மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [34]
நீரிழிவு நோய்
(DIABETES MELLITLIS)
மரு.இரா.கவுதமன்
பெண்களுக்கு ஏற்படும் தனித்துவ அறிகுறிகள்:
ஆண்களுக்கு ஏற்படும் தனித்துவ அறிகுறிகள் போன்றே, சில தனித்துவ அறிகுறிகள் பெண்களுக்கும் நீரிழிவு நோயில் உண்டாகும். தோலில் எண்ணெய்ப் பசை குறைந்து, தோல் வறண்டு காணப்படும். அடிக்கடி சிறுநீர்க் குழாய் நோய்த் தொற்று (urinary tract infection) ஏற்படும். சிறுநீர்ப் புறவழி (Urethra), பிறப்புறுப்பு (Vagina) ஆகியவற்றில் பூஞ்சை நோய்த் தொற்று (Fungal Infection) ஏற்படும். அதன் பின் விளைவாக பிறப்புறுப்பில் அரிப்பு, வெள்ளைப் படுதல் போன்றவை ஏற்படும். இந்த அறிகுறிகள் பொதுவான நீரிழிவு நோய் அறிகுறிகள்.
முதல்வகை நீரிழிவு நோய் அறிகுறிகள்: (Symptoms in type 1 Diabetes)
* அதிகப் பசி (Poly Pepsia)
* அதிகத் தாகம் (Poly dypsia)
* உடல் எடை குறைவு (Weight loss)
* அதிகக் களைப்பு (Tired)
* அதிக சிறுநீர் கழித்தல் (Poly urea)
* பார்வைக் குறைபாடு (Diabetic Retinopathy)
இரண்டாம் வகை நீரிழிவு நோய் அறிகுறிகள்: (Symptoms in Type 2 Diabetes)
* அதிகப் பசி (Poly Pepsia)
* அதிகத் தாகம் (Poly dypsia)
* அதிக சிறுநீர் வெளியேறும் (Poly urea)
* பார்வைக் குறைபாடு (Diabetic Retinopathy)
* உடல் மெலிவு
* களைப்பு
* புண்கள் ஆறாமை
* ஈறுகளில் இரத்தம் வடிதல்
* சிறு வயதிலேயே பற்கள் ஆட்டம் கொடுத்தல்
* பற்கள் இழப்பு
கருக்கால நீரிழிவு நோய் : (Gestational Diabetes)
பல பெண்களுக்கு எந்த அறிகுறிகளும் தெரியாது. இயல்பான பரிசோதனைகளிலே இது வெளிப்படும். பெரும்பாலும் கருவுற்ற 24 முதல் 28 வாரங்களில் இது வெளிப்படும். வெகு அரிதாகவே சில பெண்களுக்கு அதிக தாகமும், அதிகமாகச் சிறுநீர் கழித்தலும் ஏற்படும் பிறப்புறுப்பு நோய்த் தொற்று, இவர்களுக்கு எளிதாகப் பற்றிக் கொள்ளும்.
பல நேரங்களில் நீரிழிவு நோய் அறிகுறிகள் கடுமையாக இருக்காது. ஆனால், நாளடைவில் அறிகுறிகள் தெளிவாகத் தெரியும். பல நேரங்களில் வழமையான குருதிப் பகுப்பாய்வில் நோயறியும் நிகழ்வுகளும் ஏற்படும்.
நோய்க்கான காரணிகள்
முதல் வகை நீரிழிவு நோய் (Type 1 diabetes)
சரியான காரணம் தெரியாத நிலை உள்ள இவ்வகை நோயில், நோய் எதிர்ப்புச் சக்தியே, தன்னுடலில் கணையத்தில் உள்ள பீட்டா செல்களை (Beta cells of Pancreas) தாக்கி அழிப்பதால், இன்சுலின் சுரப்புக் குறைபாடு உண்டாகி நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ஒருவேளை ஏதேனும் வைரஸ்கள் தன்னுடல் நோய் எதிர்ப்பான்களை (Auto – immune) தூண்டுகிறதோ என்கிற அய்யப்பாடும் உள்ளது. மரபணுக்கள் (Genes) ஒருவேளை நோய்க்குக் காரணமோ என்ற அய்யப்பாடும் பல மருத்துவர்களால் உரைக்கப்படுகிறது.
இரண்டாம் வகை நீரிழிவு நோய் : (Type 2 diabetes)
மரபணுக் கோளாறுகளும், வாழ்வியல் மாற்றங்களும் (Life style) சேர்ந்து இந்நோயை உண்டாக்கக்கூடும் பருத்த உடல் நோய்க்கான வாய்ப்பை அதிகமாக்கும். தொப்பையும், தொந்தியும் இன்சுலின் எதிர்ப்பை உண்டாக்கி இரத்தத்தில் சர்க்கரையை அதிகமாக்கும். பாரம்பரிய நோயாகவே, இந்நோய் பெரும்பான்மையோரைப் பாதிக்கிறது.
கருக்கால நீரிழிவு நோய் : (Gestational Diabetes)
பெண்கள் கருவுற்றிருக்கும் பொழுது ஊக்கி நீர் மாற்றங்கள் (Hormonal changes) இயல்பாக நிகழும். இதன் விளைவாக இன்சுலின் சுரப்பில் மாற்றங்கள் நிகழும். அதேபோல் நஞ்சுக் கொடி ஊக்கி நீர்கள் (Placental Hormones) இன்சுலின் சுரப்பில் மாற்றங்கள் உண்டாக்கும். கருவுற்ற அனைத்து மகளிருக்கும் இது ஏற்படாது. ஒரு சிலரே பாதிக்கப்படுவர்.
அடிப்படையில் மரபணுக்கள் பாரம்பரியம், வாழ்வியல், சுற்றுச்சூழல் காரணிகளே நீரழிவு நோய் ஏற்படக் காரணமாக அமைகின்றன. முதல் வகை நீரிழிவு நோய் ஏற்படக் காரணமாக அமைகின்றது. முதல் வகை நீரிழிவு நோய் உறவினர் திருமண முறை (Sibling) இளம் வயதிலேயே ஏற்படக்கூடும்.
இரண்டாம் வகை நீரிழிவு நோய், உடல் பருமன், 45 வயதுக்கு மேற்பட்டோர் பாரம்பரியம் (பெற்றோர், நெருங்கிய உறவினர் பாதிக்கப்பட்டிருந்தால் நோய் வரும் வாய்ப்பு அதிகம்) சோம்பல் வாழ்க்கை, கருக்கால நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு நோயின் முன் பருவத்தால் பாதிக்கப்பட்டவர்கள், மிகு இரத்த அழுத்தம் உடையவர்கள், மிகு கொழுப்புச் சத்து, டிரைகிளிசரைடு உள்ளவர்களுக்கு எளிதில் இந்த வகை நோய் வரும் வாய்ப்பு அதிகம்.
கருக்கால நீரிழிவு நோய் :
அதிக எடையுள்ளவர்கள், 25 வயதிற்கு மேலானவர்கள், முன் பிரசவங்கள் போது, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முன் பேறுகாலத்தில் பிறந்த குழந்தை 9 பவுண்டிற்கும் கூடுதலான எடை இருந்தால், இரண்டாம் வகை நீரிழிவு நோய் உள்ளவர்கள் வீட்டில் இருந்தால் (இரத்த உறவு), பல நீர்க்கட்டி சூலகங்கள் (Poly Cystic overies) உடைய பெண்கள் ஆகியோருக்கு கருக்கால நீரிழிவு நோய் வர வாய்ப்புகள் அதிகம்.
நீரிழிவு நோயால் ஏற்படும் சிக்கல்கள் : (Complications of diabetes)
* மாரடைப்பு (Heart attack)
* பக்கவாதம் (Stroke)
* நரம்புத் தளர்ச்சி (Neuropathy)
* பார்வைக் கோளாறு (Retinopathy)
* குருடு (Blindness)
* செவிடு (hearing loss)
* பற்கள் இழத்தல் (Lose of teeth)
* உலர்ந்த தோல் விளைவாக நுண்ணுயிர், பூஞ்சைத் தொற்று (Bacterial of fungal infection)
* மனத்தளர்ச்சி (Depression)
* நினைவாற்றல் இழப்பு
போன்றவை நீரிழிவு நோயால் ஏற்படும் சிக்கல்களாகும் கருக்கால நீரிழிவு நோய் தாயையும், சேயையும் சேர்ந்தே பாதிக்கும். முதிர்வற்ற மகப்பேறு (Pre – Mature Birth) அதிக எடை உள்ள குழந்தை பிறப்பு, பிற்காலத்தில் இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு, குறைவான சர்க்கரை அளவு (Hypoglysemic) மஞ்சள் காமாலை, குழந்தை இறப்பு(Still birth), மிகு இரத்த அழுத்தம், அதன் விளைவாக பேறுகால வலிப்பு (Eclampsia), தாய்மார்களுக்கு இயற்கை பேறுகால வாய்ப்புக் குறைவு போன்றவை ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
நோயறிதல் :
இரத்தம், சிறுநீர் பகுப்பாய்வு எளி
தாக நோயறிய உதவும், உணவுக்கு முன் (திணீstவீஸீரீ) உணவு உண்டபின் இரண்டு மணி நேர ஆய்வுகள் நோயை துல்லியமாக அறிய உதவும். உடல் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளும் நோயறிய உதவும்.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக