இரத்தப் புற்றுநோய் தொடர்பாக ஆரம்பக்கட்ட நோய்க்குறியீடுகள் அதிகரித்துவருதைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் இரத்த அழுத்த மருந்துகள் திரும்பப்பெறப்படுகிறது.
இரத்த அழுத்த மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் தொடர்பான அறிகுறிகள் தொடர்ந்து தென்படுவதாகக வந்த புகாரை அடுத்து மீண்டும் ஒரு புதிய நிறுவனம் தனது தயாரிப்பு மருந்துகளை திரும்பப்பெற்றது.
லாஸ்வர்டன் பொட்டாசியம் Losartan Potassium USP Tablets. மாத்திரைகளின் 29 பேட்ஸ்களை திரும்ப பெறத்துவங்கியுள்ளதாக டெவா பார்மசி அறிவித்துள்ளது. இந்த 100 மில்லிகிராம் மாத்திரைகள் அதிக அளவு ஆற்றல் கொண்டதாக உள்ளதாகவும் இது ரத்த அணுக்களின் செயல்பாட்டில் மாற்றம் விளை விக்கும் ஆற்றல் கொண்டதாகவும் அறியப்படுகிறது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது தற்போது விற்பனையில் உள்ள மருந்துகளின் ஆற்றல் குறித்த சோதனைகளின் மூலம் சில மாற்றங்கள் கண்ட றியப்பட்டது, இது தொடர்பாக டோரண்ட் நிறுவன உணவு மற்றும் மருந்துப்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது ”இரத்த அழுத்தம் கொண்டவர்கள் உட் கொள்ளும் மாத்திரைகளில் 36 பேட்ஸ் Losartan Potassium USP Tablets. ñŸÁ‹ 68 lots of Losartan Potassium/hydrochlorothiazide tablets USP. திரும்பப் பெறப் பட்டுள்ளது.
மேலும் தொடர்புடைய மருந்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக் கையில், “விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட மருந்துகளை உட் கொண்டவர்களிடம் சில உடலியல் மாற்றங்கள் கண்டறியப்பட்டது. முக் கியமான டோரண்ட் பார்மாஸு டிகல்ஸ் நிறுவனம் டிசம்பர் மாதம் தயாரித்து வெளியிட்ட இரத்த அழுத்த மருந்துகள் திரும்பப்பெறப் பட்டது.
இதனைத் தொடர்ந்து நீண்ட காலமாக விற்பனையில் இருந்துவரும் இரத்த அழுத்த மாத்திரைகள் கடந்த ஜூலையில் இருந்து திரும்பபெறத் துவங்கியுள்ளோம் N-Nitroso N-Methyl 4-amino butyric acid (NMBA) மூலக்கூறு கொண்ட மாத்திரைகள் ஆரம்ப கட்ட இரத்த புற்றுநோய் தொடர்பாக நோய்க்கான அறிகுறிகளை உண் டாக்குவதாக கண்டறியப்பட்டது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் காம்பர் மருந்துகள் உணவு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரிகளுக்கு 87 மில்லி 50 மில்லி மற்றும் 100 மில்லி லாரார்டன் மாத்திரைகள் ஆகிய வற்றைத் திருப்பித் தருவதாகக் கூறியுள்ளன.
தொடர்ந்து நோய் அறிகுறிகள் தென்படுவதால் கம்பெர் பார்மா ஸுடிகல் நிறுவனமும் உணவு மற்றும் மருந்து கழகத்திற்கு தங்களின் 87 பேட்ஸ் 25மிலி, 50மிலி மற்றும் Losartan tablets- களைத் திரும்பப் பெறுகிறோம் என்று கூறியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு மெக்லாண்டஸ் பார்மசுடிகல் நிறு வனம் தங்களின் அனைத்து பேட்ஸ் Losartan Potassium/Hydrochlorothiazide 100mg/25mg தொகுதி மாத்திரை களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மெக்லாண்டஸ் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ள தாவது, “சமீபத்தில் வெளியான இரத்த அழுத்த மாத்திரைகளில் N-nitrosodiethylamine (NDEA) மூலக் கூறுகள் துணைப்பொருளாக உரு வாவது கண்டறியப்பட்டுள்ளது.. இதனை உணவு மற்றும் மருந்து நிறு வனம் மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்கும் பல்வேறு வேதிப் பொருட்களில் இதுவும் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது, ஆகவே நாங்கள் இதனை திரும்பப் பெற ஆரம்பித்துள்ளோம் என்றார்கள்
Losartan tablets லாஸர்டென் மாத்திரைகள் உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு தொடர்ந்து கொடுத்துவந்தது. முக்கியமாக இதயத்தில் இருந்து தூய ரத்தம் கொண்டுசெல்லும் இரத்த குழாயில் சிக்கல் உள்ளவர்களுக்கு இந்த மருந் துகள் பரிந்துரைக்கப்பட்டது. கடந்த 7 மாதங்களாக இந்த மருந்துகளை விற்பனைக்கு வெளியிடுகிறோம், இதுவரை யாரும் இந்த மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி புகார் அளிக்கவில்லை. இருப்பினும் நாங்கள் இவற்றை திரும்பபெற ஆரம்பித்துள்ளோம்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் ஜப்பானைச் சேர்ந்த மருந்து நிறு வனம் Pfizer Inc இரத்த அழுத்தம் தொடர்பான தனது நிறுவன மருந்துகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது, உயர் இரத்த அழுத்தம் தொடர்பாக நோய்க்கு கொடுக்கும் மருந்துகளை திரும்பப் பெற்று வருகிறது.
ஜப்பானிய நிறுவனம் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த தகவலில் சுமார் 763,000 ஆம்வலோ தயாரிப்பு மாத்திரைகள் மற்றும் மைலின் லேபாரட்டரி தயாரிப்பு மாத்திரைகளை இந்தியாவிலும் திரும்ப பெறத்துவங்கியுள்ளது.
மே லும் சோல்சோ ஹெல்த்கேர் நிறுவனமும் தங்களின் இரத்த அழுத்த மாத்திரைகளை தாங்களா கவே முன் வந்து திரும்பப் பெற ஆரம்பித்துள்ளது.
முக்கியமாக இரத்த அழுத்தத்திற்கு பரிந்துரைக்கப்படும் Irbesartan and 7 தொகுதி Irbesartan HCTZ tablets மாத் திரைகள் தொடர்ந்து திரும்பப்பெறப் படுகிறது.
இவை அனைத்தும், புற்றுநோயை உருவாக்கும் முக்கிய மூலக்கூறுகள் துணைப்பொருட்களாக உருவா வதை கண்டறியப்பட்ட உடன் தொடர்ந்து மத்திரைகளை திரும்ப பெறும் நிகழ்வுகள் தொடர்கிறது,
இது மேலும் இம்மாத் திரைகளை உட்கொள்ளவேண்டாம் என்று மக்களிடம் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்படுவதாகவும் நிறுவ னங்கள் கூறியுள்ளது.
எலும்புகளை பலப்படுத்தும் அரைக்கீரை
எலும்பு பலமாக இருந்தால்தான் உடல்நலம் நன்றாக இருக்கும். வயது அதிகமாகும்போது எலும்புகள் பலம் குறையும். எலும்புகள் தேய்மானம் அடைகின்றன.
இதனால் நடப்பதற்கு சிரமம், கூன் விழுவது உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். அரைக்கீரை, முருங்கை கீரை, புளிச்சை கீரை ஆகியவை எலும்புகளை பலப்படுத்தும் மருந்துகளாக விளங்குகின்றன. மேலும் எலும்புகளில் உள்ள கால்சியம் குறைபாடு நீங்கும்.
- விடுதலை நாளேடு 27. 5 .2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக