வியாழன், 12 ஜனவரி, 2017

மருத்துவ உலகின் மாபெரும் புரட்சி: எண்ண ஆற்றலின்மூலம் கையை அசைத்த பக்கவாத நோயாளி




நியூயார்க், ஜூன் 26 பக்கவாதத்தால் பாதிக்கப் பட்டு கை, கால்கள் செய லிழந்த நபரின் எண்ண ஆற்றலை ஒருமுகப்படுத்து வதன் மூலம் மீண்டும் அவரை பழைய நிலைக்கு கொண்டுவர முடியும் என்பதை அமெரிக்க மருத்துவர்கள் நிரூபித் துள்ளனர்.

மத்தியமேற்கு அமெரிக் காவின் ஒஹியோ மாநில தலைநகர் கொலம்பஸ்-சைச் சேர்ந்தவர் லான் புர்கர்ட். தற்போது 23 வயதாகும் இவர், தனது 19- ஆவது வயதில் நண்பர் களுடன் குளிக்க கடலுக் குச் சென்றார். கடல் நீருக்குள் தாவிப் பாய்ந்து குதித்தபோது அலையின் சுழலில் மாட்டி, மண் குதி ருக்குள் சிக்கிக் கொண்ட புர்கர்ட்டை அவரது நண் பர்கள் காப்பாற்றி மருத் துவமனையில் சேர்த்தனர்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிறு மூளையின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டு கை, கால் களை அசைக்க முடியாத பக்கவாத நிலைக்கு தள் ளப்பட்ட அவருக்கு மறு வாழ்வு அளிக்க ஒஹியோ மாநில மருத்துவப் பல் கலைக்கழக ஆராய்ச்சி கூடத்தைச் சேர்ந்த மருத் துவர்கள் முடிவு செய்த னர்.

இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் அவரது மண்டை ஓட்டில் ஒரு சிறிய துவாரம் போட்டு, 0.15 அங்குல அகலம் கொண்ட ஒரு சிப் அவரது மூளைக்குள் பொருத்தப் பட்டது. 96 எலெக்ரோட் கள் கொண்ட அந்த சிப் அவர் என்ன நினைக் கிறார்? என்ற எண்ண ஓட்டத்தை ஒரு கணினி யின் மூலம் மொழிபெயர்க் கக் கூடிய தன்மை கொண்டதாகும்.

பின்னர், எண்ண ஓட் டத்தை ஒருமுகப்படுத்தி ஆற்றலை தூண்டுவதற் கான சில வார கால சிறப்பு பயிற்சிகளை அவருக்கு அளித்தனர். இதையடுத்து, மூளைக்குள் பொருத்திய சிப்பின் மொழிபெயர்ப்பை புரிந் துக் கொள்ளும் கணினி யில் இருந்து  கட்டளை களை பெற்று செயலாற் றக் கூடிய ஒரு தூண்டி (ட்ரிகர்) அவரது வலது கரத்தில் பொருத்தப்பட் டது.

கணினியுடன் இணைக் கப்பட்ட அந்தத் தூண்டி யின் மூலம் அவரது கரத்தின் தசைகளை செறிவுடன் தூண்டக்கூடிய சமிக்ஞைகளை (சிக்னல்) உள்வாங்கி, அந்த கட்ட ளைகளின்படி செயலாற் றும் ஒயர் இணைப்புகள் கொண்ட ஒரு பட்டை அவரது வலது கையில் கட்டப்பட்டது.

இந்த நவீன சிகிச்சை யின் மூலம் புர்கர்ட்டால் கையின் ஒரு விரலையா வது அசைக்க முடியும் என்று மருத்துவர்கள் பெரிதும் நம்பினர்.

ஆனால், முதன்முறை யாக தங்களது கண்டு பிடிப்பை மருத்துவர்களும், எண்ணத்தை ஒருமுகப் படுத்தும் ஆற்றலை புர்க் கர்ட்டும் செயல்படுத்த முயன்றபோது, யாரும் எதிர்பாராத பெரும் பலன் கிட்டியதை அறிந்த மருத் துவர்கள் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் திக்குமுக் காடிப் போயினர்.

ஒரேயொரு விரலை மட்டுமல்ல, திறந்திருந்த வலது கரத்தை முழுமை யாக மூடி, முஷ்டியாக்க வும், மூடிய கையை மீண்டும் திறந்து வெறுங் கையாக்கவும் புர்க்கர்ட் டால் முடிந்தது. அதையும் தாண்டி ஒரு படி மேலே சென்று விரல்களை அசைத்து ஒரு கரண்டி யையும் எடுத்த அவர் அனைவரையும் அசத்தி னார்.

மேட்ரிக்ஸ் திரைப்பட வரிசைகளில் வரும் நியோ கதாபாத்திரத்தை பார்த்து குழந்தைகள் ரசிப்பதைப் போல், புர்க்கர்ட்டின் செயலிழந்த கை அசை வதைப் பார்த்து வியந்த மருத்துவர்கள், மருத்துவ உலகில் ஒரு புதிய விடி யலை ஏற்படுத்தி விட்ட ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தனர்.

மீண்டும் நடமாட வைக்க முடியும்

இன்னும், சில ஆண்டு களில் மூளை பாதிப்பால் உடல் உறுப்புகள் செய லிழந்து படுத்த படுக்கை யாக கிடக்கும் உலகின் கோடிக்கணக்கான பக்க வாத நோயாளிகளை மீண்டும் நடமாட வைக்க முடியும் என்ற நம்பிக் கையையும், திருப்புமுனை யான மருத்துவ புரட்சி யையும் ஒஹியோ மாநில மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி கூடத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் உருவாக்கியுள்ளனர் என் பது மனித குலத்துக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்துள் ளது.
-விடுதலை,26.6.14

புதன், 11 ஜனவரி, 2017

ரத்த ஓட்டமுள்ள செயற்கை சிறுநீரகங்கள்! அமெரிக்க மருத்துவர்கள் சாதனை!!




மனித உடலில் இயற்கையாக உள்ள சிறுநீரகம் போன்று செயல்படும் செயற்கை சிறுநீரகத்தை அமெரிக்க மருத்துவர்கள் முதல் முறையாக உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர்.

மனித உடலில் இயற்கையாக உள்ள சிறுநீரகம் போன்று செயல்படும் செயற்கை சிறுநீரகத்தை அமெரிக்க மருத்துவர்கள் முதல் முறையாக உருவாக்கி சாதனை புரிந் துள்ளனர். பரிசோதனைச் சாலையில் செயற்கை சிறு நீரகத்தை உருவாக்க வேண்டுமென்பது அறிவியல் அறிஞர்களின் நீண்ட நாள் கன வாகும்.  இதற்கான முயற்சிகள் இதற்கு முன்பும் மேற்கொள்ளப்பட்டன.  ஆனால் அவற்றின் அளவு, எலி போன்ற சிறிய பிராணிகளுக்கு மட்டுமே பொருந்துவதாக இருந்தது.

மேலும், சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு பின் ரத்தம் ஓடாமல் உறைந்ததால் பயனற்று போனது. அமெரிக்காவின் வடக்கு கரோலினா நகரில் வேக் பாரஸ்ட் பாப்டிஸ்ட் மருத்துவ மய்யம் உள்ளது.  இங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்ட அறிவியல் அறிஞர்கள், பன்றிக்கு பொருந்தும் அளவிலான சிறுநீரகத்தை உருவாக்கி உள்ளனர். பன்றியின் சிறுநீரகமும், மனித சிறுநீரகமும் ஒரே அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பு உருவாக்கப்பட்ட சிறுநீரகத்தில் ரத்த ஓட்டம் ஒரு மணி அல்லது 2 மணி நேரம் மட்டுமே இருந்து, பின் உறைந்தது.  தற்போது உருவாக்கப்பட்டுள்ள சிறுநீரகத்தின் ரத்த ஓட்டம் 4 மணி நேரத்திற்கு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.  ரத்த ஓட்டம் 4 மணி நேரத்திற்கு உறை யாமலிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.  ஏனென்றால், இதே அடிப்படையில் ஈரல், கணையம் போன்ற உறுப்புகளையும் பரிசோத னைச் சாலையிலேயே செயற்கையாக உருவாக்க முடியும்.

இவ்வாறு வேக் பாரஸ்ட் பாப்டிஸ்ட் மருத்துவ மய்ய இயக்குநரும், பேராசிரி யருமாகிய அந்தோணி அடலா தெரிவித்தார்.

இதய நோய்களை குணப்படுத்தும் புதிய விதை


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள புகையிலை ஆராய்ச்சி மய்யத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள புதிய விதைக்கு இதய நோய் களைக் குணப்படுத்தும் தன்மை இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

புகையிலை மூலம் புதிய விதை உற்பத்தியை புகையிலை ஆராய்ச்சி மய்யம் அறிமுகப் படுத்தி உள்ளது. இந்த விதையால் நிறைய பயன்கள் உள்ள தென்றும், குறிப்பாக புகை யிலையிலிருந்து எடுக்கப்படும் சோலினி சால் என்ற பொருள் இருதய நோய்க்கு நல்ல மருந்தாக அமையும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

-விடுதலை,18.9.14

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

*மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*

🚨 *விழிப்புணர்வு* 🚨

சமீபத்தில் பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்களிடம் பேசும்போது சொன்ன தகவல் இது..

*மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*

S T R  என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.

S = SMILE

T = TALK

R = RAISE BOTH ARMS

ஒரு திருமண நிகழ்வில், பொது இடங்களில் அல்லது வீட்டில் இருக்கும் போது, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.

ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார்.

நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம்.

*ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!*

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும்.

மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம்.

அதனை S T R  அதாவது,

*SMILE (சிரிக்க சொல்வது),*

*TALK (பேச சொல்வது),*

*RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)*
போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும், மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, *இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்!* 👆இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!

உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.

மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், *இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம்*, என்று உறுதியாக கூறுகிறார்கள்.

இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த *ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும்* என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

அதாவது, *அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,*

அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம்.

அவ்வாறு நேராக நீட்டாமல் *ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால்*, அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.

மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் *10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்* என்றும் சொல்கிறார்!! 👍

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமு ம், ஏன் மனிதாபிமான அடிப்படையில் கூட விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தலாமே...!!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருவொற்றியூர் கணேசன்

சனி, 7 ஜனவரி, 2017

அறிகுறிகள் இல்லாமலும் ஆபத்து வரும் ! 
அம்மாவோ, மனைவியோ, நீங்களோ வீட் டிலேயே சமைத்த பாரம்பரிய உணவைச் சாப்பிடும் வரையில், உங்களுக்கு கொலஸ்ட்ரால் குறித்த பயம் இல்லை! நீரிழிவு பக்கவிளைவுகளின் காரணமாக பல்வேறுவிதமான உடல்நலக் கோளாறுகள் ஏற் படக்கூடும். குறிப்பிட்ட இடைவெளிகளில் மருத் துவ ஆலோசனை பெற்றுவரும் நிலையில், இது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தாது. மருத்துவரே இப்பிரச்சினைகளுக்கும் மருந்துகள் அளித்து, அபாயம் வரும் முன் காத்துவிடுவார். அதனால்தான் ஆரம்ப நிலையிலேயே மாத்திரைகள் வழங்கப்படு கின்றன.
கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் இந்தப் பிரச்னைகள் நீரிழிவாளர்களுக்கு ஏற்படும்போது, இதயநோய்களும் ஸ்ட்ரோக்கும் தாக்கும் அபாயம் உண்டு. இவை தொடக்கத்திலேயே அறிகுறிகளைக் காட்டாது எனினும், மருத்துவர்களால் வரவிருக்கும் பிரச்னைகளை உணர்ந்துவிட முடியும். ஆகவே, மருத்துவர்கள் நீரிவுக்கான மருந்துகளைத் தாண்டி, கூடுதலாகப் பரிந்துரைக்கும் மருந்துகளையும் தயங்காமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ரத்த ஓட்டத்தில் காணப்படுகிற மென்மையான, மெழுகு போன்ற ஒருபொருள்தான் கொலஸ்ட்ரால். இப்படி, குருதிக்குழல்களில் படிந்துவிடக்கூடிய ஒருவித கொலஸ்ட்ராலையே, நாம் கெட்ட கொலஸ்ட்ரால் என்கிறோம். இந்த கொலஸ்ட்ரால் படிவு காரணமாக குருதிக்குழல்களின் சுற்றளவு குறைந்து போகும். இதனால் ரத்த அழுத்தம் அதிகமாகும். இதன் விளைவாக மாரடைப்பு அபாயம் ஏற்படும். அது மட்டுமல்ல...
இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் குருதிக்குழல்களில் கெட்ட கொழுப்பு படிதல் அதிக மாகும்போது, இதயத்தை ஆபத்துக்குள் தள்ளி, இதயநோய்களையும் வழங்கும். இது அனைத்து மக்களுக்குமே பொதுவானதுதான் என்றாலும், நீரிழிவாளர்களுக்கோ அபாயத்தின் அளவு மிக அதிகம். உயர் ரத்த அழுத்தமும் இதயநோய்களும் சட்டென தாக்கும். அதனால்தான் 6 மாதங்களுக்கு ஒரு முறையோ, ஆண்டுக்கு ஒரு முறையோ கொலஸ்ட்ரால் டெஸ்ட்(லிபிட் புரஃபைல்) எடுத்துக் கொள்ளும்படி நீரிழிவாளர்களுக்கு அறிவுறுத்தப் படுகிறது.
ரத்த அழுத்த சோதனை (பி.பி செக்அப்) மாதம் தோறும் அல்லது வாரம் தோறும் எடுக்கும்படியும் கூறப்படுகிறது. இனியாவது, நம் மருத்துவர் தேவையில்லாமல் டெஸ்ட்டுக்கு எழுதிக் கொடுக் கிறார், எக்ஸ்ட்ரா மாத்திரைகள் எழுதிக் கொடுக் கிறார் என்றெல்லாம் குழம்பவும் புலம்பவும் வேண்டாம். சில நீரிழிவாளர்கள் நிறைய மாத்திரைகள் எழுதிக் கொடுத்தால், மருத்துவரையே மாற்றிவிடுவதும் உண்டு. இந்தக் காரணத்தால், விஷயத்தைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு ஓரிரு மாத்திரைகளோடு நிறுத்திவிடுவது சில மருத்துவர் களின் வழக்கமாகி விட்டது.
கொலஸ்ட்ரால் குறைக்கும் மாத்திரைகள்...கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகம் கொண்ட நீரிழிவாளர்களுக்கு முதலில் பரிந்துரைப்பது இதயத்துக்கு இதமான உணவுகளையே. இரண்டாவ தாக முறையான உடற்பயிற்சி. மூன்றாவதாகவே கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் மாத்திரைகள். இந்த மாத்திரைகள்  தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளும்படியே பரிந்துரைக்கப்படும். சோதனையில் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து விட்டாலும் கூட, மருத்துவர் அறிவுறுத்தினால் தொடர்ச்சியாக உட்கொள்ளத்தான் வேண்டும்.
கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு ஒற்றை மாத் திரையும் உண்டு. காம்பினேஷன் மாத்திரைகளும் உண்டு. நம் உடல்நலம், வாழ்க்கை முறைக்கு ஏற்ப இம்மாத்திரைகள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும். ஒருவருக்கு அளிக்கப்படும் மாத்திரை இன்னொரு வருக்கு அப்படியே பொருந்தாது. எல்.டி.எல் எனும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு பொதுவாக ஸ்டாட்டின் மாத்திரைகள் வழங்கப்படும். ஸ்டாட் டின் தெரபி என்று அழைக்கப்படும் இந்த முறையை உலகம் முழுக்கவே மருத்துவர்கள் தவறாது பின்பற்றுகிறார்கள். அதாவது...கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் வந்தாலும் கூட, நீரிழிவாளர் களுக்கு வாழ்க்கைமுறை மாற்றங்களோடு, ஸ்டாட்டின் தெரபியும் தொடரப்பட வேண்டும். வெளிப் படையான இதயநோய் கொண்டவர்களுக்கு ஸ்டாட்டின் தெரபி அவசியம். இதயநோய் இல் லாமல் இருந்தாலும், 40 வயது தாண்டி, இதய நோய்களுக்கான ஒரிரு அபாய காரணி கொண்ட வர்களுக்கும் (நீரிழிவு போன்றவை) ஸ்டாட்டின் தெரபி தேவை.
இதயநோய் இல்லாமல் இருந்தாலும் கூட, 40 வயதுக்குள் இருந்தாலும் கூட, வாழ்க்கைமுறை மாற்றங்கள் அறிவுறுத்தப்பட வேண்டும். எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவு 100 என்பதைத் தாண்டி னாலும், இதயநோய்களுக்கான அபாய காரணிகள் ஒன்றுக்கு அதிகமாக இருந்தாலும், இதயநோய் இல்லாமல் இருந்தாலும் கூட, 40 வயதுக்கு குறை வானவர்களுக்கும் ஸ்டாட்டின் தெரபி தொடங்கப் பட வேண்டும். நீரிழிவாளர்களுக்கு ஏன் கொலஸ்ட் ரால் மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது என இப்போது புரிகிறதா?
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள்...உயர் ரத்த அழுத்தமும் அறிகுறி களைக் காட்டாது என்பதால், மருத்துவரைச் சந்திக்கும் மாதாந்திர/காலாந்திரத் திட்டத்தில் இதையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். வீட்டிலேயே சோதித்துக் கொள்ளும் எளிதான பிபி மானிட்டர்களும் இப்போது கிடைக்கின்றன. பிபியை கண்டுகொள்ளாமல் விட்டாலோ, மருத் துவர் அளித்த மாத்திரைகளை உட்கொள்ளாமல் விட்டாலோ, அது பெரிய பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லும்.
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்காக மருத்துவர்கள் ஒன்று அல்லது கூடுதலான மாத் திரைகளை அளிக்கக்கூடும். மருத்துவர் அறிவுறுத் திய படி அம்மாத்திரைகளை உட் கொண்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும். ஏதேனும் பக்க விளைவுகள் தோன்றினால், உடனே மருத்துவரிடம் கூறுங்கள். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்து வதற்காக   வகை மருந்துகள் அளிக்கப்படுகின்றன.
கல்லீரல் வீக்கத்துக்கு சிகிச்சை
கல்லீரலில் அதிகக் கொழுப்பு சேர்வதைத்தான், கல்லீரல் மிகைக் கொழுப்பு நோய் என்று சொல்கிறோம். இவ்வாறு கல்லீரலில் கொழுப்பு அதிகமாகச் சேர்வதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. உடல் கொழுப்பைக் கல்லீரலால் முறையாக வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்த முடியாத நிலை உருவாகும் போதுதான், கல்லீரல் செல்களில் கொழுப்பு படிந்து, இந்த நோய் ஏற்படுகிறது. இதற்குக் காரணமாக இருப்பதில் முக்கியமானது மது பழக்கம். மது பழக்கமில்லை என்றால், அடுத்த முக்கியமான காரணம் நீரிழிவு நோய்தான்! உடல் பருமனும், மிகை ரத்தக் கொழுப்பும் இந்த நோய்க்கு வழிவகுக்கும். சில மருந்துகளாலும், பரம்பரை காரணங்களாலும்கூட இந்நோய் ஏற்படலாம்.
ஒரேயொரு ரத்தச் சர்க்கரை அளவை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது என்பதால், ரத்தச் சர்க்கரை அளவு சீராக இருக்கிறதா என்பதை முதலில் பார்த்துக்கொள்ளுங்கள். அதேபோன்று ரத்தக் கொழுப்பு அளவை கண்டறிவதும் அவசியம். மது பழக்கமிருந்தால் அதைக் கைவிடவும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது அவசியம். உணவில் மாவு,கொழுப்பு உணவைக் குறைத்து, காய்கறி, கீரை, பழங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் பலருக்கும் ஆரம்பத்தில் எந்தவிதத் தொந்தரவுகளும் இல்லாமல் இருப்பதால், அலட்சியமாக இருந்துவிடுவார்கள். இதன் காரணமாகக் கல்லீரலில் நாரிழை சேர்ந்து, கல்லீரல் செல்கள் நலிந்து சிரோசிஸ் நோய் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது. எனவே, எச்சரிக்கை தேவை!
-விடுதலை,12.12.16

வியாழன், 5 ஜனவரி, 2017

மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு

லண்டன், ஜன.5 மனித உடலில் இது வரை மறைந்திருந்த புதிய உறுப்பு ஒன்றினை அயர்லாந்தின் உடற்கூறியல் ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உடற்கூறியல் ஆய்வின் உச்ச கட்டமாக கருதப்படும் இந்த உறுப்பை பற்றி அறிந்து கொள்வோம்.

உடற்கூறியல் வரலாற்றில் சுமார் நூறு ஆண்டுகளாக மனித உடலில் மறைந்திருந்த புதிய உறுப்பு ஒன்றை அயர்லாந்தை சேர்ந்த உடற்கூறியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டு பிடித்துள்ளனர். மனித உடலின் குடல் பகுதியை வயிற்றுடன் இணைக்கும் 'நடுமடிப்பு', இத்தனை காலமாக பல்வேறு திசுக்கள் ஒன்றிணைந்த ஒரு அமைப்பாகவே கருதப்பட்டு வந்தது. இந் நிலையில், அயர்லாந்தை சேர்ந்த லிமெரிக் பல்கலைக்கழகத்தின் ஜெ.கேல்வின் காஃப்பே என்ற ஆராய்ச்சியாளர் வயிற்றின் நடுமடிப்பு பகுதியானது, தொடர்ச்சியான உள்கட்டமைப்பினை கொண்டதொரு தனிஉறுப்பு என்று உறுதிப்படுத்தியுள்ளார். மற்ற உறுப்புகளை போல் இதனை அணுகும் போது, இந்த உறுப்பு தொடர்பான  நோய்களை வகைப்படுத்தி, அவற்றை குணப்படுத் துவது எப்படி என்ற ரீதியில் அடுத்தகட்ட ஆய்வுகளை மேற் கொள்ள முடியும்.

உடலில் புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நடுமடிப்பு என்ற இந்த உறுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள தொடர்ச்சியான ஆய்வுகளின் முடிவிற்கேற்ப, இந்த புதிய உறுப்பின் இயக்கம் குறித்து இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள முடியும். இதன் இயக்கம் குறித்த தகவல்கள் அறிந்து கொள்ளும்பட்சத்தில் வயிறு மற்றும் குடல் பகுதி சார்ந்து பல்வேறு நோய்களை எளிமையாக குணப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-விடுதலை,5.1.17