மனித உடலில் இயற்கையாக உள்ள சிறுநீரகம் போன்று செயல்படும் செயற்கை சிறுநீரகத்தை அமெரிக்க மருத்துவர்கள் முதல் முறையாக உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர்.
மனித உடலில் இயற்கையாக உள்ள சிறுநீரகம் போன்று செயல்படும் செயற்கை சிறுநீரகத்தை அமெரிக்க மருத்துவர்கள் முதல் முறையாக உருவாக்கி சாதனை புரிந் துள்ளனர். பரிசோதனைச் சாலையில் செயற்கை சிறு நீரகத்தை உருவாக்க வேண்டுமென்பது அறிவியல் அறிஞர்களின் நீண்ட நாள் கன வாகும். இதற்கான முயற்சிகள் இதற்கு முன்பும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவற்றின் அளவு, எலி போன்ற சிறிய பிராணிகளுக்கு மட்டுமே பொருந்துவதாக இருந்தது.
மேலும், சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு பின் ரத்தம் ஓடாமல் உறைந்ததால் பயனற்று போனது. அமெரிக்காவின் வடக்கு கரோலினா நகரில் வேக் பாரஸ்ட் பாப்டிஸ்ட் மருத்துவ மய்யம் உள்ளது. இங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்ட அறிவியல் அறிஞர்கள், பன்றிக்கு பொருந்தும் அளவிலான சிறுநீரகத்தை உருவாக்கி உள்ளனர். பன்றியின் சிறுநீரகமும், மனித சிறுநீரகமும் ஒரே அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பு உருவாக்கப்பட்ட சிறுநீரகத்தில் ரத்த ஓட்டம் ஒரு மணி அல்லது 2 மணி நேரம் மட்டுமே இருந்து, பின் உறைந்தது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள சிறுநீரகத்தின் ரத்த ஓட்டம் 4 மணி நேரத்திற்கு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. ரத்த ஓட்டம் 4 மணி நேரத்திற்கு உறை யாமலிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், இதே அடிப்படையில் ஈரல், கணையம் போன்ற உறுப்புகளையும் பரிசோத னைச் சாலையிலேயே செயற்கையாக உருவாக்க முடியும்.
இவ்வாறு வேக் பாரஸ்ட் பாப்டிஸ்ட் மருத்துவ மய்ய இயக்குநரும், பேராசிரி யருமாகிய அந்தோணி அடலா தெரிவித்தார்.
இதய நோய்களை குணப்படுத்தும் புதிய விதை
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள புகையிலை ஆராய்ச்சி மய்யத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள புதிய விதைக்கு இதய நோய் களைக் குணப்படுத்தும் தன்மை இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
புகையிலை மூலம் புதிய விதை உற்பத்தியை புகையிலை ஆராய்ச்சி மய்யம் அறிமுகப் படுத்தி உள்ளது. இந்த விதையால் நிறைய பயன்கள் உள்ள தென்றும், குறிப்பாக புகை யிலையிலிருந்து எடுக்கப்படும் சோலினி சால் என்ற பொருள் இருதய நோய்க்கு நல்ல மருந்தாக அமையும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
-விடுதலை,18.9.14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக