கர்ப்பிணிப்பெண்கள் குழந்தை உண் டாகிய காலம் முதல் கொழுப்பு நீக்கிய இறைச்சி, மீன், கோழி மற்றும் முட்டை போன்றவற்றை நாளொன்றுக்கும் 450 மிலி கிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தால் கருவில் வளரும் சிசுவின் மூளைத்திறன் அதிகரிக்கும். பிற்காலத்தில் குழந்தையின் உடல் ஆற்றல் எளிதில் வலுப்பெறும் என்று கர்னில் பல்கலைக்கழக மருத்துவப் பேராசி ரியர் மேரிகுட்டில் தலைமையில் நடந்த நீண்ட கால ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.
ஆய்வின் முடிவை உலக உயிரியல் ஆய்வாளர் கூட்டமைப்பு தாங்கள் நடத்தும் பத்திரிகையில் வெளியிட்டு சிறப்பித்துள் ளது. உலக மருத்துவக் கழகமும் அமெரிக்க உயிராய்வியல் அமைப்பு (திகிஷிணிஙி) இரண் டும் இணைந்து 2017-ஆம் ஆண்டிற்கான எதிர்கால ‘ஆற்றல்மிகு மனித சமூகம்’ என்ற தலைப்பில் உலகம் முழுவதும் நடந்துள்ள பல்வேறு ஆய்வறிக்கைகளை தேர்வு செய்து வெளியிட்டுள்ளது. இதில் நியூயார்க் கில் உள்ள கர்லின் பல்கலைக்கழக மருத் துவப்பேராசிரியர் மேரிகுட்டில் தலைமை யில் நடந்த ஆய்வறிக்கை ஒன்று வெளி யாகியுள்ளது.
அதில் கோலைன் (நீலீஷீறீவீஸீமீ) என்னும் புரதம் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்தப் புரதம் அடங்கிய உணவுகளை அன்றாடம் 450 மிலி கிராம் என்ற விகித்தில் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடவேண்டும், இதன் மூலம் வயிற்றில் வளரும் சிசுவின் மூளைத்திறனும் நரம்புமண்டல் தகவல் கடத்தும் திறனும் அதி கரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தவகைப் புரதம் அனைத்து வகை பச்சைக் காய்கறியில் காணப்படுகிறது, ஆனால் அதை வேகவைக்கும் போது அந்தப் புரதங்கள் சிதைந்துவிடுகின்றது. அதே நேரத்தில் முட்டையின் வெள்ளைக் கரு, கொழுப்பு நீக்கப்பட்ட இறைச்சி, மீன், கோழி, உலர்பருப்பு வகைகளில் இந்த வகைப்புரதங்கள் அதிகம் உள்ளது, தினசரி இவ்வகை உணவுகளை உட்கொள்ளும் போது சிசுக்களின் மூளைத்திறன் மட்டுமல் லாது, பார்வைத்திறனை அதிகரிக்கச் செய் யும் நரம்புகளும், லென்சுகளை உருவாக் கும் புரோட்டினும் அதிக திறன் பெறும் முக் கியமாக பெண்கள் கர்ப்பமான 5 வாரத்தில் இருந்து இந்தவகை உணவுகளை உட் கொண்டு வரவேண்டும்.
