முதுமையில் மூட்டின் மேல் வன்மம் கொள்ளும் பிரச்சினைகளில் முக்கியமானது மூட்டுத் தேய்மானம் என்றால், மொத்த எலும்பு கூட்டத்தின் மேல் தாக்குதல் தொடுப்பது எலும்பு வலுவிழப்பு என்னும் எலும்பு புரை நோய்.
ஓசைப்படாமல் பல எலும்பு முறிவுகளுக்கு இது காரண மாக இருப்பது, நம்மில் பலருக்குத் தெரியாது. அதனால் மூட்டுகள் வலுவிழப்பதற்கான காரணங்களை அறிந்து கொள்வது, முதுமையைச் சுகப்படுத்த உதவும்.
உலக ஆஸ்டியோபோரோசிஸ் அமைப் பின் கூற்றின்படி, இன்று உலக அளவில் எலும்பு வலிமை இழப்பால் ஒவ்வொரு மூன்று விநாடிகளுக்கு ஒருவர் எலும்பு முறிவால் பாதிக்கப்படுகிறார். அதாவது அய்ம்பது வயதைத் தாண்டியவர்களில் மூன்றில் ஒரு பெண்ணும் அய்ந்தில் ஒரு ஆணும் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை வைத்து, இந்தப் பிரச்சினையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளலாம்.
எப்படி வருகிறது?
பல்வேறு காரணங்களால் எலும்புகளின் தாது அடர்த்தி குறைவதாலும், அதன் நுண்ணிய கட்டமைப்பு தகர்க்கப்படுவதாலும் இது வருகிறது. அதாவது வரவுக்கு மீறிச் செலவு செய்யும்போது எப்படிப் பொருளா தாரச் சமநிலை குலைகிறதோ, அதைப் போல் எலும்புகளின் உருவாக்கத்துக்கும் தேய் மானத்துக்கும் முதுமையில் பெரும் இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது.
யாரெல்லாம் கவனமாக
இருக்க வேண்டும்?
# பெண்கள், குறிப்பாக மாதவிலக்கு சுழற்சி நின்ற பிறகு
# அறுபது வயதைத் தாண்டியவர்கள்
# உணவில் போதுமான ஊட்டச் சத்தைச் சேர்த்துக்கொள்ளாமல் வெறும் சோறு, இட்லி, தோசை என்றே வாழ்பவர்கள். நவீன உணவுக் காதலர்களான ஃபாஸ்ட் ஃபுட், பேக்கரி உணவு, காபி, டீ, நொறுக்குத் தீனிகளில் தங்களைத் தொலைப்பவர்கள்
# அசைவ உணவில் அதிக ஆர்வம் உடையவர்கள். இதில் உள்ள அதிக அளவு புரதம் ஆபத்து
# குடும்ப மரபில் ஏற்கெனவே யாராவது இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந் தால்
# உடற்பயிற்சி செய்யச் சொன்னால் பல கோணத்தில் முகத்தைச் சுளிப்பவர்கள்
# புகையையும் மதுவையும் கூட்டணி தர்மமாக வைத்திருப்பவர்கள்
# நாட்பட்ட நோய்களுக்குத் தொடர் மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள்
# குறைந்து போகும் ஹார்மோன்கள். குறிப்பாக, பெண்களுக்கு அடிப்படையான ஈஸ்ட்ரோஜன், ஆண்களுக்கு அடிப்படை யான டெஸ்டோஸ்டீரோன்.
# தைராய்டு சுரப்பு குறைபாட்டுக்காகத் தேவையான அளவைவிடக் கூடுதல் மருந்து களை எடுத்துக்கொள்பவர்கள் (தைராய்டு பிரச்சினை இருப்பவர்கள், நாளமில்லா சுரப்பு நிபுணர்களின் கண்காணிப்பில் இருப்பது உத்தமம்)
# பாரா தைராய்டு, அட்ரீனல் சுரப்புக் களின் அதீதச் செயற்பாடு
# வயதுக்குப் பொருத்தமில்லாத அதிக உடல் எடையும் குறைந்த உடல் எடையும் ஆபத்துதான்.
# உணவில் போதுமான அளவு கால்சியம் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பவர்கள் (சராசரியாக நாள்தோறும் 1,000 மி.கி. அளவு கால்சியம் உடலில் சேர வேண்டும். அதுவே 50 வயதை தாண்டிய பெண்களும் 65 வயதை தாண்டிய ஆண்களும் 1,200 மி.கி. அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்)
பொதுவான அறிகுறிகள்
எலும்பு முறிவு ஏற்படும்வரை பொதுவாக எந்த அறிகுறியும் தெரிவதில்லை.
# இடுப்புவலி இருந்துகொண்டே இருக் கும். இது தண்டுவட எலும்புகள் விரிசல் அடைவதால் அல்லது தண்டுவட எலும்பு களின் வடிவைப்பு சீர்குலைவதால் ஏற்பட லாம்
# சராசரியான உயரம் குறைந்து போகலாம்
# முதுகுத் தண்டுவடம் வளைந்து கூன் விழலாம்
# சிறு சறுக்கலுக்கும் எலும்பு உடையலாம்
# அதிகம் பாதிக்கப்படும் எலும்புகள் இடுப்பு, தண்டுவட, கணுக்கால், மணிக்கட்டு எலும்புகள்
# பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் முதல் அறிகுறி மணிக்கட்டில் ஏற்படும் எலும்பு முறிவு.
- விடுதலை நாளேடு, 12.8.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக