கொட்டுமழையிலும் கடலூரில் பெரியார் மருத்துவ குழுமம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
கடலூர், நவ. 14_ கட லூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி களில் பெரியார் மருத்து வக் குழுமம் சார்பில் நடைபெற்ற சிறப்பு மருத் துவ முகாமை திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர், முனைவர் துரை.சந்திரசேகரன் தொடங்கி வைத்தார்.
வடகிழக்கு பருவ மழை தமிழ்நாட்டில் குறிப்பாக கடலூர் மாவட் டத்தில் வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. தமிழ் நாடு அரசு தாமதமாக நிவாரணப் பணிகளை தொடங்கியுள்ள நிலை யில், தன்னார்வத் தொண்டு அமைப்புகள் முகாமிட்டு தொண்டு செய்து வருகின் றனர்.
அந்தவகையில் பெரியார் மருத்துவக் குழுமம், நிவாரணப் பணி கள் அதிகம் சென்ற டையாத கிராமங்களுக்குச் சென்று முகாம் அமைத்து, மக்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை அளிக்கும் பணிகளை மேற்கொண்டது.
தஞ்சை, திருச்சி, சோழங்க நல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள பெரி யார் மருத்துவமனை க ளில் பணிபுரியும் மருத்து வர்கள் பணியாளர்கள், அடங்கிய 21 பேரைக் கொண்ட ஒரு குழுவும், அந்தக் குழுவின் ஒருங்கி ணைப்பாளராக மருத்து வர் சுல்தானா,
தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு பெரியார் மருத்துவக் குழுமம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது (கடலூர், 13.11.2015)
ஓய்வு பெற்ற மருத்துவர் வி.பஞ் சாட்சரம் ஆகியோரின் வழிகாட்டுதலில் மருத்துவ முகாம் இன்று காலை 10 மணியளவில் குறிஞ்சிபாடி எல்லப்பன் பேட்டையில் தொடங் கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் அதிக பாதிப்புக்குள்ளான இடங் களில் இதுவும் ஒன்று.
மருத்துவ முகாம் பற் றிய அறிவிப்பை இயக்கத் தோழர்கள் முன்பே அந்தப் பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மூலம் அம்மக்களிடம் விளம்பரம் செய்திருந்த னர். முகாம் அமைத்து நடத்துவதற்கு அப்பகு தியைச் சேர்ந்த தோழர் மணி என்பவர் தனது வீட்டையே மனமுவந்து கொடுத்து உதவினார்.
தன்னைப் பற்றிய கூடுதல் விவரங்கள் வேண் டாம் என்றும் பண்போடு மறுத்துவிட்டார். இப்படி மக்களின் ஆதரவோடும் முகாம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி தொடங்கி சிறிது நேரத் திற்குள் 300_க்கும் மேற் பட்ட மக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற் றுக் கொண்டனர்.
கலந்து கொண்டவர்களில் பெண் களும், குழந்தைகளும் தான் அதிகம். வயது முதிர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். கொட்டும் மழையில் இந்த முகாம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்க நிகழ்ச்சியில் குறிஞ்சிபாடி நகர செய லாளர் வேல்முருகன், நகர துணைத்தலைவர் இந்திர ஜித், வழக்குரைஞர் திரா விட அரசு, வடலூர் ஜோசப், வசந்த், கடலூர் மண்டல இளைஞரணிச் செயலாளர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் உள்ளூர் பத்மா பதி திருமண மண்டபம் மேலாளர் இளவரசு, பொட்டவெளி தி.க. கிளைத் தலைவர் சீதாரா மன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாநில இளைஞரணிச் செயலாளர் இளந்திரை யன் மேற்கண்ட பணி களை ஒருங்கிணைத்துக் கொடுத்து சிறப்பித்தார்.
இந்த மருத்துவ முகாம் சென்னை பெரியார் திடல், புதுவை அருணா கிளினிக்கல் லேப் மற்றும் புதுவை மாநில சந்தானம் தலைமை ரசிகர் மன்றம், பெரியார் மருத்துவக் குழுமம் ஆகியவற்றின் சார்பில் பல்லாயிரக்கணக்கான மதிப்புள்ள மருத்துகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ முகாமில் பயன்படுத்தப் பட்டன. இதற்காக சென்னை பெரியார் திடல் குணசேக ரன்,
புதுவை மாநில திரா விடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, மற்றும் அருணா கிளினிக்கல் லேப்பின் தலைமை ஒருங் கிணைப்பாளர் ப.அழகர சன் மற்றும் சந்தானம் தலைமை ரசிகர் மன்றத் தின் தலைவர் அருண், செயலாளர் அசோக் பாராட்டுக்குரியவர்கள். சென்னையிலிருந்து பெரியார் சமூகக் காப்பு அணி சார்பில் உடுமலை வடிவேல், அருள், ரேவந்த் குமார், விமல் மற்றும் மீனம்பாக்கம் செல்வம் உள்ளிட்ட தோழர்கள் ஈடுபட்டனர்.
மருத்துவ சிகிச்சை தேவைப்படுகின்ற இடங் களில் பெரியார் மருத்துவ குழுமத்தின் சார்பில் இன் றும் நாளையும் தொடர்ந்து நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலை,14.11.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக