சளிப் பிடித்தல் என்பது நேரடியாக நுரையீர லிலோ தலையிலோ நீர் கோத்துக் கொள்வதல்ல; நமது உடலில் தேங்கியிருக்கும் கழிவின் வெளி யேற்றமே அது. நமது உடலின் ஒவ்வொரு செல் லுக்கும் இடையில் சளி எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. சளி செல்லுக்குப் பாதுகாப்புக் கவசமாகவும் ஷாக் அப்சர்வராகவும் ஒரு செல்லில் இருந்து இன்னொரு செல்லுக்கு எதையும் எடுத்துச் செல்லும் கடத்தியாகவும் ஊடகமாகவும் இருக்கிறது.
உடலின் கழிவு மிகும்பொழுது முதலில் அது செல்லுக்கு வெளியில்தான் தங்கும். செல்லுக்கு வெளியே உள்ள சளிப்படலத்தில் கழிவுக்கு இடம் இல்லாமல் ஆகி, செல்லுக்குள் நுழைந்தாக வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகும் சூழலில், அது சுவாச வெளிக் காற்றின் வழியாக நீராக (சளியாக) வெளியேறுகிறது.
இதற்கு தைலம் நல்லதா?
இருமல், தும்மல், மூக்கில் நீர்வடிதல் போன்றவை வெறும் கழிவு நீக்கம் என்பதால் அவை வெளியேற அனுமதிப்பதே நல்லது. ஆனால், உடல் தானாகவே மூக்கடைப்பை உருவாக்கி உள்ளிழுத்தலை மறுக்கும்போது அது பெரும் தொந்தரவாக மாறும். அது போன்ற நேரத்தில் தைலம் தடவுவதும் மருத்துவ உதவியை நாடுவதும் இயல்பு. ஆனால், அவை மூக்கடைப்பைத் தற்காலிகமாகத் தளர்த்துமே தவிர, நிரந்தரத் தீர்வளிக்காது.
சொல்லப்போனால் முன்னிலும் அதிகமான தொந்தர வையே அது அளிக்கும். ஏனென்றால், மூக்கில் ஏற்பட்ட தடையை மருந்து உள்நோக்கி நுரையீரலுக்குள்தான் தள்ளும். நீர் வடிவத்தில் இருந்த தடை, தூசி வடிவத்துக்கு மாறி நுரையீர லுக்குள் செல்வதால், சளித் தொல்லைக்கு உட்பட் டோர் கூடுதலாக அவதியுற நேர்கிறது.
- விடுதலை நாளேடு, 21.1.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக