திங்கள், 2 ஏப்ரல், 2018

கொலஸ்ட்ரால் பற்றி...



நம் உடம்பில் உள்ள கொலஸ்ட்ராலிலும், கொழுப்பு - நல்ல கொழுப்பு (HDL), கெட்ட கொழுப்பு (LDL) என்று

இரண்டு வகைகள் உள்ளன. உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று நம்பிக் கொண்டி ருக்கிறது மருத்துவ உலகம்.

அதன் காரணமாக இதய நோயைத் தடுக்க, உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிப்பது, கெட்ட கொலஸ்ட் ராலின் அளவைக் குறைப்பது என்ற அணுகுமுறையை அது பின்பற்றி வருகிறது. 1 லிட்டர் ரத்தத்தில் 1.03 மில்லி மோலுக்கும் குறைவாக நல்ல கொழுப்பு இருந்தால் இதயத்தில் பிரச்சினை வரும் என்று முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவித்திருந்தது தான் இந்த அணுகு முறைக்கு அடிப்படை.

ஆனால் கடந்த வாரம் (ஜூலை 22) பன்னாட்டு அளவில் புகழ்பெற்ற மருத்துவ ஆய்வு இதழான லேன்சட் தனது இணைய தளத்தில் வெளி யிட்டுள்ள ஒரு தகவல், நல்ல கொலஸ்ட்ரால் அளவிற்கும் இதய நோய்க்குமிடையே சம்பந்தம் இருப்பதாகக் கருதி மேற்கொள் ளப்பட்ட அணுகுமுறையைத் தூக்கி யெறிந்து விட்டது!

முதல்நிலை இதய நோய்கள் ஏற்படாமல் தடுப்பது எப்படி என்பதை ஆராய 17,800 பேரிடம் ஜூபிடர் என்ற ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் சரி பாதிப் பேருக்கு அதாவது 8,900 பேருக்கு, உடலில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் மருந் தான ரோசுவாஸ்டாட்டின், தினம் 20 மி.கி. அளவிற்குக் கொடுக்கப்பட்டது.

மீதமுள்ள மற்றொரு பாதியினருக்கு மருந்து கொடுக்கப் படவில்லை. ஆய்வின் முடிவுகள், நல்ல கொலஸ்ட்ரால் அளவிற்கும் இதய நோய்க்கு மிடையே சம்பந்தம் ஏதுமில்லை எனத் தெரிவிக்கின்றன. முதல் நிலை இதய நோய் ஏற் படாமல் தடுக்க, கெட்ட கொலஸ்ட் ராலின் அளவைக் கணிசமாகக் குறைத்து விட்டால் போதும், நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை எனத் தெரிவிக் கின்றன.

ஜூபிடர் ஆய்வறிக்கை இதுவரை மருத்துவ உலகம் கொண் டிருந்த நம்பிக்கைக்கு முற்றிலும் மாறாக உள்ளதால் மருத்துவ உலகில் ஒரு சிறிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

- விடுதலை நாளேடு, 2.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக