திங்கள், 6 ஜூலை, 2020
'ஆஸ்பிரின்' மாத்திரையின் மகிமை அறிவீர்களா?
சனி, 13 ஜூன், 2020
ஹேப்பி ஹைப்பாக்சியா
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 90% பேர் அறிகுறிகள் இல்லாமல் இருப்பதை நாம் அறிவோம்
இதில் அறிகுறிகள் வெளியே தோன்றாத நிலையிலும் பலருக்கு இந்த ஹேப்பி ஹைபாக்சியா எனும் பிரச்சனை ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
"ஹேப்பி ஹைப்பாக்சியா" என்றால் என்ன?
இந்த வகை மக்களுக்கு நுரையீரலில் பல்வேறு ரத்தக் கட்டிகள் (Blood clots) ஏற்பட்டு, நுரையீரலின் நுண்ணிய ரத்த நாளங்களை அடைத்துக் கொண்டு, நுரையீரலின் முக்கிய வேலையான ரத்தத்தைத் தூய்மை செய்து ஆக்சிஜனேற்றம் செய்வதில் தொய்வை ஏற்படுத்தும்.
இதனால் ரத்தத்தில் தேவையான அளவு ஆக்சிஜன் இருக்க வேண்டிய இடத்தில், குறைவான அளவே இருக்கும். இதை SpO2 எனும் அளவைக் கொண்டு அறிய முடியும். SpO2 என்றால் Peripheral Capillary Oxygen Saturation என்று பொருள்.
நுரையீரலில் இருந்து ஆக்சிஜனேற்றம் செய்யப் படும் நமது ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜனை, உடல் முழுவதும் கொண்டு செல்லும் பொறுப்பை ஏற்றுச் செய்வது ஹீமோகுளோபின் எனும் இரும்பு கலந்த புரதமாகும்.
ஹேப்பி ஹைப்பாக்சியாவில் நுரையீரல் பழுதடைவ தால் தேவையான அளவு ஆக்சிஜன் உடல் முழுவதும் சென்று சேராது.
பொதுவாக இவ்வாறு தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்காத நிலையை Hypoxia (ஹைப்பாக்சியா) என்று அழைப்போம்.
இந்த வகை ஹைப்பாக்சியா நிலைகளில்,
- மூச்சு விடுவதில் சிரமம் (Shortness of Breath)
- மூச்சுத் திணறல் (Breathlessness)
- ஏங்கி மூச்சு விடுதல் (பெருமூச்சு) (Gasping) போன்ற அறிகுறிகள் தென்படும்.
பொதுவாக SpO2 அளவு 95-100% என்ற அளவில் இருக்கும். இதில் 93%க்குக் கீழ் ஆக்சிஜன் அளவு குறைந்தால், அது ஹைபாக்சியா எனும் அளவு என்று கொள்ளப்படும்.
இந்த ஹேப்பி ஹைபாக்சியா எனும் இந்த பிரச்சனையில் ஆக்சிஜன் அளவுகள் 90%, 80%, 70%, 60% வரை கூட குறைந்திருந்தாலும், நோயாளிக்கு எந்த வெளிப்புற அறிகுறியும் தோன்றாமல் இருக்கும்.
ஆனாலும் நுரையீரலில் பெரும்பகுதி ரத்தக் கட்டிகளால் அடைக்கப்பட்டு அதன் செயல்திறன் மிகவும் குறைந்து விடும்.
அடுத்து, குறைவான அளவு ஆக்சிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்வதால் முக்கியமான உறுப்புகளான 1.மூளை, 2.இதயம், 3.சிறுநீரகம் போன்றவற்றிற்கு, தொடர்ந்து மிகக் குறைவான அளவு ஆக்சிஜனே கிடைக்கும்.
இதன் விளைவாக அந்த உறுப்புகளின் செயல்திறன் குறைந்து போனதும், சிறுகச் சிறுக அவை செயலிழக்கும் நிலை உருவாகலாம். இதை Multi Organ Dysfunction என்று அழைக்கிறோம்.
சரி.. இவ்வளவு குறைவாக ஆக்சிஜன் அளவுகள் ரத்தத்தில் இருக்கும் நிலை வந்தாலும், எப்படி வெளியே தெரியாமல் இருக்கிறது?
பொதுவாக உயர்ந்த மலையேற்றத்தில் ஈடுபடும் மக்களுக்கு அல்லது உயர்ந்த மலைப் பகுதிகளில் வாழ்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவு ஆக்சிஜன் இருக்கும். காரணம் அவர்கள் வாழும் இடங்களில் காற்றிலுள்ள ஆக்சிஜன் அளவு, தரைமட்டத்தை விட குறைவாகவே இருக்கும்.
அதற்கு ஈடாக அவர்கள் ரத்தத்தில் அதிகமான ரத்தச் சிவப்பு அணுக்கள் உருவாகும். (POLYCYTHEMIA)
மேலும் மலையேற்றம் செய்பவர்கள் சரசரவென்று மேலே ஏறாமல், ஆங்காங்கே இடைவெளி விட்டு சிறிது தங்கி, பிறகு ஏறுவார்கள். இதனால் அவர்கள் ரத்தத்தில் ஆக்சிஜன் குறைவதும், ரத்தச் சிவப்பு அணுக்கள் அளவுகளில் கூடுவதும் ஒரு சேர மெதுவாக நடக்கும் இதை "ACCLAMATIZATION" என்று கூறுவோம். அதாவது உயரமான இடங்களில் வாழ்வதற்கு உடல் தன்னை தகவமைத்துக்கொள்ளும் கலை.
இந்த வகை தகவமைப்பு என்பது நுரையீரல் நல்ல முறையில் செயல்படுபவர்களுக்கு நிகழும்
ஆனால்,
* நுரையீரலில் கோவிட் போன்ற நிமோனியா தொற்று இருப்பவர்களுக்கு
* உடல் பருமன் இருப்பவர்களுக்கு
* நுரையீரல் அழற்சி/ ஆஸ்துமா போன்ற நோய் இருப்பவர்களுக்கு
* வயதானவர்கள், குழந்தைகள் போன்றோருக்கு அத்தனை சிறப்பாக நிகழாது.
எனவேதான், இவ்வகை மக்கள் மலையேற்றத்தில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளனர்.
இதே விசயத்தை கோவிட்19 மூலம் நிகழும் இந்த சைலண்ட் ஹைபாக்சியாவிற்கு பொறுத்திப் பாருங்கள். அதாவது நன்றாக இருக்கும் நுரையீரலை கொரோனா வைரஸ் தாக்குகிறது. அது தாக்கும் போது நுரையீரலின் சிறு, குறு ரத்த நாளங்களில் பெரும்பான்மைக் கட்டிகளால் அடைக்கப்பட்ட நிலையில் கூட வெளியில் தெரியாமல் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு என்னென்ன அறிகுறிகள் போன்ற வாய்ப்பு இருக்கிறது. உடல் முழுவதும் குறைவான ஆக்சிஜன் கிடைப்பதால்
- உடல் சோர்வு
- உடல் வலி
- மூச்சு விடுவதில் லேசான சிரமம் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.
ஓட்டம் / மலையேற்றம் / அதிக ஆக்சிஜன் கோரும் உடற்பயிற்சிகளைச் செய்யும் போது இந்த நிலை முற்றும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் இத்தகைய நிலையில் மருத்துவமனையை அடையும் மக்களுக்கு ரத்தக் கட்டியைக் கரைக்கும் ஹெபாரின் மருந்து, ஆக்சிஜன் மற்றும் வெண்ட்டிலேட்டர் உதவி கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலை இருக்கிறதா என்பதை எப்படி கண்டறிவது?
Pulse Oximeter எனும் கருவி மூலம் ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜனின் அளவுகளை அறிய முடியும். கை விரல்களில் மாட்டி சோதிக்கும் finger pulse oximeter கருவிகள் இப்போது பார்மசிகளில் பல நிறுவனங்களின் தயாரிப்பில் கிடைக்கின்றன.
அனைவரும் தங்களின் Spo2 அளவுகளை தொடர்ந்து இந்த பல்ஸ் ஆக்சிமீட்டர்களை வாங்கி சோதித்து கொண்டே இருக்க வேண்டுமா?
தேவையில்லை! காரணம் சந்தையில் கிடைக்கும் பல்வேறு வகை பல்ஸ் ஆக்சிமீட்டர்களின் தரம் குறித்து ஆய்வு செய்து கூறுவது இயலாது. அனைவராலும் அதை வாங்கிப் பயன்படுத்தவும் முடியாது.
ஆனால் கோவிட் தொற்று பரவி வரும் நோய் தொற்று மண்டலங்களில் இருப்பவர்களுக்கு அதீத உடல் அசதி / சோர்வு / உடல் வலி /மூச்சு விடுவதில் சிரமம்/ திணறல் இருந்தால் மருத்துவமனையை அணுகுவதில் நேர விரயம் இருக்கக்கூடாது.
காரணம், நமக்குத் தோன்றும் ஒரே அறிகுறியாக அது இருக்கலாம்.
சைலண்ட் ஹைபாக்சியா என்பது கோவிட் நோயின் ஒரு வடிவம் என்பதை அறிந்துகொண்டோம். தொடர்ந்து விழிப்புடன் இருப்போம்.
செவ்வாய், 28 ஏப்ரல், 2020
கரோனா (SARS-CoV-2) வைரசு
புதன், 1 ஏப்ரல், 2020
நாவல் கரோனா வைரஸ், அறிந்ததும் - அறியாததும்
சனி, 28 மார்ச், 2020
உடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா வைரஸ்
புதன், 11 மார்ச், 2020
மாரடைப்பு என்றால்....
மாரடைப்பு (Heart Attack) என்பது என்ன?
இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் கொழுப்புப் படிந்து, ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும் போது, மாரடைப்பு (Heart Attack) உருவாகிறது. அதாவது, ரத்த ஓட்டம் தடைபடுவதால் அல்லது ரத்த ஓட்டம் இல்லாமல் போவதால் இதயத்துக்குத் தேவை யான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், ரத்த செல்கள் அழியத் தொடங்கும். இதனால், இதயம் பாதிக்கப்பட்டு, தனது துடிப்பை நிறுத்திக்கொள்வதே மாரடைப்பு.
திடீர் இதயத்துடிப்பு முடக்கம்(Sudden Cardiac Arrest) என்பது என்ன?
நம் இதயத்துக்கு மத்திய நரம்பு மண்டலத்தில் இருந்து மின்னோட்டம் வருகிறது. சில காரணங்களால் இந்த மின்னோட்டத்தில் ஏற்ற இறக்கங்கள் (Fluctuations) ஏற்படும்போது, இதயத் துடிப்பு திடீரென அதிகரித்தும் குறைந்தும் தாறுமாறாக செயல்படுகிறது. இதனால், ஒரு கட்டத்தில் எரிந்துகொண்டிருக்கும் பல்பு ணஃபீஸ் போவதைப் போல நமது இதயம் சட்டென தன் துடிப்பை நிறுத்திக்கொள்கிறது. இந்த நிலையையே திடீர் இதயத் துடிப்பு முடக்கம் (Sudden cardiac arrest) என்பார்கள். இதயத் துடிப்பின் திடீர் நிறுத்தத்தால், உடலுக்குத் தேவையான ரத்த ஓட்டம், ஆக்ஸிஜன் தடைபடுகிறது. தொடர்ச்சியாக 10 நிமிடங்களுக்கு மேல் மூளைக்குச் செல்லும் ரத்தத்தில் தடை ஏற்படுவதால் மயக்க நிலைக்குச் சென்று, சுயநினைவு இழக்கும் நிலை ஏற்படுகிறது.
வேறுபாடு அறிவது எப்படி?
மாரடைப்பு ஏற்படும்போது முதலில் நெஞ்சுப் பகுதியில் ஒரு விதமான வலி (நெஞ்சைப் பிசைகிற மாதிரியோ, அழுத்துகிற மாதிரியோ வலி) ஏற்படுவது போல தோன்றும். இந்த வலி கழுத்து மற்றும் இடது கை பகுதிகளில் பரவும், ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். இதயத்துடிப்பு இருக்கும், மூச்சுத் திணறல் உண்டாகும். வியர்த்துக் கொட்டி, மயக்கம் வரும். இதுபோன்ற அறிகுறிகளை வைத்தே மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை அறியமுடியும். அதாவது மாரடைப்பு வந்தவர்கள் நெஞ்சுவலியைச் சுட்டிக்காட்டும் அளவுக்கு சுயநினை வோடுதான் இருப்பார்கள். எனவே, உடனடியாக ரத்தம் உறைவதைத் தடுக்கும் ஆஸ்பிரின் போன்ற மாத்தி ரைகள் எடுத்துக்கொண்டு இதய அறுவைசிகிச்சை செய்யும் அளவுக்கு வசதி உள்ள மருத்துவமனைக்குச் சென்றால், அங்கே மருத்துவர்கள் தேவையான சிகிச்சைகள் அளித்து உயிரைக் காப்பாற்றுவர்.
திடீர் இதயத்துடிப்பு முடக்கம். மாரடைப்பைவிடவும் அபாயகரமானது, ஏனெனில் எந்தவித அறிகுறியும் இல்லாமல், திடீரென ஒருவர் நிலைகுலைந்து, மயக்க நிலையில் தரையில் சாய்ந்தால் அது திடீர் இதயத் துடிப்பு முடக்கமாக இருக்கலாம். இதயத் துடிப்பு நின்றுவிடுவதால், இதயத்தின் உள்ளிருந்து ரத்தத்தை உந்தித் தள்ளும் பணியை இதயம் நிறுத்திவிடுகிறது. எனவே, இதயத்திலிருந்து பிற உறுப்புகளுக்கு ரத்தம் செல்ல, நெஞ்சுப் பகுதியில் வேகமாக அழுத்தம் கொடுத்து, வாயோடு வாய் வைத்து செயற்கை மூச்சு அளிக்கும் முதலுதவி அளிக்க வேண்டும். இதற்கு சி.பி.ஆர் (Cardiopulmonary Resuscitation) முத லுதவி என்று பெயர். தாமதிக்காமல் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் கொண்டுசென்றால் டிஃபிப்ரிலே ஷன் (Defibrillation) கருவி மூலம் மின் தூண்டல் ஏற்படுத்தி, இதயத்துக்கு உயிரூட்ட முடியும். திரைப் படங்களில் நெஞ்சுப் பகுதியில் அயன் பாக்ஸ் போல ஒரு கருவியை வைத்து வைத்து எடுப்பார்களே அதுதான் டிஃபிப்ரிலேஷன் கருவி.
- விடுதலை நாளேடு 9. 3.20
செவ்வாய், 3 மார்ச், 2020
இதய பாதிப்பிலிருந்து காக்கும் வழிகள்
மனிதனின் உயிரைப் பறிக்கும் நோய்களுள் முக்கியமானது இதய செயலிழப்பு! அதிலும், சர்க்கரை நோய் கொண்டவர்களுடைய இதயம் மற்ற சாதாரண இதயத்தைவிட மும்மடங்கு பலவீன மானது.
இதயப் பாதிப்புகள் பிறப்பிலேயே ஏற்படலாம். சிறுவயதிலும் ஏற் படலாம். நடுத்தர வயதிலும் ஏற்பட லாம், வயதான வருக்கும் ஏற்படலாம். இதில், நடுத்தர வயதினருக்கும் முதியவருக்கும் வரும் இதய நோய்களை நாம் முதன்மையாகக் கவனிக்க வேண்டும்.
இதற்கான மிக முக்கிய காரணங்கள்
# உடல்பருமன்
# உடல் உழைப்பின்மை
# நீரிழிவு நோய் கட்டுப் பாடின்மை
# தொடர் மனச்சிதைவு நோய்
# தொடர் மருத்துவப் புறக் கணிப்பு
அய்ம்பது வயதினரைத் தாக்கிக் கொண்டிருந்த இந்த மரண நோய், இன்று இருபது வயதினரைக்கூட அதிகமாகத் தாக்குகிறது.
குறிப்பாக, இந்த இதயத் தமனி நோய்கள் சர்க்கரை நோயாளிகளை அதிகமாகத் தாக்குகின்றன.
இதற்குத் தீர்வு என்ன?
5 வகையான 100-களைக் கண்காணித்தலும் 3 வகையான 'உ'களை கடைப்பிடித்து வருவதுமே இதற்கான தீர்வாகும்...
# நம் உயரத்திலிருந்து 100அய்க் கழித்தால் வரும் எண்தான் நம் உடல் எடையாக இருக்க வேண்டும்.
# நம் சராசரி ரத்தச் சர்க்கரை அளவு 100அய்த் தாண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
# நம் இதய ரத்த கால்சியம் ஸ்கோர் எனும் இதய நாள கால்சியம் படியும் இலக்கம் 100க்கும் கீழ் இருத்தல் அவசியம்.
# நம் கெட்ட கொழுப்பு எண் 100அய்த் தாண்டாமல் இருக்க வேண்டும்
# நம் உடல் தயாரித்திடும் நல்ல கொழுப்பு எனும் எண் 100 அய் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்.
உணவு, உள்ளுணர்வு, உடல் உழைப்பு எனும் இந்த மூன்றை முறையாகப் பாதுகாத்தால், நிச்சயமாக இதயம் பாதுகாக்கப்படும்.
- விடுதலை நாளேடு, 2.3.20