கர்லின் மருத்துவப் பல்கலைக்கழகம் எதிர்கால ஆரோக்கியமான குழந்தைகள் என்ற பெயரில் தொடர்ந்து பல ஆண்டு களாக பல்வேறு பாலூட்டிகளின் கர்ப்ப காலப்பருவம் அதற்கு முந்தைய உணவு முறை, கர்ப்பகாலத்திற்கு பிறகு பிறக்கும் சிசுக்களின் ஆற்றல் திறன் குறித்து ஆய்வு செய்துவருகிறது, இதே போன்று ஆஸ்திரே லியாவின் அடிலைட் பல்கலைக்கழகமும் எதிர்காலக் குழந்தைகள் நலன் குறித்த நீண்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து ஆய்வு நடத்திய மருத்து வக் குழுவின் தலைவர் பேராசிரியர் மேரி குட்டில் கூறியதாவது, “மூளைவளர்ச்சி, நரம்பு மண்டலத்தின் தகவல் கடத்தும் திறன் குறித்த சில முக்கிய வேலைகளை குறிப் பிட்ட வகைப் புரதங்கள் செய்கின்றன இந்தப் புரதங்கள் தாயின் கருவில் வளரும்போதே கிடைப்பது அவசியமாகும், அப்படி கிடைக்கும் பட்சத்தில் பிறக்கும் குழந்தைகள் திறமையான ஆற்றலோடு பிறக்கும் வாய்ப் புகள் மிகவும் அதிகம். ஆகையால் கொழுப்பு நீக்கப்பட்ட இறைச்சி, மீன், முட்டை கோழி போன்ற உணவுகளை பரிந்துரை செய்கி றோம். இவ்வகை உணவுகளில் குழந்தை களின் மூளைவளர்ச்சிக்கு தேவையான ஆற்றல் புரதங்கள் உள்ளன.
மேலும் கோலைன் புரதங்கள் அடங்கிய உணவுகளை பேறுகாலம் நெருங்கும் போது ஒரு நாளை இரண்டு வேளை சரிவிகிதமாக எடுத்துக்கொள்ளவேண்டும். இதனால் குழந்தைகளில் பார்வைத்திறனும் அதிகரிக் கும் இதுவும் எங்களின் ஆய்வின் மூலம் தெரிவந்துள்ளது.
ஆய்வின் போது 40 கர்ப்பினிப் பெண் களை இரண்டு குழுக்களாக பிரித்து ஒரு குழுவிற்கும் கோலைன் புரதங்கள் அடங் கிய உணவுகளை தினசரி 930 மிகி என்ற விகித்தில் ஒரு குழுவிற்கும் மற்றொரு குழு விற்கு 480 மிகி என்ற விகிதத்திலும் வழங்கி வந்தோம். இரண்டு குழுக்களில் உள்ள கர்ப்பிணிப்பெண்களுக்கு பிறந்த குழந்தை கள் ஆற்றல்திறன் பெருக்கம், மூளை வளர்ச்சி, போன்றவை இருந்தது, அதே நேரத்தில் இவ்வகைப் புரதங்களை அதிகம் எடுத்துக்கொண்ட பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள் அதிக அளவு நோயெதிர்ப்பு சக்தியுடனும் பார்வைத்திறன் பெருக்கம் புத்திகூர்மைத்திறனுடன் பிறந்துள்ளதை எங்கள் ஆய்வின் மூலம் உறுதிபடுத்தியுள் ளோம்” என்று கூறினார்.
இந்திய ஆயுஷ் அமைச்சரவை 2018 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் வெளியிட்ட கையேட்டில் கர்ப்பிணிப் பெண்கள் இறைச் சிகளை உண்ணக்கூடாது, என்றும் கர்ப் பணிப்பெண்கள் இறைச்சிவகை உணவை உண்டுவந்தால் அவர்கள் மந்தமான மற்றும் கோபத்திறன் கொண்ட குழந்தைகளைப் பெற்றேடுப்பார்கள் என்று சில புராணக் கதையில் வரும் பாத்திரங்களை எடுத்துக் காட்டாக காட்டியிருந்தது, ஆயுஷ் அமைச் சரகத்தின் இந்தக் கையேட்டை இந்திய மருத்துவர் குழுமம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது,
சென்னையைச்சேர்ந்த மருத்துவர் ஒருவர் இறைச்சி உண்ணும் பழக்கமுடைய பெண்கள் அவர்களுக்குப் பிறக்கும் குழந் தைகள் குற்றவாளிகளாக இருக்கிறார்கள் என்று 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டு ருந்தார். இந்தக் கட்டுரைக்கும் மருத்துவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
- விடுதலை ஞாயிறு மலர், 10.2.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக