சனி, 31 டிசம்பர், 2016

பெண்கள் ஹார்மோன்களில் ஏற்படும் மாறுபாடு இதயத்துக்கு கேடு

விடுதலை ஞா.ம.,5.7.14


பெண்களுக்கான மாதவிலக்கின் போது ஏற்படும் பாலின ஹார்மோன் களின் மாறுபாடுகளால் இதய நோய்க்கு வாய்ப்பு ஏற்படுவதாக ஆய்வுத்தகவல் கூறுகிறது.
பெண்களுக்கு கொழுப்புச் சத்துக் குறையும்போது, ஹார்மோன் அளவுகள் மாறுபாடு அடைந்து, அதிக அளவில் இதய நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு ஏற்படுவதாக ஆய்வுத்தகவல் கூறுகிறது.

அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் பட்ட தாரிகளுக்கான  பொது சுகாதாரப் பள்ளியின் உதவிப் பேராசிரியர் சாமர் ஆர். எல் கவ்தரி கூறும்போது, பெண்கள் மாதவிலக்கிற்கு காரணமாக உள்ள ஈஸ்ட்ராடியோல் என்கிற பெண்களுக்கான உறுதியான ஹார் மோன்களின் அளவு குறைவதைக் கண்டுபிடித்தோம். அந்த ஹார் மோன்கள் குறைந்து, தரம் குறைந்த கொழுப்புக்களுடன் இணைந்து கொள்வதால், இதய நோய்க்கு வாய்ப் பான காரணங்களாக அமைந்து விடுகின்றன என்று கூறினார். கொழுப் புச்சத்து இரத்த ஓட்டத்தில் சிறிய அளவில் சென்று லீப்போ-புரோட்டீன் என்று அல்லது கொழுப்பை கொண்டு செல்பவை என்று அழைக்கப் படுகின்றன.

பழைய முறை இரத்தப் பரிசோ தனைகளில் வெறுமனே கொழுப்பு அளவைக் கண்டறியும்போது லீப்போ-புரோட்டீன் அளவைமட்டும் பொது வாகக் கொள்வார்கள். ஆனால், அதில் HDL,LDL என்று இரு பெரும் பிரிவுகள் உள்ளன.  அதிக அடர்த்தி உள்ள லீப்போ-புரோட்டீன் (High-Density Lipoprotein-HDL) இது தமனிகளில் கொழுப்பு சேர்வதை தடுப்பது,  குறைந்த அடர்த்தி கொண்ட லீப்போ-புரோட்டீன் (Low-Density Lipoprotein-LDL)  இது தமனிகளில் கொழுப்பைச் சேர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்து தடுப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன.

120 பெண்களிடையே மேற்கொள் ளப்பட்ட ஆய்வின்படி, இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் கண்டறிய அணு காந்த  அதிர்வின் மூலம் செயல்படும் ஸ்பெக்ட் ரோஸ்கோபி என்னும் கருவியைப் பயன்படுத்தியுள்ளனர்.

ஆய்வின்படி, ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்தால், பெண்கள் கொழுப்பின் அளவு, அடர்த்தி, தரமற்ற கொழுப்பு ஆகிய அனைத்தும் இதய நோய்க்கு அடிகோலும் காரணிகளாக இருப்ப தால், அதிக அளவில் கவனமாக இருக்க வேண்டும்.

எங்கள்  ஆய்வு முடிவு பரிந் துரைப்பது என்னவென்றால், நவீனப் பரிசோதனைகள்மூலம் மதிப்பற்ற முடிவுகளைப் பெற முடிகிறது. அனைத்துவிதத்திலும் கொழுப்பைக் கொண்டு செல்பவற்றின் தரத்தை மாதவிலக்கின் தொடக்கத்திலேயே அறியமுடியும். ஆகவே, அந்த முடிவுகளின்படி, உட்கொள்ளக்கூடிய உணவுமுறைகள், பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறி முறைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். என்று எல் கவ்தரி குறிப்பிட்டார். இந்த ஆய்வுத்தகவல் லிபிட் ரிசர்ச் என்கிற ஏட்டில் வெளியாகி உள்ளது.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக