ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

மகப்பேறு (PRAGNANCY) - நவீன மருத்துவங்கள் (101)

 https://unmaionline.com/images/magazine/2022/may/16-31/u11.jpg

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (101)

2022 Uncategorized மருத்துவம் மே 16-31 2022

மகப்பேறு
(PRAGNANCY)
மரு.இரா.கவுதமன்

விந்தணுக்கள் (Sperms): விந்தணுக்கள்தான் ஆண் இனப்பெருக்க அணுக்கள். ஆணிகளின் இரண்டு விரைகளிலும் இவை உற்பத்தியாகின்றன. உற்பத்தி ஆகும் விந்தணுக்கள், விந்தணு முதிர்ச்சிப் பையில் (Epididymes) வந்தடைந்த பின்பே முழு வளர்ச்சியடைந்த பக்குவமான விந்தணுக்களாக மாறும். இதை விரைகளில் உருவாகும் விந்தணுக்கள் கண்ணுக்குத் தெரியாத மிக, மிக, நுண்ணிய நிலையில் உருவாகும். இதையே “விந்தணு உருவாக்கம்’’ (Spermatogenesis) என்கிறோம். இயல்பான நிலையில் விந்தணுக்கள் அளவு 15 மில்லியனியலிருந்து, 200 மில்லியன் வரைக்கூட ஒரு மில்லி லிட்டர் எண்ணிக்கையில், விந்தில் இருக்கும். ஒரு விந்தணு 40 முதல் 46 ணுனீ நீளம் உடையது. ஒவ்வொரு விந்தணுவும் தலை (Head), கழுத்து (Neck), இடைப்பகுதி (Middle piece), வால் (Tail) என 4 பகுதிகளால் ஆனதாக இருக்கும்.

தலைப்பகுதி: சிறிய பாதாம் வடிவில் ஒரு முனையில் அமைந்துள்ள தலை புரத உறையோடு (Plasma Membrane), கூடிய தலைப்பகுதி தலையுறையோடும் (Acrosome), அணுக் ‘கரு’வோடும் (Nucleus) அமைந்திருக்கும். தலையுறை, விந்தணு தலையின் முன்பகுதியில் அமைந்திருக்கும். ‘மெய் கருஉயிரி கலங்களில் (Golgi apparalus) உள்ள சுரப்புகள் (Enzymes), தலையுறை அமையக் காரணமாகின்றன. கரு உருவாகும்பொழுது, பெண் சினை முட்டையின் உறையைக் கரைத்து (Egg membrane), விந்தணு அதில் ஊடுருவ இந்த நொதியங்கள்(Enzymes)  உதவுகின்றன. விந்தணுவில் உள்ள கருவின் (Nucleus) முனைப்புள்ளி (Pro-Nucleus), ஒரு அமைப்பாக, “நிறப்புரி’’களை (Chromosomes) கொண்டிருக்கும். இவை மூலமே ஓர் ஆணின் ‘மரபணு இயல்புகள் (Heriditary Characters) கருவுக்குக் கடத்தப்படும்.

கழுத்துப் பகுதி: தலைப் பகுதிக்கும், இடைப் பகுதியில் உள்ள சிறிய பாகமே கழுத்துப் பகுதி. இது இரண்டு “நடுமணித் திரள்களால்’’ (Centrioles) உருவானது. நடுமணித் திரள், அருகாமை, தொலைவு நடுமணித்திரள் (Proximal and distal centrioles) என இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கும். கருவின் அருகாமையில் இருக்கும் நடுமணித்திரள் “அருகாமை மணித்திரள்’’ (Proximal Centriole) வால் பகுதியின் அருகில் நடுமணித்திரள் “தொலைவு மணித்திரள்’’ (Distal centriole) அமைந்திருக்கும். அதிலிருந்து “அச்சு இழை’’ (Axial Filament) உருவாகும். உயிர்கரு (Zygote) முதன்முதலாக அணுப் பகுப்பு (Cell division) ஏற்பட, அருகாமை நடு மணித்திரள் (Proximal Centriole) தேவை.

இடைப்பகுதி (Middle piece): இடைப்பகுதி ஒரு உருளை வடிவ சிறிய பகுதியாகும். அச்சு இழையை (Axial Filament) உள்ளடக்கிய ‘உயிரணு இழைமணி’’(Mitochondrian)ச் சுருளி (Spiral) இதன் உள்ளே அமைந்திருக்கும். விந்தணுவின் நகரும் இயக்கத்திற்கு இதுவே காரணமாகும். அதனால் இப்பகுதி, “விந்தணுவின் பொறிப் பகுதி’’ (Engine Room) என்றழைக்கப்படுகிறது.

வால்பகுதி (Tail): வால் பகுதி ஒரு நீண்ட, உருண்ட விந்தணுவின் கடைசிப் பாகமாகும். இது “முக்கியப் பகுதி’’ (Main Piece) என்றும், “கடைசிப் பகுதி’’ (End piece) என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முக்கியப் பகுதியில், மெல்லிய அச்சு இழை (Axial Filament) உள்ளது. அச்சு இழை உயிரணுப் புரதத்தால் (Cytoplasm) சூழப்பட்டிருக்கும். இதைச்சுற்றி “பிளாஸ்மா’’ உறை (Plasma Membrane) இருக்கும். வாலின் இறுதிப்பகுதி விந்தணுவின் கடைசிப் பகுதியாகும். முக்கியப் பகுதியில் உள்ள அச்சு இழை (Axial Filament) இதிலும் தொடரும். ஆனால், இந்தப் பகுதி அச்சு இழையைச் சுற்றி எந்த உறையும் இருக்காது. அதனால் இப்பகுதி “ஆடையற்ற (Naked) அச்சு இழை’’ என்றழைக்கப்படும்.

ஆண்இனப்பெருக்க இயக்கம்: விரைப்பையில் இருக்கும் இரண்டு விரைகளும் ஆண் அணுக்களையும் (Sperms), டெஸ்டோஸ்டீரான் ஊக்கி நீரையும் உற்பத்தி செய்கின்றன. ஆண் அணுக்கள் உற்பத்தி ஆவதை “விந்தணு உருவாக்கம்’’ என்று கூறுகிறோம். விந்தணுக்கள், விந்தணு முதிர்ச்சிப்பைக்கு (Epididymis) வந்தடைகின்றன. அங்கு சேமிக்கப்படும் விந்தணுக்கள், அங்குதான் முதிர்ச்சியடைகின்றன. முதிர்ச்சியடைந்த விந்தணுக்கள், விந்துக் குழாய்கள் மூலம், உடலுறவின்பொழுது, பெண் குறிக்குள் செலுத்தப்படுகின்றன. ஊக்கி நீர் சுரப்புத் தூண்டுதலால், கூப்பர் சுரப்பிகளும், சிறுநீர்க் குழாய் மொட்டுச் சுரப்பிகளும் விந்தணுக்கள் இயங்கத் தேவையான நீர்மத்தைச் சுரந்து, விந்துவாக மாறுகிறது. இந்த நீர்மங்கள் ஆண் அணுக்களின் இயக்கத்திற்கும், அதற்குத் தேவையான சத்துகளையும் அளிக்கின்றன. ஆண் அணுக்கள் இந்த நீர்மத்திலேயே மிதந்து சென்று பெண் அணுவை (Ovum) அடைகின்றன. விந்துப்பை (Seminal Vesicle) விந்துவில் உள்ள மற்ற பொருள்களை உற்பத்தி செய்து விந்துவோடு கலக்க வைக்கிறது. புராஸ்டேட் சுரப்பி (Prostate Gland) யும், நீர்மத்தையும், ஆண் அணுவின் இயக்கம் மற்றும் அதற்குத் தேவையான உணவுச் சத்தையும் சுரந்து ஆண் அணுவுக்கு வழங்குகிறது.

உடலின் உள் பகுதி (இடுப்புப் பகுதி _ (Pelvic region), வெளிப்பகுதி என இரண்டு நிலைகளில் அமைந்துள்ள ஆண் இனப்பெருக்க உறுப்புகள், அடிப்படையில் ஆண் அணுக்களை உற்பத்தி செய்வதும், அவற்றை முதிர்ச்சியடையச் செய்வதும், அவற்றின் தடையற்ற இயக்கத்தைச் செயல்படுத்தும் செயல்பாடுகளை செவ்வனே செய்வதுமான பணிகளைச் செய்யும் வண்ணம் அமைந்துள்ளன. உடற்குறைபாடுகள் ஏதுமில்லாத நிலையில் சுமார் 15 வயது துவங்கி, 70_80 வயது வரைகூட இச்செயல்பாடுகள் நிகழும் வண்ணம் உடற்கூறு இயங்கியல் (Physiology) அமைந்துள்ளது.
இனப்பெருக்க இயங்கியல் (Physiology of reproduction) ஆண்களைப் பொருத்த வரை நோய்த் தொற்று, நீரிழிவு நோய், புராஸ்டேட் சுரப்பி அழற்சி (Enlarged Prostate), புராஸ்டேட் சுரப்பியல் புற்றுநோய், விரைகளில் புற்றுநோய், சிறுநீரக நோய்த் தொற்று, பாலியல் நோய்த்தொற்று (STD) போன்றவற்றால் பாதிக்கப்படும். ஊக்கி நீர்ச் சுரப்பிக் குறைபாடு(Hormone Deficiency), ஆண் மலட்டுத் தன்மையை உண்டாக்கும். புகைப்பிடித்தல், மதுப் பழக்கம், மனநலக் குறைபாடுகள் போன்றவையும் ஆண்களின் இனப்பெருக்கக் குறைபாட்டை உண்டாக்கும்.
(தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக