சனி, 29 அக்டோபர், 2016

ஜப்பான் பேராசிரியருக்கு மருத்துவ நோபல் பரிசு



ஸ்டாக்ஹோம், அக்.4 செல்களின் மறுசுழற்சி செயல்முறைக்கான கண்டுபிடிப்புக்காக ஜப்பான்பேராசிரியர்யோஷி னோரி ஓசுமிக்கு மருத்துவத்துக் கான நோபல் பரிசு அறி விக்கப்பட்டுள்ளது. இயற் பியல்,மருத்துவம், பொரு ளாதாரம்,அமைதி,வேதியி யல் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று தொடங்கியது.

மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு ஜப்பான் நாட்டின் டோக்கியோ தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் யோஷினோரி ஓசுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தன்னைத்தானே உட்கொண்டு மறுசுழற்சிசெய்யும் உயிரியல் செல்களின் செயல் முறைகள்தொடர்பானகண்டு பிடிப்புக்காக  இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட் டுள்ளது. செல் சைக்காலஜியில் ஆட்டோபேகி என்பது அடிப் படையான செயல்பாடாகும். இது பாதிக்கப்பட்ட மற்றும் வயது முதிர்ந்த செல்களை ஒரு அறை போன்ற அமைப்புக்குள் தள்ளி தன்னைத்தானே உண்டு புதிய செல்களை மறுசுழற்சி செய்யும்.

இதில் ஏற்படும் பாதிப்பி னால்தான் நீரிழிவு, புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்பட காரணமாக அமைகிறது. 1960 ஆம் ஆண்டிலேயே இது தொடர்பாக கண்டுபிடிப்புகள் வெளிவந்தாலும், ஆட்டோ பேகி செயல்பாட்டை ஈஸ்ட் மூலம் முழுமையாக விளக்கியிருக்கிறார் ஓசுமி. இதற்காக அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

71 வயதாகும் ஓசுமி, 1974 இல் டோக்கியோ பல்கலையில் பிஎச்டி பட்டம் பெற்றவர். கடந்த ஆண்டு ஒட்டுண்ணி நோய்களுக்கான சிகிச்சை முறையை கண்டுபிடித்ததற்காக அமெரிக்காவின் வில்லியம் கேம்பெல்,ஜப்பானின்சதோஷி ஓமுரா, சீனாவின் டு யுயு ஆகி யோருக்கு மருத்துவ நோபல் பரிசு வழங்கப்பட்டது.

-விடுதலை,4.10.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக