உணவுக் கட்டுப்பாட்டுக்காக சாப்பிடாமல் இருப்பதால் என்னபயன்? உடலின் எடையைக் குறைப்பதைத் தவிர, அது வயதையும் குறைக்க உதவும் என, ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அண்மையில் கண்டறிந்து உள்ளனர்.
அவ்வப்போது உணவு உண்ணாமல் இருக்கும் போது, உடலுக்குள், ‘கீடோசிஸ்’ என்ற ஒரு வேதியல் நிகழ்வு நடக்கிறது.
உடல், தெம்புக்காக குளூகோசை நாடாமல், உடலில் சேமிக்கப்பட்டுள்ள உபரி கொழுப்பை செரிக்கிறது. உடலில் தெம்பு தரும் சில வேதிப் பொருள்களும் இருக்கின்றன.
அவற்றை, ‘கீடோன்’ என விஞ்ஞானிகள் பெய ரிட்டுள்ளனர். இந்த கீடோன்களில் பீட்டா ஹைட்ராக் சிபியூடைரேட் என்ற மூலக்கூறும் உள்ளது.
இந்த மூலக்கூறுகள் ரத்த நாளங்களின் செல் களை வேகமாகப் பெருக்கி, உடல் முதுமையடையும் வேகத்தை மட்டுப்படுத்துவதாக ஒரு ஆய்வில் ஹார்வர்டு விஞ்ஞானிகள் கண்டு பிடித்து
உள்ளனர்.
இந்த ஆய்வு எலிகளின்மேல் நடத்தப்பட்டது என்றாலும், மனிதர்களை அடுத்த, 24 மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாதீர்கள் என்று சொல்வது கடுமையான சிகிச்சையாக இருக்கும் என, ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆனால், உண்ணா நிலையில் இருக்கும்போது உடலில் உருவாகும் இளமை தரும் வேதிப் பொருள்களை துல்லியமாக கண்டுபிடித்தால், அந்த வேதிப் பொருளை இதய நோய்கள், அல்சைமர்ஸ் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவும் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
- விடுதலை நாளேடு, 27.9.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக