மருத்துவம்:
– மருத்துவர் இரா. கவுதமன்
அளவான குடும்பம் வளமான வாழ்வு என்றும்,’’ நாம் இருவர் நமக்கு இருவர் என்றும்; ஒரு குடும்பம், ஒரு குழந்தை” எனவும், பலவிதமான குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தும் வண்ணம் சுவரெழுத்து, துண்டறிக்கைகள் வெளியிட்டு; ‘திராவிட மாடல்’ அரசுகள் பாமர மக்களிடையே குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பியதன் விளைவாக தமிழ்நாடு குடும்பக் கட்டுப்பாட்டில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.
“ஆண்டவன் கொடுத்து விட்டான்” என்று குழந்தைப்பேற்றை கடவுள் மேல் போட்டுவிட்டு பிள்ளைகளைப் பெறும் காலம் மாறிப்போய், நமக்கு குழந்தை வேண்டுமானால் பெற்றுக் கொள்ளலாம்; வேண்டாமென்றால் விட்டுவிடலாம்; வேண்டும் பொழுது பிள்ளை பெற்றுக்கொள்ளலாம்; தேவையான அளவு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற தெளிவு இப்போது மக்களுக்கு வந்துவிட்டது.
கருத்தடை முறைகள்:
* கருவுறும் நாள்
களில் உடலுறவின் போது எச்சரிக்கையோடு இருத்தல். (During Ovulation Day).
* உடலுறவின்போது விந்து பெண்குறிக்
குள் விடாமல் தவிர்த்தல் (Cetus Interruptus).
* கருத்தடை மாத்திரைகள் (Contraceptive Pills), கருத்தடை களிம்பு (Contraceptive Gels), ஆணுறைகள் (Colonus) பயன்படுத்தல்.
* உள்பொருத்திகள் (Implants).
* பட்டைகள் (Patches).
* பெண் குறி வளையங்கள் (Vaginal Rings).
* கருப்பை உள் பொருத்திகள் (Intra latrine devices).
* கருத்தடை அறுவை மருத்துவம் (Sterilization surgery)
* கருத்தடை களிம்புகள்: (Contraceptive Gels): உடலுறவிற்குமுன் இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் கருத்தடையைச் செய்ய முடியும். மருந்துக் கடைகளில், மருத்துவர் மருந்துச் சீட்டு மூலம் இவற்றைப் பெறலாம்.
* உள்பொருத்திகள் (Implants): 99 விழுக்காடு உறுதியாக கரு உண்டாவதை இந்த உள்பொருத்திகள் (மினீஜீறீணீஸீts) தடுக்க வல்லவை. ஒருமுறை பொருத்தி விட்டால் குறைந்தது 3 ஆண்டுகள் கரு உருவாவதைத் தடுக்கக்கூடிய கருத்தடைப் பொருள் இது. கருத்
தடை மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளக்கூடிய நிலையை இவை தவிர்க்கின்றன. கருவுற நினைக்கும் நேரத்தில் எளிதில் அகற்றி விடலாம். பெண்களுக்கு மட்டுமே வைக்கக் கூடிய ஒரு எளிய கருத்தடைச் சாதனம் இது. மாத விலக்கம் வந்த அய்ந்து நாள்களுக்குள் இதைப் பொருத்த வேண்டும். ஒரு தீக்குச்சி அளவே, நெகிழியால் ஆன இந்த உள்பொருத்தி மேல் கையின் தோலில் சிறியதாக ஒருகீறல் எற்படுத்திப் பொருத்தப்படும். இதில் “புரொஜெஸ்ட்ரான்” என்ற ஊக்கி நீர் இருக்கும். இது தேவைப்படும் பொழுது வெளிப்பட்டு, இரத்தத்தில் கலந்து, கரு உண்டாவதைத் தடுக்கும். இதைப் பொருத்த ஒரு சில நிமிடங்களே தேவைப்
படும். ஊசி போடுவதைப் போன்ற உணர்வே பொருத்திக் கொள்பவர்களுக்கு இருக்கும்.
* பட்டைகள் (Patches):
இப்பட்டையை உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஒட்டிக் கொள்ளலாம். ஒரு வாரம் வரை கரு உண்டாவதைத் தடுக்கும் இப்பட்டையை, ஒவ்வொரு வாரமும் புதியதாக ஒட்டிக் கொள்ள வேண்டும். 3 வாரங்கள் கழித்து, ஒரு வாரம் ஒட்டத் தேவையில்லை. மிகவும் பயனுள்ள கருத்தடைப் பொருள் இது. ஈஸ்ட்ரஜன், புரொஜெஸ்ட்ரான் போன்ற ஊக்கி நீர்கள் இந்தப் பட்டையில் இருந்து வெளிப்பட்டு, தோலால் உறிஞ்சப்பட்டு, கரு உருவாவதைத் தடுக்கும். மிகவும் எளிமையான கருத்தடைப் பொருள் இது.
* பெண்குறி வளையம் (Vaginal Ring): மிகவும் மென்மையான, நெகிழியால் ஆன சிறிய வளையம். இதுவும் ஊக்கி நீர்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி கரு உண்டா
வதைத் தடுக்கிறது. பெண்ணின் குறியினுள் பொருத்தப்படுவது இது. 99 விழுக்காடு வெற்றி-கரகமாகச் செயல்படும் இக்கருவி, ஒரு முறை பொருத்தப்பட்டால் ஒரு மாதம் வரை செயல்படும். இக்கருவி மாதவிலக்கம் ஏற்படும் பொழுது ஏற்படும் இரத்தப் போக்கு, அதிக வலி ஆகியவற்றைக் குறைத்து சில நேரங்களில் தானாகவே கழன்று வெளியே வந்து விடும். ஆனால், பயனாளி அவரே மீண்டும் பொருத்திக் கொள்ளலாம்.
* கருப்பை உள்பொருத்திகள் (Intra latrine devices): செம்பால் (Copper) ஆன ஜி வடிவில் ஆன ‘காப்பர்’ ஜி என்றழைக்கப்படும் இக்கருவி, கருப்பையின் உள் பொருத்தப்படும். மருத்துவர் அதற்கான கருவி மூலம் எளிதில் இதைப் பொருத்தி விடுவார். மிகவும் நம்பிக்கையான கருத்தடைக் கருவி இது. எளிமையாக எந்த வலியுமின்றி பொருத்தி விடலாம். எந்தத் தனிக் கவனமும் தேவையில்லை, அதிக செலவு வைக்காத நீண்ட நாள் செயல்படும் கருவி இது. தேவையில்லை என்றால் எளிதில் மருத்துவர் எடுத்து விடுவார். எடுப்பதும் மிகவும் எளிதானது பல ஆண்டுகள் எந்த வித பாதிப்போ, தொல்லையோ கொடுக்காத பாதுகாப்பான கருவி இது.
* கருத்தடை அறுவை மருத்துவம்: (Sterilization surgery) கருத்தடை அறுவை மருத்துவம் ஓர் எளிமையான மருத்துவம். ஆண், பெண் இரு பாலரும் செய்து கொள்ளக் கூடிய அறுவை மருத்துவம் இது. ஆண்களுக்கு விந்துக் குழாயைக் கட்டி, வெட்டி விடும் அறுவை மருத்துவம் இது. ஆபத்தில்லாத, பத்து நிமிடங்களில் முடிந்து விடும் மருத்துவம் (Vasectomy).
இந்த அறுவை மருத்துவம் இன்று சிறு கீறல் கூட போடாமல் (No Scalpel Surgery) செய்யப்படும் அறுவை மருத்துவம். நிறைய ஆண்கள் இம்மருத்துவம் செய்து கொண்டால் “ஆண்மைக் குறைவு” ஏற்பட்டு, உடலுறவில் கோளாறு ஏற்பட்டு விடுமோ என்று அச்ச உணர்வு கொள்கின்றனர், குழந்தைப் பேறு உண்டாவதைத்தான் இந்த மருத்துவம் தடுக்குமே ஒழிய, உடலுறவில் எந்தச் சிக்கலும் ஏற்படாது. பெண்களுக்குச் செய்வதைவிட, ஆண்களுக்கு மிகவும் எளிமையான அறுவை மருத்துவம் இது.
* பெண்களுக்கும் இதேபோல் கருக்குழாயைக் கட்டி, வெட்டி செய்யப்படும் அறுவை மருத்துவம் (Tubectomy) இது. குழந்தை பிறந்த உடன் ‘கருப்பை முழுமையாகச் சுருங்கி, இயல்புநிலையை அடையும் முன் எளிதாக இம்மருத்துவம் (PS-Past Partum Sterilization) செய்து கொள்ளளாம். மற்ற காலகட்டங்களில் கூட இந்த அறுவை மருத்துவம் செய்து கொள்ளலாம். ஓரிரு நாள் மருத்துவமனையில் இருந்தால் போதும். இப்பொழுது நவீன முறையில் வயிற்று உள் நோக்கி (Laproscopy) முறையில் இந்த அறுவை மருத்துவம் செய்யப்படுகிறது. முழுமையான குடும்பக் கட்டுப்பாடு முறையாக இருந்தாலும் மீண்டும் குழந்தை வேண்டுமென்றால் மீண்டும் அறுவை மருத்துவம் (Re-Canalisation) மூலம், துண்டாக்கப்பட்ட கருக்குழாய்களை இணைப்பதன் மூலம், குழந்தைப் பேற்றை மீண்டும் பெறமுடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக