத்தில் (Autonomous nervous system – Sympathetic nervous system) ஏற்படும் குறைபாடுகள் மிகு இரத்த அழுத்தம் ஏற்பட ஒரு காரணமாக அமையும். இரத்தக் குழாய்களில் ஏற்படும் அழற்சி (Inflammation of vessels) மிகு இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

அதிக அளவு சோடியம், பொட்டாசியம் உடலில் சேர்வதால், மிகு இரத்த அழுத்தம் ஏற்படும். அடிப்படையில் இரத்தக் குழாய் நோய்கள், சிறுநீரக நோய்கள், பருத்த உடல், இதய நோய்கள் போன்றவையும், உணவுப் பழக்கங்களும், உடற்பயிற்சியற்ற சோம்பல் வாழ்க்கை முறையும் இரண்டாம் நிலை மிகு இரத்த அழுத்தம் ஏற்பட காரணிகளாக அமைகின்றன.

(தொடரும்…)

இடுகையிட்டது parthasarathy r நேரம் 4:29 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: இரத்த அழுத்தம்

மிகு இரத்த அழுத்தம் (HYPER TENSION) - நவீன மருத்துவங்கள் (94)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (94)

பிப்ரவரி 1-15,2022
  January 28, 2022உண்மை

மிகு இரத்த அழுத்தம்

(HYPER TENSION)

மரு.இரா.கவுதமன்

இரத்த அழுத்தம்  (Blood Pressure) நம் உடல் இயக்கத்திற்குத் தேவையான ஓர் அடிப்படைச் செயல்பாடு ஆகும். தூய்மைப்படுத்தப்பட்ட இரத்தம் தமனிகள் (Arteries), தந்துகிகள் மூலம் உடலில் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லவும், செலுத்தப்படுவதற்கும், இரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தமே காரணம். இதயத்திலிருந்து, இரத்தம் இந்த அழுத்தத்தின் மூலமே மூளைக்குச் செலுத்தப்படுகிறது. இரத்த அழுத்தம் இல்லாவிடில் மூளைக்குச் செல்லும் இரத்தம் தடைப்பட்டு, மூளையின் செயல்பாட்டை நிறுத்திவிடும். உடல் இயக்கம் நின்று விடும். மரணம் நிகழும்.

‘B.P.’  என்று பொதுவாக நம்மால் சொல்லப்படும் சொல்தான் ‘இரத்த அழுத்தம்’ என்ற செயல்பாடு. இயல்பு நிலையில் நம் உடலில் இரத்த அழுத்தம் 120/80 மி.மீ என்ற அளவில் இருக்கும். இதயம் சுருங்கி, விரியும் நிலையில், இரத்தக் குழாய்களில் ஏற்படும் அழுத்தத்தின் அளவீடே இது. இதயம் சுருங்கும்பொழுது (Systolic) அதிக வேகத்தோடு இரத்தக் குழாய்க்குள், இரத்தம் செலுத்தும்-பொழுது அழுத்தம் அதிகளவில் இருக்கும். அதுவே 120 மி.மீ அளவு! இதயம் விரியும்பொழுது (Diastolic), இரத்தக் குழாய்க்குள் அழுத்தம் குறைவாக இருக்கும். அதுவே 80 மி.மீ என்ற அளவில் இருக்கும். நாம் வேகமாகச் செயல்படும்பொழுது, எடுத்துக்காட்டாக, ஓடும்பொழுது, படி ஏறும்பொழுது, கடின உழைப்பின்பொழுது, உடற்பயிற்சியின்போது இதயம் வேகமாகச் செயல்படும். அப்பொழுது “சுருக்க அழுத்தம்’’ (Systolic Pressure) அதிகமாகிவிடும். ஆனால், உடல் இயல்பு நிலைக்குத் திரும்பியதும், இரத்த அழுத்தமும் இயல்பாகி விடும். “விரிவு அழுத்தம்’’ (Diastolic Pressure) இந்த நிலைகளில் மாற்றமடையாமல் சீரான அளவில் (80 மி.மீ) இருக்கும். விரிவு அழுத்தம் (இதயம் விரியும் நிலையில்) பெரும்பாலும் மாற்றமடையாமல் சீராக இருக்கும். விரிவு அழுத்தம் குறைவு ஏற்படாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விரிவு அழுத்தக் குறைவினால் உடலின் கடைசிப் பகுதிக்கு இரத்தம் செல்லுவதில் குறைபாடு ஏற்படும் நிலை உண்டாகும்.

பொதுவாக இரத்த அழுத்தம் சீரான நிலையில் இருப்பதும் நம் உடல் சீராக இருப்பதற்கான ஓர் அறிகுறி! இரத்த அழுத்த மாறுபாடு இரண்டு வகைப்படும். இரத்த அழுத்தம் இயல்பான நிலையான 120/80 மி.மீ இருந்து அதிகமாக இருந்தால் அதை “மிகு இரத்த அழுத்தம்’’ (Hypertension) என்று கூறப்படுகிறது. (பொதுவாக “ஙி.றி. இருக்கிறது’’ என்று பாதிக்கப்பட்டவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். மிகு இரத்த அழுத்தத்தையே அப்படி நோயாளிகள் குறிப்பிடுகின்றனர். இரத்த அழுத்தம் குறைவை “குறை இரத்த அழுத்தம்’’ (Hypotension) என்று குறிப்பிடப்படும். இரத்த அழுத்தம் சீராக வைத்துக் கொள்ளுதல் மிகவும் தேவையான ஒன்று. இதைச் சீராக வைத்துக் கொள்ளா-விட்டால், பல தொல்லைகளுக்கு நாளடைவில் வழிவகுக்கும்.

மிகு இரத்த அழுத்தம் (Hypertension)

மிகு இரத்த அழுத்தம், இயல்பான அளவான 120/80 மி.மீ.யை விட அதிகம் இருக்கும் நிலையாகும். மிகு இரத்த அழுத்தம் ஒரு நீண்ட காலம் இருக்கும் நோயாகும். இரத்தக் குழாய்களில் (தமனிகளில்) அழுத்தம் அதிகமாகும் பொழுது மிகு இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. மிகு இரத்த அழுத்தம் எந்தவித அறிகுறிகளும் வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கும். அதனால் நோயாளிகள் அதை உணராமலேயே இருக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும். ஆனால், நீண்ட நாள்கள் இருக்கும் மிகு இரத்த அழுத்தம், திடீரென ஆபத்தை உண்டாக்கும். பக்கவாதம், மாரடைப்பு போன்றவற்றை உண்டாக்கக் கூடியது மிகு இரத்த அழுத்தம் ஆகும். எந்தவித அறிகுறிகளும் வெளிப்படுத்தாமல், திடீரென உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியதாக மிகு இரத்த அழுத்தம் இருப்பதால் இதனை ‘அமைதியான கொலைகாரன்’’ (Silent Killer) என்று முன்பு குறிப்பிடுவர்.

நீண்ட நாள்களாக இருக்கும் மிகு இரத்த அழுத்தம் உயிருக்கு ஆபத்தான மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை ஏற்படுத்துவதோடு மேலும் பல சிக்கல்களையும் ஏற்படுத்தும். இதயச் செயலிழப்பு (Heart Failure), இதய மேலறை நடுக்கம் (Arterial Fibrillation), இரத்தக் குழாய் நோய்கள் (Arterial diseases), பார்வை இழப்பு (Vision loss), சிறு நீரகச் செயலிழப்பு (Kidney Failure) போன்ற ஆபத்துகளும் மிகு இரத்த அழுத்தத்தால் ஏற்படும். மிகு இரத்த அழுத்தம் “முதன்மை மிகு இரத்த அழுத்தம்’’ (Primary (essential) Hypertension) என்றும் “இரண்டாம் நிலை மிகு இரத்த அழுத்தம்’’ (Seconday Hypertension) என்றும் இரு வகைப்படும். முதன்மை மிகுஇரத்த அழுத்தம்தான் அதிகளவில் நோயாளிகளிடம் (90%) காணப்படும். வாழ்க்கை முறை (Life Style), மரபியல் (Genetic) காரணங்களால் முதன்மை மிகு இரத்த அழுத்தம் ஏற்படக் கூடும்.

வாழ்வியல் முறைகள் என்பது அதிக உப்புள்ள உணவுகளை உண்ணுதல், அதிக எடை, புகைப்பிடித்தல், மதுப் பழக்கம் போன்றவை மிகு இரத்த அழுத்தத்தை உண்டாக்கும். மீதியுள்ள 5 முதல் 10 சதவிகித நோயாளிகள் இரண்டாம் நிலை மிகு இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். சிறுநீரகச் செயலிழப்பு, சிறுநீரகத் தமனிகளில் குறுகல் (Narrowing of renal arteries) ஊக்கி நீர்க் குறைபாடுகள் (Hormone imbalance),  கருத்தடை மாத்திரைகள் நீண்ட நாள்கள் பயன்படுத்துதல், இரத்தத் தமனிகள் குறுகல் (Narrowing of arteries) போன்றவை இரண்டாம் நிலை மிகு இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

முதன்மை மிகு இரத்த அழுத்தத்தைவிட இரண்டாம் நிலை மிகு இரத்த அழுத்தம் ஆபத்தானது. நீண்ட நாள் நோயாகவும் இது இருக்காது. நோய்க்குக் காரணமான மற்ற நோயின் அறிகுறியும் இணைந்தே தெரியும்.

முதன்மை மிகு இரத்த அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றங்களால் சீராக்க முடியாவிட்டால், மருந்துகள் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய நிலை ஏற்படும். மருந்துகள் 90% நோயாளிகளின் இரத்த அழுத்தத்தை முழுமையாகக் கட்டுப்-படுத்திவிடும். உலகில் மிகுஇரத்த அழுத்தத்தால் 16% முதல் 37% பேர்கள் பாதிக்கப்படுவதாகவும், 18% இறப்புகள் மருத்துவம் செய்து கொள்ளப்படாத மிகு இரத்த அழுத்த நோயால் ஏற்படுவதாகவும் ஒரு மருத்துவக் குறிப்பு கூறுகிறது.

(தொடரும்…)

இடுகையிட்டது parthasarathy r நேரம் 3:21 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: இரத்த அழுத்தம்

வெள்ளி, 7 ஏப்ரல், 2023

சிறுநீரகச் செயலிழப்பு (Kidney Failure) - நவீன மருத்துவங்கள் (93)

 

விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (93)

ஜனவரி 16-31,2022
  January 19, 2022உண்மைLeave A CommentOn மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (93)

சிறுநீரகச் செயலிழப்பு

(Kidney Failure)

மரு.இரா.கவுதமன்

சிறுநீர் நச்சுப் பிரிப்பு (Dialysis): சிறுநீரகம் முழுமையாகச் செயலிழந்த நிலையில், மருத்துவர்கள் “சிறுநீர் நச்சுப் பிரிப்பு’’ (Dialysis) மருத்துவம் செய்வர். சிறுநீரகச் செயலிழப்பால் நச்சுப் பொருள்கள் உடலில் கலப்பதோடு அல்லாமல் பல இணை நோய்களையும் உண்டாக்கும். அந்த நச்சுப் பொருள்கள் உடலில் கலக்காமல் இருக்கவே இம்மருத்துவ முறை மேற்கொள்ளப்படுகிறது. நோயின் தீவிரத் தன்மைக்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்ட கீழ்க்காணும் முறைகள் கையாளப்படுகின்றன.

இரத்த நச்சு சுத்தகரிப்பு (Haemodialysis) இரத்தத்தை வெளியே உள்ள கருவியில் செலுத்தி சவ்வூடு பரவல் முறையில் நச்சுகளை அகற்றி மீண்டும் _ இரத்தத்தை உடலில் செலுத்துவார்கள். 3 முதல் 4 மணி நேரம் இம்முறையைச் செயல்படுத்த ஆகும். பெரும்பாலும் மருத்துவமனையிலேயே செய்யப்படும் செயல்பாடு இது. ஆனால், இணை நோயின் தீவிரத்தால் மருத்துவமனைக்கு வரமுடியாத நோயாளிகளுக்கு வீட்டிலும் செய்ய முடியும்.

உள்ளுடற் சவ்வு நச்சு நீக்கம்:(Peritoneal Dialysis) குழாய்களை வயிற்றின் உள்பகுதியில் செலுத்தி, அதன் மூலம் மருத்துவ நீர்மங்களைச் செலுத்தி, சவ்வூடு பரவல் முறையில் நச்சுகளை அகற்றும் முறை இது. இதை வீட்டிலிருந்தும் செய்யலாம்.

பொதுவாக, நோயின் தீவிரத் தன்மைக்கேற்ப இம்மருத்துவம் செய்யப்படும். ஆரம்பத்தில் முதல் நாள் இரண்டு, மூன்று முறை கூட செய்ய வேண்டியிருக்கும். பிறகு இந்தச் செயல்பாடு குறையும்.

சிறுநீரக மாற்று மருத்துவம்: 100 சதவிகிதம் பாதிக்கப்பட்ட சிறுநீரகங்களுக்கு, மாற்றாக வேறு சிறுநீரகம் பொருத்தி மருத்துவம் செய்யும் முறை. ஆனால், மாற்றுச் சிறுநீரகம் கிடைப்பது சற்று தாமதமாகலாம். அதுவரை நச்சுப் பிரிப்பு முறையில் சிறுநீரகத்தின் நச்சுகள் பிரிக்கும் மருத்துவம் மூலம் நோயாளியின் உயிர் பாதுகாக்கப்படும்.

*              பொதுவாக முழுமையான குணமளிக்கக் கூடிய மருத்துவ முறை.

*              ஒரு சிறுநீரகம்தான் தேவை.

*              குடும்ப உறுப்பினர்களிடம் எடுக்கும் சிறுநீரகம் சிறந்தது.

*              இணையரிடமோ, நண்பர்களிடமோ சிறுநீரகம் பெறலாம்.

*            இவர்கள் “உயிருள்ள உறவுமுறை நன்கொடையாளர்கள்’’ (Live Relatives Donors) என்று அழைக்கப்படுகிறார்கள்.

*              இயல்பாக ஒரு சிறுநீரகமே செயல்படப் போதுமானது. அதனால் எந்தக் குழப்பமுமின்றி சிறுநீரகம் கொடுக்கலாம்.

*              மூளைச்சாவு அடைந்தவர்களின் சிறுநீரகங்களை தேவையானவர்களுக்குப் பொருத்தி, அவர்களின் உயிர் காக்க முடியும்.

*              பாதுகாப்பான, வெற்றிகரமான அறுவை மருத்துவம் இது.

*              இரத்தம் ஒரே வகையானதாக சிறுநீரகம் கொடையாளர்களுக்கும், பெறுபவர்களுக்கும் இருக்க வேண்டும்.

*             “திசு ஒற்றுமை’’ (Tissue Matching) ஒன்றாக இருக்க வேண்டும்.

*              சிறுநீரகக் கொடையாளிக்கு சிறுநீரகத்தை எடுப்பதால் உடல் நிலையில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவர் இயல்பான முழு வாழ்க்கையும் எந்தக் குறைபாடும் இன்றி வாழ முடியும்.

*            சிறுநீரகம் பெறுபவர் வாழ்நாள் 20 முதல் 25 ஆண்டுகள் வரை நீடிக்கும்.

*              பொருத்தப்பட்ட சிறுநீரகம் இயல்பு நிலையடைந்து, எளிதாக தன் பணியை முழுமையாகச் செய்யும்.

*              கொடையாளிக்கும், பெறுபவருக்கும் பெரும்பாலும் ஒரே நேரத்தில் அறுவை மருத்துவம் நடைபெறும்.

*              வேறு மருத்துவமனையில் இருந்து பெறப்படும் சிறுநீரகம், பாதுகாப்பாக, அதற்கென்று இருக்கும் பெட்டியில் வைக்கப்பட்டு, பெறுபவர் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பொருத்தப்படும்.

*             இன்றைய மருத்துவ வாய்ப்புகளில் கண்களுக்கு அடுத்து அதிகமாகவும், வெற்றிகரமாகவும் நடைபெறும் உறுப்பு மாற்ற அறுவை மருத்துவம் சிறுநீரக மாற்று அறுவை மருத்துவமே ஆகும்.

*              உயிரோடு இருப்பவர் சிறுநீரகங்கள் எளிதில், ஏற்றுக் கொள்ளப்பட்டு சிறப்பாகச் செயல்படும்.

*              இயல்பாக அவர் செயல்பட முடியும்.

*              கொடையாளிகள் உடல் நிலையில் இணை நோய்கள் இருக்கக் கூடாது.

*              இளைஞர்களின் சிறுநீரகங்கள் எளிதில், நோயாளிகளுக்குப் பொருந்தும்.

*              கொடையாளிகள் மருத்துவமனையில் சிறிது காலமே தங்க வேண்டி இருக்கும்.

*             கொடையாளியின் மன நிறைவுக்காகவும், எந்தக் குறைபாடும் இல்லை என உறுதியளிக்கவும் சில ஆய்வுகளைச் செய்யலாம். வழமையான இரத்த ஆய்வு, சிறுநீர் ஆய்வு, மீள் ஒலிஆய்வு, ஊடுகதிர் கணினி வரைவு போன்றவை செய்து, கொடையாளிக்கு நம்பிக்கை ஊட்டலாம்.

*              கொடையாளிகளும், சிறுநீரகம் பெற்றவர்களும், குழந்தைகள் பெற முடியும் _ பெற்றுக் கொள்ளலாம். அதற்கு எந்தத் தடையும் கிடையாது. மனத்திடத்திற்காக ஏற்கெனவே சிறுநீரகம் கொடுத்தவர்களிடம், கொடையாளிகள் கலந்துரையாடலாம்.

*             யாருக்குச் சிறுநீரகம் கொடுத்துள்ளோம் என கொடையாளிக்குத் தெரிய வேண்டியதோ, தெரிவிக்க வேண்டிய நிலைப்பாடோ சட்டப்படி கிடையாது.

சிறுநீரகச் செயலிழப்பு ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் மருத்துவம் செய்து முழுமையாக நன்றாக ஆக்க முடியும்.

நாள்பட்ட நோய்க்குத்தான் பெருமளவில் கடுமையான மருத்துவம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அதே நேரம் இணை நோய்களுக்கும் மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.

சிறுநீரகச் செயலிழப்பு முழுமையாக இருந்தால், சிறுநீர் நச்சுப் பிரிப்பு முறையிலும், அல்லது மாற்றுச் சிறுநீரகம் அறுவை மருத்துவம் மூலமும் நல்வாழ்வு பெற முடியும்.ஸீ

இடுகையிட்டது parthasarathy r நேரம் 11:53 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: சிறுநீரகம்

சிறுநீரகச் செயலிழப்பு (Kidney Failure) - (92)

 

விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்

ஜனவரி 1-15,2022
    January 3, 2022உண்மை

சிறுநீரகச் செயலிழப்பு

(Kidney Failure)

மரு.இரா.கவுதமன்

நோயின் அறிகுறிகள்:

*              தசை வாதம் (Muscle Paralysis)

*              அதிக நீர்மம் வெளியேற்ற முடியாத நிலையில் ஏற்படும் குறைபாடுகள்.

*             கைகள், கால்கள், முகம், கணுக்கால்கள், பாதம் ஆகியவற்றில் நீர் கோத்து விடும். அதனால் அந்த இடங்களில் வீக்கம் ஏற்படும்.

*              நுரையீரல்களிலும் நீர் கோத்து விடுவதால் மூச்சுத் திணறல் உண்டாகும்.

*              சிறுநீரக நீர்க்கட்டிகள் (Polycystic kidneys) சேரும். அதிக நீர், கல்லீரலுக்கும் பரவும்.

*            அதனால் முதுகு, உடலின் பக்கவாட்டில் வலி ஏற்படும்.

*              சிறுநீரகங்கள் “எரித்ரோபயோடின்’’ (Erythropiotin) என்ற ஊக்கி நீரை (Hormone) சுரக்கும். இந்த ஊக்கி நீர், எலும்பு மஜ்ஜைகளைத் தூண்டிவிட்டு சிவப்பணுக்-களை உற்பத்தி செய்து, இரத்தத்தில் கலக்கும். சிறுநீரகப் பாதிப்பு சிவப்பணுக்கள் உற்பத்தியைக் குறைக்கும். அதனால் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன், சிவப்பணுக்கள் மூலம் செல்வது தடைபடும். இதனால், “இரத்த சோகை’’ (Anaemia) ஏற்படும்.

*             இரத்த சோகை ஏற்படுவதால் களைப்பு உணடாகும்.

*              நினைவாற்றல் குறையும்.

*            கவனக் குறைவு ஏற்படும்.

*             தலைச்சுற்றல் உண்டாகும்.

*              இரத்த அழுத்தம் குறையும்.

*              இயல்பான நிலையில் புரதங்கள் அளவில் பெரியதாக இருப்பதால் சிறுநீரக வடிப்பான்கள் மூலம் வெளியேறாது. ஆனால், வடிப்பான்கள் சேதமடைவதால் புரதங்கள் சிறுநீர் மூலம் வெளியேறும் (Micro proteinaemia) அதனால்,

*             நுரையுடன் சிறுநீர் வெளியேறும்.

*              கணுக்கால், பாதங்கள், கைகள், முகம், வயிறு ஆகிய இடங்களில் வீக்கம் ஏற்படும்.

*              பசியின்மை

*              உணவு எடுத்துக் கொள்வதில் ஆர்வமின்மை

*             தோல் கருத்துப் போதல்

*            இரத்தத்தில் புரதங்கள் தேங்குதல்

*              உயிர்க் கொல்லி மருந்துகள் (Anti-biotics-Penicillin) பென்சிலின் போன்றவை ‘வலிப்பு’ (Seizures) உண்டாக்கும்.

நோயறிதல் – ஆய்வுகள்: நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்பை 5 அடுக்குகளில் அளவீடு செய்வார்கள். வடிப்பான்கள் (Glomerular Filtration rate (GFR) வடிகட்டும் தன்மைக்கேற்ப இது அளவிடப்படும். 1. வடிப்பான்கள் பாதிப்பு லேசாக இருப்பின், இது முதல் நிலையாகக் கருதப்படும். 2, 3ஆம் நிலைகளில் அதிக அளவு மருத்துவக் கண்காணிப்பு கொடுத்துக் கவனிக்க வேண்டும். நோயாளி குணமடையும் வாய்ப்பு அதிகம். 4, 5ஆம் நிலைகளில் நோயின் கடுமை அதிகமாக இருக்கும். தீவிர மருத்துவம் செய்ய வேண்டிய நிலை. 5ஆம் நிலையில் வடிப்பான் செயலிழப்பு மிகவும் ஆபத்தானது. சிறுநீரகங்கள் மாற்றும் மருத்துவம் செய்ய வேண்டிய நிலை இந்நிலை.

வடிப்பான் வடி திறனளவு: (Glomeruler Filtration Rate):  வடிப்பான் வடிதிறன் பல நிலைகளில் மாறுபடும். வயது, பாலினம், உடல் அளவு, சூழ்நிலை ஆகிய நிலைகளில் வேறுபடும். இது மிகவும் இயல்பானது. ஆனால், சிறுநீரக நோய் மருத்துவர்கள் இதை ஒரு சரியான அளவீடாகக் குறிப்பிடுகின்றனர். தேசிய சிறுநீரக நிறுவனம் (National Kidney Foundation) வடிப்பான் வடிதிறன் அளவீட்டுக் கருவியை தேவைப்பட்டால் கொடுக்கின்றனர். இரத்தத்தில் “கிரியேட்டினின்’’ அளவீடு, அறிவதற்கு வடிதிறன் கருவியைப் பயன்படுத்தத் தேவை.

யூரீமியா: (Uremia):  சிறுநீரகத் துறை வளர்ச்சியடையும் முன், சிறுநீரகச் செயலிழப்பு, யூரீமியா (Uremia) என்றே அழைக்கப்பட்டது. இரத்தத்தில் யூரியா கலப்பதையே அவ்வாறு அழைத்தனர். 1847 வரை இரத்தத்தில் சிறுநீர் கலந்து விடுவதாக மருத்துவர்கள் நினைத்தனர். சிறிதளவோ, அல்லது சிறுநீரோ போகாததால் மருத்துவர்கள் அவ்வாறு நினைத்தனர். சிறுநீரகத் துறையின் வளர்ச்சி இந்த நிலைப்பாட்டை மாற்றியது. இன்று சிறுநீரகச் செயலிழப்பின் ஓர் அறிகுறியாகவே யூரீமியா குறிப்பிடப்படுகிறது.

அடிப்படை ஆய்வுகள்:

*             இரத்தத்தில் அணுக்கள், சிவப்பணுக்கள், வெள்ளணுக்கள் எண்ணிக்கை ஆய்வு. (சிவப்பணுக்கள் எண்ணிக்கைக் குறைவு, வெளுத்த தன்மை, வெள்ளணுக்கள் அளவு கூடுதல் போன்றவை நோய்த் தன்மையை வெளிப்படுத்த உதவும்.)

*              இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் அளவு கூடியிருந்தால், நோய் உள்ளதை அறிய முடியும்.

*             மீள்ஒலி பதிவில் (Ultra Sonogram) சிறுநீரகங்கள் சிறுத்துத் தெரியும்.

*              ஊடுகதிர் கணினி வரைவி (Computerised Tomography) மூலம் சிறுநீரகங்கள் அமைப்பையும், மற்ற சிறுநீரகங்களின் பாகங்களில் உள்ள குறைபாடுகளையும் எளிதில் கண்டறியலாம்.

மருத்துவம்: நீரிழிவு நோய் முதல் வகையைச் சேர்ந்தவர்களுக்கும், நீரிழிவு நோய் அற்றவர்களுக்கும், குறைந்த அளவு புரதச் சத்துள்ள உணவுகள், நோயின் தீவிரத் தன்மையைக் குறைக்கும். ஆனால், இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கு இது பயனளிக்காது. அசைவ உணவுகள், அதிகப் புரதச் சத்துள்ள உணவுகள் நோயைத் தீவிரப்படுத்தும்.

மருந்துகள்: வலி நீக்கி மருந்துகள், சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்தும் மருந்துகளை அறவே தவிர்க்க வேண்டும். சிறுநீரகச் செயலிழப்பால் ஏற்படும் இணை நோய்களுக்கும் மருத்துவம் செய்தல் தேவையாகும். நிறமிகள் (Dye) மூலம் செய்யும் சோதனைகளைத் தவிர்க்க வேண்டும். சிறுநீரின் நீர்த்த தன்மையை அதிகமாக்கும் மருந்துகளை (Diuretics)

மருத்துவர்கள் கொடுப்பர்.

(தொடரும்…)

இடுகையிட்டது parthasarathy r நேரம் 5:34 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: சிறுநீரகம்

ஞாயிறு, 5 மார்ச், 2023

ஒரு அறிவியல் தகவல் 18 வயது பெண்ணுக்கு புதிய கை மாற்று அறுவைச் சிகிச்சை

 

      February 07, 2023 • Viduthalai

மும்பை, பிப்.7  குஜராத் மாநி லத்தின் பரூச் மாவட்டத்தை சேர்ந்தவர் சாம்யா மன்சூரி. 18 வயதாகும் இப்பெண்ணுக்கு பிறப்பிலேயே வலது கை கிடை யாது. 

இந்நிலையில் மும்பையில் உள்ள குளோபல் மருத்துவ மனை அப்பெண்ணுக்கு நாட் டிலேயே முதல்முறையாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் கையை பொருத்தி வெற்றி பெற் றுள்ளது.

இதுகுறித்து சாம்யா கூறும் போது “எனக்கு கை பொருத் தப்பட உள்ளதாக தகவல் வந்ததில் இருந்து, வாகனம் ஓட்டுவது உட்பட புதிய கையால் நிறைய விடயங்களை செய்ய வேண்டும் என என் மனதில் கனவுகள் ஓடத் தொங்கின” என்றார்.

தற்போது பிசிஏ படித்து வரும் சாம்யா அடுத்து எம்சிஏ படிக்க விரும்புகிறார். அதன் பிறகு காவல்துறை அதிகாரி யாகி, சைபர் குற்றப் புலனாய்வு குழுவில் இடம்பெற விரும் புகிறார். சாம்யா மேலும் கூறும்போது, “கை இல்லாமல் பல சிரமங்களை எதிர் கொண்டேன். நான் சிறுமியாக இருந்தபோது, என் வகுப்புத் தோழிகள் கையில்லாத என்னை கிண்டல் செய் வார்கள். இதனால் பொது இடங்களுக்கு செல்வதை கூட தவிர்த்து வந்தேன். இப்போது, அவர்களால் எதுவும் சொல்ல முடியாது. உடல் உறுப்பு கொடை செய்ய மக்கள் முன் வர வேண்டும்” என்றார். 

சாம்யாவின் தாயார் ஷெனாஸ் மன்சூரி கூறும் போது, “இப்போது பூமியில் மிகவும் மகிழ்ச்சியான நபர் நானாகத்தான் இருப்பேன். கடந்த 5 ஆண்டுகளாக நாங்கள் அவளுக்காக ஒரு கையை தேடிக்கொண்டிருந் தோம். 

ஆனால், 18 வயது நிரம்பிய பிறகுதான் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று மருத்துவர்கள் கூறினர். சாம்யாவுக்கு ஜனவரி 10-ஆம் தேதி 18 வயது நிறைவடைந் ததால், மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிவு செய்தனர். கை கிடைப்பது குறித்து எங் களுக்கு 6 நாட்களுக்கு முன் அழைப்பு வந்தது” என்றார். 

சாம்யாவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் நிலேஷ் சத்பாய் கூறும்போது, “சாம்யா பதிவு செய்த சில நாட்களில் எங்களுக்கு கொடையாளர் கிடைத்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கு நிறைய ஆலோ சனைகள் வழங்கப்பட்டன. அவரது தேவை மற்றும் நம் பிக்கையை கருத்தில்கொண்டு அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய நாங்கள் முடிவு செய்தோம்” என்றார்.


இடுகையிட்டது parthasarathy r நேரம் 6:11 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கை மாற்று

வியாழன், 22 டிசம்பர், 2022

உலகில் முதன்முறையாக குழந்தையின் இதய செயலிழப்புக்கு ஸ்டெம் செல் மூலம் சிகிச்சை



  December 22, 2022 • Viduthalai

குழந்தை பிறக்கும்போது குழந்தை யையும், தாயையும் பிணைத்திருக்கும் தொப்புள் கொடியிலுள்ள ஸ்டெம் செல்களை பயன்படுத்தி “உலகிலேயே முதன்முறையாக” செய்துள்ள அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையின் “உயிரைக் காப்பாற்றியிருக்கும் வாய்ப்பு உள்ளதாக” இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறுகிறார். பிரிட்டனிலுள்ள பிரிஸ்டல் ஹார்ட் இன்ஸ்டிட்யூட்டை சேர்ந்த பேராசிரியர் மாசிமோ கபுடோ, குழந்தை ஃபின்லியின் இதயக் குறைபாட்டை சரி செய்வதற்காக ஸ்டெம் செல் சிகிச்சையைப் பயன்படுத்தினார். பிறவி இதய நோயுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிக அறுவை சிகிச்சைகள் தேவைப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அவர் இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டு மென்று விரும்புகிறார்.

இப்போது இரண்டு வயதாகும் ஃபின்லி, “மகிழ்ச்சியோடு வளரும் ஒரு சிறுவனாக உள்ளார்.”ஆனால், ஃபின்லி பிறந்தபோது இதயத்திலுள்ள தமனிகள் தவறான வகையில் அமைந்திருந்தன. இதனால் குழந்தை பிறந்த நான்கு நாட்களிலேயே குழந்தைகளுக்கான பிரிஸ்டல் ராயல் மருத்துவமனையில் இதய அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. கெட்ட வாய்ப்பாக அறுவை சிகிச்சை அந்தப் பிரச்சினையைத் தீர்க்கவில்லை. குழந்தை ஃபின்லியின் இதய செயல்பாடு கணிசமாக மோசமடைந்தது. ரத்தம் ஓட்டம் இல்லாமல் போனதால் இதயத்தின் இடது பக்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வில்ட் ஷயரில் உள்ள கோர்ஷாமை சேர்ந்த அவரது தாயார் மெலிசா, “அவன் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை என்று நாங்கள் ஆரம்பத்திலிருந்தே எங்களை திடப்படுத்திக் கொண்டோம்.

12 மணி நேரத்திற்குப் பிறகு, ஃபின்லி இறுதியாக அறுவை சிகிச்சை முடிந்து வெளியே கொண்டுவரப்பட்டான். ஆனால், அவனை உயிருடன் வைத்திருப்பதற்காக, இதயத்திற்கும் நுரையீரலுக்கும் பைபாஸ் இயந்திரம் தேவைப்பட்டது. மேலும், அவனுடைய இதயத்தின் செயல்பாடு மோசமடைந்தது,” என்கிறார். பல வாரங்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு, ஃபின்லியின் இந்த நிலைமைக்கு சிகிச்சையளிப்பதற்கு வழக்க மான வழி எதுவுமில்லை எனத் தோன்றியது. அவர் தனது இதயம் செயல்படுவதற்கு மருந்துகளைச் சார்ந்திருந்தார். ஆனால், தொப்புள்கொடி வங்கியிலிருந்து ஸ்டெம் செல்களை உள்ளடக்கிய ஒரு புதிய செயல்முறை முயற்சி செய்யப்பட்டது.

பேராசிரியர் கபுடோ, சேதமடைந்த ரத்த நாளங்கள் வளர உதவும் என்ற நம்பிக்கையில் செல்களை நேரடியாக ஃபின்லியின் இதயத் தில் செலுத்தினார். “அலோஜெனிக்” செல்கள் என்று அழைக்கப்படுபவை லண்டனில் உள்ள ராயல் ஃப்ரீ மருத்துவமனையின் விஞ்ஞானிகளால் வளர்க்கப்பட்டன. அவற்றில் லட்சக்கணக்கானவை ஃபின்லியின் இதய தசையில் செலுத்தப்பட்டன. அலோஜெனி செல்கள் நிராகரிக்கப்படாமல் திசுக்களாக வளரும் திறனைக் கொண்டுள்ளன. அதோடு, ஃபின்லியின் விஷயத்தில், சேதமடைந்த இதய தசைகளை மீண்டும் உருவாக் குகின்றன.

“அவர் உட்கொண்ட அனைத்து மருந்து களையும் படிப்படியாக நிறுத்தினோம், செயற்கை சுவாசக் கருவி பொருத்துவதைப் படிப்படியாக குறைத்தோம்,” என்கிறார் பேராசிரியர் கபுடோ.பயோ-பிரின்டரை பயன்படுத்தி, ரத்த நாளங்களில் உள்ள வால்வுகளில் ஏற்படும் அசாதாரணங்களைச் சரி செய்வதற்கும் இதயத்தின் இரண்டு முக்கிய காற்றை பம்ப் செய்யும் அறைகளுக்கு இடையேயுள்ள துளைகளைச் சரி செய்யவும் இந்த ஸ்டெம் செல் சிகிச்சை செய்யப்படுகிறது.

செயற்கை திசு பொதுவாக குழந்தை களுக்கு இதயக் குறைபாடுகளைச் சரிசெய் யப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அது தோல்வியடையும் என்பதோடு இதயத்தோடு சேர்ந்து வளராது. எனவே குழந்தைகள் வளரும்போது அவர்களுக்கு அதிக அறுவை சிகிச்சைகள் தேவைப்படும். வெற்றிகரமான ஆய்வகப் பணிகளுக்குப் பிறகு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதுகுறித்த மருத்துவ பரிசோதனை நடக்கு மென்று பேராசிரியர் கபுடோ நம்புகிறார். ஸ்டெம் செல் பிளாஸ்டர்களின் சோதனை, வேல்ஸை சேர்ந்த லூயி போன்ற பிறவி இதயக் குறைபாடுகளைக் கொண்ட பல நோயாளிகளுக்கு நம்பிக்கையைக் கொடுக் கிறது.

கார்டிஃப் நகரைச் சேர்ந்த இந்த 13 வயது சிறுவன் தனது முதல் இதய அறுவை சிகிச்சையை பேராசிரியர் கபுடோவிடம் இரண்டு வயதில் செய்துகொண்டார். அதற் குப் பிறகு மீண்டும் நான்கு வயதில் அவரது இதயத்தைச் சரி செய்யக்கூடிய பொருளை இதயத்திலிருந்து மாற்றினார்கள்.ஆனால், அந்தப் பொருட்கள் முற்றிலும் உயிரியல் ரீதியாக இல்லாத காரணத்தால், அவற்றால் அவரோடு சேர்ந்து வளர்ச்சியடைய முடியாது. ஆகவே, அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. லூயியை போலவே, பிரிட்டனில் ஒவ்வொரு நாளும், சுமார் 13 குழந்தைகளுக்குப் பிறவி இதயக் குறைபாடு இருப்பது கண்டறியப் படுகிறது. இது குழந்தை பிறப்பதற்கு முன்பே உருவாகும் இதய பாதிப்பு என்று பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது. இதயத்தைச் சரிசெய்யப் பயன்படுத்தப்படும் பொருட்கள் நோயாளியின் நோயெதிர்ப்பு மண்டலத்தால் நிராகரிக்கப்படலாம் என்ப தால், அவை இதயத்தில் வடுவை ஏற்படுத்தி, மற்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கக்கூடும். மேலும், அவை படிப்படியாக உடைந்து சில மாதங்கள் அல்லது ஆண்டுகளில் தோல்வி யடையும்.

எனவே, ஒரு குழந்தை தனது குழந்தைப் பருவம் முழுவதும் ஒரே இதய அறுவை சிகிச்சையைப் பல முறை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பிரிட்டனில் ஒவ்வொரு ஆண்டும் பிறவி இதயக் குறைபாடுகளுக்கான அறுவை சிகிச்சைகள் சுமார் 200 முறை மீண்டும் செய்யப்படுகின்றன. ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மற்றும் உடலுடன் வளரக் கூடிய திசுக்கள் மூலம் ஒருவர் எதிர் கொள்ளும் அறுவை சிகிச்சைகளின் அளவு கணிசமாகக் குறைக்கப்படும் என்று லூயி நம்புகிறார்.எனக்கு அடிக்கடி சிகிச்சைகளை எடுத்துக்கொள்வது பிடிக்கவில்லை,” என்று அவர் கூறினார். “இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓர் அறுவை சிகிச்சை தேவை என்பது நீண்ட காலத்திற்கு நல்லதல்ல. ஆகவே, இது எனக்கு நிம்மதியைக் கொடுக்கிறது,” என்கிறார் லூயி. ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மூலமாக, பேராசிரியர் கபுடோவும் அவரது குழுவினரும், இனி தேவைப்படாத ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்குமான 30,000 யூரோ செலவை தேசிய சுகாதார சேவையால் சேமிக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கான பவுண்டுகள் சேமிக்கப்படும் என்கின்றனர்.

ஸ்டெம் செல் உயிரியலில் நிபுணரும் எஸ்.எல்.எம் ப்ளூ ஸ்கைஸ் இன்னோ வேஷன்ஸ் லிமிடடின் இயக்குநருமான டாக்டர் மிங்கர், இந்த ஆராய்ச்சியைப் பாராட்டினார். அவர், “இதய செயலிழப்பு அல்லது சரியாகச் செயல்படாமை பாதிப்பு உள்ள பெரியவர்களில் நான் அறிந்த பெரும்பாலான ஆய்வுகள் ஸ்டெம் செல் உட்செலுத்துதல் மூலம் குறைந்தபட்ச சிகிச்சைப் பலன்களை மட்டுமே காட்டு கின்றன. மருத்துவக் குழு ஒரு நிலையான மருத்துவ பரிசோதனையை மேற்கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது நமக்கு வெற்றியையும் இந்தச் செயல்முறையின் பின்னணி குறித்த புரிதலையும் ஏற்படுத்தும்,” என்று கூறினார்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:51 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: மருத்துவம், ஸ்டெம் செல்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

மருத்துவ சின்னம்

மருத்துவ சின்னம்
கடுசியஸ் (Caduceus)

மருந்து

உணவே மருந்து!
Powered By Blogger

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

இந்த வலைப்பதிவில் தேடு

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

பின்பற்றுபவர்கள்

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2025 (1)
    • ▼  ஜனவரி (1)
      • மருத்துவத் துறையில் மயக்கவியல் துறை (அக்டோபர் 16 ...
  • ►  2024 (20)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (11)
    • ►  மே (6)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2023 (22)
    • ►  ஜூன் (5)
    • ►  ஏப்ரல் (16)
    • ►  மார்ச் (1)
  • ►  2022 (18)
    • ►  டிசம்பர் (1)
    • ►  அக்டோபர் (11)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (1)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (1)
  • ►  2021 (35)
    • ►  டிசம்பர் (2)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (13)
    • ►  ஜனவரி (6)
  • ►  2020 (15)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2019 (33)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (7)
  • ►  2018 (48)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (2)
  • ►  2017 (43)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (7)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (5)
  • ►  2016 (29)
    • ►  டிசம்பர் (7)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (12)
    • ►  செப்டம்பர் (3)
  • ►  2015 (27)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஆகஸ்ட் (5)
    • ►  ஜூலை (1)
  • ►  2014 (4)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (3)

லேபிள்கள்

  • (APPENTICITIS)
  • 2018
  • அடைப்பு
  • அழற்சி
  • அளவுகள்
  • ஆண் இனப்பெருக்கு
  • ஆண்கள்
  • ஆய்வு
  • ஆர்வி
  • ஆவி பிடித்தல்
  • ஆன்டிபயாடிக்
  • ஆஸ்துமா
  • ஆஸ்பிரின்
  • இதய
  • இதயம்
  • இதயம் ❤️
  • இரண்டாம் நிலை
  • இரத்த அழுத்தம்
  • இரத்தக்குழாய்
  • இரத்தம்
  • இரைப்பை
  • இரைப்பை அழற்சி
  • இளமை
  • இறைச்சி உணவு
  • இன உறுப்பு
  • இன உறுப்பு ஆய்வு
  • உடல் எடை
  • உடல்நிலை
  • உடற்கொடை
  • உடற்பயிற்சி
  • உணவு
  • உணவுக்குழாய்
  • உயிர்க்கொல்லி
  • எலும்பு
  • ஒமைக்ரான்
  • ஓஆர்எஸ்
  • ஓட்டம்
  • கடவுள் நம்பிக்கை
  • கண்
  • கரு வளர்ச்சி
  • கருத்தடை
  • கருவுறுதல்
  • கரோனா
  • கல்லீரல்
  • கல்லீரல் அழற்சி
  • கல்லீரல் அழற்சி (Hepatitis)
  • கலப்பு
  • கற்கள்
  • காது
  • காது-மூக்கு-தொண்டை
  • காய்ச்சல்
  • கால்வலி
  • கிருமி
  • குடல்
  • குடல்வால் அழற்சி
  • குடும்ப நலம்
  • குடும்ப நலன்
  • குரோமோசோம்
  • குழந்தை பிறப்பு
  • குழந்தையின்மை
  • கை இணைப்பு
  • கை மாற்று
  • கொலஸ்ட்ரால் - கவலை
  • கொழுப்பு
  • கோதுமை
  • சளி
  • சிறுநீரகக் கற்கள்
  • சிறுநீரககோளாறு
  • சிறுநீரகம்
  • சிறுநீரகம் (Kidney)
  • சினையுறுதல்
  • செயல் இழப்பு
  • சைனசு
  • தலை சுற்றல்
  • தாய்ப்பால்
  • தாவர உணவு
  • தூக்கம்
  • தைராய்டு
  • தொண்டை
  • நஞ்சு முறிவு
  • நினைவு
  • நீரிழிவு
  • நுண்ணுயிர் எதிர்ப்பிகள்
  • நுரையீரல்
  • நுரையீரல் பொறி (ECMO)
  • நுறையீரல்
  • நெஞ்சகம்
  • நெஞ்சு
  • நோய்
  • நோய் எதிர்ப்பு
  • நோய் கண்டறிதல்
  • நோய் தடுப்பு
  • பக்கவாதம்
  • பல்
  • பன்றி
  • பாக்டீரியா
  • பாத எரிச்சல்
  • பிசியோதெரபி
  • பித்தவெடிப்பு
  • பிறவி குறைபாடு
  • புரதம்
  • புற்றுநோய்
  • பேய்
  • பேறுகாலம்
  • மகப்பேறு
  • மஞ்சள் காமாலை
  • மயக்கவியல்
  • மரணத்திற்குப் பின்
  • மரணத்துக்கு பின்
  • மரணம்
  • மருத்துவ வளர்ச்சி
  • மருத்துவம்
  • மருந்து
  • மருந்துகள்
  • மன நலம்
  • மனநிலை
  • மாதவிடாய்
  • மார்பு வலி
  • மாரடைப்பு
  • முக சீரமைப்பு
  • மூச்சிரைப்பு
  • மூட்டுவலி
  • ரத்த அழுத்தம்
  • வயிற்றுப்போக்கு
  • வலி
  • வாடகைத்தாய்
  • விந்துப்பை வீக்கம்
  • விருது
  • வைட்டமின்
  • வைரசு
  • ஸ்டெம் செல்
  • DEATH
  • GASTRITIS
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.