வியாழன், 12 ஜனவரி, 2017

மருத்துவ உலகின் மாபெரும் புரட்சி: எண்ண ஆற்றலின்மூலம் கையை அசைத்த பக்கவாத நோயாளி




நியூயார்க், ஜூன் 26 பக்கவாதத்தால் பாதிக்கப் பட்டு கை, கால்கள் செய லிழந்த நபரின் எண்ண ஆற்றலை ஒருமுகப்படுத்து வதன் மூலம் மீண்டும் அவரை பழைய நிலைக்கு கொண்டுவர முடியும் என்பதை அமெரிக்க மருத்துவர்கள் நிரூபித் துள்ளனர்.

மத்தியமேற்கு அமெரிக் காவின் ஒஹியோ மாநில தலைநகர் கொலம்பஸ்-சைச் சேர்ந்தவர் லான் புர்கர்ட். தற்போது 23 வயதாகும் இவர், தனது 19- ஆவது வயதில் நண்பர் களுடன் குளிக்க கடலுக் குச் சென்றார். கடல் நீருக்குள் தாவிப் பாய்ந்து குதித்தபோது அலையின் சுழலில் மாட்டி, மண் குதி ருக்குள் சிக்கிக் கொண்ட புர்கர்ட்டை அவரது நண் பர்கள் காப்பாற்றி மருத் துவமனையில் சேர்த்தனர்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிறு மூளையின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டு கை, கால் களை அசைக்க முடியாத பக்கவாத நிலைக்கு தள் ளப்பட்ட அவருக்கு மறு வாழ்வு அளிக்க ஒஹியோ மாநில மருத்துவப் பல் கலைக்கழக ஆராய்ச்சி கூடத்தைச் சேர்ந்த மருத் துவர்கள் முடிவு செய்த னர்.

இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் அவரது மண்டை ஓட்டில் ஒரு சிறிய துவாரம் போட்டு, 0.15 அங்குல அகலம் கொண்ட ஒரு சிப் அவரது மூளைக்குள் பொருத்தப் பட்டது. 96 எலெக்ரோட் கள் கொண்ட அந்த சிப் அவர் என்ன நினைக் கிறார்? என்ற எண்ண ஓட்டத்தை ஒரு கணினி யின் மூலம் மொழிபெயர்க் கக் கூடிய தன்மை கொண்டதாகும்.

பின்னர், எண்ண ஓட் டத்தை ஒருமுகப்படுத்தி ஆற்றலை தூண்டுவதற் கான சில வார கால சிறப்பு பயிற்சிகளை அவருக்கு அளித்தனர். இதையடுத்து, மூளைக்குள் பொருத்திய சிப்பின் மொழிபெயர்ப்பை புரிந் துக் கொள்ளும் கணினி யில் இருந்து  கட்டளை களை பெற்று செயலாற் றக் கூடிய ஒரு தூண்டி (ட்ரிகர்) அவரது வலது கரத்தில் பொருத்தப்பட் டது.

கணினியுடன் இணைக் கப்பட்ட அந்தத் தூண்டி யின் மூலம் அவரது கரத்தின் தசைகளை செறிவுடன் தூண்டக்கூடிய சமிக்ஞைகளை (சிக்னல்) உள்வாங்கி, அந்த கட்ட ளைகளின்படி செயலாற் றும் ஒயர் இணைப்புகள் கொண்ட ஒரு பட்டை அவரது வலது கையில் கட்டப்பட்டது.

இந்த நவீன சிகிச்சை யின் மூலம் புர்கர்ட்டால் கையின் ஒரு விரலையா வது அசைக்க முடியும் என்று மருத்துவர்கள் பெரிதும் நம்பினர்.

ஆனால், முதன்முறை யாக தங்களது கண்டு பிடிப்பை மருத்துவர்களும், எண்ணத்தை ஒருமுகப் படுத்தும் ஆற்றலை புர்க் கர்ட்டும் செயல்படுத்த முயன்றபோது, யாரும் எதிர்பாராத பெரும் பலன் கிட்டியதை அறிந்த மருத் துவர்கள் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் திக்குமுக் காடிப் போயினர்.

ஒரேயொரு விரலை மட்டுமல்ல, திறந்திருந்த வலது கரத்தை முழுமை யாக மூடி, முஷ்டியாக்க வும், மூடிய கையை மீண்டும் திறந்து வெறுங் கையாக்கவும் புர்க்கர்ட் டால் முடிந்தது. அதையும் தாண்டி ஒரு படி மேலே சென்று விரல்களை அசைத்து ஒரு கரண்டி யையும் எடுத்த அவர் அனைவரையும் அசத்தி னார்.

மேட்ரிக்ஸ் திரைப்பட வரிசைகளில் வரும் நியோ கதாபாத்திரத்தை பார்த்து குழந்தைகள் ரசிப்பதைப் போல், புர்க்கர்ட்டின் செயலிழந்த கை அசை வதைப் பார்த்து வியந்த மருத்துவர்கள், மருத்துவ உலகில் ஒரு புதிய விடி யலை ஏற்படுத்தி விட்ட ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தனர்.

மீண்டும் நடமாட வைக்க முடியும்

இன்னும், சில ஆண்டு களில் மூளை பாதிப்பால் உடல் உறுப்புகள் செய லிழந்து படுத்த படுக்கை யாக கிடக்கும் உலகின் கோடிக்கணக்கான பக்க வாத நோயாளிகளை மீண்டும் நடமாட வைக்க முடியும் என்ற நம்பிக் கையையும், திருப்புமுனை யான மருத்துவ புரட்சி யையும் ஒஹியோ மாநில மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி கூடத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் உருவாக்கியுள்ளனர் என் பது மனித குலத்துக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்துள் ளது.
-விடுதலை,26.6.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக