கடவுள் நம்பிக்கையைத் தகர்த்த மருத்துவத்துறை!
– மருத்துவர் இரா. கவுதமன்
பிறக்கின்ற அனைத்து உயிரினங்களுக்கும் ‘மரணம்’தான் இறுதியானது. “ஆக்கல்’’, “காத்தல்’’, “அழித்தல்’’ இவையெல்லாம் கடவுளின் செயல் என்று பகுத்தறிவு உள்ள மனிதன்தான் நினைக்கிறான். மற்ற உயிரினங்கள் எதற்கும் இந்த உணர்வோ, நினைப்போ இல்லை. இயல்பாக பிறக்கிறது, வாழ்கிறது இறக்கிறது. மனிதன் தன் அறிவியல் வளர்ச்சியால் “கடவுள் செயல்’’ என்ற நம்பிக்கையுடன் அறியப்பட்ட இந்த மூன்று செயல்பாடுகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தன் மருத்துவ அறிவியல் மூலம் ஆளுமை செலுத்துகிறான் என்பதுதான் உண்மை.
ஓர் உயிரை உருவாக்க முடியுமா என்று மதவாதிகளின் கேள்விக்கு மருத்துவ அறிவியல், “முடியும்’’ என்றே விடைபகருகிறது. செயற்கை முறையில் “மரபணுக்கள்’’ (Genes) உருவாக்கம் உயிரை உருவாக்கும் முயற்சியில் பெரும் வெற்றியைத் தந்து கொண்டிருக்கிறது. “படியாக்கம்’’ (Cloning) என்று அழைக்கப்படும் முறையில் நம்மைப் போலவே மற்றொரு உருவத்தை உருவாக்குகிறார்கள். “குருத்தணு’’ (StemCell) சேமிப்பு வங்கிகள் இன்று பல நாடுகளில் வந்துவிட்டது. குருத்தணு சேமிப்பு பல தீர்க்க முடியாத நோய்களைக் குணமாக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது.
“எல்லாம் அவன் செயல்’’ என்று நிறைய குழந்தைகள் பெற்றுத் தள்ளிய காலம் மாறி, “நாம் இருவர்’’ என்ற நிலை வந்து, இன்று அதுவும் மாறி, “ஒரு குடும்பம், ஒரு குழந்தை’’ என்ற நிலை பல குடும்பங்களில் இன்று வந்துவிட்டது. குழந்தைப் பேற்றை மனித அறிவியல் தன் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டது. குடும்பக் கட்டுப்பாட்டை எளிய அறுவை மருத்துவத்தால் வெற்றிகரமாகச் செயலாக்க முடிகிறது.
அறுவை மருத்துவமின்றி “கருத்தடைப் பொருள்கள்’’ மூலம் கருத்தரித்தலைத் தடுக்கவோ, தள்ளிப் போடவே முடியும். குழந்தையே பெறமுடியாத நிலைகளில் “மலடி’’ என்று பெண்களை இழிவுபடுத்திக் கொடுமை செய்த காலம் மாறி இன்று, “மலட்டுத் தன்மைக்கு ஆண்களே பெரிதும் காரணமாக இருக்கிறார்கள் என்று அறியப்பட்டு, அதை மாற்றி, மகப்பேற்றை அனைவரும் பெற முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. “கருத்தரிப்பு மய்யங்கள்’’ இந்த மாற்றத்தை மனிதர்களுக்கு வழங்கியுள்ளது.
தந்தை பெரியார் 80 ஆண்டுகளுக்கு முன்பே “இனி வரும் உலகம்’’ என்ற நூலில் எழுதியபடி, “குடுவைக்குள் குழந்தை பிறக்கும்’’ (Test Tube Babies) என்ற பெயர் மாற்றத்தோடு கருத்தரிப்பு மய்யங்களால் இன்று செயலாக்கப்பட்டு வருகிறது. உயிரினங்கள் உருவாக்கம் என்பது “ஆக்கல்’’ என்ற கடவுளின் செயல் என்பது முழுமையாகப் போய், மனிதன் நினைத்தால் மகப்பேற்றை உருவாக்கிக் கொள்ள முடியும். தேவையான அளவுக்கு செயல்படுத்திக் கொள்ள முடியும். தேவையில்லையென்றால் குழந்தையே பெற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். குறைபாட்டினால் மலட்டுத்தன்மை ஏற்பட்டிருப்பின் அதைச் சீராக்கி மகப்பேற்றை உருவாக்க முடியும் என்ற நிலை
ப்பாடுகள் எல்லாம் கடவுளின் கைகளிலிருந்து மனிதர்கள் கைகளுக்கு வந்துவிட்டன.
அடுத்து கடவுளின் செயல் என்று கூறப்படும் “காத்தல்’’ என்பதும் மனிதனின் கைகளுக்கு மாறிவிட்டது. எடுத்துக்காட்டாக நமது நாடு சுதந்திரம் அடைந்தபோது, இந்தியரின் சராசரி வயது 25 லிருந்து 30 என்று கூறப்பட்டது. ஆனால், இன்று சராசரி வயது 55 லிருந்து 60 ஆக மாறிவிட்டது. “மந்திரமோ’’, “விதியோ’’, “கடவுள் செயலோ’’ இந்த மாற்றத்தை உருவாக்கவில்லை. மனிதனின் அறிவியல்தான் இப்பேர்ப்பட்ட மாற்றத்தை உருவாக்கியுள்ளது. நோய்கள் மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் கொன்றன. மருத்துவத் துறையின் தொடர்ந்த ஆய்வுகள், சமூகத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்கி, நோய்க் காரணிகளை ஆய்ந்து, நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகளைக் கண்டறிந்து உயிர்களைக் காத்தன. ஒரு காலத்தில் கோடிக் கணக்கான மக்களைஅழித்த கொள்ளை நோய்கள் இன்று முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டன. கோடிக்கணக்கான (சுமார் 5 கோடி) மனிதர்களை உலகம் முழுவதும் பலி வாங்கிய “பெரியம்மை’’ (Small Box) நோய் ஒரு தடுப்பூசி (Vaccine) கண்டுபிடிப்பால் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது. இதுபோன்று எண்ணற்ற நோய்கள், நுண்ணுயிர்களாலும் (Bacterias), வைரஸ்களாலும் ஏற்படுவதை தடுக்கக் கூடிய ‘உயிர்க் கொல்லி’ (Anti-Biotics) மருந்துகள், தடுப்பூசிகள் இன்று வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி, மனித குலத்தைக் “காத்து’’ வாழ வைத்திருக்கின்றன. விபத்துகளால் ஏற்படும் தொல்லைகள், குறைபாடுகளிலிருந்து மனிதர்களைக் “காக்கும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும்.
மாரடைப்புப் (Heart Attack)போன்ற நோய்களால் ஏற்படும். திடீர் மரணங்களைத் தடுக்கும் வகையில் தொடர் மருத்துவ ஆய்வுகள், இதயத் தமனி அடைப்பு நீக்கி (Coronary Artery Disease) மருந்துகள், மருத்துவ முறைகள் (Angioplasty) இதயத்தமனி மாற்று வழி அறுவை மருத்துவம் (Coronary Artery Bye Pass Surgery) போன்றவை மாரடைப்பைத் தடுப்பதுடன், திடீர் மரணம் ஏற்படாமல் மனிதர்களைக் “காத்து’’ நீண்ட நாள் வாழ வைக்கிறது என்பது உண்மை. ஏதாவது அறுவை மருத்துவம் இன்று பல்லாயிரம் பேரை வாழ வைக்கிறது. இதன்மூலம் அழிவு வேலையும் தடுக்கப்பட்டுவிட்டது.
(தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக