மனிதன் உண்ட உணவை செரிப்பது முதல், கழிவை வெளியேற்றுவது வரை முக்கியமான வேலைகளை செய்வது கோடிக் கணக்காண நுண்ணுயிரிகள் தான்.
இந்த நல்ல நுண்ணுயிரிகள், நாம் பலவித சிகிச்சைகளுக்காக எடுத்துக் கொள்ளும், ஆன்டிபயாடிக் மருந்துகளால் கூண்டோடு அழித்து வெளியேற்றப்படுகின்றன. இத னால், சிறிது காலத்திற்கு குடல் பகுதியே நிலைகுலைந்து போகிறது. சரி, குடலில் நல்ல நுண்ணுயிரிகள் மீண்டும் தழைக்க எத்தனை காலம் ஆகும்?
கோபன்ஹேகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஆறு மாதங்களாக மேற் கொண்ட ஆய்வின் முடிவில், பெரும்பாலான நுண்ணுயிரிகள் மீண்டும் குடலில் பல்கிப் பெருகுவதற்கு, ஆறு வாரங்கள் வரை ஆகும் என்று தெரிய வந்தது. ஆனால், ஆறு மாதங்களாகியும் சில நல்ல வகை பாக்டீ ரியாக்கள் திரும்பவும் தழைக்கவே இல்லை என்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
புரோபயாடிக் என்று பாட்டிலில் அடைத்து விற்கப்படும் நல்ல பாக்டீரி யாக்களை சாப்பிடலாமா? அதனால், நல்ல நுண்ணுயிரிகள் குடலில் தழைக்கும் என்றாலும், அதிலும் சில மோசமான பக்கவிளைவுகள் இருப்பதாக அண்மைக்கால ஆய்வுகள் எச்சரித்துள்ளன.
என்ன தான் செய்வது? நல்ல பாக்டீரி யாக்களின் எண்ணிக்கையை வெளியேற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகளை அடிக்கடி உட்கொள்ளாமல் பார்த்துக்கொள்வதே சிறந்த வழி என்கின்றனர் ஆய்வாளர்கள். அளவுக்கு மிஞ்சினால் ஆன்டிபயாடிக்கும் நஞ்சு.
- விடுதலை நாளேடு, 8.11.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக