திங்கள், 10 அக்டோபர், 2016

தாடைக்கும் தலைவலிக்கும் என்ன சம்பந்தம்?


முகத்தின் தாடை எலும்புகளை சீர் செய்வதன் மூலம், நீண்ட நாள் வலிகளுக்கான நிரந்தரத் தீர்வை  கண்டு பிடித்திருக்கிறார்கள் பல் மருத்துவ விஞ்ஞானிகள் என்று கனடா நாட்டு மருத்துவர் கர்டிஸ் வெஸ்டர்சன்ட்  கூறுகிறார்.
தலைவலிக்கும் தாடைக்கும் என்ன தொடர்பு? நமது சந்தேகத்தை நரம்பியல் தசை பல் மருத்துவ நிபுணரான  டாக்டர் ராஜேஷ் ரவீந்திரநாதன் கூறியதாவது: Temporomandibular இணைப்பானது மண்டை ஓட்டையும் தாடை யையும் இணைக்கும் ஒரு நெகிழ் கீல் போல  செயல்படுகிறது. இப்பகுதியில் உள்ள நரம்பு மண்டலம் அழுத்தத்தினால் பாதிப்படையும் போது,
தாடையை அசைத்தாலே  வலியை ஏற்படுத்தும். இந்த வலியானது தலை, கழுத்து, தோள்பட்டை ஆகியவற்றோடு, காதுகளிலும் நீடிக்கிறது.  உண்மையில் தசை இறுக்கத்தினால் ஏற்படக்கூடிய வலிகளை நாம் கழுத்து, தலைகளை அசைப்பதால் வருவதாக  எண்ணுகிறோம்.
ஜிவியி TMJ (Temporomandibular Joint Disorder) என்கிற இக்குறைபாடு, 5 வயது குழந்தைகளில் தொடங்கி  அனைத்து வயதினருக்கும் வரக்கூடியது. எனினும், பற்களை அடிக்கடி கடித்துக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்களுக்கும்,  20 வயது முதல் 40 வயது வரை உள்ள பெண்களுக்கும் அதிகம்.
மூட்டுவலி, தாடையில் ஏற்படும் காயம் போன்ற  பல்வேறு காரணங்களால் வலிகள் ஏற்படலாம் என்பதால்,  குறைபாட்டுக் கான சரியான காரணத்தை கண்டுபிடிப்பது  சற்று கடினம். தாடைவலி உள்ளவர்கள் தங்கள் பற்களை மிகப்பலமாக கடித்துக் கொள்ள முயல்வார்கள்.
இவர்கள் அசைவ உணவுகளில் எலும்பு மற்றும் கடினமான பொருட்கள் மெல்லு வதை தவிர்ப்பது நல்லது. உணவை  மெல்லும்போது தாடை களில் ஏற்படும் வலி, மைக்ரேன் தலைவலி, முகத்தசைகளில் வலி, காதுகளிலும் காதைச்  சுற்றியுள்ள பகுதிகளிலும் வலி மற்றும் தாடையை அசைப்பதில் சிரமம் போன்றவை  டிஎம்ஜெ குறைபாட்டின் அறிகுறிகள்.
இந்த அறிகுறிகள் தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேல் நீடிக்கும் போதும், தாடையை அசைக்கவே முடியாத நிலை ஏற்படும்  போதும் சிறப்பு மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம் என்கிற டாக்டர், சில நோயாளி களுக்கு  பிசியோதெரபி சிகிச்சையில் சரிசெய்துவிடுவோம்.
கீழ் தாடைகளில் பற்கள் வரிசை சீராக இல்லாத நோயாளிகளுக்கு  பொய் பற்களை வைத்து கட்டும்போது தசை இறுக்கம் தளர்வடைந்து வலி முற்றிலும் பறந்து போகும் என்றார்.
-விடுதலை,4.7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக