வெள்ளி, 14 ஏப்ரல், 2023

மிகு இரத்த அழுத்தம் (HYPERTENSION) - நவீன மருத்துவங்கள் (97)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (97)

மார்ச் 16-31,2022

மிகு இரத்த அழுத்தம்

(HYPERTENSION)

மரு.இரா.கவுதமன்

இரண்டாம் நிலை மிகு இரத்த அழுத்தம் : (Secondary hypertension)

*              மிகு இரத்த அழுத்தத்தின் காரணமாக உயிராபத்து ஏற்படும் நிலையை “மிகு இரத்த அழுத்த நெருக்கடி’’ (Hypertensive crists) என்று பொதுவாகக் குறிப்பிடுவர். மிகவும் வேகமாகச் செயல்பட்டு மிகு இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இயல்பு நிலைக்குக் கொண்டு வர வேண்டும். 180/110 என்ற அளவு மிகவும் ஆபத்தான அளவு. இந்த அளவு மிகு இரத்த அழுத்தமிருப்பின் உடன் மருத்துவம் செய்துகொள்ள வேண்டும்.

*              இரண்டாம் நிலை மிகு இரத்த அழுத்தம் முக்கிய உறுப்புகளைத் தாக்கும்பொழுது அதன் பின் விளைவாக, அந்த உறுப்புகள் பாதிப்படையும்பொழுது, அதன் காரணமாக அறிகுறிகள் தோன்றும்.

*              சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக சிறுநீர் வெளியேறாமை, உடலில் நச்சுப் பொருள்கள் சேர்தல், நீர் கோப்பு போன்றவை ஏற்படும். முடிவில் மரணம் நிகழும்.

*             மூளை, மிகு இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால், ஆழ்மயக்கம், பக்கவாதம், மரணம் நிகழக்கூடும்.

*              இதயப் பாதிப்பில், மாரடைப்பு ஏற்படுவதால் நெஞ்சு வலி, வியர்த்தல், மூச்சுத் திணறல், மரணம் ஏற்படும்.

*              மகப்பேறு கால மிகு இரத்த அழுத்தம்: 8 முதல் 10 சதவிகித பெண்கள் மகப்பேறு காலத்தில், மிகு இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இதை மூன்று வகையாகப் பிரிப்பார்கள்.

*              பேறு காலத்திற்கு முன்னே இருக்கும் மிகு இரத்த அழுத்தம் (Pre-existing hypertension), பேறுகால மிகு இரத்த அழுத்தம் (Gestational hypertension), மகப்பேறு நேர வலிப்பு நோய் (Pre-eclampsia) என மிகு இரத்த அழுத்தம் மூன்று பகுதிகளாகப் பிரித்து, அதற்குண்டான மருத்துவம் செய்வர்.

*              மிகவும் ஆபத்தானது மகப்பேறு நேர வலிப்பு நோய், உலகில் 16 சதவிகித பெண்கள் இந்நோயால் மகப்பேறு காலத்தில் பாதிக்கப்பட்டு மரணமடை-கிறார்கள்.

*              பேறுகால நேரத்தில் இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாகிவிடும்.

*              சிறுநீரில் புரதச்சத்து வெளியேறும்.

*             பேறுகால நேரத்தில் வலிப்பு ஏற்படும். “எக்லாம்ப்ஸியா’’ என்று இதை அழைப்பார்கள்.

*              வலிப்பு ஏற்படும் நிலையில் பிறக்கின்ற குழந்தையின் உயிருக்கும் ஆபத்து உண்டாகும்.

*               மாதாந்திர சோதனையில் மிகு இரத்த அழுத்தத்தை எளிதில் கண்டறியலாம்.

*               மகப்பேறு காலத்தில் அடிக்கடி தலைவலியும், கண்களில் திடீர் மிகு ஒளியும் தோன்றி (Visual disturbances – flashing lights) மறையும்.

*               வாந்தி, அடி வயிற்றில் வலி, வயிற்றில் வீக்கம் போன்றவை உண்டாகலாம்.

*               சரியான மருத்துவம் செய்யாவிடில் வலிப்பு அதிகமாகி பல அறிகுறிகளை உண்டாக்கும்.

*               பார்வை மங்கும்.

*              மூளையில் நீர் கோக்கும் (Cerebral oedema)

*              சிறுநீரகச் செயலிழப்பு

*               நுரையீரலில் நீர் கோப்பு (Pulminary Oedema) உண்டாகி மூச்சுத் திணறல் ஏற்படும்.

*               இரத்தக் குழாய்களின் உள்ளேயே இரத்த உறைவு ஏற்படும்.

*               பிறந்த குழந்தைக்கும் வலிப்பு, மூச்சுத் திணறல், சத்தின்மை போன்றவை ஏற்பட்டு, குழந்தை பெரும்பான்மை நேரங்களில் மரணமடைந்துவிடும்.

நோய் அறிதல்:

மிகு இரத்த அழுத்தம் பெரும்பாலும் எந்த அறிகுறிகளும் தெரியாமலேயே பல காலம் இருக்கும். பல நேரங்களில் மருத்துவச் சோதனைக்குச் செல்லும்பொழுது மிகு இரத்த அழுத்தம் எதிர்பாராதவிதமாக மருத்துவரால் கண்டறியப்படும். இரத்த அழுத்தம் கண்டறியும் கருவி (Sphygomonometer) மூலம் மிகு இரத்த அழுத்தத்தை எளிதில் கண்டறியலாம். 

சிறுநீர் சோதனையில், புரதம் கரைந்து வந்தால், மிகு இரத்த அழுத்தம் இருப்பதாகச் சோதிக்கலாம்.

இரத்தத்தில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், தைராய்டு ஊக்கி நீர் சோதனைகள் மூலம், அதில் மாறுபாடு அளவுகள் இருப்பின் ஊக்கி நீர் சுரப்பிகளில் கோளாறைக் கண்டறியலாம். அதைச் சீராக்குவதன் மூலம் மிகு இரத்த அழுத்தத்தைச் சீராக்கலாம்.

இதய மின்னலைப் பதிவு (Electro Cardiogram) மூலம் இந்நோயை அறியலாம்.

மிகு இரத்த அழுத்தம் அளவீடுகள்:

இரத்த அழுத்தம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது.

வகைகள்        சுருக்கழுத்தம்            விரிவழுத்தம்

(Catagory)            (இதயம்)          (இதயம்)

                             (Systolic)    (Diastolic)

குறை இரத்த அழுத்தம் (Hypotension)           90 (அதற்குக் கீழும்)               60(அதற்குக் கீழும்)

இயல்பு நிலை (Normal)       120        80

மிகு இரத்த அழுத்தம் முன்பு நிலை

(Pre-hypertension) (high normal, elevated)                   130-140               90

முதல் வகை மிகு இரத்த அழுத்தம்

(Stage I hypertension)             140-160               100

இரண்டாம் வகை மிகு இரத்த அழுத்தம்

(Stage 2 hypertension)               160-180               110

மிகு இரத்த அழுத்தம் நெருக்கடி நிலை

(Hypertensive Crisis)     180ம் அதற்கு மேலும்.          120ம் அதற்கு மேலும்

மிகு சுருக்கழுத்தம்

(Isolated Systolic Hypertension)

140ம் அதற்கு மேலும்.          90ம், 80ம்.

மிகு விரிவழுத்தம்

(Isolated Diastalic hypertension)             120 அல்லது 130.               90ம் அதற்கு மேலும்.

மருத்துவம்: மிகு எளிதாக மிகு இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

வாழ்வியல் முறை மாற்றம்: (Life Style Modification): உணவு முறைகளில் மாற்றம், உடல் எடை குறைப்பு, உடற்பயிற்சி, மருத்துவர் அறிவுறுத்தும் மருந்துகள் சாப்பிடுதல், மருத்துவர் அறிவுறுத்தலின் பேரில் சரியான இடைவெளியில் ஆய்வு செய்துகொள்ளல் போன்றவை மிகுஇரத்த அழுத்த நோயை முழுமையாகக் கட்டுப்படுத்தும்.

உணவு: உப்பு குறைந்த உணவு, அதிகக் கொழுப்பற்ற உணவு வகைகள், கொழுப்பற்ற எண்ணெய், உணவில் பயன்படுத்துதல், கொழுப்பு அதிகம் உள்ள அசைவ உணவுகள் தவிர்த்தல், முட்டை உணவில் மஞ்சள் கருவை தவிர்த்தல், வறுத்த, எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்த்தல், வேகவைத்த உணவுகள் அதிகம் உண்ணுதல் ஆகியவை மிகு இரத்த அழுத்தத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வர உதவும். பீட்ரூட் கரைசல், பச்சைத் தேநீர் ஆகியவை மிகு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். உணவுக் கட்டுப்பாடு உடல் எடைக் குறைவில் பெரும் பங்கு வகிக்கும்.

பருத்த உடல் மிகு இரத்த அழுத்தம் ஏற்பட ஒரு காரணம்.

உடற்பயிற்சி: உடற்பயிற்சி, பருத்த உடலைக் குறைப்பதற்கு உதவும். தினமும் நடைப்பயிற்சி சிறந்த பலனைத் தரும். உடல் கொழுப்பைக் குறைப்பதிலும் உடற்பயிற்சி அதிகளவு உதவும். யோகா பயிற்சிகள் மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். மிகு இரத்த அழுத்தத்திற்கு மன அழுத்தம் (Stress) ஒரு காரணமாக அமைவதால் மன அழுத்தம் குறைய அமைதியான வாழ்க்கை முறை உதவும்.

மருந்துகள்: மருத்துவர் அறிவுரைப்படி மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகு இரத்த அழுத்தம் பல நேரங்களில் எதிர்பாராமல் கண்டுபிடிக்கப்-படுவதால் மருத்துவர் வழிகாட்டும் முறை-களைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். மகப்பேறு காலத்தில் மாதம் தவறாமல் மருத்துவ அறிவுரை பெற வேண்டும். மகப்பேறு மருத்துவர் மிகு இரத்த அழுத்தம் ஆரம்ப நிலையிலேயே அறிந்து, அதற்கான மருந்து-களைத் தருவார். இவை பேறுகால வலிப்பைத் தவிர்க்கும்.

சரியான உணவு, வாழ்வியல் முறை மாற்றம், உடற்பயிற்சி, தகுந்த மருத்துவம் ஆகியவை மிகு இரத்த அழுத்த நோயிலிருந்து நாம் விடுபட உதவக் கூடியவை.ஸீ

(தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக