வெள்ளி, 6 நவம்பர், 2015

மாட்டின் இதய வால்வு பொருத்தி மருத்துவர்கள் சாதனை

8 மாத குழந்தைக்கு மாட்டின் இதய வால்வு பொருத்தி மருத்துவர்கள் சாதனை
ஆல்டர், நவ. 1_ லண்டனில் 8 மாத குழந்தைக்கு மாட்டின் இதய வால்வு பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
நோவா குவிலிம் என்ற குழந்தை கடந்த பிப்ரவரி 10ஆ-ம் தேதி பிறந்தது. அந்த குழந்தை அதாவது எலும்புகளைப் பெரிதாக்கி மாரடைப்பை உரு வாக்கும் இந்த கொடிய நோயினால் பாதிக்கப்பட் டிருந்தது.
குழந்தை நோவா, லண்டனின் ஆல்டர் ஹே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சிக்கலான இந்த அறுவை சிகிச்சை செய்ய துணிந்த மருத்துவர்களுக்கு ஒரு புதிய இதய வால்வு  தேவைப்பட்டது. வயதானவர்களே உடல் உறுப்பு கொடைக்காக பதிவு செய்து விட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திருக்கும் போது, பிறந்த குழந்தைக்கு இதய வால்வு கிடைப்பது நடை முறையில் சாத்தியமில்லாத ஒன்று.
இந்த நேரத்தில் மருத்துவர்கள் மாட்டின் இதய வால்வை நோவாவின் இதயத்தில் பொருத்திட முடிவு செய்தனர். மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும் இதயம் அதன் இயல்பான நிலையை எட்டுவதற்கு சில மாதங்கள் பிடிக்கும். நோவா தற்போது முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக அவரது தாய் பூரிப்புடன் கூறுகிறார். தற்போது எட்டு மாதக் குழந்தையான நோவாவுக்கு விரைவில் கை எலும் பிலும் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.
 -விடுதலை,1.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக