காற்றில் பரவும் கிருமிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால், நம்மைச் சுற்றி யாராவது இருமுவதை நினைத்துப் பார்ப்பதே மிகப் பெரிய பயங்கரமான அனுபவம்தான்.
அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத் தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியின்படி, உங்களுக்குப் பக்கத்தில் இருப்பவர் மட்டுமல்ல, தொலைவில் இருப்பவர் இருமி னாலும் தும்மினாலும்கூட நமக்கு நோய் தொற்றுவதற்கான சாத்தியம் மிகமிக அதிகம்.
இருமும்போது ஒருவர் வெளியிடும் திரவத் துளிகள் ஆறு மீட்டர் தொலைவுக்குப் பயணிக்கும். அதேநேரம் தும்மும்போது வெளியிடும் திரவத் துளிகள் எட்டு மீட்டர் தொலைவுக்குப் பயணிக்குமாம்.
அப்படிப் பார்த்தால் இந்த இரண்டு இடைவெளிகளுக்குள் நாம் எங்கே இருந்தாலும் ஆபத்துதான். ஏனென்றால், வெளியிடப்படும் திரவத் துளிகளில் உள்ள நோய்க் கிருமிகள் 10 நிமிடங்கள்வரை உயிருடன் இருக்கக்கூடியவை.
நோய் பரப்ப வேண்டாம்
இந்தியா போன்ற மக்கள் நெருக்கம் மிகுந்த நாடுகளில் உடல் நலம்-நோய்த்தொற்று பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால்தான், ஒருவருக்கு உள்ள நோய்த் தொற்று பெரும்பாலோருக்கு எளிதாகப் பரப்பப்படுகிறது. இது மிக முக்கியமான சமூகச் சீர்கேடு.
ஏனென்றால் காசநோய் போன்ற தீவிர-தொடர் சிகிச்சை தேவைப்படும் நோய்கள், பலருடைய அலட்சியம் காரணமாகவே மோசமாகப் பரவுகின்றன.
தும்மும்போதும், இருமும் போதும் மூக்கு, வாயிலிருந்து கிருமிகள் வெளியேறாமல் இருக்கக் கைக்குட்டைத் துணியையும் டிஷ்யு பேப்பரையும் பயன்படுத்த வேண்டும். இது அடுத்தவருக்கு மட்டுமல் லாமல், நமது உடல்நலனுக்குமேகூட ரொம்ப நல்லது.
அப்புறம் ஒரு விஷயம் எவ்வளவு சிறியதாகவும், பெரிதாகவும் தும்மினாலும் நம்மால் கண்களைத் திறந்துகொண்டு தும்ம முடியாது. தும்மும்போது இதைப் பற்றியெல்லாம் நாம் யோசிக்க மாட்டோம் என்றாலும், கண்களைத் திறந்துகொண்டு தும்முவது மட்டும் சாத்தியமில்லை.
-விடுதலை,8.12.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக