எலும்புகள்தான் உடலின் அசைவுகளைச் சுலபமாக்குகின்றன. சிறு வயது முதல் உடல் உழைப்பு சீராக உள்ளவர்களுக்கு எலும்புத் தேய்மானம் சற்றுக் குறைவாக இருக்கும். உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்களுக்கு எலும்புத் தேய்மானம் அதிகமாக ஏற்படும்.
பொதுவாக ஆண், பெண் இருவருக்கும் 30 முதல் 35 வயது வரை எலும்பு நல்ல வலிமையாக இருக்கும். பிறகு எலும்பின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும்.
பால் சாப்பிட்டால் எலும்பு நல்ல வலிமை பெறும். பாலில் வைட்டமின்கள், புரதம் மற்றும் பொட்டாசியம் உள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியமான எலும்புக்கு உதவிபுரிகின்றன. தயிர், மோர் போன்ற உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.
எலும்புகளுக்கு எந்த அளவுக்கு கால்சியம் அவசியமோ, கால்சியத்தைக் கிரகிக்க வைட்டமின் டி-யும் அவசியம்.தினமும் காலை மற்றும் மாலை வேளையில் அரை மணி நேரம் சூரிய ஒளி நம் சருமத்தில் பட்டாலே, வைட்டமின் டி கிடைத்துவிடும்.
மீன் சாப்பிடுவதாலும் எலும்பு ஆரோக்கியமாக இருக்கும். மீனில் வைட்டமின் பி மற்றும் இ, கால்சியம், இரும்பு, மக்னீசியம் அடங்கியுள்ளன. எலும்பு வலிமையாக இருக்க, பேரீச்சம்பழமும் சாப்பிடலாம்.
ஆரஞ்சுப் பழத்தில், கால்சியம் மற்றும் வைட்ட மின் சி நிறைவாக உள்ளன. இதுவும், எலும்புக்கு வலிமை தரும். வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுவதாலும், எலும்புகளுக்கும் தசைக்கும் வலிமை கிடைக்கும்.
முட்டையில் உள்ள புரதம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் எலும்பு மற்றும் தசைகளை வலிமை பெறச் செய்கின்றன. அசைவ உணவுகள் உட்கொள்வதாலும் எலும்புகளுக்கும் தசைக்கும் வலிமை கிடைக்கும்.
அதிக உடல் எடை எலும்பு மூட்டுக்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி, தேய்மானத்தை விரைவு படுத்தும். உடல் பருமனானவர்கள் எடையைக் குறைப்பதன் மூலம் முதுகெலும்பு, கால் மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக் கலாம்.
- விடுதலை நாளேடு, 23.4.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக