மனிதன் மற்றும் பல விலங்குகளுக்கு தூக்கம் என்பது கண்டிப்பாக வாழ்நாள் முழுவதும் தேவையான ஒரு செயல் ஆகும். பெரும்பாலும் இரவு நேரம் என்பதே தூக் கத்துக்காக ஒதுக்கப்பட்டதுதான். ஆனால் இப்பொழு தெல்லாம் இரவு நேரப் பணிகளைப் பார்த்து விட்டு பகலில் தூங்குகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
இவ்வளவு நேரம் தான் தூங்க வேண்டும் என்று ஒரு அளவுகோல் இருந்தாலும், தூக்கம் அவரவரின் பழக்கத்தைப் பொறுத்தே அமைகிறது.
இரவில் மிக சீக்கிரமாக உறங்கி காலையில் தாமதமாக எழுந்திருப்பவர்கள் உண்டு. இரவு எவ்வளவு தாமதமாக படுத்தாலும் காலையில் வெகு சீக்கிரமாக அதிகாலை யிலேயே எழுந்து விடுபவர்களும் உண்டு. சரியாக தூங்காத வர்களை கண்களை பார்த்தே கண்டுபிடித்து விடலாம். மனிதனின் மனதைக் கட்டுப்படுத்த, கெட்ட எண்ணங் களை சீர்படுத்த, கோபம், ஆத்திரத்தைக் குறைக்க இயற்கையான ஒரு செயல் தூக்கம்.
தூக்கத்துக்கு அந்த அளவுக்கு மிகப்பெரிய சக்தி உண்டு. நமது உடலில் இரண்டு வகையான தசைகள் இருக்கின்றன. நமது கட்டுப்பாட்டில் உள்ள தசைகள், கை கால்கள், தோள்பட்டை, மார்பு, முதுகு முதலியவற்றிலுள்ள கடினமான தசைகள், நமது கட்டுப்பாட்டிலுள்ள தசை களாகும். இந்த தசைகளெல்லாம் நாம் நடப்பதற்கும், நகர் வதற்கும்,
உருண்டு புரள்வதற்கும் உபயோகப்படும் தசை களாகும். ஆண்களின் உடலில் சுமார் 42 சதவீதமும், பெண்களின் உடலில் சுமார் 36 சதவீதமும் கட்டுப்பாட்டில் உள்ள தசைகள் இருக்கின்றன. தூக்கத்தின்போது கட்டுப் பாட்டிலுள்ள தசைகள் பெரும்பாலும் தற்காலிகமாக செயலிழந்து விடுகின்றன.
நமது கட்டுப்பாட்டில் இல்லாத தசைகள் (inVoluntary Muscles) இரைப்பை, இருதயம், உணவுக்குழாய், காற்றுக்குழாய், வயிற்றின் உள்ளே உள்ள உறுப்புகள், சிறுநீர்ப்பை, ரத்தக்குழாய்கள் மற்றும் உடலின் உறுப்புகளுக்கு உள்ளே உள்ள மெல்லிய தசைகள், இவை எல்லாமே நமது கட்டுப்பாட்டில் இல்லாத தசைகளாகும்.
தூங்கும் போது கட்டுப்பாட்டிலுள்ள தசைகள் மட்டுமே செயலிழக்கப்படுகிறது. கட்டுப்பாட்டில் இல்லாத தசைகள் நாம் தூங்கினாலும் தூங்காவிட்டாலும் நம்மை கண்டு கொள்ளாது.
பாலூட்டி, விலங்குகள், பறவைகள், தவளை, மீன் போன்ற அனைத்து உயிரினங்களுக்கும் தூக்கம் உண்டு. தூக்கத்தை பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
-விடுதலை,19.10.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக