சென்னை, ஜூன் 30- தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்து வப் பல்கலைக்கழக வளா கத்தில் 28.06.2018 வியாழக் கிழமை மாலை 6.00 மணியள வில் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு குடும்ப நலத்துறை சார்பில் நடைபெற்ற விழா வில் சிறந்த பல் மருத்துவருக் கான விருதினை, ஊற்றங்கரை பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி பழ னியப்பன், வேலூர் மாவட்ட மகளிரணி செயலாளர் ச.கலைமணிபழனியப்பன் வாழ்விணையரின் இளைய மகனும் பெரியார் மருத்துவ ரணி செயலாளரும், விழுப்பு ரம் மருத்துவக் கல்லூரியின் பல் மருத்துவத்துறை தலை வருமான மருத்துவர் பழ.ஜெகன்பாபு அவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் விருது அளித்து பாராட்டினார்.
இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட தலைவர் வி.இ. சிவக்குமார், மாவட்ட செய லாளர் கு. இளங்கோவன், மாவட்ட மாணவர் கழக தலைவர் ந.கண்ணன், மாவட்ட மளிரணி செயலாளர் ச.கலைமணி பழனியப்பன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ந.தேன்மொழி, குடியாத்தம் நகர மகளிர் பாசறை தலைவர் சி.லதா ஆகியோர் கலந்துகொண்டு கழக சார்பில் பாராட்டை தெரிவித்தார்கள்.
- விடுதலை நாளேடு, 30.6.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக