வியாழன், 8 நவம்பர், 2018

*கொழுப்புக்கும் இருதய நோய்க்கும் தொடர்பு இல்லை!' - ஆய்வில் தகவல்*

இதய நோய்க்கும் கொழுப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது ஆய்வில் நிரூபணமாகியுள்ளதாக சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இருதய நோய்
இதுதொடர்பாக அவரிடம் பேசினோம்.`` கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள் என வரும்போது அறிவியலா அரசியலா என்ற போராட்டத்தில் அறிவியல் தோற்று, அரசியல் வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய உலகில் மனித நலன் புறம் தள்ளப்படுகிறது என்பதை உறுதியாக்கி உள்ளது. உணவில் உள்ள கொழுப்புச்சத்தால் இதய நோய் அதிகமாகிறது என்பதே பரவலான கருத்தாக இருந்தாலும் உண்மை என்னவெனில் இக்கருத்தில் அறிவியல் தோல்வியடைந்து மக்கள் எவ்வாறு முட்டாள்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ காரணவியல் ஆய்வாளர் அன்செல் கீ (Ancel key ) 7 நாடுகளில் கிடைத்த புள்ளி விவரப்படி கொழுப்பு மற்றும் இதய நோய் தொடர்பான ஆய்வை மேற்கொண்டார். அதில் உணவில் உள்ள கொழுப்பு மற்றும் இதய நோய்க்கு நேரடி தொடர்பு இல்லை என்று உறுதியாகியுள்ளது. 22 நாள்கள் புள்ளி விவரங்களை ஆய்வு செய்த அவர் நேரடி தொடர்பை உறுதிப்படுத்த முடியாமல் இருப்பதை உணர்ந்தார். இதை அறிந்து ஒன்றன் பின் ஒன்றாக புள்ளி விவரத்தை நீக்கினார். இதன் மூலம் நேரடி தொடர்பு இருப்பதாக அவரால் வெட்டி, ஒட்டி காண்பிக்க முடிந்தது. இந்த ஆய்வு அறிவியல் ரீதியானது அல்ல என்பது மட்டுமல்லாமல் முற்றிலும் தவறானதும் கூட. ஆனாலும் மருந்து குழுமங்கள், அரசு, மருத்துவர்கள் ஊக்கம் அளித்து இந்தப் பொய்யைத் தொடர்ந்து பரப்புவதில் வெற்றி கண்டனர். உண்மையில் இதய நோய் பாதிப்புக்கும் கொழுப்புக்கும் நோரடி தொடர்பு இல்லை என இருந்தும் இம்மருந்துகள் சுயேச்சையாக சிந்திக்காத மருத்துவர்களால் தொடர்ந்து , பரிந்துரைக்கப்பட்டு மருந்து குழுமங்கள் பெருத்த லாபத்தை அடைந்து வருகிறது. கொழுப்பைக் குறைக்கும் மருந்துகளால் இறப்பு அதிகமாக உள்ளது. அது குறையவில்லை எனும் உண்மை மறைக்கப்பட்டு வருகிறது.

உடம்பில் உற்பத்தியாகும் கொழுப்பில் (cholesterol)  80-90% கொழுப்பு ஈரலின் மூலம் நமது உடம்பின் தேவைக்கேற்ப உற்பத்தி செய்யப்படுகிறது என்ற உண்மை பலருக்கும் தெரியவில்லை. சமீபத்திய ஆய்வில் ரத்தக்குழாய் அடைப்பில் உள்ள கொழுப்பு செறிவற்ற கொழுப்பு (unsaturated fat) என்பது உறுதியாகி உள்ள நிலையில் செறிவு நிறைந்த கொழுப்பு (saturated fat) தான் அபாயகரமானது என்பது தவறு என உணர்த்துகிறது.

ஒரு காலகட்டத்தில் வழக்கமான கொழுப்பின் அளவு 200-250 MG என இருந்தது. நாடுகளின் கொழுப்பு பற்றிய புள்ளி விவரங்களை  நீக்கியதின் விளைவாக , மருந்து குழுமங்களுக்கு சாதகமாக 150-200 MG என குறைக்கப்பட்டது . இந்த விஷயத்தை உணர்ந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

          >>>---{ *இர* }--->
- கட்செவி மூலம் வந்தது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக