திங்கள், 5 ஆகஸ்ட், 2019

நீரிழிவு நோயும் உணவுக் கட்டுப்பாடும்



நீரிழிவு நோய் வந்துவிட்டதே என்று அஞ்சுகிறார்களோ இல்லையோ அதற்காகச் சொல்லப்படும் உணவுக் கட்டுப்பாடுகளை நினைத்துப் பலரும் அலறுவார்கள். உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க முடியாமல் திணறுபவர்களும் உண்டு.

உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் எதையும் சரிவரச் சாப்பிடாமல் இருப்பவர்களும் உண்டு. நீரிழிவு நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய உணவுக் கட்டுப்பாடுகள் என்னென்ன?

நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை எப்போதும்  அனைத்து சத்துகளும் நிறைந்த உணவையே உண்ண வேண்டும். அதிக அளவிலான பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கார்போ அய்ட்ரேட் நிறைந்த உணவு வகைகளான அரிசி, பிரெட், பாஸ்தா, கிழங்கு வகைகள் போன்றவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக அளவில் சர்க்கரை நிறைந்த பானங்களைத்  தவிர்த்துவிட வேண் டும். இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா பகிர்ந்துகொண்ட சில ஆலோசனைகள்.

சப்பாத்தி போதுமா?

நீரிழிவு நோயாளிகள் சாப்பிடும் உணவில் எப்போதும் சப்பாத்திக்கு முன்னுரிமை இருக்கும். அரிசிக்கு மாற்றாகச் சப்பாத்தியைத் தான் பலரும் பயன்படுத்த நினைப்பார்கள். சப்பாத்தி சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதா?  சப்பாத்தி சாப்பிடுவது தவறு அல்ல.

சப்பாத்திக்கு ஈடாகச் சிறிது அளவு அரிசிச் சோறும் எடுத்துக்கொள்ளலாம். சப்பாத்தியோ அரிசிச் சோறோ எதை எடுத்துக்கொண்டாலும் அத்துடன் அதிக அளவில் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சப்பாத்திக்குப் பதிலாகச் சிவப்பு அரிசி, பார்லி, கடலை மாவு ஆகியவற்றால் செய்த உணவையும் எடுத்துக்கொள்ளலாம்.

அரிசியைக் குறையுங்கள்

நீரிழிவு நோய்க்கு கார்போ ஹைட்ரேட் உணவு எதிரி என்பதால், அரிசி உணவைக் குறைத்துக்கொள்ளப் பலரும் நினைப்பார்கள். அரிசி உணவைக் குறைத்தால் போதுமா என்று ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் திவ்யா புரு ஷோத்தமனிடம் கேட்டோம். அரிசி உணவை முழுவதுமாகத் தவிர்க்க வேண்டிய கட்டாய மில்லை. அதேநேரம் அதிக அளவில் உண் ணாமல் அளவைக் குறைத்துச் சாப்பிட வேண்டும். பொதுவாக, வெள்ளை அரிசிக்கு மாற்றாக பாசுமதி அரிசி, சிவப்பு அரிசி, கைகுத்தல் அரிசி போன்றவற்றைப் பயன் படுத்தலாம். தினமும் புரதம், கொழுப்பு, கார்போஅய்ட்ரேட், நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்வது நல்லது. பழங்கள், காய்கறிகள், ராகி, பார்லி போன்றவை தினசரி உணவில் கட்டாயம் இருப்பது நல்லது. மீன், ஆலிவ் எண்ணெய், பாதாம் பருப்பு, வாதுமை கொட்டை (வால் நட்) ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பலம் தரும் பழம்

பழச்சாற்றுக்குப் பதிலாகப் பழமாக உண்ண வேண்டும். குறிப்பாக ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, பேரிக்காய், நாவல் பழம், ஆகிய பழங்களை நீரிழிவு நோயாளிகள் அதிகம் உண்ணலாம். இந்தப் பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்தப் பழங்கள் அதிக நேரம் உடலுக்குச் சக்தியைக் கொடுக்கும்.

உதவும் அசைவம்

நீரிழிவு நோயாளிகள் அசைவ உணவில் ஆட்டிறைச்சியைச் சாப்பிடச் சற்று அச்சப் படுவார்கள். கொழுப்பு கூடிவிடுமோ என்று நினைப்பார்கள். அசைவ உணவு சாப்பிடுவதில் நீரிழிவு நோயாளிகளுக்குக் கட்டுப்பாடு தேவையா? நீரிழிவு நோயாளிகள் அசைவ உணவைத் தாராளமாகச் சாப்பிடலாம். கோழி, கடல் உணவான மீன், இறால், நண்டு ஆகிய அசைவ உணவில் உள்ள சத்துகள் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.

* கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால் நாவல் பழம் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்.

* தினமும் பப்பாளி விதைகளை சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் மற்றும் புழுக்கள் அழியும்.

*  பிரண்டை, மல்லித்தழை, தூதுவளை, கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து துவையல் செய்து சாப்பிட கால் வலி நீங்கும்

- விடுதலை நாளேடு, 5.8.19

சிறுநீர்ப் பை, வெறும் கழிவுநீர்த் தொட்டி அல்ல!



சிறுநீர்ப்பை, உடலின் நடுப் பகுதியில், இடுப்பெலும்பின் முன் பகுதியில் புனல் போன்று அமைந்துள்ளது. உடலின் கழிவு நீக்கத்தில் பெரும் பகுதியைத் தோல் பகுதிக்கு அடுத்தபடியாக நிறைவேற்றுவது சிறுநீர்ப்பைதான்.

சிறுநீர்க் குழாய் வழியாக அனுப்பப் படும் கழிவுநீர் மட்டுமே சிறுநீர்ப் பையில் தேங்குவதில்லை.

சிறுநீர்ப் பையினுள் அமைந்துள்ள சேய்மை சுருண்ட குழாயுடன் தொடர் புடைய வேறு பல குழாய்கள் வழியாகவும் கழிவுநீர் சேருகிறது. ஹைப்போதாலமஸில் இருந்து இதய நாளங்கள்வரை நேரடி யாகத் தொடர்புடைய சிறுநீர்ப் பை உடலின் வெப்பச் சமநிலையைப் பாது காப்பதில் சிறுநீரகத்தைக் காட்டிலும் முதன்மையான பங்கு வகிக்கிறது.

தன்னிச்சையாகவும் இயங்கும்

சிறுநீர்ப் பை, சுமார் 500 மில்லி கொள்ளளவு கொண்டது . இதில் 300 மில்லியை எட்டியதும் கழிப்பதற்கான உணர்வு நமக்கு எழும். மேலும், 200 மில்லி சேரும்வரை கழிக்காமல் இருப்பதை அனுமதிக்கும். இவ்வாறு அனுமதிப்பது உடல் நமக்களிக்கும் சலுகை. ஆனால், அச்சலுகையை அடிக்கடி பயன்படுத்திக் கொண்டே இருந்தால் உணர்வுகள் மரத்துப் போகத் தொடங்கும். சிறுநீர்ப் பையில் உப்புகள் படிவது அதிகரித்து, தொடர் வலி முதல் புற்றுநோய் வரை செல்லக்கூடும்.

சிறுநீர்ப் பை, சிறுநீரகத்தின் ஆற் றலைப் பெற்று இயங்கும் உறுப்பு மட் டுமல்ல; அது பேரளவு சிறுநீரகத்துக்குத் துணை செய்யும் உறுப்பும்கூட. பல நேரம் சிறுநீரகத்தின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு வேலைசெய்வதுடன், தன்னிச்சை யாக வும் இயங்கி சிறுநீரகத்தின் பணியைக் குறைத்து ஒட்டுமொத்த உடல் இயக் கத்துக்கும் பேருதவி புரிகிறது சிறுநீர்ப் பை.

உதாரணமாக, விபத்து ஏற்பட்டு உடலுறுப்புகள் அத்தனையும் தமது இயல்பை இழப்பதாக வைத்துக் கொள்வோம். அப்போது சிறுநீர்ப் பை தன்னிடம் உள்ள சிறுநீரைச் சட்டென்று வெளியேற்றிவிடும். அத்துடன் நிற்காமல் உடல் முழுதும் தேங்கியிருக்கும் கழிவுநீரின் ஒரு பகுதியை வழக்கமான சிறுநீர்க் குழாய் வழியாக அல்லாமல் செல்களின் வழியாக வடித்தெடுத்துச் சிறுநீர்த் தாரை வழியாக வெளியேற்றிக் கொண்டே இருக்கும்.

உணர்வைக் கடத்தும்

மென் திசுக்களால் ஆன சிறுநீர்ப் பை மென்னுணர்வு மிக்கது. நாம் எந்த உணர்வுக்கு ஆளானாலும் அந்த உணர் வைப் பெற்று வைத்துக்கொள்வது சிறு நீர்ப் பையே.  சுமார் பத்து வயதுவரை திடீரென்று அச்சநிலைக்கு உள்ளாகும் போது தம்மையறியாமலே சிறுநீர் கசிவதைப் பார்த்திருப்போம். இப்படி சிறுநீரை வெளியேற்றுவதற்குக் காரணம் சிறுநீர்ப் பை நிரம்பியதால் அல்ல.  உடலில் திடீரென்று தோன்றிய தீய உணர்வை நீக்குவதேயாகும்.

கோபம், பதற்றம் போன்ற விரும்பத் தகாத உணர்வுகள் எழும்போதும் பெரிய வர்களுக்குச் சிறுநீர் கழிக்கத் தோன்றும். தீய உணர்வுகள் மேலெழும்போது அடிவயிறு கனப்பதுபோல் தோன்றுவதற்குக் காரணம் சிறுநீர் கழிப்பதற்கான உந்து தலே. ஆனால், வயது கூடக் கூட உணர்வு களைத் தொடர்ந்து புறக்கணிப்பதால் உடல் தரும் சமிக்ஞைகளை நம்மால் சரியாக இனம் காண முடிவதில்லை.

அச்சம் வேண்டாம்

சிறுநீர்ப் பையானது  வெறும்  கழிவுநீர்த் தொட்டி அல்ல. உணர்வு களைக் கையாள்வதில் சிறுநீர்ப் பைக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. வெப்பச் சமநிலையைக் கையாள்வதில் சிறுநீர்ப் பைக்கு முக்கியப் பங்கு இருப்பதால் அதனுடன் தொடர்புடைய நாளங்கள் வழியாக ரத்தத்தில் அடர்ந்த கழிவு கருஞ்சிவப்பு நிறத்திலோ வெளிர் காவி நிறத்திலோ சிறுநீரில் வெளியாகக் கூடும். அவ்வாறு ஓரிரு நாட்களுக்குச் சிறுநீர் வெளியாவதைக் கண்டு அச்சமடையத் தேவையில்லை.

அடர்த்தி அதிகமாகவோ நுரைத்த படியோ சிறுநீர் கழித்து முடித்தவுடன் லேசான வலி ஏற்படுவதையோ கெட்ட அறிகுறியாகப் பார்த்து உடனடியாகச் சோதனை செய்து பார்க்க வேண்டிய தில்லை. அப்படி வெளியாகும் நாட் களுக்கு முன்னர் நம்முடைய நடவடிக்கைகளைக் கவனித்துப் பார்த்தால் அலுவலகத்தில் ஆடிட்டிங் நடந்த நாட்களாக இருந்திருக்கும். அல்லது திட்டத்தை முடிக்க வேண்டிய இறுதி நாட்களாக இருந்திருக்கும். அல்லது மிகுந்த மன அழுத்தம் நிறைந்த நாட்களாக இருந்திருக்கலாம். தொடர் மன அழுத்தம், அதிகக் குளிர்ச்சி, அதிக வெப்பம் போன்றவை சிறுநீரகத்தை நேரடியாகப் பாதிப்பதுடன் அதன் துணை உறுப்பான சிறுநீர்ப் பையையும் கடுமையாகப் பாதிக்கும்.

மன அழுத்தம் தவிர்ப்போம்

இடுப்புப் புகுதியில் வெப்பம் தாக்கும் வகையில் நீண்ட நேரம் அடுப்படியில் நின்று வேலை செய்யும் பெண்கள், சமையலர்கள் போன்றோருக்குச்  சிறுநீர் கடுத்து அடிவயிற்றில் வலியுடன் பிரிய லாம். இது உடலில் வெப்பம் பரவாமல் முழு வெப்பத்தையும் சிறுநீர்ப் பையே பெற்றுக்கொள்வதால் நிகழ்வ தாகும். தொடர்ந்து நீண்ட நேரம் ஏசி அறையில் வேலைசெய்யும்போது உடலின் வெப்பச் சமநிலைக் குலைந்து தொண்டை வறட்சி முதல் சிறுநீர் அடர்ந்து செல்வதுவரை பல்வேறு இயல்பு மாற்றங்கள் ஏற்படலாம்.

இந்த நிலை நீடிக்கு மானால் சிறுநீர்ப் பையின் மென் திசுக்களில் உணர்விழப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும்போது சொட்டுச் சொட்டாகச் சிறுநீர் பிரிதல் அல்லது சிறுநீர் கழித்து முடித்த பிறகும் கழித்த நிறைவு ஏற்படாமை; அல்லது கழிவறையைவிட்டு வந்த மறுநிமிடமே மீண்டும் கழிக்கத் தோன்றுதல் ஆகிய உபாதைகள் நேரலாம்.

மென்திசுக்களின் உணர்வை மீட்டெடுக்க மருந்து மாத்திரைகளின் உதவியை நாடினால், தற்காலிகத் தீர்வாகத்தான் இருக்குமே தவிர நிரந்தரத் தீர்வாக இருக்காது. அதன் உணர்வை மீட்டெடுக்க மன அழுத்தமற்ற நிலையும் வெப்பச் சமநிலையும் ஓய்வும் ஆழ்ந்த தூக்கமும் மட்டுமே உதவும்.

சிறுநீர்ப் பையை முறையாகப் பரா மரிக்கும் நுட்பத்தைக் கற்றுக்கொண்டால் உடலின் மொத்த ஆரோக்கியமும் எளி தாகக் கைவரப் பெறும்.

- விடுதலை நாளேடு, 5.8.19

திங்கள், 24 ஜூன், 2019

தூக்கமின்மை ஏற்படுவது ஏன்?



தூக்கமின்மை இன்று வயது வித்தியாச மின்றி பரவலாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, முதுமை தூக்கமின்மையின் உச்சம். அதிலும் முதுமையானவர்களில் 50% பேர் உறக்கமின்மயால் பாதிக்கப்பட்டிருப் பதாக 'தேசிய உறக்க அமைப்பு' சொல்கிறது. இதற்கான காரணங்களைப் பட்டியலிட்டால், அது நீண்டுகொண்டே போகும்.

சமநிலைத் தூக்கம்

மேடேறிச் செல்லத் திணறும் அரசுப் பேருந்துபோல இன்று கணக்கற்ற முதிய வர்கள், அது பணக்காரரோ பாமரரோ உறக்கமின்றித் தவிப்பதற்கான காரணங் களையும், அதனால் ஏற்படும் பின்விளைவு களையும் புரிந்துகொண்டால் நம்மை தற்காத்துக்கொள்ள முடியும் தானே?

பிறந்தபோது ஆழ்ந்த உறக்கமாயிருந்த (ஒரு நாளைக்கு 14  - 17 மணி நேரம்) தூக்கம், முதுமையில் துக்க வீட்டின் தூக்கம்போல் நான்கு மணி நேரத்துக்கும் கீழாகக் குறைந்து போகிறது.

நான்கு நிலைகள்

உறக்கமானது மொட்டு மலர்வதைப் போல இயல்பாக மலர வேண்டும். அந்த இயல்பான உறக்கமானது நான்கு நிலைகளில் ஏற்படும்.

நிலை 1:  நினைவுக்கும் உறக்கத்துக்குமான இடைப்பட்ட நிலை. இது 15 நிமிடம் நீடிக்கும்.

நிலை2: இதயத் துடிப்பு சற்றே குறையும், மூளையும் தன் சிந்தனை வேகத்தை குறைத்துக்கொண்டே வரும். இதுவும் 15 நிமிடம் நீடிக்கும்.

நிலை 3: உறக்கத்தின் முக்கியமான நிலை, இந்த நிலையை Non- REM (அ) Delta stage என்கிறார்கள். இந்த நிலையில்தான் உடல் செல்கள் தன்னை புதுப்பிக்கும் வேலைகளைச் செய்யும். நாள் முழுதும் நகரத்தில் ஓடிய பேருந்து மறுநாளும் பயணிக்க, இரவில் பழுதுநீக்கி சீர்படுத்தப்படுவதைப் போல.

மேலும் உடல் வெப்பநிலை சற்றே குறையும்,  ரத்த அழுத்தமும் சற்று மட்டுப்படும். இந்த நிலைக்கு வந்துசேர, முதல் நிலையில் இருந்து சுமார் ஒன்றரை நேரம் பிடிக்கும்.

நிலை 4 (REM): இந்த நிலையில்தான் கனவுகள், நரநர என்று பற்களை கடித்தல், சில நேரம் பக்கத்தில் படுத்திருப்பவர்களை உதைத்தல் போன்ற சேட்டைகளும் நடக்கும்.

இந்த நிலையில் இமைகள் மூடி இருந் தாலும் கண்கள் சுழன்ற வண்ணம் இருக்கும், இதயத் துடிப்பு அதிகரிக்கும், உடல் வெப்ப நிலை, சுவாசம், ரத்த அழுத்தம் சற்று மிகைப் பட்டிருக்கும். இதைத்தான் இயல்பான உறக்கம் என்போம்.

முதுமையில் உறக்கமின்மைக்கான காரணங்கள்


# ஹார்மோன்கள் செய்யும் கலகத்தால் (குறிப்பாக Cortisole, Estrogen)

# உறக்கத்துக்கு முக்கிய காரணமான ‘மெலடோனின்’ (melatonin) சுரப்பு குறைபாடு.

# ஓய்வு காலத்துக்குப் பிறகு ஏற்படும் வாழ்க்கை முறை மாற்றங்கள், பிடிப்பற்ற வாழ்வு, அவநம்பிக்கை.

# பகலில் தொடர்ந்து எடுக்கும் ஓய்வு, உறக்கம்.

# படுக்கை அறை சார்ந்த பிரச்சினைகள்.

# எதிர்காலம் பற்றிய பயம், எதிலும் பயம் - தெனாலியின் பயம் போல.

# நோய்கள்-மருந்துகளால் வந்திருக்கும் நோய்களைப் பொருத்தும், எடுத்துக்கொளும் மருந்துகளைப் பொருத்தும் உறக்கமின்மை ஏற்படலாம்.

எடுத்துக்காட்டு: இதயம் சார்ந்த நோய்கள், மூட்டு வலி, குடல் பாதை சார்ந்த நோய்கள், சிறுநீர் பெருக்கி மருந்துக,  மனநலன் சார்ந்த பிரச்சினைகளுக்காக எடுக்கும் மருந்துகள், குறிப்பாக மனச் சோர்வுக்கான மருந்துகள், ரத்த அழுத்தம் குறைய, சுவாசப் பிரச்சினை தீர உட்கொள்ளும் மருந்துகள்.

பார்க்கின்சன் நோய், ஞாபக மறதி நோய், நுரையீரல் பிரச்சினைகள் குறிப்பாக சிளிறிஞி என்கிற நாட்பட்ட சுவாச நோய்.

-  விடுதலை நாளேடு, 24.6.19

புதன், 29 மே, 2019

புற்றுநோயை உருவாக்கும் மூலப்பொருள் உருவானதையடுத்து இரத்த அழுத்த மாத்திரைகளை திரும்பபெறும் நிறுவனங்கள்



இரத்தப் புற்றுநோய் தொடர்பாக ஆரம்பக்கட்ட நோய்க்குறியீடுகள் அதிகரித்துவருதைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் இரத்த அழுத்த மருந்துகள் திரும்பப்பெறப்படுகிறது.

இரத்த அழுத்த மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் தொடர்பான அறிகுறிகள் தொடர்ந்து  தென்படுவதாகக வந்த புகாரை அடுத்து மீண்டும் ஒரு புதிய நிறுவனம் தனது தயாரிப்பு மருந்துகளை திரும்பப்பெற்றது.

லாஸ்வர்டன் பொட்டாசியம் Losartan Potassium USP Tablets. மாத்திரைகளின் 29 பேட்ஸ்களை திரும்ப பெறத்துவங்கியுள்ளதாக டெவா பார்மசி அறிவித்துள்ளது. இந்த 100 மில்லிகிராம் மாத்திரைகள் அதிக அளவு ஆற்றல் கொண்டதாக உள்ளதாகவும் இது ரத்த அணுக்களின் செயல்பாட்டில் மாற்றம் விளை விக்கும் ஆற்றல் கொண்டதாகவும் அறியப்படுகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது தற்போது விற்பனையில் உள்ள மருந்துகளின் ஆற்றல் குறித்த சோதனைகளின் மூலம் சில மாற்றங்கள் கண்ட றியப்பட்டது, இது தொடர்பாக டோரண்ட் நிறுவன உணவு மற்றும் மருந்துப்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது  ”இரத்த அழுத்தம் கொண்டவர்கள் உட் கொள்ளும் மாத்திரைகளில் 36 பேட்ஸ் Losartan Potassium USP Tablets. ñŸÁ‹ 68 lots of Losartan Potassium/hydrochlorothiazide tablets USP.  திரும்பப் பெறப் பட்டுள்ளது.

மேலும் தொடர்புடைய மருந்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக் கையில், “விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட மருந்துகளை உட் கொண்டவர்களிடம் சில உடலியல் மாற்றங்கள் கண்டறியப்பட்டது. முக் கியமான டோரண்ட் பார்மாஸு டிகல்ஸ் நிறுவனம் டிசம்பர் மாதம் தயாரித்து வெளியிட்ட இரத்த அழுத்த மருந்துகள் திரும்பப்பெறப் பட்டது.

இதனைத் தொடர்ந்து நீண்ட காலமாக விற்பனையில் இருந்துவரும் இரத்த அழுத்த மாத்திரைகள் கடந்த ஜூலையில் இருந்து திரும்பபெறத் துவங்கியுள்ளோம் N-Nitroso N-Methyl 4-amino butyric acid (NMBA) மூலக்கூறு கொண்ட மாத்திரைகள் ஆரம்ப கட்ட இரத்த புற்றுநோய் தொடர்பாக நோய்க்கான அறிகுறிகளை உண் டாக்குவதாக கண்டறியப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் காம்பர் மருந்துகள் உணவு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரிகளுக்கு 87 மில்லி 50 மில்லி மற்றும் 100 மில்லி லாரார்டன் மாத்திரைகள் ஆகிய வற்றைத் திருப்பித் தருவதாகக் கூறியுள்ளன.

தொடர்ந்து நோய் அறிகுறிகள் தென்படுவதால் கம்பெர் பார்மா ஸுடிகல் நிறுவனமும் உணவு மற்றும் மருந்து கழகத்திற்கு தங்களின் 87 பேட்ஸ் 25மிலி, 50மிலி மற்றும் Losartan tablets- களைத் திரும்பப் பெறுகிறோம் என்று கூறியுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு மெக்லாண்டஸ் பார்மசுடிகல் நிறு வனம் தங்களின் அனைத்து பேட்ஸ் Losartan Potassium/Hydrochlorothiazide 100mg/25mg தொகுதி மாத்திரை களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மெக்லாண்டஸ் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ள தாவது, “சமீபத்தில் வெளியான இரத்த அழுத்த மாத்திரைகளில் N-nitrosodiethylamine (NDEA) மூலக் கூறுகள் துணைப்பொருளாக உரு வாவது கண்டறியப்பட்டுள்ளது.. இதனை உணவு மற்றும் மருந்து நிறு வனம் மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்கும் பல்வேறு வேதிப் பொருட்களில் இதுவும் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது, ஆகவே நாங்கள் இதனை திரும்பப் பெற ஆரம்பித்துள்ளோம் என்றார்கள்

Losartan tablets லாஸர்டென் மாத்திரைகள் உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு தொடர்ந்து கொடுத்துவந்தது. முக்கியமாக இதயத்தில் இருந்து தூய ரத்தம் கொண்டுசெல்லும் இரத்த குழாயில் சிக்கல் உள்ளவர்களுக்கு இந்த மருந் துகள் பரிந்துரைக்கப்பட்டது. கடந்த 7 மாதங்களாக இந்த மருந்துகளை விற்பனைக்கு வெளியிடுகிறோம்,  இதுவரை யாரும் இந்த மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி புகார் அளிக்கவில்லை. இருப்பினும் நாங்கள் இவற்றை திரும்பபெற ஆரம்பித்துள்ளோம்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் ஜப்பானைச் சேர்ந்த மருந்து நிறு வனம் Pfizer Inc இரத்த அழுத்தம் தொடர்பான தனது நிறுவன மருந்துகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது, உயர் இரத்த அழுத்தம் தொடர்பாக நோய்க்கு கொடுக்கும் மருந்துகளை திரும்பப் பெற்று வருகிறது.

ஜப்பானிய நிறுவனம் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த தகவலில் சுமார் 763,000  ஆம்வலோ தயாரிப்பு மாத்திரைகள் மற்றும் மைலின் லேபாரட்டரி தயாரிப்பு மாத்திரைகளை இந்தியாவிலும் திரும்ப பெறத்துவங்கியுள்ளது.

மே லும் சோல்சோ ஹெல்த்கேர் நிறுவனமும் தங்களின் இரத்த அழுத்த மாத்திரைகளை தாங்களா கவே முன் வந்து திரும்பப் பெற ஆரம்பித்துள்ளது.

முக்கியமாக இரத்த அழுத்தத்திற்கு பரிந்துரைக்கப்படும் Irbesartan and 7 தொகுதி Irbesartan HCTZ tablets மாத் திரைகள் தொடர்ந்து திரும்பப்பெறப் படுகிறது.

இவை அனைத்தும், புற்றுநோயை உருவாக்கும் முக்கிய மூலக்கூறுகள் துணைப்பொருட்களாக உருவா வதை கண்டறியப்பட்ட உடன் தொடர்ந்து மத்திரைகளை திரும்ப பெறும் நிகழ்வுகள் தொடர்கிறது,

இது மேலும் இம்மாத் திரைகளை உட்கொள்ளவேண்டாம் என்று மக்களிடம் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்படுவதாகவும் நிறுவ னங்கள் கூறியுள்ளது.

 

எலும்புகளை பலப்படுத்தும் அரைக்கீரை


எலும்பு பலமாக இருந்தால்தான் உடல்நலம் நன்றாக இருக்கும். வயது அதிகமாகும்போது எலும்புகள் பலம் குறையும். எலும்புகள் தேய்மானம் அடைகின்றன.

இதனால் நடப்பதற்கு சிரமம், கூன் விழுவது உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். அரைக்கீரை, முருங்கை கீரை, புளிச்சை கீரை ஆகியவை எலும்புகளை பலப்படுத்தும் மருந்துகளாக விளங்குகின்றன.  மேலும் எலும்புகளில் உள்ள கால்சியம் குறைபாடு நீங்கும்.

- விடுதலை நாளேடு 27. 5 .2019

செவ்வாய், 21 மே, 2019

உறக்கத்தைக் கெடுக்கும் 8 முக்கிய காரணிகள்

சராசரி மனிதர்கள் தங்களின் வாழ் நாளில் மூன்றில் ஒரு பகுதியை உறங்கியே கழிக்கின்றனர்.உறக்கம் மனித உடலியலில் இன்னும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது  உறக்கம் மனிதன் உடல் மற்றும் சீரான மனநிலை இரண்டோடு மிகவும் ஆழமான தொடர்புடையதாக உள்ளது, பொதுவாக இதை நாம் மேலோட்டமாக அறிந்தி ருப்போம்.   சரியாக உறக்கமின்றி இருக்கும் மனிதர்கள் மாரடைப்பு உள்ளிட்ட பல உடல்நலச் சீர்கேடுகளுக்கு ஆளாகின்றனர். மருத்துவவல்லுனர்கள் மனிதர்களின் நிம்மதியான உறக்கம் குறித்து அதை கடைப் பிடிக்கவேண்டிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு பரப்புரைச் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கூறிக் கொண்டே உள்ளனர்.

உறக்கம் பற்றிய பல்வேறு கட்ட ஆய்வை உடல்நலத்திற்கான ஸ்லீப் ஹெல்த் என்ற தலைப்பில் ஆய்வு இதழ் பல்வேறு நபர்களிடம் ஆய்வை  நடத்தி யுள்ளது, அதுவும் உறக்கம் குறித்த விழிப் புணர்வை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு  இருக்கும் வகையில் உள்ளது. உறக்கம் பற்றிய நீண்ட ஆய்வில் மேற் கொண்ட மருத்துவ நிபுணர்கள் தூக்கமின் மைக்காக பல்வேறு காரணங்களை பட்டி யலிட்டு அதில் மிகவும் முக்கியமானதாக 20 காரணங்களை எடுத்துக் கொண்டு அவற்றை மனிதர்களின் இயல்பின் அடிப்படையில் வரிசைப்படுத்தி அவை எவ்வாறு மனிதர்களின் உடல் நலத்தைப் பாதிக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர்.   அந்த பட்டியலில் உறக்கமின்மைக்கான காரணங்கள் மிகவும் அபாயகரமானவை களாக உள்ளது.

1. சரியான உறக்கம்


பொதுவாக ஆரோக்கியமான மனிதர் களுக்கு குறைந்தபட்சம் அய்ந்துமணிநேரம் அல்லது அதற்கும் சிறிது குறைவான அளவு உறக்கம் கண்டிப்பாக தேவை, இந்த நேரம்  குறையும் போது உடல்நலிவுற ஆரம்பிக் கிறது,  நன்கு ஆரோக்கியமான ஒருவர் உறக்கத்தை தவிர்க்கும் போது அவரது உடல் பல்வேறு உபாதைகளுக்கு மெல்ல மெல்ல ஆளாகிக்கொண்டு வருகிறது, முக்கியமாக இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் மனநலம் தொடர்பான பாதிப்புகள், மனச் சோர்வு, போன்றவை அதிகரிக்கும். மேலும் உடலின் ஹார்மோன் செயல்பாடு களில் பெரிய மாற்றம் ஏற்படும். இதன் காரணமாக நீரழிவு, உடற்பருமன் அதிகரிக்கிறது, முதியவர்கள் மற்றும் தொடர் சிகிச்சை எடுக்கும் நபர்கள் 7 முதல் 9 மணி நேரம் தூங்கவேண்டும் என்று மருத்து வர்கள் பரிந்துரைக்கின்றனர். நன்றாக உறங்குவதும் ஒரு நோய் தடுப்பு சிகிச்சை முறைதான்,

2. உறங்கச் செல்லும், முன்பு


படுக்கைக்குச் செல்லும் முன்பு உங்களின் மனதிற்கு பிடித்த நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் பார்ப்பது அல்லது பாடல்களைக் கேட்பது ஒரு நல்ல பழக்கம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  நீங்கள் உறங்கச்செல்லத்தயாராகிக்கொண்டு இருக்கின்றீர்களா? முதலில் அலைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பயன் படுத்துவதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.  மின்னணு திரைகள் வெளிவிடும் ஊதா கதிர்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளை விக்கின்றன. முக்கியமாக அவை மனங்களில் சஞ்சலத்தை உருவாக்கி தூக்கம் தொடர்பான எதிர்மறை காரணிகளை உருவாக்கி விடுகின்றன.

3.  உடலில் இயங்கும் கடிகாரம்


மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து உறக்க நேரம் கடைப்பிடிக்கப் படுகிறது, உங்கள் உடல் ஒரு கடிகாரம் போன்று அது தானாகவே இயங்கி உங்களின் உறக்க நேரத்தை உங்களுக்கு சுட்டிக்காட்டும் இதை நாம் எப்போதுமே புறந்தள்ளக்கூடாது, நமது உடல் வேலை செய்வது மற்றும் ஓய்வு எடுப்பது போன்றவை இயற்கையின் மாற்றங் களைப் பின்பற்றி நடைபெறுகிறது, சூரிய உதயத்தின் போது உடல் புத்துணர்ச்சி பெறுவது, சூரியன் மறையும் போது சோர் வாக இருப்பது போன்றவை நமது உடல் கடிகாரம் பின்பற்றும் ஒரு தொடர்நடவடிக்கை ஆகும். இதை நாம் பின்பற்றவில்லை என் றால் நமது உறக்க நேரத்தில் பெரும் மாற்றம் ஏற்படும். சரியான நேரத்திற்கு உறங்காமல் உட லுக்கு அதிக வேலைகளைக் கொடுத்து விட்டு நாமாகவே உறக்கத்திற்கு கால அளவை ஏற்படுத்துவது உடல் நலத்திற்கு கேடுகளை விளைவிக்கும் காரணிகள் ஆகும். கண்கள் மூடிய நிலையில் படுக் கையில் தூங்குவதுபோல் இருப்பதும் கிட்டத் தட்ட நல்லது.

இரவு நேரப் பணியில் உள்ளவர்கள் பெரும்பாலும் உறக்கமின்மை, மன அழுத் தம் போன்ற உடல் உபாதைகளுக்கு ஆளா கின்றனர். இதனால் நீரழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது

4. தூக்கம் வரவில்லையா? கண்களை மூடி ஒரு நிலைப் படுத்துங்கள்


சிலருக்கு வேலைப்பளு காரணமாக உறக்க உணர்வு மங்கியதைப் போல் உணரலாம், அல்லது களைப்பு ஏற்பட்டு உடல் சோர்வடைவது போல் உணரலாம், உடலை இவ்வாறு நாம் மாற்றுவது மிகவும் தீங்கு விளைவிக்கும் ஒன்றாக ஆய் வாளர்கள் கூறுகின்றனர்.  மனிதர்களது மூளை,  இதயம் மற்றும் நுரையீரல் போன்ற வற்றின் செயல்பாடுகள் விழித்திருக்கும் போது தனித்தன்மையுடனும் உறங்கும்  போது தனித்தன்மையுடனும் இயங்கு கின்றன, இது உடலுக்கு மிகவும் முக்கியமான செயல்பாடாக கருதப்படுகிறது.

உடலில் மிகமுக்கிய உறுப்புகளான இவைகளின் செயல்பாடுகள் ஆழ்ந்த உறக்கத்தின் மூலமே சாத்தியமாகிறது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆழ்ந்த உறக்கம் மற்றும் அதன்மூலம் உடலில் உறுப்புகளின் செயல்பாடுகள் போன்றவை ஒன்றுக்கொன்று தொடர்பு டையது, ஆகவே நாம் உடலின் செயல்பாட்டிற்கு ஏற்ப மாற்றி கொள்ள வேண்டும். போதுமான தூக்கமின்மை உடலின் உறுப்புகளைப் பாதிக்கும் என் பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும் என்று ஆய்வாளர் ராபின்ஸ் கூறுகிறார்.

5.உறக்கம் என்பது நமக்கு கிடைத்த பரிசு ஆகும்


உறக்கமின்மை என்பது நாம் உறக் கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் பாதிப்பை ஏற்படுத்தும்,  உறக்கம் என்பது நமக்கு கிடைத்த பரிசு ஆகும், இதை நாம் கொண்டாடி வரவேற்கவேண்டும்,  சிலருக்கு முக்கிய அலுவலக கலந்துரையாடலின் போதோ, விமானப் பயணத்தில் நண்பருடன் பேசிக்கொண்டு இருக்கும் போதோ தூக்கம் வரலாம், முடிந்த வரை அது போன்ற நேரங்களில் உறக்கத்தைக் கட்டுப்படுத்து வதை விட விரைவாக முடித்துகொண்டு உறங்கச்செல்வது நல்லது.

6. உறங்கச்செல்லும் முன்பு தவிர்க்கவேண்டியது


இரவு உறங்கச்செல்லும் முன்பு வரவுசெலவு கணக்கு பார்ப்பது, சில மிடறு மது அருந்துவது, அல்லது நரம்புகளை மந்தப்படுத்தும் இருமல் மருந்துகளை சாப்பிடுவது போன்றவை உண்மையில் உங்களுக்கு உறக்கத்தைத் தராது, உங்களுக்கு உறக்கம் வந்தது போல் இருந்தாலும் இவை எல்லாம், உங்கள் மூளையை மிகவும் சோர்வடையச்செய்யும் ஒன்றாகும்,  இதன் மூலம் காலை நேரம் உங்களுக்கு தலைவலி மற்றும் சோர்வான உணர்வே ஏற்படும்

7. உறக்கமின்மையால் மூளையின் செயல்பாடுகள் பாதிப்படையும்


நாம் உறங்குவதற்காக சில பழக்க வழங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்.  இது பொதுவான ஒரு நம்பிக்கையாக உள்ளது, இது நம்பிக்கை என்றாலும் இது ஒருவிதத்தில் நன்மை விளைவிக்கும் ஒன்றாகும், எடுத்துக் காட்டாக உறங்கச்செல்லும் முன்பு சூடான பால் அருந்தக் கூறுவார்கள். இது நல்ல பழக்கம் என்றாலும் சிலருக்கு பால் அருந்துவது பிடிக்காத ஒன்றாக இருக்கும். அப்படியென்றால் சூடான காபி சிறிது அருந்தலாம், இதன் மூலம் நல்ல உறக்கம் வரும் என்றால் அதை தொடர்வதில் தவ றில்லை என்கிறார் ஆய்வாளர் ராபின்ஸ்.

-  விடுதலை நாளேடு, 20.5.19